கொளப்பள்ளி தையல் பயிற்சி சான்று





கொளப்பள்ளி தையல் பயிற்சி சான்று

பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் நேரு யுவ கேந்திரா சார்பில் மகளிர் தையல் பயிற்சி மையத்தில் தையல் பயிற்சி முடித்தோருக்கு பயிற்சி  சான்றிதழ்கள் வழங்க பட்டது.

நீலகிரி நேரு யுவகேந்திரா மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் கொளப்பள்ளி மகளிர் தையல் பயிற்சி மையத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு தையல் மைய பொறுப்பாளர் லோகநாதன் தலைமை தாங்கினார்.
சேரங்கோடு ஊராட்சிமன்ற உறுப்பினர் ரமேஸ்குமார், கொளப்பள்ளி வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், சமூக ஆர்வலர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், மகளிர் தங்கள் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள சுயதொழில் அவசியமாகின்றது. இதற்கு எளிதில்  பயன்படுத்திக்கொள்ள தையல் பயிற்சி உதவுகிறது. தையல் பயிற்சி முடித்தவர்கள் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் மகளிர் தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்து அரசின் இலவச சீருடைகளை தைத்து கொடுக்கலாம்.
சொந்தமாக தையல் இயந்திரம் வாங்க இயலாத வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு அரசு சார்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகின்றது. இதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மகளிர்கள் ஒன்று சேர்ந்து ஆயத்த ஆடைகள் தைத்து விற்பனை செய்யலாம். உள்ளூர் மக்களின் ஆடைகளை தைத்து கொடுத்தாலே மிக பெரிய வருமானம் பெற முடியும். எனவே தையல் தொழில் முடித்தவர்கள் சுயமாக முன்னேறி அடுத்தவர்களுக்கு எடுத்து காட்டாக வாழ வேண்டும், என்றார்.
தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு நேருயுவகேந்திரா சார்பில் தையல் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தையல் பயிற்சி மைய மாணவிகள் மற்றும் மகளீர் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நுகர்வோர் மைய நிர்வாகி ராஜா வரவேற்றார். முடிவில் தையல் பயிற்சி மைய ஆசிரியை நவமணி நன்றி கூறினார்.




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...