*Tips for Today*
🔖🔖🔖🔖🔖
*சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*
🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேனுவலாக வழங்கப்படுவது இல்லை.
🔖பிள்ளைகளுக்கு சாதி சான்று பெற பெற்றோரின் சாதி தொடர்பான ஆவணங்கள் அவசியம்.
🔖பெற்றோரிடம் சாதி சான்று இல்லை என்றால் அவர்களின் பள்ளி மாற்றுச் சான்று ஆவணங்களை வைத்து முதலில் அவர்களுக்கு சாதி சான்று பெற்றுக் கொள்ள வேண்டும்.
🔖தந்தையின் சாதியைத்தான் குறிப்பிட்டு சாதிச் சான்று பெற வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
🔖பெற்றோர் இருவரும் வேறு வேறு சாதியாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு சாதிச் சான்று பெறும்போது அம்மா அப்பா இருவரில் யாரேனும் ஒருவரின் சாதியை குறிப்பிட்டு சாதி சான்று பெற்றுக் கொள்ளலாம்.
🔖முதல் குழந்தைக்கு யாருடைய சாதியைக் குறிப்பிட்டு சான்று பெறுகிறோமோ அதையே அடுத்தடுத்த குழந்தைகளுக்கும் பின்பற்ற வேண்டும்.
🔖உதாரணமாக முதல் குழந்தைக்கு தாயின் சாதியையும் இரண்டாவது குழந்தைக்கு தந்தையின் சாதியையும் குறிப்பிடுவது தவறு.
🔖முன்பு சாதிச் சான்று கையால் எழுதி அட்டைகளில் வழங்கப்பட்டு வந்தது. உங்களிடம் அப்படி அட்டையில் வழங்கப்பட்ட சாதி சான்று இருந்தால் அதையே ஆதாரமாக வைத்து இணைய வழியில் விண்ணப்பித்து தற்போது வழங்கப்படும் ஆன்லைன் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுதல் அவசியம்.
🔖உங்கள் பிள்ளைகளின் மேற்படிப்புக்காக செல்லும்போது இணைய வழி சான்றிதழ்களை தான் கேட்பார்கள்.
🔖சில வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட இணைய வழி சாதி சான்றிதழில் புகைப்படம் இல்லாமல் வரும்.
🔖எனவே தற்போது மீண்டும் விண்ணப்பித்து புகைப்படத்துடன் கூடிய இணைய வழி சாதி சான்றிதழ் பெற்றுக்கொள்ளுதல் நலம்.
🔖சில இடங்களில் பிள்ளைகளை கல்லூரியில் சேர்க்கும் போது
பெற்றோர் இருவரின் சாதிச் சான்றும் கேட்பதால் வீட்டில் உள்ள அனைவருக்குமே இணைய வழியில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய சாதி சான்று பெற்று வைத்துக் கொள்ளுவது நல்லது.
🔖பெற்றோர் படிக்காதவர்கள் அல்லது அவர்களிடம் சாதி தொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால் அவர்களுடைய பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்று ஒரு சான்று பெற்று அதையே ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
🔖சில சாதிகளின் கேட்டகிரி மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக முஸ்லிம் என்பது BC முஸ்லிம்(BCM) என்றும் பள்ளர் என்பது தேவேந்திர குல வேளாளர் என்றும் மாற்றப்பட்டுள்ளது. இவர்களும் புதிதாக வேறு சாதி சான்று பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
🔖 திருமணமான பெண்கள் சிலர் கணவர் பெயருடன் இணைத்து சாதி சான்று பெற்றிருக்கலாம். ஆனால் சாதிச் சான்று தந்தை பெயருடன் இருப்பது கட்டாயம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
🔖இது போன்ற தகவல்கள் எனக்கு தெரியுமே என்று சொல்பவர்கள் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.