உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு ஶ்ரீ மதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு தாய்ப்பால் முக்கியத்துவம் மற்றும் கர்ப்பகால மனநல ஆலோசனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். ஆல்த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை நிர்வாக அலுவலர் திலகராணி ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
ஶ்ரீமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மணிகண்டன் பேசும்போது குழந்தை பிறந்த உடன் துவங்கி 6 மாதம் கட்டாயம் தாய்ப்பால் மட்டும் அனைவரும் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளின் ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அதுபோல் தாய்மார்களுக்கு மார்பக கட்டி, புற்றுநோய் உள்ளிட்டவை வராமல் தடுக்கிறது. பெண்கள் கூச்சபடாமல் தயங்காமல் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது கட்டாய பொறுப்பாகும். 6 மாதத்திற்கு பிறகு கிழங்கு, பருப்பு, உள்ளிட்டவைகளோடு அரிசி சாப்பாடு சேர்த்து கொடுக்கலாம். என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
கர்ப்பிணிகள் உடலுக்கு தேவையான ஊட்டசத்தான உணவுகளாக பழங்கள், சிறுதானிய உணவு வகைகள், கீரைகள் உள்ளிட்டவை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான கார்ப்போஹைட்ரேட், நார் சத்துக்கள், புரத சத்துக்கள், கிடைக்கும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும். பொறித்த உணவுகளையும் அதிக ரசாயனம் சேர்த்த கேக், நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும். கர்ப்பத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக உடல் உறுப்புக்கள் வளர அயோடின் நுண்ணூட்ட சத்து அவசியம் ஆகிறது. இதன்மூலம் கருவில் குழந்தை முறையாக, ஆரோக்கியமாக வளர்கிறது. குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க தாய் சேய் நலமுடன் அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். என்றார்.
செவிலியர்கள்,
அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் குழந்தை வளர்ச்சி, பாலூட்டும் முறைகள், அரசு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டசத்து உணவுகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஊட்டசத்து கூல் மற்றும் சிறுதானிய சத்து லட்டுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை நிர்வாக அலுவலர் திலகராணி, கள அலுவலர்கள் கிஷோர், ஜான்சி, அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், கர்ப்பிணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment