பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல் பயன்கள் நுகர்வோர் அறிவது அவசியம்.

பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல் பயன்கள்
நுகர்வோர் அறிவது அவசியம்.


அத்திக்குன்னா அரசு உயர் நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற 5வது ஆண்டு துவக்க விழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) S  பிரதீப் தலைமை தாங்கினார்.  பள்ளி ஆசிரியர் R  ரகுபதி வரவேற்றார்.  
குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தினை துவக்கி வைத்த கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர்  சு.சிவசுப்பிரமணியம் பேசும்போது அனைவரும் நுகர்வோராக இருக்கிறோம் ஆனால் சிறந்த நுகர்வோராக இல்லை. பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல்கள், பயன்கள் குறித்து அறிந்து கொள்வதில்லை.  இதனால் விளம்பரங்களில் சொல்லப்படும் பற்பசை, முடிக்கான எண்ணை, ஷாம்பு,  வளருவதற்காக ஊட்டசத்து பானங்கள், அழகு சாதனங்கள்  என அனைத்தையும் உண்மை என நம்பி வாங்கி ஏமாறுகிறோம்.  நுகர்வோர்கள் ஏமாறாமல் இருக்க பயன்படுத்தும் பொருள் குறித்த தகவல், பயன்கள் குறித்த  விழிப்புணர்வு தேவை.  இதனை மக்களிடம் ஏற்படுத்த பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்தபடுகின்றன.  நுகர்வோர் மன்றங்கள் மூலம் அரசின் செயல்பாடுகள், தேவைகள், தரம், உணவுக் கலப்படம், போலிகள், பொருட்கள் குறித்த தகவல்கள், குறைபாடுகளை களையும் முறைகள்,  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய சட்டங்கள் குறித்தும் மாதந்தோறும் நடத்தப்படும் நுகர்வோர் மன்ற கூட்டங்களில் பேசப்பட்டு விவாதிக்கபட்டு மாணவர்கள் மூலம் குடும்பங்கள், நண்பர்கள் ஊர் மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு செல்ல குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் துவங்க படுகின்றன.  என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய  செயலாளர் பொன்.கணேஷன் பேசும்போது நுகர்வோர் புகார்களை சுட்டி காட்ட வேண்டும்.  அதன் மூலம் நமக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய முடியும்.  மீண்டும் ஏமாறாமல் இருக்க முடியும்.  பத்திரிக்கைகள், புத்தகங்கள் வாசிப்பின் மூலம் நாட்டின் நிகழ்வுகளை அறிந்து கொள்வது மாணவர்களிடையே பொது அறிவை வளர்க்கும் என்றார். 
தொடர்ந்து நுகர்வோர் மைய நிர்வாகி சத்திய சீலன் ஆசிரியர்கள் ராமஜெயம் பிரமிளா, சௌமியா ராமன், வசந்த், ரவிகுமார் பேசினார்கள். முடிவில் ஆசிரியர்  தேன்மொழி  நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...