மழவன்சேரம்பாடியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது




மழவன்சேரம்பாடியில்  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட்,  மலையரசன் விளையாட்டு குழு சூப்பர் பாய்ஸ் மழவன்சேரம்பாடி  ஆகியன இணைந்து  இலவச கண் சிகிச்சை முகாமினை மழவன்சேரம்பாடி ஊராட்சி ஒன்றிய  துவக்க பள்ளியில் நடத்தின.
முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் தலைமை  தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மைய  தலைவர் சிவசுப்பிரமணியம்,  ஊர் பிரமுகர்கள் குமார், ராஜகோபால், பாய்குமார், மணி, ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் உதகை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்  அமராவதி  தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் நோயினால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  இதில் 15 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முகாமில் கொளப்பள்ளி வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், கண் தொழில் நுட்புனர் முத்துராஜ், பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் மங்கை, ஸ்ரீதர், கூடலூர் நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர்  தனிஸ்லாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மலையரசன் விளையாட்டு குழு தலைவர் இளங்கோவன்  வரவேற்றார்.  முடிவில் மலையரசன் விளையாட்டு குழு செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...