உப்பட்டியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 100க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.


உப்பட்டியில்  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கண் தான இருவார விழாவினை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட், எஸ். எஸ். எப் - எஸ்.வேய்.எஸ் உப்பட்டி  கிளை ஆகியன இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் உப்பட்டி  மதரசாவில் நடைபெற்றது.

முகாமிற்கு தலைமை எஸ்.எஸ்.எப் - எஸ்.வை.எஸ் உப்பட்டி  கிளை செயலாளர்  ஐமுட்டி  தலைமை  தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், செயலாளர் பொன் கணேசன்,  ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட சுவைமிகு ஆரோக்கிய பானம் தேநீர்

மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட

சுவைமிகு ஆரோக்கிய பானம் தேநீர்


நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்குப் பின்னாலும் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் ரத்தமும் இருக்கிறது’   '83 சதவிகித இந்தியர் களின் வீடுகளில் தேநீர் நுகரப்படுகிறது. விரைவில் தேயிலை தேசிய பானம் என அறிவிக்க படும் என எதிர்பர்ர்க்கபடுகிறது.

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் முதன் முதலாகத் தேயிலையைப் பயிரிட்டவர் மணிராம் திவான். இவர், சுதந்திரப் போராட்ட வீரரும்கூட.

pls visit our webs 

தேயிலை ஒரு பசுமைத் தாவரம். இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப்படுகிறது.

வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வகையான தேயிலைகள் பெறப்பட்டாலும், பக்குவப்படுத்தல் முறையில் அவை வேறுபடுகின்றன.

தேயிலையின் இரு சொற் பெயர் Camellia Sinensis என்பதாகும்.

இந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழைமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1830 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை பிரசித்தி பெற்றவையாகும்.

தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யப் படுகின்றன. அந்த வகையில் டார்ஜிலிங், அசாம், நீலகிரி ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.

தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை மிகவும் சுவை கொண்டதாகும். அதிகபட்ச தேநீர் சுவையை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர்.

தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள்...!

  
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க டீ உதவுகின்றது. ஒரு கப் டீ, யில் காபியை விடவும் குறைவாக 'காபினே' உள்ளது . எனவே கொழுப்பை பற்றி கவலைபட தேவையில்லை .
உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் அதிகமாய் டீ குடிப்பது ரத்தஅழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும்.


pls visit our webs 

தேயிலை (டீ-யின் ) மருத்துவ குணங்கள்

மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒரு கப் இஞ்சி டீ சாப்பிடுங்கள், கவலை காணாமல் போய்விடும்.   இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது.    நமக்கு துயரம், கவலை ஏற்படும் போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்து விடுகிறது. அதனால் தான் கவலை ஏற்படும் போது இஞ்சி டீ குடியுங்கள்
மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது, இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது.   இம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து, பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைக்கும்
ஜீரண சக்தி : நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது. மலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.
எனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போதும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
கேன்சர்: கிரீன் டீயிலுள்ள பாலிபினால்கள் டியூமர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. அவற்றின் DNA உருவாக்கத்தை தடுப்பதோடு நல்ல திசுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கான்சர் திசுக்களை அழிக்கின்றன.
நீரிழிவு: கிரீன் டீ பாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து, ஸ்டார்ச் மெதுவாக சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது. அத்துடன் இது 'இன்சுலீனின்' செயல்பாட்டையும்' அதிகரிக்கிறது.
இதயம்: இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து LDL, டிரைகிளிசரைடுகளின் அளவைக்  கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பு எனப்படும் HDL ன் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
ஆர்த்ரைட்டீஸ்: ஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கிறது.மூட்டுக்களை பலப்படுத்துவதிலும் கிரீன் டீ யின் பங்கு உண்டு.
ஒபிஸிட்டி:  உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி,கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப்படுத்தவும் செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனும் குறைய வாய்ப்பிருக்கிறது.

pls visit our webs 
முதுமை: வயதாவதைத் தடுக்க முடியாது என்றாலும் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமை அடைவதை தடுக்கலாமே. உடல் திசுக்களில் உற்பத்தியாகும் 'ஃபிரீ ராடிகல்' எனப்படும் தனி உறுப்புகளை உறிஞ்சப்படுவதால் ஏற்படும் DNA சிதைவு தடுக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி கூடுதலாகிறது.  
பல்: கிரீன் டீ யில் உள்ள ஃப்ளூரைடு பற்சிதைவு,பற்குழிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.  வாயில் உற்பத்தியாகக் கூடிய 'பாக்டீரியா'க்கள் வளர்ச்சியைத் தடுக்கவும்,அதன் காரணமாக வரும் பல் சம்பந்தப்பட்ட நோய்கள்,வாய் துர்நாற்றம் போகவும் உதவுகிறது.
அழகு:  கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு,முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறது.
எடை குறைவு : க்ரீன் டீ-யில் உள்ள கேட்சின்ஸ் என்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் உடல்எடை குறைவுக்கு பெரிதும் உதவுகிறது.
வாதத்திற்கும் நிவாரணி   : பல காலமாக பால் கலக்காத ப்ளாக் டீ, க்ரீன் டீ அல்லது வெள்ளை தேநீர்பருகுபவர்களுக்கு 60 சதவீதம் வாதம் (strokes) ஏற்படாது.
நரம்பியல் நோய்களைத் தடுக்கும்    பல நரம்பியல் நோய்களைத் தடுக்கவும் குணப்படுத்தவும் தேநீர் முக்கியபங்கு வகிக்கிறது
புரோஸ்டேட் புற்றுநோய்   இத்தாலியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி, தினசரி மூன்று முறை க்ரீன்டீ பருகிய ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுத்துநிறுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   அதிலும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்த ஆண்களே இந்த ஆய்வில் கலந்து கொண்டார்கள்.
எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்  க்ரீன் டீ பருகினால் எலும்புகளின் கனிம அடர்வும், வலிமையும்அதிகரிக்கும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  அடிக்கடி தேநீர் பருகி வரும் அதிக வயது பெண்மணிகளுக்கு இடுப்பெலும்புஅதிக அடர்வுடன் இருப்பதை போல், தேநீர் பருகாத இளம் வயதுபெண்மணிகளுக்கு இருப்பதில்லை.
மொத்தத்தில் ஒன்று அல்லது இரண்டு கப் தேநீர் பருகினால்,
படிக்கும் திறனும் ஞாபகத் திறனும் அதிகரிக்கும்.
பயன்படுத்தும் முறை:   
தரமான தேயிலைத் தூளை ஒரு கோப்பைக்கு இரண்டு டீஸ்பூன் வீதம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கோப்பை தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த தண்ணீரில் தேயிலைத் தூளைப் போட்டு மூடி வைத்து உடனே அடுப்பை அனைத்து விட வேண்டும். ஓரிரு நிமிடம் கழித்து அதை வடிகட்டி, தேவைக்கு சர்க்கரையும் பாலும் சேர்த்துக்கொள்ளவும்.  
கூடுமானவரை பால் சேர்க்காமலே  இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.   இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.
டீ-யை நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.   80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.
சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.  விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள், எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.    ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.



தேயிலை கலப்படம்   இன்று கலப்படமில்லாத டீயை நீங்கள் கடைகளில் குடிக்கிறீர்கள் என்பதற்கு உத்திரவாதம் உண்டா? நிச்சயமாக இல்லை. மரத்தூள், ஏதாவது ஒரு இலைதூள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட டீத்தூள் , இவற்றுடன் செயற்கை சாயம்                      ( இது உணவிற்காகப் பயன்படுத்தப்படுவதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, உடைகளுக்காகப் பயன்படுத்தும் சாயமாககூட இருக்கலாம்) கலந்து கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் சாய கலவையைதான் நீங்கள் சூடாக ஐந்து ரூபாய் கொடுத்து குடித்து மகிழ்கிறீர்கள்
தேயிலையில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி :
மேல இருக்குற ரெண்டு கிளாசுல, நமக்கு வலதுபுறம் இருப்பது நல்ல டீ. இடது புறம் இருப்பது கலப்படமான டீ. எப்படிக்கண்டுபிடிக்கலாம்?
pls visit our webs 
 ஒண்ணுமில்லை. டெஸ்ட் பண்ணனும்னு நினைக்குற தேயிலையை ஒரு ஸ்பூனில் எடுத்துக்கோங்க.  ஒரு கண்ணாடி டம்ளரில், சாதாரண தண்ணீரை ஊற்றிவிட்டு, அதில் அந்த தேயிலையைத் தூவுங்க. நல்ல தேயிலையாயிருந்தா, தேயிலையின் சாறு மட்டும் இறங்கி தண்ணீரின் நிறம் சிறிது மட்டுமே மாறும்.
கலர் சேர்த்த கலப்பட தேயிலையாயிருந்தா, தேயிலை தண்ணீரில் மூழ்கத் துவங்கும்போதே, கலர்கள் அந்த நீரில் வர்ண ஜாலமடிக்கும். கொஞ்ச நேரத்தில், அந்த டம்ளர் தண்ணீர் முழுவதுமே, இடது பக்க டம்ளரில் உள்ளதுபோல் கலராயிடும்.
தேயிலை துளை ஈரமான ஒற்றுத்தாளில் சிறிதளவு தூவவும். செயற்கை நிறம் தானாக பிரிந்து விடும்.
வெண்மையான பீங்கான் ஓடு அல்லது கண்ணாடித் தகட்டின் மீது சிறிதளவு சுட்ட சுண்ணாம்புத்தூளைப் பரப்பவும். அதன்மேல் சிறிதளவு தேயிலைத் தூளை தூவவும். அப்போது சிவந்த நிறமோ ஆரஞ்சுநிறமோ அல்லது திரிந்த நிறத்திலான கலவையோ தோன்றுமானால் நிலக்கரித்தார் சாயமானது கலப்படம் செய்திருப்பதை உணரலாம். சுத்தமான தேயிலையில் பச்சையம் இருப்பதால் சாதாரண பசும்பொன்நிறம் மட்டுமே சிறிது நேரம் கழித்துத் தோன்றும்.

தேயிலைத் தூளில் எப்படிக் என்ன கலப்படம் செய்கிறார்கள்?
இலவம் பிஞ்சு: இலவம்பஞ்சுக் காயைப் பறித்து, காயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் 'திக்’ காகவே இருக்குமாம்!
முந்திரிக் கொட்டை: முந்திரிக் கொட்டை பழமாகும் முன்னர் கடித்தால் வாய் புண்ணாகி விடும். அந்தக் கொட்டையின் தோலைக் காய வைத்து பொடியாக்கி, தேயிலைத் தூளுடன் கலக்கிறார்கள். நிறத்தைக் கூட்டுவதற்காக இதனுடன் சோடியம் கார்பனேட் ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். சலவை சோப்புடன் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனம் இது!
மஞ்சனத்தி இலை - குதிரை சாணம்: மஞ்சனத்தி இலையைக் காய வைத்து அரைத்து, காய்ந்த குதிரைச் சாணத்துடன் கலந்து தேயிலையுடன் கலப்படம் செய்தால், மினுமினுக்கும் கலப்படத் தேயிலைத் தூள் ரெடி!
புளியங்கொட்டை: புளியங்கொட்​டையை லேசாக வறுத்து, ரொம்பவும் மிருதுவாக அரைக்காமல் தேயிலைத் தூள் பதத்தில் அரைத்து, தண்ணீர் சேர்த்துக் காய வைத்து (அப்போதுதான் துவர்ப்பு தெரியாமல் இருக்குமாம்) தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள்!
மரத்தூள், தேங்காய் நார்: மலிவாக அல்லது இலவசமாக சில இடங்களில் கிடைக்கும் மரத் தூள்தான் கலப்படக்காரர்களின் முதல் சாய்ஸ். மரத் தூளுடன் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் ரசாயனத்தைச் சேர்த்து தேயிலைத் தூளுடன் கலக் கிறார்கள். இதுதவிர, டீக்கடைகளில் பயன்படுத்தி குப்பையில் போடும் தேயிலைத் தூளைச் சேகரித்தும் கலப்படத் தூளைத் தயாரிக்கிறார்கள்.
மரப்பொடி, பொடிசெய்யப்பட்ட உளுந்து தோல்,  நிறம் கூட்டப் பற்ற காய்ந்த இலை பருப்பின் தவிடு சாரமிறக்கிய பின் உள்ள பயனற்ற தேயிலை  போன்றவையும் கலக்க படுகிறது
ஓரிஜினல் தேயிலைத் தூளின் விலை ஒரு கிலோ 270 முதல் 310 வரை விற்கப்படுகிறது. ஆனால், கலப்படத் தேயிலைத்தூள் கிலோ 60-க்கே கிடைக்கிறது. பெரும்பாலான ரோட்டோர டீக் கடைகளில் நாம் அருந்துவது கலப்படத் தேநீர்தான். இதை அருந்தினால் சில ஆண்டுகளில் தோல் ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, கிட்னி பாதிப்பு, புற்று நோய் போன்றவை ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
எது ஒரிஜினல்? தேயிலைச் செடியின் நுனியில் இருக்கும் மென்மையான இரட்டை இலை, அதன் நடுவில் இருக்கும் ஒரு மொட்டு, இவற்றை ஒட்டிக் கீழே இருக்கும் லேசாக முற்றிய இலை ஒன்று... இதைப் பறித்து சுமார் எட்டு மணி நேரம் மிஷினில் வாட்டி, ரோலரில் அரைத்தால் அதுதான் ஒரிஜினல் தேயிலைத் தூள். இதைக் குளிர்ந்த நீரில் கொட்டினால், நீரின் நிறம் மாற 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகும்.
உணவுப் பொருளில் கலப்படம் செய்து விற்றால், ஆயுள் தண்டனை வழங்கலாம் என்கிறது சட்டம். தேயிலையில் கலப்படம் செய்வதை தடுக்க தென்னிந்திய தேயிலை வாரியமும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவகமும் முயற்சிகள் எடுத்து வருகிறது.  நாமும் எச்சரிக்கையாக இருந்தால் அலுவலர்களுக்கு உதவியாக இருந்தால் தேயிலை கலப்படத்தினை தடுக்க முடியும்.
தேயிலையில் டீயில்  கலப்படம் இருப்பது தெரிந்தால்
தென் இந்திய தேயிலை வாரியம்,  பெட்போர்ட்,  குன்னூர்.
மாவட்ட ஆட்சியர்,  மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவலர்,
அருகில் செயல்படும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள்
ஆகியோருக்கு தகவல் கொடுக்கலாம்.


pls visit our webs 

’லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’

’லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’


sagaayam4புதிதாக மடத்தில் சேர்ந்தவர்கள் துறவியிடம், ‘எந்த பிரச்சனை இல்லாமலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றீர்கள். பொதுமக்கள் உங்களைப் பார்த்து எப்படியெல்லாம் மரியாதை செலுத்துகிறார்கள்? எனவே தங்களைப் போல் நாங்களும் துறவியாக மாறுவதற்கு என்ன வழி?’ என்று கேட்டார்களாம்.
துறவியோ   ‘நீங்கள் மடத்தில் சேருவதற்கு என்ன காரணம்’ என்று கேட்டாராம்.
முதலாமன் ‘இல்லறத்தில் பிரச்சனை; அதனால் ஓடி வந்து விட்டேன்’ என்று சொன்னானாம்.
இரண்டாமவன் ‘கடன் தொல்லை; தப்பிக்கவே இங்கே வந்து சேர்ந்துள்ளேன்’.
மூன்றாமவன் ‘வியாதியால் அவதிப்படுகிறேன்; செலவு செய்து வைத்தியம் பார்க்க முடியவில்லை. தங்களிடத்தில் சேர்ந்தால் இலவச வைத்தியம் செய்து கொண்டு சௌகரியமாக காலத்தை கடத்தலாம்’.
இவர்களிடத்தே துறவி சொன்னாராம்: ‘உங்களது தற்போதைய நிலைமை மாறினால், நீங்கள் மூவருமே துறவறத்தில் நிலைத்து இருக்க மாட்டீர்கள். எந்த பிரச்சனையும் இல்லாதவன் மட்டுமே துறவியாக மாற முடியும்; எனவே நீங்கள் யாருமே துறவியாக வாய்ப்பில்லை’.
sagaayam1அரசாங்க பணி, பொதுச் சேவை செய்பவர்கள் எப்படி இருக்க வேண்டும்? ‘கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலோம்’ என்று நம் முன்னே நிற்கிறார் திரு.சகாயம் இ.ஆ.ப. அவர்கள். இவரின் பணி நேர்மை, ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், தாய் மொழிப் பற்று – இவைகளை நாம் அறிவோம்.
தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்டவளர்ச்சி அதிகாரி, திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சிஅதிகாரி, திருச்சி உணவுப் பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர், கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர்சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி, தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநிலத்தேர்தல் ஆணையச் செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர் என தமது 23 ஆண்டு கால அரசாங்கச் சேவையில் 24 முறை பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியில் சேர்ந்த பொழுது, ஆலையின் உற்பத்தி திறன் 60%-க்கும் குறைவே. இவரது முயற்சியில் உற்பத்தி 110% ஆகவும், ஆலையைச் சுற்றி மரங்களை நட்டு கானகமும் உருவாக்கினார்.
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற உடன் தனது சொத்துக்கணக்கை வெளியிட்டார். ஒவ்வொரு அரசுப் பணியாளரும் தனது சொத்துக்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும், நான் அதையும் தாண்டி எனது சொத்து விபரத்தை மக்களுக்கும் சேர்த்து தெரியப்படுத்தியுள்ளேன் என்றார். இவர் மாவட்ட ஆட்சியாளராக செயலாற்றியபோது இவர் செய்த மக்கள் பணிகளை கோடிட்டு காட்ட இயலாது. உழவர் சந்தை போன்று உழவர் உணவகம் அமைத்து உடல் நலத்திற்கு ஏற்ற நமது தமிழ் பாரம்பரிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி உழவர்களின் வயிற்றில் பால் வார்த்தார்.
மதுரைமாவட்டத்தில்இவர்பணியாற்றியபோது பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களைக் காப்பாற்றி பலம் வாய்ந்த தொழிலதிபரின் கோபத்திற்கு ஆளானார். தமிழர் பெருமை கூறும் பல மலைகளை கொள்ளையடித்தவன் அந்த கயவாளி, ஆனால் தனது செல்வாக்கினால் அந்த வழக்கிலிருந்து தப்பித்து மீதமிருக்கும் மலைகளையும் அழிக்க முயலுவான். அரசியல்வாதிகளால் அங்கிருந்து தூக்கியடிக்கப்பட்டு கைத்தறி கூட்டுறவுநிறுவனத்தின்இயக்குனரானார்.
திரு.சகாயம் 13 ஆண்டுகளாக நலிவடைந்த (=ஊழல்) நிர்வாகத்தை சீர்செய்து வருமானம் ஈட்டக்கூடியதாக மாற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆடைகளில் நவீன வடிவமைப்புகளை கணிணி மூலம் உருவாக்க கட்டமைப்பைஉருவாக்கியது, நெசவாளர்களின் திறமைகளை ஊக்குவித்தது, பட்டுச்சேலை கனவுத் திட்டம் போன்ற முன்னேற்றத் திட்டங்களை திரு. சகாயம் அவர்கள் கொண்டு வந்தார்.
இவரின் தற்போதைய பணி மாற்றத்திற்கான காரணங்கள்:
sagaayam31) திருமண உதவி திட்டத்தில் வழங்கப்படும் தொகையில் பயனாளி ஒருவருக்கு ரூ 5000/-க்கு கோ-ஆப்-டெக்ஸ்-இல் பட்டுப் புடவை வாங்கிக் கொள்ள செல்லுபடியாகும் படிவங்களை வழங்கும்படி கேட்டுக் கொண்டார். இதன் மூலம் ஆண்டிற்கு ரூ 75 கோடிக்கு விற்பனையாகும். ஆனால் அரசாங்கம் பொருளாகவோ அல்லது பணமாகவோ வழங்குவதிலேயே ஆர்வமாக இருந்திருக்கின்றது.
2) கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நகராட்சி கடை ஏலத்தில் கோ-ஆப்-டெக்ஸ் மேலாளாரை பங்கு பெறவிடாமல் உள்ளூர் அரசியல்வாதிகள் தாக்கி உள்ளார்கள். இந்த செய்தி ஜூனியர் விகடன் இதழில் மட்டுமே வெளியாகி இருக்கின்றது. எவ்வளவோ போராடியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; மேலாளரை ‘வற்புறுத்தி’ காவல்துறை முறைப்பாட்டை திரும்பப் பெற வைத்துள்ளார்கள். இது குறித்து மிகவும் கடுமையாக கண்டித்து முதன்மை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
3) பட்டு விற்பனையை விரிவாக்க தனியாக விற்பனை நிலையங்களை துவங்க வேண்டுமென்று ஆலோசனை தெரிவித்தார்.
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
4) நம் மாநில நெசவு தொழில் சரியாக விற்பனை இல்லாததால் பெரிதும் அல்லல்படும் போது, இலவச வேட்டி, சேலைகள் தமது நிறுவனத்தின் மூலம் வாங்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினார். (இதில் கையூட்டிற்கு வழியில்லை; எனவே கொள்ளை அடிக்க இயலாது!). இவரின் ‘வேட்டிகள் தினம்’ அறிவிப்பு மூலம் கணிசமான அளவு விற்பனை நடைபெற்றது.
5) மேலும் விநியோகம் செய்யப்படாமல் தேங்கி கிடந்த கடந்த ஆண்டு வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகளை, நடப்பு ஆண்டு கணக்கில் புதிதாக வாங்கியது போல ஏமாற்றியதை கண்டுபிடித்தார்.
6) மற்றபடி கட்சி அடியாட்களை வைத்து இவரை மிரட்டுவதற்கு ஏதுவாக, தில்லையாடி வள்ளியம்மை விற்பனை நிலையத்தில் அறை ஒதுக்க வேண்டும் என்று முயற்சித்து பார்த்தனர். இது குறித்து இந்த வார ஜூனியர் விகடன் இதழில் படித்திருப்பீர்கள்.
இறுதியாக, 8000 ஊழியர்களைக் கொண்ட இந்திய மருத்துவம்- ஓமியோபதித் துறைக்கு இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு, பணியில் சேருவதற்குள (48 மணிக்குள்) உதவியாளர் கூட இல்லாத அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக 24-வது தடவையாக பணி மாற்றத்திற்கு ஆளாகி இருக்கின்றார்.
மாற்ற முடியாதது எதுவோ?
sagayam5இதுநாள் வரை 24முறை பணிமாற்றம் செய்த அரசு இவரது நேர்மையை மாற்ற முடியுமா? இவர் போன்ற பலர் அதிகாரிகளாகவுள்ளனர். நாமக்கல், மதுரை, இன்று சென்னையிலும் சோதனை. ஆனால் வேதனை என்னவென்றால் நல்ல அதிகாரிகளை அரசுகள் இப்படி கேவலப்படுத்தி அவர்களை துன்பப்படுத்தும் போது, லஞ்சத்தை எதிர்க்கும் மக்கள் இந்த நேர்மையான அதிகாரிகளுக்கு ஆதரவாக வருவதில்லை. ஏன்? சுயநலம்தான்.
pls visit our webs http://cchepnlg.blogspot.in. http://cchepeye.blogspot.in. http://consumernlg.blogspot.in. 
எப்படி கூடங்குள மக்கள் அழிந்தால் எனக்கென்ன? எனக்கு மின்சாரம் வந்தால் போதும். தஞ்சைத் தரணியே அழிந்தாலும் தனது தேவைகளுக்கு எரிவாயுவும், எங்கிருந்தோ சோறும் வந்தால் போதும் என்கிற மனநிலையுள்ள மனிதர்களிடம் மனித நேயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? லஞ்சத்தை மட்டும் எதிர்க்கும் மேற்தட்டு மக்களின் மௌனம் நமது காதுகளை பிளக்கிறது… என்று இந்த மௌனங்கள் கலைகிறதோ அன்றுதான் இந்த நகரத்தினருக்கு லஞ்சத்தை எதிர்க்கத் தகுதி வரும்.
ஆக, துறவி வாழ்க்கை என்பது. ?

குந்தலாடி அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழா

குந்தலாடி அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழா



குந்தலாடி அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.




தமிழ்நாடு அரசு நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பள்ளி நிர்வாகம் இணைந்து குந்தலாடி அரசு உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினை செயல்படுத்தி வருகிறது.




இந்த மன்றத்தின் முன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் பள்ளியில் நடைபெற்றது.    
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளி தலைமை ஆசிரியர் பஜீத் குமார் பேசும்போது மாணவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் வருங்காலத்தில் சமூக மாற்றத்தினை உருவாக்க முடியும் குறிப்பாக ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை தற்போது பெரிதாகாமல் தடுக்க பட்டுள்ளதாக ஆய்வில் கண்டு பிடிக்க பட்டுள்ளது இதுபோன்று நுகர்வோர் விழிப்புணர்வினை மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும் என்றார்.  

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு.சிவசுப்பிரமணியம் பேசும்போது நமது தேவையை விட அதிகமான பொருட்களை பயன்படுத்தி வருகின்றோம்.  பல பொருட்கள் ஆடம்பரத்திற்க்காகவும், அடுத்தவர் பயன் படுத்துகிறார் என்பதற்காகவும், விளம்பரத்தில் சொல்லபட்டதற்க்கவும் பயன் படுத்து கிறோம் இதனால் தேவையற்ற செலவினங்களை உருவாக்கு கிறது.  மாணவர்களிடையே உணவு முறைகள் மாறி வருகிறது.  இதனால் உடலில் ஊட்ட சத்து குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.  ஊட்ட சத்து பானங்கள் வெறும் விளம்பரமே,  அவற்றை தவிர்த்து வழக்கமான உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மைய செயலாளர் பொன். கணேஷன் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து பேசினார்.  








நுகர்வோர் மைய பந்தலூர் வட்டார அமைப்பாளர் தனிஸ்லாஸ் சுகாதார வாழ்வு குறித்து பேசினார்.  











நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் நுற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசிரியை அன்சி வரவேற்றார்.  முடிவில் அலுவலக உதவியாளர் கங்காதரன் நன்றி கூறினார்.































pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/


பறவைகளின் பொருள் பொதிந்த பேச்சரவம் கேட்டிடுவோம்

சிட்டுக் குருவிகள் நம் கண்ணில் இப்போதெல்லாம் தட்டுப்படாததால் அவற்றின் இனமே அழிந்துவிட்டதாக அங்கலாய்க்கிறோம். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் நகரமயமாதலின் விளைவாகத் தங்களுக்கு ஏற்ற வாழ்விடங்களைத் தேடி அவை இடம் பெயர்ந்துவிட்டன என்பதே உண்மை.
குயில் மட்டுமல்ல, எத்தனையோ பறவைகள் நம் கண்ணில் படாமல் மரங்களில் தம்மை மறைத்துக் கொண்டு கூவுகின்றன. இவற்றை எல்லாம் நாம் காது கொடுத்து கேட்பது கிடையாது.
ஏதாவது ஒரு பறவையின் கூவல் கேட்காமல் நின்றுவிட்டால், அந்தப் பறவை எங்கே போயிருக்கும் என்ற அக்கறை நம்மிடம் இல்லை.
ஒரு பறவையின் கத்தல் அல்லது கூவல் மிகுந்த மன ஆறுதலைத் தரக்கூடியது. மனத்தில் பல்வேறு விதமான உணர்வு அலைகளை எழுப்ப வல்லது.
வால்மீகியின் கதைதான் நாம் அறிந்த ஒன்றாயிற்றே! வேடன் வால்மீகியின் அம்பு பட்டு வீழ்ந்த இணைப் பறவையின் பிரிவை ஆற்றமாட்டாது ஏக்கக் குரல் எழுப்பிய கிரெüஞ்சப் பட்சியின் கூவல், வால்மீகியைக் மகாகவியாக்கி ராமாயண காவியத்தையே சிருஷ்டிக்க வைத்து விடவில்லையா?
இந்த வகையில் கிராமத்தில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அதிகாலை வேளையில் தோப்புகளில் கேட்கும் பல்வேறு புள்ளினங்களின் ஆரவாரத்துடன் பொழுது புலரும். ஒருநாளின் பல்வேறு பொழுதுகளில் வித விதமானப் பறவைகள் ஒலி எழுப்புவதைக் கேட்க முடியும்.
பறவைகளின் கூவலை வைத்தே அவற்றை அடையாளம் கண்டு பெயர் சொல்லும் வழக்கம் இன்றும் கிராமவாசிகளிடம் உண்டு. தஞ்சை மாவட்ட விவசாயி ஒருவர் பறவைகளின் ஒலிகள் குறித்து தெரிவித்த தகவல்கள் சுவாரஸ்யமானவை:
மூன்றாம் ஜாமத்தில்தான் கீச்சாங்குருவி கத்தும். அது விடிவதற்கு வெகுநேரம் முன்னதாகவே விவசாயிகளை எழுப்பிவிட்டு விடும். ஒவ்வொரு ஜாமத்துக்கும் கத்துகிற பறவையின் பெயர் சாமக் கோழி.
ஏதாவது வேலையாக வெளியே போகும்போது, கருவாட்டுவால் குருவி என்கிற வலியன் குருவி கத்திக் கொண்டே வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக குறுக்காகப் பறந்து போனால், போகிற காரியம் பலிக்கும். இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக கத்திக் கொண்டு பறந்தால், சகுனம் சரியில்லை.
மழைக் காலங்களில் கானாங்கோழிகள் சத்தம் அதிகமாகக் கேட்கும். கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளை நாடிச் செல்லும் கானாங்கோழிகளை "பறக்கத் தெரியாத பறவை' என்றுதான் சொல்ல வேண்டும். அக்காக் குருவி கத்தினால் ஆற்றில் தண்ணீர் வரும்.
ஊமைக்கோட்டான் என்று ஒரு பறவை இருக்கிறது. நாம் இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்லும்போது, நமக்கு முன்னால் சாலையில் வந்து நிற்கும். விழிகளை உருட்டி கர்ண கடூரமாக குரல் எழுப்பும். நீங்கள் அதைக் கடந்து சென்றுவிட்டால், நீங்கள் செல்லும் பாதையின் முன்னால் மீண்டும் போய் நின்று கொண்டு பயமுறுத்தும். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இப்படிச் செய்துவிட்டு பின்பு தானே பறந்து போய்விடும்.
அரிக்குருவிகள் சத்தம் கேட்டால், விளைந்து நிற்கும் நெற்கதிர்களுக்கு ஆபத்து. அறுவடைக் காலத்தில் கூட்டம் கூட்டமாக வரும் அவை தானியங்களை கொத்திக் கொத்தித் தின்றுவிடும்.
பறவை இயல் ஆராய்ச்சியாளர் ஒருவர், பறவைகள் எழுப்பும் ஒலிகள் குறித்த சில தகவல்களைப் பதிவு செய்துள்ளார்.
"அன்றில் பறவை இரவு நேரங்களில் கரையும். "க்ரியூ.. க்ரியூ என்று அவை கத்தினால் கட்டாயம் மழை வரும். உடனே ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அவற்றை மேய்ச்சலில் இருந்து வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவார்கள். உடல் கருநீலமாக இருக்கும். தலைமட்டும் சிவப்பு நிறத்தில் இருக்கும். அன்றிலில் ஒன்று இறந்துவிட்டால் மற்றொன்றும் இறந்துவிடும்.
வயல்வெளிகளில் காவல் காப்பவர்களை டிட்டிடியூ... டிட்டிடியூ என்று கத்தி ஒரு பறவை எச்சரிக்கும். யாரோ ஒரு ஆள் வந்து கொண்டிருக்கிறார் என்று இதற்கு அர்த்தம். இந்தப் பறவையின் பெயரே "ஆள்காட்டிப் பறவை'தான்!
கூழைக்கடா என்று ஒரு பறவை இருக்கிறது. இதை "செங்கால் நாரை' என்றும் சொல்வது உண்டு. சத்திமுற்றத்துப் புலவர் "நாராய் நாராய் செங்கால் நாராய்' என்று பாடியது இந்தப் பறவையைப் பார்த்துதான். இது மனிதர்களின் குரலை அப்படியே "மிமிக்ரி' செய்யும். கூழைக்கடா முழு வளர்ச்சி அடைந்தவுடன் அதன் குரலை இழந்துவிடும். இணையை அழைப்பதற்குக்கூட தன் அலகுகளை ஒன்றோடு ஒன்று மோதி ஒலி உண்டாக்கத்தான் இதனால் முடியும்!
அசுணம் என்பது இசையறிந்த பறவை. அபசுரத்தைக் கேட்டால் இது இறந்துவிடும் என்று சங்கப்பாடல்கள் கூறுகின்றன.
மணிக்கொடி எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி "மகா கவிகள்' என்ற தலைப்பில், பறவைகளைப் பற்றி ஒரு காவியமே எழுதியிருக்கிறார். அவருடைய கவிதைத் தொகுப்பின் பெயர்கூட "காட்டு வாத்து' தான்.
எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் பிச்சமூர்த்தியை சந்திக்க ஒரு மழை நாளில் சாலியமங்கலம் கிராமத்துக்கு சென்றபோது, நீண்ட வெண்ணிறத்தாடி காற்றில் அலை பாய மழையில் நனைந்தபடி தண்ணீர்ப் பரப்பை ரசித்துக் கொண்டு நின்றிருந்தார் ந. பிச்சமூர்த்தி.
"இது ஒரு அபூர்வமான பறவை. இதோட பேரு முக்குளித்தான். இது தண்ணிக்குள்ள மீன் மாதிரி நீந்தி வாழும். அதே நேரத்துல தண்ணிக்குள்ளே இருந்து மழை பெய்யற நேரத்துல வெளியே வந்து ஆகாய வானத்துல பறக்கும் பாருங்க... அற்புதமான சிருஷ்டி. தண்ணீர் கலங்கினால் இதுக்குப் பிடிக்காது. தண்ணீர் அடிமட்டத்துலே இருந்து நீந்தி வந்து மரத்துமேல போய் உட்காந்துக்கும். வானத்துலயும் பறக்கும். குக்கூ குக்கூன்னு அதுக்குள்ள சத்தம் பாருங்க..' என்று வியந்தார் பிச்சமூர்த்தி.
இந்தப் பறவைக்கு முக்குளித்தான் என்று பெயரிட்ட கிராமவாசியைவிட மிகச் சிறந்த கவிஞன் வேறு யார் இந்த உலகில் இருக்க முடியும்?
சிட்டுக்குருவிகளின் கீச்சொலிகள் கேட்காத வீட்டுத் தாழ்வாரங்களை கிராமத்தில் பார்க்கவே முடியாது. காக்கையின் கரகரப்பான குரலை யாரும் வெறுத்துவிடக் கூடாது என்பதற்காகவே காக்கை கரைவதை விருந்தினர் வருகையின் முன்னறிவிப்பாக சொல்லி வைத்தனர் போலும்.
ஒரு முனிவர் தாம் பெற்ற சாபத்தின் காரணமாக காக்கையாக மாறிவிடுகிறார். அவர்தான் காகபுசுண்டர். காக்கைதான் ராமாயணக் கதையை கருடனுக்குச் சொன்னதாக நமது புராணங்கள் கூறுகின்றன.
"காவென்று கத்திடுங் காக்கை என்றன் கண்ணுக்கினிய கருநிறக் காக்கை' என்றும் "பின்னர் தெருவிலோர் சேவல் அதன் பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும்' எனவும் சிட்டுக் குருவியின் கீச்சொலியை "குருவித் தமிழ்' என்றும் ஒலிகளை பலபட ரசித்து பாடல்கள் புனைந்தான் பாரதி. பாரதியின் "காளிகோயில்' என்ற வசன கவிதையில் பல்வேறு பறவைகளின் குரல்களை வர்ணிப்பதைப் பாருங்கள்!
கிளி : தைர்யா, தைர்யா, தைர்யா
குயில்கள் : சபாஷ்! சபாஷ்! சபாஷ்!
குருவிகள் : டிர்ர்ர்... டிர்ர்ர்ர்
நாகணவாய் : குபுக்... ஜீவஜீவ ஜீவஜீவ
முருகன் : சிவசிவ.. சிவசிவ... சிவசிவா...
காக்கை : எங்கோ வாழ்! எங்கோ வாழ்!
எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் "பரத்வாஜம்' என்ற குருவியின் சம்ஸ்கிருதப் பெயரை "கரிச்சான்' என்ற தமிழ்ப் பெயராக மாற்றி அந்தப் புனைபெயரில் கதைகள் எழுதியதும், அவருடைய சீடரான நாராயணசாமி கு.ப.ரா மீதுள்ள மதிப்பால் "கரிச்சான்குஞ்சு' என்ற பெயரில் எழுதிப் புகழ்பெற்றதும் இலக்கிய உலகம் அறிந்த செய்தி.
எழுத்தாளர் ஸ்வாமிநாத ஆத்ரேயன், கு.ப.ரா. மேலும் சில நண்பர்களுடன் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தபோது, கரிச்சான் எங்கோ கத்துவதைக் கேட்டு பேச்சை நிறுத்தி "அதன் பெயர்தான் பரத்வாஜம்' என்று சொல்லிவிட்டு உரையாடலைத் தொடர்ந்தாராம்!
சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் அழைத்துக் கொண்டு மதுரையை நோக்கி அடர்ந்த கானகத்தின் வழியே செல்லும்போது, இரவு, பகல் தெரியாமல் இருட்டாக இருக்கிறது. பறவைகளின் குரல் ஒலிகளை வைத்து இது அதிகாலை, நண்பகல், மாலை, இரவு, நள்ளிரவு என்று சொல்லிக் கொண்டு வருவதாகப் பாடல் வரிகள் வருகின்றன.
ஆண்டாள் பாடிய திருப்பாவையில் "கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ?' என்று தோழிகளை எழுப்புவாள். ஆனைச்சாத்தன் என்கிற குருவிக் கூட்டத்தின் கீச் சொலிகளைக் கேளாமல் அப்படி என்ன ஆழ்ந்த உறக்கம்?
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் பொருளற்றப் புலம்பல்களைக் கேட்டதெல்லாம் போதும். வாருங்கள், பறவைகளின் பொருள் பொதிந்த பேச்சரவம் கேட்டிடுவோம்

பழமைகள் ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல, பாதுகாக்கப்பட வேண்டியவை!

அண்மையில் நண்பர் ஒருவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். அவருடைய ஆறு மாத குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டிருப்பதாக கூறி, அவசரமாக மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றார். சில மணி நேரத்துக்குப் பிறகு அவரிடம் குழந்தையின் நலம் குறித்து விசாரித்தபோது, குழந்தையைப் பார்க்க வந்திருந்த உறவினர்கள் தூக்கியபோது நரம்பு பிசகியதால் அழுததாகவும், தற்போது சரியாகி விட்டதாகவும் கூறினார்.
ஆனால், அவர் அடுத்து கூறியதுதான் அதிர்ச்சியை உண்டாக்கியது. மருத்துவமனையில் இதற்கென குழந்தைக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை, மருந்து என சில நூறு ரூபாய்கள் செலவு ஆனதாகவும் கூறினார்.
குழந்தைக்கு சிறு வலி என்றாலும் தனது அழுகையின் மூலமே வெளிப்படுத்தும். இரவு நேரம் என்றால் பெற்றோரின் தூக்கம் பறிபோகும்.
அதேநேரம் வயதானவர்கள் குழந்தையின் நிலை அறிந்து குடல் தட்டுதல் எனப்படும் கை வைத்தியம் செய்வார்கள். அத்துடன் மேலும் கீழும் வேகமாக உலுக்குவார்கள். துணியில் குழந்தையை படுக்க வைத்து இருபக்கமும் ஆட்டுவார்கள்.
இதைப் பார்க்கின்றவர்களுக்கு உள்ளம் பதைபதைக்கும். ஆனால், சில நிமிடங்களில் குழந்தையின் அழுகுரல் மெல்லக் குறைந்து நிம்மதியாக உறங்கும். பாட்டி வைத்திய முறைகளில் இதுவும் ஒன்று.
ஆனால், தற்போது பாட்டி வைத்தியங்கள் மெல்ல மறைந்து வருகின்றன. சிறு தலைவலி என்றாலும் கஷாயத்தின் மூலம் குணமான காலங்கள் மறைந்து போய்விட்டன. கிராமங்களில் எளிதில் கிடைக்கும் கீழாநெல்லி, தும்பை, தூதுவளை, கரிசலாங்கண்ணி உள்ளிட்ட செடிகள் மருத்துவ குணம் நிறைந்தவை.
உடல்நிலை சரியில்லை என்றால், அந்தப் பகுதிகளில் எளிதாக கிடைக்கும் இந்த செடிகளில் நோய்க்கு தக்கவாறு கஷாயமாக தயாரித்து சாப்பிடக் கொடுத்து ஓய்வு எடுக்கச் சொல்வார்கள்.
மஞ்சள் காமாலை, சுளுக்கு போன்றவற்றுக்கு மருத்துவரிடம் செல்லும்போது, நாட்டு வைத்தியத்தை பரிந்துரைக்கும் சில மருத்துவர்களும் இருக்கிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் கிராமங்களில் இருந்து நகரப்பகுதிகளில் இடம் பெயர்ந்த குடும்பங்கள், தங்களது பெற்றோரை கிராமங்களிலேயே விட்டுவிடுகின்றனர்.
இதுபோன்ற அவசர காலங்களில் தங்களது அலைபேசி வாயிலாக முதலுதவி முறைகளைக் கேட்டு அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அது கைகளால் செய்யப்படும் முதலுதவி போல ஆகாது. ஏனெனில், கிராமங்களில் கிடைக்கும் மூலிகைச் செடிகள் நகரங்களில் கிடைக்காது.
அத்துடன் குழந்தையைப் பாசத்துடன் பார்த்துக் கொள்ள பெற்றோருக்கு நேரமும் இருப்பதில்லை. இதனால், உடல் உபாதைகளுக்கு ஆங்கில மருந்துகளைத் தேடி ஓட வேண்டியுள்ளது.
தற்போது அறிவியல் உலகத்தில் அவசர கதியில் மருந்துக் கடைகளில் நமது உடல் உபாதையை கூறி மாத்திரை வாங்கி சாப்பிடுகிறோம். அது தீங்கானது என்று பலமுறை மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நமது நோய்க்கு தகுந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி சாப்பிடுவதால் உடனடியாக பாதிப்பு ஏற்படாது என்றாலும், நம்முடைய வாழ்நாள் எண்ணிக்கையை குறைப்பதில் அது பெரும்பங்கு வகிக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஆனால், நம்மில் பலருடைய காதுகளில் இன்னமும் விழுந்தபாடில்லை.
இயற்கையிலிருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறோம். இயற்கை வைத்தியம், இயற்கை விவசாயம், இயற்கை உணவு முறை இவையெல்லாம் மறைந்து வருகிறது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவச்சியால் கிராமங்களில் பிரசவங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. தற்போது அவை காலாவதி ஆகிவிட்டன. மருத்துவச்சிகள் மறைந்து வருகின்றனர்.
அவர்களின் மருத்துவ முறைகளை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்து செல்ல யாரும் முன்வராததாலும், உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் நடப்பதாலும் ஆங்கில மருத்துவ முறைகளை நாட வேண்டியுள்ளது.
ஆக இணையத்தில் மட்டுமே காணக்கூடிய நிலையில் இனி பாட்டி வைத்தியமும், வீட்டு வைத்தியமும் இருக்கும்.
அனுமன் கொண்டு சென்ற சஞ்சீவினி மூலிகைகள் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது போல கண்டறியப்படும் நிலை கிராமத்து மூலிகை செடிகளுக்கும், பாட்டி வைத்திய முறைகளுக்கும் வரக்கூடாது.
பழைமைகள் ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல, பாதுகாக்கப்பட வேண்டியவை!

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...