மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க

 வணக்கம் நண்பர்களே...!


அரசு அலுவகங்களில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு பணி செய்யாத அதிகாரிகளை தண்டிக்க முடியாதா...?


அவர்களை நம்மால்

என்ன செய்ய முடியும்...?

அவர்கள் தப்பிக்கும் சட்டம் எது...?


பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 01/08/2014 ல் ரிட் மனு எண். 20527/2014 ல் உத்தரவு பிறப்பித்தது.


மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசும் 21/09/2015 அன்று அரசாணை எண். 73, 99-யை வெளியிட்டது..


ஆனால் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவையோ அல்லது அரசாணை எண்: 73, 99-யை யாராவது மதிக்கிறார்களா..?

அப்படியால் இவர்களை எப்படி தண்டிப்பது..?


மக்கள் பணி செய்யாத, செய்யத் தவறுகிற அரசு ஊழியர்கள் அனைவரும் கடமை தவறிய அலுவலர்களேயாவர் என்று சட்டம் கூறுகிறது.


மேலும் இதுபோன்ற அலுவலர்களுக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கலாம் என்று இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 166 கூறுகிறது.


ஆனால் தண்டனை பெற்றுத்தர என்ன செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்பதே உண்மை.


அற்ப காரணங்களின் அடிப்படையில் தான் தவறு செய்யும் அரசு ஊழியர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டையின் மூலமாக அவர்கள் நம் பிடியிலிருந்து தப்பி விடுகிறார்கள்.


சரி சட்டத்தில் எந்த ஓட்டை மூலம் தவறு செய்யும் அரசுஊழியர்கள் தப்புகின்றனர் தெரியுமா..?


குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 197 தான் அந்த பெரிய ஓட்டை.


Crpc- sec- 197 - Prosecution of judges and public servants.


பொது ஊழியர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டும் என்றால் மத்திய அல்லது மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டுமென்றும், அனுமதி பெறாமல் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 197 கூறுகிறது..


ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 166(அ), 166(ஆ), 354, 354(அ),354(இ), 354(ஈ), 370, 375, 376, 376(அ),376(இ), 376(ஈ), 509 போன்ற குற்றங்களை ஒரு அரசு ஊழியர் செய்தால் அதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.


மேலும் ஊழல், பொய் ஆவணம் தயாரித்தல், பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக வழக்கு தொடரவும் அனுமதி பெற தேவையில்லை..


அரசு ஊழியர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளைப் பார்த்தால், அநேகமாக அவை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 ஐ காரணம் காட்டித் தப்பிச் சென்றிருப்பதாகவே தெரிகிறது.


ஆகவே ஒரு அரசு ஊழியர் அவரது கடமையை செய்யத்தவறினால் அவர்மீது வழக்குத் தொடர அந்தந்தத் துறைச் செயலாளர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாக அனுமதி கேட்டு, பதிவுத் தபாலில் அனுப்பி பதிவுத்தபால்  பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அட்டை (அக்னாலட்ஜ்மென்ட் கார்டு) நமது கைக்கு வந்த பிறகே சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்ய முடியும்.


நன்றி...!

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...