இணை பதிவாளர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைப்பெற்றது,

உதகை கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் நுகர்வோர்  பாதுகாப்பு குழு கூட்டம் நடைப்பெற்றதுகூட்டத்திற்கு இணை பதிவாளர் முருகன் தலைமை தாங்கினார்,
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது கூட்டுறவு வங்கியில் கடன்கள் முறைகேடாக வழங்கப் பட்டுள்ளது குறித்து விசாரனை நடத்தப்பட வேண்டும்தவறு செய்த போர்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்சில நியாய விலைக் கடைகளில் எடை குறைவாக வழங்கப்படுகின்றது  நடவடிக்கை எடுக்க வேண்டும்ஊழியர்கள் அரசு விதிப்படி சுழற்சி முறையில்  மாற்றி அமைக்க வேண்டும்கூடலூர் என்சிஎம்எஸ் குடோன் முறைப்படுத்த வேண்டும்அனைத்து நியாய விலை கடைகளிலும் அரசின் அம்மா உப்பினை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மன்காவு மற்றும் மண்ணாத்திவயல் பகுதியில் நியாய விலை கடை அமைக்க வேண்டும் என்றார்கூட்டுறவு வார விழாவில் நுகர்வோர் அமைப்பினரையும் அழைக்க வேண்டும், கோதுமை அதிக அளவு நியாய விலை கடையில் வழங்க வேண்டும். என நுகர்வோர் அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
பதிலளித்த கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகன் பேசும்போது கூட்டுறவு சங்கங்களில் தற்போது அதிக அளவு கடன் வழங்கப்படுகின்றதுதொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கிகளில் சிலவற்றில் இயக்குனர் பிரச்சனையால் கடன் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுஎனினும் அருகில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் அனைத்து வித கடன்களும் எளிய முறையில் வழங்க படுகின்றது  பயன்படுத்தி கொள்ளலாம்ஊழியர்கள் சுழற்சி முறையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றதுகோதுமை தற்போது 30 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு பெறப்படுவதால் அதற்கேற்றார் போல் வினியோகம் செய்யப்படுகிறதுகூட்டுறவு துறை சார்பில் அரசின் அம்மா உப்பு வழங்கப் படுகின்றதுதேவைக்கேற்ப கொள்முதல் செய்து கொள்ளலாம்,  அரசின் அம்மா உப்பு தற்போது மக்களிடம் அதிக வரவேற்பினை பெற்றுள்ளதுபுதிய நியாய விலை கடைகள் அமைக்க அரசு தற்போது விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளதுஅதன்படி ஊர் மக்கள் தனி வாடகை இல்லா அறை, இதர கட்டணம் அனைத்தும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,  150 குடும்ப அட்டைகள் இருந்தால் அங்கு பகுதி நேர கடை அமைத்து தரப்படும். மிக அதிக தூரம் உள்ள குறைவான மக்கள் உள்ள பகுதியாக இருப்பின் அந்த பகுதிக்கு வாகனம் மூலம் பொருட்கள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் கூட்டுறவு துறையினர் கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் உதகை நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் தருமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...