இளையோர் வார விழா 20,01,2017

இளையோர் வார விழா 20,01,2017

பந்தலூர் அ|ருகே தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் இந்தியஅரசு நேருயுவகேந்திரா நீலகிரி பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் இளையோர் வார விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார் தலைமை தாங்கினார்.  ஆங்கில ஆசிரியர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் பேசும்போது  இளைஞர்கள் மன உறுதியோடு செயல்பட வேண்டும், தற்போது அதிகரித்து வரும் தவறான பழக்கங்களில் அடிமையாகாமல் நல்வழியில் வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும்.  தினசரி நிகழ்வுகளை அறிந்து கொள்ள பத்திரிக்கை படிக்க வேண்டும் என்றார்.

தேவாலா அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசும்போது விவேகானந்தர் துறவு மேற்கொண்டாலும் நாட்டின் மீதும் இளைஞர்கள் மீதும் பற்று கொண்டிருந்தார்.  அவர் இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்கள் முயற்சியினால்  சமுதாய மாற்றம் வரவேண்டும் என்ற விரும்பியது இன்று நடைபெறுகின்றது.  இளைஞர்கள் நாட்டு பற்று சமுதாய பங்களிப்புடன்  செயல்படவேண்டும் என்றார்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்  சத்தியநேசன் பேசும்போது இளைஞர்கள் தங்கள் திறன்களை அறிந்து கொள்ளுதல் அவசியம்.  திறமைகளை அறிந்து அதனை எட்டும் வழிகளை அறிந்து அதனை பின்பற்றினால் வாழ்வில் வெற்றி பெறலாம்.   மாற்றத்திற்கான முயற்சியை இளைஞர்கள் மேற்க்கொள்ள வேண்டும் என்றார்.

கூடலூர் கல்லூரி நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் மகேஸ் பேசும்போது இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.  இளைஞர்கள் தவறான வழிகளை விடுத்து பெற்றோர்கள் நண்பர்கள் உறவினர்கள் இருப்பதை உணர்ந்து மனஉறுதியோடு வாழ பழகவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். 














சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

கூடலூர் தோட்ட தொழிலாளார் தொழிற்பயிற்சி  மையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைப்பெற்றது.
கூடலூர் காவல் துறை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து சாலை பாதுகாப்பு மற்றும் இளையோர் வார விழாவை முன்னிட்டு நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
பயிற்சி மைய முதல்வர் ஜிஜு ஜோர்ஜ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய கூடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசலு பேசும்போது  சாலையில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கு தான் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகின்றது.  மனிதஉயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம்,  வேகமாக செல்லும் போது நமது கவனம் சிதறும் வாய்ப்பு அதிகம் எதிரில் வரும் வாகனம் வழிவிடுவதற்கு இயலாத நிலை உள்ளது.  செல்போன்களில் பேசிக்கொண்டு வாகணங்களை இயக்கும் பழக்கம் அதிகரித்து வருகின்றது.  இதனால் சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளது.  சிறு தடுமாற்றம் சமாளிக்க முடியாமல் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க இளைஞர்கள் முன்வரவேண்டும்.  அதுபோல பைக் ரேஸ், அளவுக்கு மீறி வேகமாக வாகணங்கள் இயக்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.  காவல்துறை நட்புடன் கூடிய காவல்துறையாக செயல்படுகின்றது.  படிக்க இயலாத ஏழை எளிய வறுமையில் உள்ள மாணவர்கள் படிப்பிற்கு உதவுதல் ஆதரவற்றவர்களுக்கு உதவுதல் போன்ற சமூக பணிகளையும் மேற்க்கொண்டு வருகின்றது.  அதுபோல சிறப்பு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கி அரசு வேலை பெற உதவுகின்றது.  படித்த இளைஞர்கள் அரசு வேலை பெற திறன்களை மேம்படுத்தி கொள்ள இதுபோன்ற பயிற்சிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மோட்டர் வாகண ஆய்வாளர் சண்முகசுந்தரம் பேசும்போது சாலை விபத்துகளில் வெறும் 20 சதவீதம் மட்டுமே வாகன பாதிப்பினால் விபத்து ஏற்படுகின்றது.  மிதி மனித தவறுகளினால்தான் ஏற்படுகின்றது.  லைசென்ஸ் இல்லாமல் வாகணங்கள் இயக்குதல் குற்றமாகும்.  இருசக்கர வாகணங்களில் செல்லும் போது முன்னும் பின்னும் அமர்ந்து செல்லும் இருவரும் தலைகவசம் அனிந்த செல்லவேண்டும்.  கார்களில் செல்லும்போது சீட்பெல்ட் அணிநது செல்ல வேண்டும்.  சாலைவிதிகளை மதித்து வாகணங்களை இயக்கினால் விபத்துகளை தவிர்க்க முடியும்.,  18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு போக்குவரத்து துறையை அனுகினால் லைசென்ஸ் வழங்க நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்றார்,
நிகழ்ச்சியில் காவல் துறை ஆய்வாளர் சக்திவேல், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சத்தியன், ராஜன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் காளிமுத்து, சத்தியநேசன் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து பேசினார்கள்
பயிற்சி மைய மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பயிற்சி மைய மூத்த ஆசிரியர் மாதையன் நன்றி கூறினார்.











இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | பகுதி-3 அட்டவணைகள் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எட்டு அட்டவணைகளைக் கொண்டி ருந்தது. முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் (1951) வழியாக ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது. பத்தாவது அட்டவணை 52-வது திருத்தத்தின் (1985) மூலம் சேர்க்கப்பட்டது. 1992-ல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி 11, 12வது அட்டவணைகள் சேர்க்கப்பட்டன. எட்டாவது அட்டவணையில் தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன. எட்டாவது அட்டவணையில் 21-வது திருத்தத்தின் (1967) மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது. எட்டாவது அட்டவணையில் 71-வது திருத்தத்தின் (1992) மூலம் கொங்கணி, மணிப்புரி,நேபாளி மொழிகள் சேர்க்கப்பட்டன. எட்டாவது அட்டவணையில் 92-வது திருத்தத்தின் (2003) மூலம் போடோ (அஸ்ஸாம்). டோஹ்ரி (காஷ்மீர்) , மைதிலி (பீகார்) , சந்தாலி (பீகார்) ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டன. ஏழாவது அட்டவணையில் மத்திய பட்டியலில் 100 பொருள்களும், மாநில பட்டியலில் 61 பொருள்களும், பொதுப் பட்டியலில் 52 பொருள்களும் இடம்பெற்றுள்ளன. ஒன்பதாவது அட்டவணையில் தற்போது 284 சட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அரசமைப்பு அட்டவணைகள் (Schedules ) முதல் அட்டவணை : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல். இரண்டாவது அட்டவணை : குடியரசுத் தலைவர், ஆளுநர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள். மூன்றாவது அட்டவணை : பதவி யேற்பு உறுதி மொழிகளின் பட்டியல். நான்காவது அட்டவணை : மாநிலங்களுக்கான ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை. ஐந்தாவது அட்டவணை : பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் நிர்வாகம். ஆறாவது அட்டவணை : அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம். ஏழாவது அட்டவணை : மத்திய மாநில அதிகார பகிர்வு பட்டியல். எட்டாவது அட்டவணை : அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் (22 மொழிகள்). ஒன்பதாவது அட்டவணை : உச்ச நீதிமன்ற மேலாய்விலிருந்து பாதுகாப்பு பெற்ற சட்டங்கள். பத்தாவது அட்டவணை : கட்சித்தாவல் தடைச் சட்டம் பதினோறாவது அட்டவணை : பஞ்சாயத்து ராஜ் தொடர்பான அம்சங்கள் (29 பொருள்கள்). பன்னிரண்டாவது அட்டவணை: நகராட்சி தொடர்பான அம்சங்கள் (18 பொருள்கள்). முக்கிய உறுப்புகள் (Articles) உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாந

இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | பகுதி-3
அட்டவணைகள்
அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எட்டு அட்டவணைகளைக் கொண்டி ருந்தது.
முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் (1951) வழியாக ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
பத்தாவது அட்டவணை 52-வது திருத்தத்தின் (1985) மூலம் சேர்க்கப்பட்டது.
1992-ல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி 11, 12வது அட்டவணைகள் சேர்க்கப்பட்டன.
எட்டாவது அட்டவணையில் தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன.
எட்டாவது அட்டவணையில் 21-வது திருத்தத்தின் (1967) மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.
எட்டாவது அட்டவணையில் 71-வது திருத்தத்தின் (1992) மூலம் கொங்கணி, மணிப்புரி,நேபாளி மொழிகள் சேர்க்கப்பட்டன.
எட்டாவது அட்டவணையில் 92-வது திருத்தத்தின் (2003) மூலம் போடோ (அஸ்ஸாம்). டோஹ்ரி (காஷ்மீர்) , மைதிலி (பீகார்) , சந்தாலி (பீகார்) ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டன.
ஏழாவது அட்டவணையில் மத்திய பட்டியலில் 100 பொருள்களும், மாநில பட்டியலில் 61 பொருள்களும், பொதுப் பட்டியலில் 52 பொருள்களும் இடம்பெற்றுள்ளன.
ஒன்பதாவது அட்டவணையில் தற்போது 284 சட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
அரசமைப்பு அட்டவணைகள் (Schedules )
முதல் அட்டவணை : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்.
இரண்டாவது அட்டவணை : குடியரசுத் தலைவர், ஆளுநர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள்.
மூன்றாவது அட்டவணை : பதவி யேற்பு உறுதி மொழிகளின் பட்டியல்.
நான்காவது அட்டவணை : மாநிலங்களுக்கான ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை.
ஐந்தாவது அட்டவணை : பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் நிர்வாகம்.
ஆறாவது அட்டவணை : அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம்.
ஏழாவது அட்டவணை : மத்திய மாநில அதிகார பகிர்வு பட்டியல்.
எட்டாவது அட்டவணை : அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் (22 மொழிகள்).
ஒன்பதாவது அட்டவணை : உச்ச நீதிமன்ற மேலாய்விலிருந்து பாதுகாப்பு பெற்ற சட்டங்கள்.
பத்தாவது அட்டவணை : கட்சித்தாவல் தடைச் சட்டம்
பதினோறாவது அட்டவணை : பஞ்சாயத்து ராஜ் தொடர்பான அம்சங்கள் (29 பொருள்கள்).
பன்னிரண்டாவது அட்டவணை: நகராட்சி தொடர்பான அம்சங்கள் (18 பொருள்கள்).
முக்கிய உறுப்புகள் (Articles)
உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாந

வரவேற்க காவல் நிலையங்களில் 2,640 வரவேற்பாளர்கள்

புகார் அளிக்க வருவோரை வரவேற்க காவல் நிலையங்களில் 2,640 வரவேற்பாளர்கள்
தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரை வரவேற்க வரவேற்பாளர்களை தமிழக காவல்துறை நியமித்துள்ளது.
இதுகுறித்து தமிழக காவல் துறையின் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்களின் குறைகளைக் கண்டறிந்து, அதை நீக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் நல்ல உறவை ஏற்படுத்தும் வகையில் காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்களை வரவேற்று, அவர்களது பிரச்னைகளைக் கேட்கும் வகையில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் முதல் நடவடிக்கையாக வரவேற்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 1,007 பெண் காவலர்கள் உள்பட 2,640 காவலர்களுக்கு சென்னை காவலர் பயிற்சி கல்லூரி மூலம் இரு நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்களுக்கு பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவர்களிடம் எவ்வாறு பேசி பழக வேண்டும் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சிகள் காவல்துறை உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், உளவியல் வல்லுநர்கள்,சமூக ஆர்வலர்கள்,வழக்குரைஞர்கள் ஆகியோர் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல காவல் நிலையங்களுக்கு வரும் பெண்கள்,முதியோர்கள் ஆகியோரின் தேவையறிந்து செயல்படுவது குறித்தும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல மனுதாரர்களின் குறைகளை கேட்டவுடன், அதை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தீர்வு காண்பதற்கும்,மனு தாரர்களுக்கு வழிகாட்டுவதற்கும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள், காவல் நிலையங்களுக்கு சென்றவுடன் அங்கு வரவேற்பாளர்களாக செயல்படும் காவலர்களிடம் தங்களது பிரச்னைகளை தெரிவிப்பதன் மூலம், நேரமும்,அலைச்சலும் குறையும் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகளில் மீண்டும் உள்தாள்

மீண்டும் நீட்டிக்கப்பட்டது!
📄 ரேஷன் கார்டுகளில் மீண்டும் உள்தாள்.....! செல்லத்தக்க காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு தமிழத்தை பொறுத்தவரை கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.
📄 இந்த ரேஷன் கார்டுகள் கடந்த 2009ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டன. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டி பழைய கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
📄 இந்த ரேஷன் கார்டுகள் தான் தற்போதும் புழக்கத்தில் உள்ளன. முகவரி மாற்றம், புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட காரணத்தால் ரேஷன் கார்டுகள் கந்தலாக மாறிவிட்டன. இது தவிர போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளதால் பொது வினியோக திட்டத்திற்கு அரசு வழங்கும் மானியத்தால் பல கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
📄 இதனால் ஆதார் கார்டு பெற்றவர்களிடம் நேரடியாக பதிவு செய்து ஏடிஎம் கார்டு அளவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க உணவு வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
📄 தற்போது 60 சதவீத அளவிற்குதான் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் முடிவடைந்த பின்னர்தான் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க முடியும் என்பதால் இந்த ஆண்டும் ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்ட அரசு முடிவு செய்தது.
📄 அதன்படி தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஜன.,1 முதல், டிச.,31 வரை நீட்டிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து உள்தாள் ஒட்டும் பணிகள் தொடங்கவுள்ளன.
📄 உள்தாள்கள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம், வழங்கப்படும். அதற்கு ஆதாரமாக, ரேஷன் கார்டில், '2017க்கான உள்தாளை பெற்றுக் கொண்டேன்" என்ற முத்திரையிட்டு, அதன் கீழே ரேஷன் கார்டுதாரரின் கையொப்பம், இடது கை பெருவிரல் ரேகை பெறப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நுகர்வோர் குறைகள் தீர்வுக்கான வழிமுறைகள்

நுகர்வோர் என்பவர் 

பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர் வரை,

சாதாரண கிராமத்து மனிதன் முதல் நாட்டின் ஜனாதிபதி வரை

சாதி, மத, இன, கட்சி, பால், மொழி, பொருளாதாரப் பாகுபாடு இன்றி
ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தின் பார்வையில் நுகர்வோரே.

ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்தப் பல்வேறு பொருட்களை மற்றும் சேவையைப் பெறுகின்றனர்.

இப்படியான பொருட்களில் தரம் குறைத்தல், அல்லது


பாதிப்புக்குண்டானவர்கள் மன உலைச்சல், மனசோர்வு, பணவிரயம், மற்றும் பல இழப்புகளுக்கு ஆளாகக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.

இவ்வாறு இருக்கும் நுகர்வோருக்கு பாதிப்பை நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் முறையிட்டு,  குறைகளுக்குண்டான நிவாரணம் பெற முடியும்.

பொதுவாக நுகர்வோர் குறைதீர் மன்றம் என்றாலே மக்கள் மனதில் கோர்ட்டுக்கு ஒப்பாக நினைத்துக் கொண்டு பின்வாங்கும் நிலை உள்ளது.

நுகர்வோர் குறைதீர் மன்றம் நீதி வழங்கும் இடம் எனினும் நீதிமன்ற நடைமுறைகளில் வேறுபட்டது. 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்.1986 ன்படி

ஒரு நுகர்வோர் அல்லது  

நிறுவனங்கள் சட்டம் 1956 அல்லது  நடைமுறையில் இருக்கின்ற ஏதாவது ஒரு சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட, தன்னார்வ நுகர்வோர் அமைப்பு அல்லது  

 முறையீடு செய்யும் மத்திய அரசு, அல்லது மாநில அரசு அல்லது   

அதிக எண்ணிக்கையிலான நுகர்வோர்கள் ஒரே தன்மையான அக்கறை கொண்டிருக்கும் பட்சத்தில் ஒன்று அல்லது 

ஒன்றுக்கு மேற்பட்ட நுகர்வோர்கள்.  

நுகர்வோர் இறந்து விட்டால் அவருடைய வாரிசு அல்லது பிரதிநிதிகள் முறையீடு செய்பவரால் எழுத்து வடிவத்தில் புகாரினை பதிவு செய்யலாம்.

இந்தச் சட்டத்தின் கீழ் நிவாரணம் பெறும் நோக்கத்தோடு மனு அளிக்கலாம்.  


எந்த ஒரு வணிகராலோ அல்லது அளிப்பவராலோ கடைப்பிடிக்கப்படுகின்ற 
நேர்மையற்ற  வணிக நடைமுறை  அல்லது தடைசெய்யப்பட்ட வணிகமுறை.

 முறையீடு செய்பவரால் வாங்கப்பட்ட பொருட்களில் அல்லது வாங்குவதற்காக ஒப்பு கொடுக்கப்பட்ட பொருளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடு.

 முறையீட்டாளரால் அமர்த்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட சேவையில் குறைபாடு அல்லது அமர்த்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட ஒப்புக்கொள்ளப்பட்ட சேவையில் குறைபாடு.

 ஒரு வணிகரால் அல்லது சேவை அளிப்பவரால் முறையீட்டில் குறிக்கப்பட்டுள்ள சேவைக்காக அல்லது பொருளுக்காகக் கீழ்குறித்த வகையில் அதிகமாக விலை நிர்ணயம் செய்தல்.

 நடைமுறையில் உள்ள சட்டத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட விலையைவிட அதிகமாகப் பொருளின் மீதோ, பொருளுக்கான சிப்பத்தின் மீதோ குறிப்பிடபட்ட விலையைவிட அதிகமாக வாங்குதல்.‘

 விலைப்பட்டியலில் அவரால் அல்லது நடைமுறையில் உள்ள சட்டத்தால் குறிப்பிட்ட விலையை விட அதிகமாக வாங்குதல்.

பயன்பாட்டுக்காக விற்கப்படுகின்ற ஒரு பொருளால் உயிருக்கோ அல்லது பாதுகாப்புக்கோ கீழ்கண்டவாறு தீங்கு ஏற்படுமானால்

நடைமுறையில் உள்ள சட்டத்தால் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்புக்கான தரக்கட்டுப்பாட்டை மீறுவதால்

அளிக்கப்படுகின்ற பொருள்கள் பொது மக்களுக்குத் தீங்கானது தான் என தான் அறிவித்துள்ள பொருளை ஒரு வணிகர் விற்பாரேயானால்

பயன்படுத்துகின்ற போது ஒரு சேவை பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்கும்

அல்லது தீங்கு விளைவிக்கும் வாய்ப்புடையது என சேவை அளிக்கும் ஒருவர் தெரிந்து இருந்தும்
உயிருக்கும், பாதுகாப்புக்கும்” தீங்கு ஏற்படுத்தும் அத்தகைய சேவையை ஒருவர் அளிப்பாரேயானால்

நுகர்வோர் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்.

ஒரு வியாபாரி அல்லது லாப நோக்கோடு பொருட்களை வாங்கியவர் அல்லது பொருளை பயன்படுத்தியவர் இழப்பீடு கோரி நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர முடியாது.


நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 
நுகர்வோர்களின் பிரச்சினைகளுக்கு முடிவுக்கான 

முன்று கட்டமைப்புகளோடு நுகர்வோர் குறைதீர்மன்றங்கள் செயல்படுகின்றன.

நுகர்வோர் கேட்கின்ற நஷ்டஈடு தொகைக்கு ஏற்ப 
நாம் மாவட்ட குறைதீர் மன்றத்தில் அல்லது 
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலோ அல்லது 
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலோ முறையிடலாம்,

நுகர்வோர் சார்ந்த வழக்குகள் பதிவு செய்ய

வக்கீல் தேவையில்லை,
பாதிக்கப்பட்ட நபரே வாதிடலாம்,

பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் சங்கங்கள் பாதிக்கப்பட்டவருக்காக வாதாடலாம்.
தாய் மொழியில் வாதாடலாம்.

மன உளைச்சலுக்கும் (மனம் அடையும் வேதனைக்கும் ) நிவாரணம் உண்டு

வழக்குச் செலவுகளையும் திரும்பப் பெறலாம்.

எளிமையான நடைமுறை

விரைவான தீர்ப்பு (மூன்று மாதங்களில் 90 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் சரத்து)

தபால் மூலமாகவும் புகாரைப் பதிவு செய்யலாம்

வாய்தாக்கள் அதிகம் இருக்காது.


நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 பிரிவு 9ன் கீழ் இந்தியாவில் மூன்று நிலையில் நுகர்வோர் குறைதீர் முறைகள் ஆணையங்கள் செயல்படுகின்றன.

மாவட்ட அளவில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்படுகிறது. 
இம்மன்றத்தில் 20 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் பதிவு செய்யலாம்.

மாநில அளவில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்படுகிறது. 
இங்கு 20 இலட்சத்திற்கு மேல் 1,00 கோடி ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் பதிவு செய்யலாம்.

தேசியக் அளவில்  தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்படுகின்றது. 
இங்கு 1,00 கோடி ரூபாய்க்கு அதிகமான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் பதிவு செய்யலாம்

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் மேலான முறையீடுகள் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும்,

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் மேலான மேல் முறையீடுகள் தேசீய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் செய்யப்பட வேண்டும்.

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவுகளின் மேலான முறையீடுகள் இந்திய உச்சநீதி மன்றத்தில் செய்யப்பட வேண்டும்.

மாவட்ட குறைதீர்மன்றம் பிரிவு 10.11

மாவட்டக் குறைதீர் மன்றத்தை இந்திய அரசின் முன் ஒப்புதலுடன்

ஒவ்வொரு மாநில அரசும்  அனைத்து மாவட்ட அளவில் இம்மன்றத்தை அமைத்திட வேண்டும்.

இம்மன்றத்தின் தலைவர் பதவிக்கு மாவட்ட நீதிபதி தகுதியுடையவர் தலைவராகவும்,

இரண்டு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும்.

இருவரில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும். பெண் உறுப்பினர் சமூக சேவையில் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும்.

மற்றொரு உறுப்பினர் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும்.

ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் இருப்பர். இம்மன்றத்தில் மாவட்ட எல்லையிலான வழக்குகள் மற்றும் 20 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் நடத்தப் பெறுகின்றன.

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை இந்திய அரசின் முன் ஒப்புதலுடன்
ஒவ்வொரு மாநில அரசும் மாநிலத் தலைநகரில் அமைத்திட வேண்டும்.

இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு மாநில அரசால் நியமிக்கப்பட்ட உயர்நீதி மன்றத்தின் நீதிபதி தலைவராகவும்,

இரண்டு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும்.

இருவரில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.

இரு உறுப்பினர்களும் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும்.

ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் இருப்பர்.

இந்த ஆணையத்தில் மாநில எல்லையிலான 20 இலட்சத்திற்கு மேல் 1 கோடி ரூபாய் வரையிலான
நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மற்றும்

மாவட்டக் குறைதீர் மன்றத்தின் ஆணையின் மேலான முறையீடுகள் நடத்தப் பெறுகின்றன.

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை இந்திய அரசு, புதுதில்லியில் அமைத்துள்ளது.

இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு உச்சநீதி மன்றத்தின் நீதிபதி தலைவராகவும்,

நான்கு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும்.

உறுப்பினர்கள் நான்கு பேரும் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும்.

ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட ஐந்து உறுப்பினர்கள் இருப்பர்.

இந்த ஆணையத்தில் 1 கோடி ரூபாய்க்கு அதிகமான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மற்றும்
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் ஆணையின் மேலான முறையீடுகள் நடத்தப் பெறுகின்றன. 


நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...