உணவு கண்காட்சி 2016

பந்தலூா் புனித சேவியா் பெண்கள் உயா்நிலைப்பள்ளியில் உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவு கண்காட்சி நடத்தப்பட்டது.
கூடலூா் நுகா்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகா்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய இந்த உணவு கண்காட்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் செலின் தலைமை தாங்கினார்.  கூடலூா் நுகா்வோர் பாதுகாப்பு மைய தலைவா் சிவசுப்பிரமணியம் ஆலோசகா் காளிமுத்து, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவா் நவுசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனா். 
மாணவியா்கள் மூலம் அமைக்கப்பட்டு இருந்த உணவு கண்காட்சியை வட்டார மருத்துவ அலுவலா் கதிரவன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.  மாணவிகள் மூலம் ஊட்டச்சத்து உணவுகள், காய்கறிகள், தானிய உணவுகள், அசைவ உணவுகள் உள்ளிட்டவை வைத்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள், அவற்றின் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தனா்.  சில மூலிகைகள் கண்காட்சியில் வைத்து அவற்றின் மருத்துவகுணங்கள் குறித்து விளக்கம் அளித்தனா்
கலப்பட உணவுகள், ஜங்புட் எனப்படும் நொறுக்கு தீனிகள்,  தீங்கு விளைவிக்கும் உணவுகள்  அவற்றில் உள்ள அமிலங்கள் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என பல்வேறு வகைகளில் உணவுகளை வைத்து செயல்விளக்கம் அளித்தனா். 
தொடா்ந்து பள்ளி மாணவிகள் பொதுமக்கள் இந்த கண்காடசியை பார்வையிட்டு பயனடைந்தனா்.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி உதவி தலைமை ஆசிரியா் மும்தாஜ்,  குடிமக்கள் நுகா்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின்,  நுகா்வோர் பாதுகாப்பு மைய அமைப்பாளர் நீலமலை ராஜா, மகாத்மா காந்தி பொதுசேவை மைய நி்ர்வாகி அகமதுகபீா் உள்ளிட்ட ஆசிரியா்கள் மைய நிர்வாகிகள் உட்பட பலா் செய்திருந்தனா்

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...