வரவேற்க காவல் நிலையங்களில் 2,640 வரவேற்பாளர்கள்

புகார் அளிக்க வருவோரை வரவேற்க காவல் நிலையங்களில் 2,640 வரவேற்பாளர்கள்
தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரை வரவேற்க வரவேற்பாளர்களை தமிழக காவல்துறை நியமித்துள்ளது.
இதுகுறித்து தமிழக காவல் துறையின் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்களின் குறைகளைக் கண்டறிந்து, அதை நீக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் நல்ல உறவை ஏற்படுத்தும் வகையில் காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்களை வரவேற்று, அவர்களது பிரச்னைகளைக் கேட்கும் வகையில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் முதல் நடவடிக்கையாக வரவேற்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 1,007 பெண் காவலர்கள் உள்பட 2,640 காவலர்களுக்கு சென்னை காவலர் பயிற்சி கல்லூரி மூலம் இரு நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்களுக்கு பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவர்களிடம் எவ்வாறு பேசி பழக வேண்டும் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சிகள் காவல்துறை உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், உளவியல் வல்லுநர்கள்,சமூக ஆர்வலர்கள்,வழக்குரைஞர்கள் ஆகியோர் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல காவல் நிலையங்களுக்கு வரும் பெண்கள்,முதியோர்கள் ஆகியோரின் தேவையறிந்து செயல்படுவது குறித்தும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல மனுதாரர்களின் குறைகளை கேட்டவுடன், அதை உடனுக்குடன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தீர்வு காண்பதற்கும்,மனு தாரர்களுக்கு வழிகாட்டுவதற்கும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள், காவல் நிலையங்களுக்கு சென்றவுடன் அங்கு வரவேற்பாளர்களாக செயல்படும் காவலர்களிடம் தங்களது பிரச்னைகளை தெரிவிப்பதன் மூலம், நேரமும்,அலைச்சலும் குறையும் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...