இளைஞர்களுக்கான
வாழ்வியல் திறன்
மேம்பாட்டு பயிற்சி முகாம் பந்தலூரில் நடைப்பெற்றது. இந்திய
அரசு நேரு
யுவகேந்திரா சார்பில் நடைப் பெற்ற இந்த பயிற்சி
பந்தலூர் அரசு
மேல் நிலைப் பள்ளியில் நடைப் பெற்றது.
பயிற்சி
முகாமிற்கு நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர்வேல் முருகன் தலைமை தாங்கி
பேசும்போது இன்றைய சூழலில் இளைஞர்களின் வாழ்க்கை பாதை தடுமாறி செல்கின்றது. குறிக்கோள்
இல்லாத பயனம் தவறுகளும் தீங்குகளும் அருகில் வந்து தாக்கும் நிலையில் இளைஞர்கள் உள்ளனர்.
அனைத்து தொழில் நுட்ப வளர்ச்சியும் இளைஞர்களின் வழ்வை மேம்படுத்துவதை விட சீரழிக்கவே
அதிகம் பயன்படுகிறது. இளைஞர்கள் தங்களின் தனி திறன்களை கண்டறிந்து அதனை நல்வழியில்
கொண்டு செல்ல வேண்டும். இளைஞர் மன்றங்கள் சமூக அக்கறையோடு சமூக முன்னேற்றத்திற்கு
பாடுபட வேண்டும் அரசின் திட்டங்களை கிராமங்களுக்கு கொண்டு செல்வதில் அக்கறை காட்ட
வேண்டும் என்றார்.
பள்ளி
தலைமை ஆசிரியர்
சித்தானந்த். கூடலூர்
நுகர்வோர் பாதுகாப்பு
மைய தலைவர்
சிவசுப்பிரமணியம், நுகர்வோர் பாதுகாப்பு
மைய ஆலோசகர்
காளிமுத்து, மகாத்மா காந்தி பொது சேவை
மைய தலைவர்
நவுசாத் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். நேரு யுவகேந்திரா
சேவை தொண்டர்
ஆண்டம்மாள் வரவேற்றார்.
யோகா
மற்றும் பிராணயாம
பயிற்சிகள் குறித்தும் மாவட்ட சித்தா மருத்துவ
அலுவலர் (ஓய்வு)
கனேசன், வங்கிகள்
சேவை மற்றும்
பிரதம மந்திரியின்
நிதி திட்டங்கள்
குறித்து இந்தியன்
வங்கி கிளை
மேலாளர் ஈஸ்வரன்,
முதலுதவி குறித்து
இந்திய செஞ்சிலுவை
சங்க பயிற்சியாளர்
பிரகாஷ், தன்னம்பிக்கையோடு
வாழ்கையில் முன்னேறுதல் குறித்து தேவாலா கிராம
நிர்வாக அலுவலர்
ராஜ்கமல், இளைஞர்கள்
திறன்களை வளர்த்துக்
கொள்ளுதல் குறித்து ஓய்வு தலைமை
ஆசிரியர் சத்தியநேசன்,
சவால்களை எதிர்
கொள்ளுதல் குறித்து கூடலூர் கலை
அறிவியல் கல்லூரி
நாட்டு நலப்
பணி திட்ட அலுவலர் மகேஸ், நேர மேலாண்மை உதவி
மண் வள
பாதுகாப்பு அலுவலர் சுந்தரலிங்கம் உள்ளிட்டோரும்
பேசினார்கள், தொடர்ந்து
இரத்த தானம்,
கண்தானம், பேரிடர்
மேலாண்மை, நுகர்வோர்
உரிமைகள், இளைஞர்கள்
சமுக முன்னேற்றத்தில்
பங்கு, திட்டமிட்ட
வாழ்க்கை உள்ளிட்ட
பல்வேறு தலைப்புகளில்,
பந்தலூர் குடிமக்கள்
நுகர்வோர் மன்ற
ஆசிரியர் தண்டபானி,
கூடலூர் அரசு
மேல்நிலை பள்ளி
ஆசிரியர் பிரபு,
நாட்டு நலப்பணி
திட்ட அலுவலர்
ராஜ்குமார், வருவாய் உதவியாளர் காமராஜ் உள்ளிட்டோர்
பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில்
90
க்கும் மேற்பட்ட
இளைஞர்கள் கலந்து
கொண்டனர். தொடர்ந்து
பயிற்சி பெற்றவர்களிடையே
விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது. வெற்றி
பெற்ற அணிக்கு
பரிசுகளும் பயிற்சியில் பங்கு பெற்றோருக்கு சான்றிதழ்களும்
வழங்கப்பட்டது. முடிவில்பள்ளி
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment