எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு


எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு



எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

மஞ்சூர் அருகே எடக்காடு அரசு மேல் நிலை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து நுகர்வோர் விழிப்புணர்வு  கருத்தரங்கினை நடத்தின.   நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமை வகித்து பேசும்போது நுகர்வோர் விழிப்புணர்வு முலம் தரமற்ற பொருட்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்றார்.

தமிழ்நாடு  புதுசேரி நுகர்வோர்  அமைப்புகளின்  கூட்டமைப்பு (பெட்காட்) மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது  நுகர்வோர்கள் சார்பான விழிப்புணர்வு மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.  இவற்றுக்கு பள்ளி நிர்வாகங்கள் குடிமக்கள் நுகர்வோர்  மன்றங்கள்   நாட்டு நலப்பணி திட்டங்கள் முக்கிய  பங்கு ஆற்றுகின்றன.   நாம் பயன் படுத்தும் பொருட்கள்  நமக்கு  பயன்  தருகிறதா என்பதையும்  பொருளின் தன்மையும்  அறிந்து பயன் படுத்த வேண்டும்.  விளம்பரங்கள் உண்மையா என பிரித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

நுகர்வோர் மாவட்ட கூட்டமைப்பு பொதுசெயலாளர் வீரபாண்டியன் பேசும்போது  நுகர்வோருக்கு மிக பெரிய ஆயுதம் பில் எனவே அனைவரும் பில் வாங்க பழகி கொள்ள வேண்டும் என்றார்.   தற்போது புகார்கள் எளிய முறைகளில் பதிவு செய்து கொள்ள வாய்ப்புகள் உள்ளன இவற்றை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் முதுகலை ஆசிரியர் சிவராஜ் சிவபுத்ரா முன்னிலை வகித்தார்.  மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர் முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மணிகண்டன் வரவேற்றார்.முடிவில் பட்டதாரி ஆசிரியர் பழனிசாமி நன்றி .கூறினார்.


No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...