நேதாஜி யின் 119 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.


பந்தலூரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நேதாஜி யின்  119 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு  மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் தலைமை தாங்கினார்.   மகாத்மா காந்தி சேவை மைய நிர்வாகிகள் செந்தாமரை, ராம் பிரசாத் முன்னிலை வகித்தனர்.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,  பந்தலூர் அரசு பள்ளி இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன்சன்,  நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், மகாத்மா காந்தி சேவை மைய துணை தலைவர் அகமது கபீர் ஆகியோர் நேதாஜியின் வாழ்க்கை மற்றும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பு, தேசிய மாணவர் படை, அவரின் வாழக்கை இலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது குறித்து விளக்கம் அளித்தனர்.  
நேதாஜியின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது.  இனிப்பு வழங்க பட்டது.
நிகழ்ச்சியில் பந்தலூர் அரசு பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நுகர்வோர் மைய மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/





 பந்தலூரில் மகாத்மா காந்தி பொது சேவை மையம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நேதாஜி யின்  119 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு  மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத் தலைமை தாங்கினார்.   மகாத்மா காந்தி சேவை மைய நிர்வாகிகள் செந்தாமரை, ராம் பிரசாத் முன்னிலை வகித்தனர்.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,  பந்தலூர் அரசு பள்ளி இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன்சன்,  நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், மகாத்மா காந்தி சேவை மைய துணை தலைவர் அகமது கபீர் ஆகியோர் நேதாஜியின் வாழ்க்கை மற்றும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பு, தேசிய மாணவர் படை, அவரின் வாழக்கை இலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது குறித்து விளக்கம் அளித்தனர்.  
நேதாஜியின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது.  இனிப்பு வழங்க பட்டது.
நிகழ்ச்சியில் பந்தலூர் அரசு பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நுகர்வோர் மைய மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல் பயன்கள் நுகர்வோர் அறிவது அவசியம்.

பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல் பயன்கள்
நுகர்வோர் அறிவது அவசியம்.


அத்திக்குன்னா அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற 5வது ஆண்டு துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) S  பிரதீப் தலைமை தாங்கினார்.  பள்ளி ஆசிரியர் R  ரகுபதி வரவேற்றார்.  
குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினை துவக்கி வைத்த கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர்  சு.சிவசுப்பிரமணியம் பேசும்போது அனைவரும் நுகர்வோராக இருக்கிறோம் ஆனால் சிறந்த நுகர்வோராக இல்லை. பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல்கள், பயன்கள் குறித்து அறிந்து கொள்வதில்லை.  இதனால் விளம்பரங்களில் சொல்லப்படும் பற்பசை, முடிக்கான எண்ணை, ஷாம்பு,  வளருவதற்காக ஊட்டசத்து பானங்கள், அழகு சாதனங்கள்  என அனைத்தையும் உண்மை என நம்பி வாங்கி ஏமாறுகிறோம்.  நுகர்வோர்கள் ஏமாறாமல் இருக்க பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல், பயன்கள் குறித்த  விழிப்புணர்வு தேவை.  இதனை மக்களிடம் ஏற்படுத்த பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்தபடுகின்றன.  நுகர்வோர் மன்றங்கள் மூலம் அரசின் செயல்பாடுகள், தேவைகள், தரம், உணவுக் கலப்படம், போலிகள், பொருட்கள் குறித்த தகவல்கள், குறைபாடுகளை களையும் முறைகள்,  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய சட்டங்கள் குறித்தும் மாதந்தோறும் நடத்தப்படும் நுகர்வோர் மன்ற கூட்டங்களில் பேசப்பட்டு விவாதிக்கபட்டு மாணவர்கள் மூலம் குடும்பங்கள், நண்பர்கள் ஊர் மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு செல்ல குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவங்க படுகின்றன.  என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய  செயலாளர் பொன்.கணேஷன் பேசும்போது நுகர்வோர் புகார்களை சுட்டி காட்ட வேண்டும்.  அதன் மூலம் நமக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய முடியும்.  மீண்டும் ஏமாறாமல் இருக்க முடியும்.  பத்திரிக்கைகள், புத்தகங்கள் வாசிப்பின் மூலம் நாட்டின் நிகழ்வுகளை அறிந்து கொள்வது மாணவர்களிடையே பொது அறிவை வளர்க்கும் என்றார். 
தொடர்ந்து நுகர்வோர் மைய நிர்வாகி சத்திய சீலன் ஆசிரியர்கள் ராமஜெயம் பிரமிளா, சௌமியா ராமன், வசந்த், ரவிகுமார் பேசினார்கள். முடிவில் ஆசிரியர்  தேன்மொழி  நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நுகர்வோர் மன்ற மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் பள்ளி குடிமக்கள்  நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளியில்  http://cchepnlg.blogspot.in    http://consumernlg.blogspot.in   http://cchepeye.blogspot.in/   நுகர்வோர் மன்ற மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.  இந்த பயிற்சியினை பள்ளி தலைமை ஆசிரியர் சகோ. செலின்  தலைமை தாங்கினார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்,
செயலாளர் பொன் கணேசன் ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 


pls visit our webs http://cchepnlg.blogspot.in   http://consumernlg.blogspot.in   http://cchepeye.blogspot.in/  










 


நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் கருத்தரங்கில் எச்சரிக்கை

பந்தலூர் : நுகர்வோர்கள் ஏமாறாமல் இருக்க, 
மாணவ சமுதாயம் விழிப்படைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி குடிமக்கள், நுகர்வோர் மன்றம் இணைந்து, நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கினை நடத்தினர்.

மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மார்ட்டின் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியை செலீன் துவக்கி வைத்தார். 

மையத்தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,"மக்கள் விளம்பரங்கள் மீது மோகம் கொண்டு, உடலுக்கும், சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் பல நச்சுப்பொருட்களை பயன்படுத்துவதால், பல்வேறு நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது. அழகுசாதனங்கள், உணவுப்பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், என அனைத்திலும் போலியான பொருட்கள் கலந்துள்ளதால், நல்ல பொருட்களை தேர்வு செய்து வாங்க வேண்டும். வாங்கும் பொருளின் தகவல்கள் மற்றும் விலை அடங்கிய பில் வாங்க வேண்டும். 

மாணவர்களின் கல்வி ஆர்வத்தை பயன்படுத்திக்கொள்ளும், சில நிறுவனங்கள், அரசு அனுமதி பெற்றுள்ளதாக, போலியான தகவல் பரப்புகின்றன.  அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளில் படிப்பதால், மாணவர்களுக்கு பண விரயமும், காலவிரயமும் மட்டுமே ஏற்படுகிறது. தவிர, எதிர்காலத்தில் அவர்களால் வேலைவாய்ப்புகள் பெற்று, பயன்பெற இயலாத நிலை ஏற்படும். எனவே, உயர்கல்வி பயில ஆர்வமுள்ள மாணவர்கள், பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட, கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, படித்து பயன்பெற வேண்டும். 

நிர்வாகி தனிஸ்லாஸ், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். 

செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

பந்தலூர், ஜன.11:

பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

பந்தலூர் புனித சேவி யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினர். 

இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 

பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் வரவேற்றார்.

 பள்ளித் தலைமை ஆசிரியர் செலின் கருத்தரங்கினை துவக்கி வைத்தார். 



கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ், கணேசன் மற்றம் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு
பந்தலூர், ஜன.11:
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
பந்தலூர் புனித சேவி யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் செலின் கருத்தரங்கினை துவக்கி வைத்தார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை நுகர்வோர் மைய நிர்வாகிகள் தனிஸ்லாஸ், கணேசன் மற்றம் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...