நுகர்வோர் குறைகள் தீர்வுக்கான வழிமுறைகள்

நுகர்வோர் என்பவர் 

பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர் வரை,

சாதாரண கிராமத்து மனிதன் முதல் நாட்டின் ஜனாதிபதி வரை

சாதி, மத, இன, கட்சி, பால், மொழி, பொருளாதாரப் பாகுபாடு இன்றி
ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தின் பார்வையில் நுகர்வோரே.

ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்தப் பல்வேறு பொருட்களை மற்றும் சேவையைப் பெறுகின்றனர்.

இப்படியான பொருட்களில் தரம் குறைத்தல், அல்லது


பாதிப்புக்குண்டானவர்கள் மன உலைச்சல், மனசோர்வு, பணவிரயம், மற்றும் பல இழப்புகளுக்கு ஆளாகக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.

இவ்வாறு இருக்கும் நுகர்வோருக்கு பாதிப்பை நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் முறையிட்டு,  குறைகளுக்குண்டான நிவாரணம் பெற முடியும்.

பொதுவாக நுகர்வோர் குறைதீர் மன்றம் என்றாலே மக்கள் மனதில் கோர்ட்டுக்கு ஒப்பாக நினைத்துக் கொண்டு பின்வாங்கும் நிலை உள்ளது.

நுகர்வோர் குறைதீர் மன்றம் நீதி வழங்கும் இடம் எனினும் நீதிமன்ற நடைமுறைகளில் வேறுபட்டது. 

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்.1986 ன்படி

ஒரு நுகர்வோர் அல்லது  

நிறுவனங்கள் சட்டம் 1956 அல்லது  நடைமுறையில் இருக்கின்ற ஏதாவது ஒரு சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்ட, தன்னார்வ நுகர்வோர் அமைப்பு அல்லது  

 முறையீடு செய்யும் மத்திய அரசு, அல்லது மாநில அரசு அல்லது   

அதிக எண்ணிக்கையிலான நுகர்வோர்கள் ஒரே தன்மையான அக்கறை கொண்டிருக்கும் பட்சத்தில் ஒன்று அல்லது 

ஒன்றுக்கு மேற்பட்ட நுகர்வோர்கள்.  

நுகர்வோர் இறந்து விட்டால் அவருடைய வாரிசு அல்லது பிரதிநிதிகள் முறையீடு செய்பவரால் எழுத்து வடிவத்தில் புகாரினை பதிவு செய்யலாம்.

இந்தச் சட்டத்தின் கீழ் நிவாரணம் பெறும் நோக்கத்தோடு மனு அளிக்கலாம்.  


எந்த ஒரு வணிகராலோ அல்லது அளிப்பவராலோ கடைப்பிடிக்கப்படுகின்ற 
நேர்மையற்ற  வணிக நடைமுறை  அல்லது தடைசெய்யப்பட்ட வணிகமுறை.

 முறையீடு செய்பவரால் வாங்கப்பட்ட பொருட்களில் அல்லது வாங்குவதற்காக ஒப்பு கொடுக்கப்பட்ட பொருளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடு.

 முறையீட்டாளரால் அமர்த்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட சேவையில் குறைபாடு அல்லது அமர்த்தப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட ஒப்புக்கொள்ளப்பட்ட சேவையில் குறைபாடு.

 ஒரு வணிகரால் அல்லது சேவை அளிப்பவரால் முறையீட்டில் குறிக்கப்பட்டுள்ள சேவைக்காக அல்லது பொருளுக்காகக் கீழ்குறித்த வகையில் அதிகமாக விலை நிர்ணயம் செய்தல்.

 நடைமுறையில் உள்ள சட்டத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட விலையைவிட அதிகமாகப் பொருளின் மீதோ, பொருளுக்கான சிப்பத்தின் மீதோ குறிப்பிடபட்ட விலையைவிட அதிகமாக வாங்குதல்.‘

 விலைப்பட்டியலில் அவரால் அல்லது நடைமுறையில் உள்ள சட்டத்தால் குறிப்பிட்ட விலையை விட அதிகமாக வாங்குதல்.

பயன்பாட்டுக்காக விற்கப்படுகின்ற ஒரு பொருளால் உயிருக்கோ அல்லது பாதுகாப்புக்கோ கீழ்கண்டவாறு தீங்கு ஏற்படுமானால்

நடைமுறையில் உள்ள சட்டத்தால் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்புக்கான தரக்கட்டுப்பாட்டை மீறுவதால்

அளிக்கப்படுகின்ற பொருள்கள் பொது மக்களுக்குத் தீங்கானது தான் என தான் அறிவித்துள்ள பொருளை ஒரு வணிகர் விற்பாரேயானால்

பயன்படுத்துகின்ற போது ஒரு சேவை பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்கும்

அல்லது தீங்கு விளைவிக்கும் வாய்ப்புடையது என சேவை அளிக்கும் ஒருவர் தெரிந்து இருந்தும்
உயிருக்கும், பாதுகாப்புக்கும்” தீங்கு ஏற்படுத்தும் அத்தகைய சேவையை ஒருவர் அளிப்பாரேயானால்

நுகர்வோர் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்.

ஒரு வியாபாரி அல்லது லாப நோக்கோடு பொருட்களை வாங்கியவர் அல்லது பொருளை பயன்படுத்தியவர் இழப்பீடு கோரி நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர முடியாது.


நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 
நுகர்வோர்களின் பிரச்சினைகளுக்கு முடிவுக்கான 

முன்று கட்டமைப்புகளோடு நுகர்வோர் குறைதீர்மன்றங்கள் செயல்படுகின்றன.

நுகர்வோர் கேட்கின்ற நஷ்டஈடு தொகைக்கு ஏற்ப 
நாம் மாவட்ட குறைதீர் மன்றத்தில் அல்லது 
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலோ அல்லது 
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலோ முறையிடலாம்,

நுகர்வோர் சார்ந்த வழக்குகள் பதிவு செய்ய

வக்கீல் தேவையில்லை,
பாதிக்கப்பட்ட நபரே வாதிடலாம்,

பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் சங்கங்கள் பாதிக்கப்பட்டவருக்காக வாதாடலாம்.
தாய் மொழியில் வாதாடலாம்.

மன உளைச்சலுக்கும் (மனம் அடையும் வேதனைக்கும் ) நிவாரணம் உண்டு

வழக்குச் செலவுகளையும் திரும்பப் பெறலாம்.

எளிமையான நடைமுறை

விரைவான தீர்ப்பு (மூன்று மாதங்களில் 90 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் சரத்து)

தபால் மூலமாகவும் புகாரைப் பதிவு செய்யலாம்

வாய்தாக்கள் அதிகம் இருக்காது.


நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 பிரிவு 9ன் கீழ் இந்தியாவில் மூன்று நிலையில் நுகர்வோர் குறைதீர் முறைகள் ஆணையங்கள் செயல்படுகின்றன.

மாவட்ட அளவில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்படுகிறது. 
இம்மன்றத்தில் 20 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் பதிவு செய்யலாம்.

மாநில அளவில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்படுகிறது. 
இங்கு 20 இலட்சத்திற்கு மேல் 1,00 கோடி ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் பதிவு செய்யலாம்.

தேசியக் அளவில்  தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்படுகின்றது. 
இங்கு 1,00 கோடி ரூபாய்க்கு அதிகமான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் பதிவு செய்யலாம்

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் மேலான முறையீடுகள் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும்,

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் மேலான மேல் முறையீடுகள் தேசீய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் செய்யப்பட வேண்டும்.

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவுகளின் மேலான முறையீடுகள் இந்திய உச்சநீதி மன்றத்தில் செய்யப்பட வேண்டும்.

மாவட்ட குறைதீர்மன்றம் பிரிவு 10.11

மாவட்டக் குறைதீர் மன்றத்தை இந்திய அரசின் முன் ஒப்புதலுடன்

ஒவ்வொரு மாநில அரசும்  அனைத்து மாவட்ட அளவில் இம்மன்றத்தை அமைத்திட வேண்டும்.

இம்மன்றத்தின் தலைவர் பதவிக்கு மாவட்ட நீதிபதி தகுதியுடையவர் தலைவராகவும்,

இரண்டு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும்.

இருவரில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும். பெண் உறுப்பினர் சமூக சேவையில் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும்.

மற்றொரு உறுப்பினர் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும்.

ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் இருப்பர். இம்மன்றத்தில் மாவட்ட எல்லையிலான வழக்குகள் மற்றும் 20 இலட்சம் ரூபாய் வரையிலான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் நடத்தப் பெறுகின்றன.

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை இந்திய அரசின் முன் ஒப்புதலுடன்
ஒவ்வொரு மாநில அரசும் மாநிலத் தலைநகரில் அமைத்திட வேண்டும்.

இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு மாநில அரசால் நியமிக்கப்பட்ட உயர்நீதி மன்றத்தின் நீதிபதி தலைவராகவும்,

இரண்டு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும்.

இருவரில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.

இரு உறுப்பினர்களும் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும்.

ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் இருப்பர்.

இந்த ஆணையத்தில் மாநில எல்லையிலான 20 இலட்சத்திற்கு மேல் 1 கோடி ரூபாய் வரையிலான
நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மற்றும்

மாவட்டக் குறைதீர் மன்றத்தின் ஆணையின் மேலான முறையீடுகள் நடத்தப் பெறுகின்றன.

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை இந்திய அரசு, புதுதில்லியில் அமைத்துள்ளது.

இந்த ஆணையத்தின் தலைவர் பதவிக்கு உச்சநீதி மன்றத்தின் நீதிபதி தலைவராகவும்,

நான்கு உறுப்பினர்களைக் கொண்டும் அமைக்கப்பட வேண்டும்.

உறுப்பினர்கள் நான்கு பேரும் சமூக சேவை, பொருளாதாரம், வணிகம், தொழில், சட்டம், கணக்கியல் போன்ற துறைகளில் போதுமான அறிவும் முன் அனுபவமும் இருக்க வேண்டும்.

ஆக இந்த மன்றத்தில் தலைவர் உட்பட ஐந்து உறுப்பினர்கள் இருப்பர்.

இந்த ஆணையத்தில் 1 கோடி ரூபாய்க்கு அதிகமான நஷ்ட ஈடுக்கான வழக்குகள் மற்றும்
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் ஆணையின் மேலான முறையீடுகள் நடத்தப் பெறுகின்றன. 


No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...