*uncontested dismissed for default என்றால் என்ன*
நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கை நீங்கள் தாக்கல் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.அதாவது அந்த வழக்கு அசையும் சொத்துக்கள் சம்பந்தமாகவும் அல்லது அசையா சொத்துக்கள் சம்பந்தமாகவோ அல்லது பணம் சம்பந்தமாகவோ இருக்கலாம்.
நீதிமன்றத்தில் உங்கள் வழக்கை வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்திருப்பீர்கள் அந்த வழக்கை நடத்துவதற்கு அந்த வழக்குகளில் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு உங்கள் வழக்கறிஞருக்கு நீங்கள் வக்காலத்து நாம என்ற மனுவில் கையெழுத்திட்டு கொடுத்திருப்பீர்கள் அது எதற்காக என்றால் நீங்கள் நீதிமன்றத்திற்கு வராத காலத்தில் உங்கள் சார்பாக வழக்குகளை நடத்தவும் முடியும்.
உங்களுக்காக உங்கள் வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்யவும் முடியும் அதற்கான அதிகாரத்தை தான் வக்காலத்து நாம மூலம் வழக்கறிஞர் உங்களிடம் பெற்றுக் கொண்டு உங்களுடைய வழக்கை நடத்துவார்.
What-is-uncontested-dismissed-for-default
வாகலத் நாம என்றால் என்ன?
வாகலத் நாம" என்ற வார்த்தைக்கு நேரடியான ஆங்கிலச் சமமான வார்த்தை இல்லை, ஏனெனில் இது இந்தியச் சட்டத்திற்குக் குறிப்பிட்ட ஒரு சட்டச் சொல்லாகும்.
"வகலத் நாம" என்பது பாரசீக மொழியிலிருந்து பெறப்பட்டது, இங்கு "வக்கீல்" என்றால் "வழக்கறிஞர்" மற்றும் "நாமா" என்றால் "ஆவணம்" அல்லது "காகிதம்" என்று பொருள். இருப்பினும், அதை ஆங்கிலத்தில் "பவர் ஆஃப் அட்டர்னி" அல்லது "அங்கீகார கடிதம்" என்று மொழிபெயர்க்கலாம்.
இது ஒரு வழக்குரைஞர் அல்லது வழக்கறிஞருக்கு ஒரு வாடிக்கையாளரின் சார்பாக நீதிமன்றத்தில் அல்லது சட்ட நடவடிக்கைகளில் செயல்பட அதிகாரம் அளிக்கும் ஆவணமாகும்.
உங்கள் வழக்குகளை நடத்துவதற்கு ஒரு வழக்கறிஞருக்கு வக்காலத்தில் நாம மூலமாக அதிகாரம் கொடுத்து அந்த வழக்கறிஞர் உங்கள் வழக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் வழக்கறிஞருக்கும் உங்களுக்கும் தொடர்பு இல்லாமல் போனாலோ அல்லது வழக்கறிஞருக்கும் உங்களுக்கும் பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டு நீங்கள் வழக்கறிஞரிடம் தொடர்பு கொள்ளாமல் போனாலோ அல்லது உங்களுடைய வழக்கறிஞர் இறந்து விட்டாலோ அவர் உங்களுடைய வழக்கை நடத்துவதில் தவறி விடுவார் இதனால் உங்கள் வழக்கு நீதிமன்றத்தில் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் அப்படியே இருக்கும் இந்த காலத்தில்
நீங்கள் வேறு வழக்கறிஞரை நியமிக்க தவறினாலோ அல்லது நேரில் சென்று உங்கள் வழக்கில் தோன்றி உங்கள் வழக்கின் பிரச்சனை எடுத்துச் சொல்ல தவறினாலோ உங்கள் வழக்கின் மீது உங்களுக்கு அக்கறை இல்லை என்ற காரணத்திற்காக உங்கள் வழக்கு uncontested dismissed for default (அன் கண்டஸ்ட் டிபால்ட் பார் டிஸ்மிஸ்-நிராகரிக்கப்பட்டதற்கு போட்டியற்ற இயல்புநிலை)*என்று நீதிபதி உத்தரவிட்டு உங்கள் வழக்கை தள்ளுபடி செய்வார்.
ஏனென்றால் உங்கள் வழக்கை நடத்துவதற்கு நீங்கள் முன்வரவில்லை அந்த வழக்கை *மெரட்டில் (merits) நடத்துவதற்கு வாதியே வழக்கில் அக்கறை இல்லாமல் தோன்றாமல் இருக்கும் போது வழக்கை நடத்த தவறிவிட்டார் என்ற அடிப்படையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை வாதியின் வழக்கறிஞர் வழக்கின் வாய்தா இருக்கும்போது அந்த வழக்கில் நேரில் தோன்றி அவர் தரப்பு விசாரணையை சரிவர செய்யவில்லை என்றால் வாதியின் தோன்றுதலை நீதிமன்றம் எதிர்பார்க்கும்.
வாதியும் நீதிமன்றத்தில் தோன்றாத போது அந்த வழக்கில் அவருக்கு அக்கறை இல்லை என்று நீதிமன்றத்தில் நீதிபதி கருதுவார்.
இதன் அடிப்படையில் அந்த வழக்கு டிஸ்மிஸ் பார் டிபால்ட் uncontested dismissed for default (நிராகரிக்கப்பட்டதற்கு போட்டியற்ற இயல்புநிலை) என்ற உத்தரவின் அடிப்படையில் நீதிமன்றத்தில் இருந்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
நீலகிரி மாவட்டம்
No comments:
Post a Comment