முதன்மை கல்வி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் 3/2015



முதன்மை கல்வி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி தலைமை வகித்தார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது பல தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது நுழைவு தேர்வு எழுதவேண்டும் என கட்டாய படுத்த படுகிறது.  இவற்றை தடுக்க வேண்டும்.  அனுமதி அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்  பட்டியல்  செய்தி தாள்களில் வெளியிட வேண்டும்.  கல்வி கட்டணம் மக்கள் எளிதில் தெரிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்கள் உரிய பராமரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அனைத்து பள்ளிகளிலும் புரொஜெக்டர் சரிசெய்து தர வேண்டும் என்றார்.  
மேலும் புளுமௌண்டன் நுகர்வோர் சங்க தலைவர் ராஜன், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் குன்னூர் நுகர்வோர் சங்க தலைவர் மனோகரன் ஆகியோர் பேசும்போது பள்ளிகளில் நுகர்வோர் மன்றம் அமைக்க வேண்டும்.  மாணவர் சேர்க்கை பல தனியார் பள்ளிகளில் தற்போது தொடங்கிவிட்டனர்  தடை செய்ய வேண்டும்,   மாணவர் சேர்க்கை கல்வி உரிமை சட்ட விதிப்படி உச்ச பட்சம் நிர்ணயம் செய்ய வேண்டும்.   என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி பேசும்போது  அரசு பள்ளிகளில் மாணவர்கள் வாசிப்பு திறன் குறைந்த மாணவர்கள் திறன்மேம்பட  புதிய முறையில் வாசிப்பு அட்டைகள் மூலம் சிறப்பு பயிற்சி  32 நாட்கள் அளிக்கபடுகிறது.  கூடலூர் பகுதியில் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மொழிக்கும் இந்த அட்டை பயிற்சி அளிக்கபடவுள்ளது. இது அரசு பள்ளிகளில் மட்டும் மேற்கொள்ளபடுகிறது.  தினசரி செய்தி தாள்கள் வாசிப்பு பழக்கம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.  அரசு பள்ளிகளில் வரும் கல்வி  ஆண்டு முதல் 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் கணினி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.  மாணவர் சேர்க்கைக்கு  கட்டிடதகுதி சம்பந்தபட்ட வட்டாட்சியர் மூலம் பெற்று அதன் அடிப்படையில் ஆங்கில வழி கல்விக்கு ஒரு பிரிவும், தமிழ் வழி  கல்விக்கு மூன்று பிரிவுகளும் அனுமதி வழங்க படுகிறது.  கல்வி உரிமை சட்டப்படி 30 முதல் 40 மாணவர்கள் வரை சேர்க்கைக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.  ஒரே வகுப்பறையில் அதிக மாணவர்கள்  வைத்தால் அப்பள்ளி மிது நடவடிக்கை எடுக்கப்படும்.  மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தகூடாது. புகார் பெறபட்டால் அப்பள்ளிகள் மிது கடும் நடவடிக்கை எடுக்கப் படும். அனைத்து பள்ளிகளிலும் தமிழ்  கட்டாயம் படிக்க வேண்டும் என அரசு ஆணையிட்டு உள்ளது.  நீலகிரியில் 71  பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ளது.   தற்போது CBSC  ICSC பள்ளிகளும் பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.   அவற்றின் அங்கீகாரம் படிவங்கள் இயக்குனருக்கு அனுப்பட்டுள்ளது.  நுகர்வோர் மன்றம் அமைக்க பட்ட பள்ளிகளில் தொடர்ந்து கூட்டம் நடத்த அறிவுரைகள் வழங்கபடும்.   ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் மூலம் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது அது முழுமையாக மாணவர்களிடையே சென்று சேரும்.  அரசு சார்பில் கல்வி மேம்பாட்டிற்கு  பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.   இவை மக்கள் பயன் படுத்தி மாணவர்களை அரசு பள்ளிகளில்  சேர்க்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் முதன்மை கலவி அலுவரரின் நேர்முக உதவியாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...