பந்தலூர். நவ., 18:

பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர் நிலை பள்ளியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.  பள்ளி தலைமை ஆசிரியர் செலின் தலைமை தாங்கினார். 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, செயலாளர் சிவசுப்பிரமணியம், ரெப்கோ வாங்கி கிளை மேலாளர் பாலாஜி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டனர். 

 ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.  

 பள்ளி மாணவிகள் நாம் பயன்படுத்தி தூக்கி எரியும் பயன்படாத பொருட்கள்.  பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நூல் காகிதங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு அலங்கார பொருட்கள், மறு பயன்பாட்டிற்கு உதவும் வகையிலான பொருட்களை உருவாக்கினார்கள்.  

இவை கண்காட்சியில் வைக்க பட்டிருந்தது.  இதில் காலி குடிநீர் பாட்டில்களில் பேனா ஸ்டாண்ட், இரவு விளக்கு,  கைப்பைகள், புகைப்பட பிரேம்கள், போன்றவை அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.  பல பொருட்கள் குப்பை  என தூக்கி ஏரியும் பொருட்களை அழகிய பொருட்களாக உருவாக்கியது வரவேற்க கூடியது என தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் ரோஸ்மேரி, மார்ட்டின உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்து இருந்தனர். 

No comments:

Post a Comment

அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்*

 அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்* இந்திய அரசியல் சாசனம் இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் முதல் தகவல் அறிக்கை (F.I.R.)...