கர்ம வீரர் 5



மாஸ் காட்டிய முதல்வர்...

அடுத்தடுத்து அதிரடி திட்டங்கள்... மறக்க முடியுமா?

முதல்வராக காமராஜர் ஆற்றிய பணிகள்...!!

👉காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும், வியக்கும்படியும் அமைத்தார்.

👉காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

👉அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? 'பிரச்சனையை எதிர்கொள்ளுங்கள். அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை.

அதனை தீர்ப்பதற்கான வழிகளை தேடுங்கள். நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள்" என்பதுதான்.

👉பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளை திறந்தார்.

👉காமராஜரின் நல்லாட்சியில் கல்வித்துறையிலும், தொழில்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சியை கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார்.

பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு உயர்நிலைப்பள்ளி இருப்பதை உறுதி செய்தார்.

👉எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார்.

👉ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் இலவச சீருடையை வழங்கினார்.

காமராஜரின் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

👉பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழை முக்கிய மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்ப பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவர செய்தார்.

அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்களை அறிமுகம் செய்தார். நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டதும் இவரது ஆட்சி காலத்தில்தான்.

👉மேலும், 17,000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்ததோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு

'இலவச மதிய உணவு திட்டத்தினை" ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.


👉இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்த திட்டம், உலகளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம்.

இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

பள்ளிகளில் வேலைநாட்கள் 180ல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...