குண்டு பல்பு பயன்படுத்துவதால்

மின் சிக்கன விழிப்புணர்வு முகாமில் தகவல்

கூடலூர்:"வீடுகளில் குண்டு பல்பு பயன்படுத்துவதால் உலக வெப்பமயமாதல் அதிகரிப்பும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும்,' என மின் சிக்கன விழிப்பணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,""தற்போது நிலவும் மின் பற்றாக்குறையால் மின் சேமிப்பு அவசியமாகும். மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய சோலார் மின்சாரத்தை பயன்படுத்தலாம்.மேலும், வீடுகளில் பயன்படுத்தும் மின்சார பொருட்கள் ஐ.எஸ்.ஐ., முத்திரையுடைய பொருட்களாக பயன்படுத்த வேண்டும். சி.எப்.எல்., விளக்குகள், மின் சிக்கன முத்திரை பதித்த பொருட்களை பயன்படுத்த வேண்டும்.


குண்டு பல்புகள் ஆயிரம் மணி நேரம் மட்டுமே வெளிச்சம் தரும். இவை பயன்பாட்டின்போது வெளிச்சம் மட்டுமின்றி அதிகம் வெப்பத்தை வெளியேற்றுகிறது. இதுவே உலக வெப்பமயமாதலுக்கு காரணமாவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. சி.எப்.எல்., பல்புகள் 6 ஆயிரம் மணி நேரம் வெளிச்சம் தருவதுடன், மின்சாரமும் சிக்கனப்படும்,'' என்றார். . தரமான மின்சார பொருட்கள் வாங்குவது குறித்தும்; மின்சாதன பொருட்கள் பராமரிப்பு மற்றும் மின் கசிவை தடுப்பது குறித்து வேலுப்பிள்ளை விளக்கினார். முகாமில், மைய முதல்வர் ஷாஜி தலைமை வகித்தார். புதிய தலைமுறை அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சொரூபானந்தன் முன்னிலை வகித்தார். பயிற்சி மைய மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

பந்தலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயனிகள் நலன் கருதி அடிப்படை வசதிகளை மேம்படுத்த கேட்டல் சார்பாக.


பெறுநர்
                ஆணையார் அவர்கள்                                                                            
நெல்லியாளம் நகராட்சி
பந்தலூர்.

பொருள்: பந்தலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயனிகள் நலன் கருதி               
      அடிப்படை வசதிகளை மேம்படுத்த கேட்டல் சார்பாக.
அய்யா அவர்களுக்கு வணக்கம்
பந்தலூா் புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முழுமையாக செயல்படுத்திய தற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதில் பொதுமக்கள்  நலன் கருதி  சில அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

1 பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதியை சார்ந்த பயனிகள் வந்து செல்கின்றனர்.  பள்ளி கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட பலரும் வந்து செல்லும் இங்கு பாதுகாப்பு கருதியும் பயனிகள் நலன் கருதியும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்க்பப்பட வேண்டும். 

2. பயனிகள் இருக்கைகள் தற்போது சேதப்படுத்தபட்டுள்ளன.  இதனால் பொதுமக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.  சேதபட்டுள்ள இருக்கைகள் சரிசெய்து தர வேண்டும்.   புதிய இருக்கைகள் மக்கள் பயன்பாட்டிற்கு அமைத்து கொடுக்க வேண்டும்.

3. பயனிகள் நலன் கருதி பேருந்து நிறுத்திற்கு எதிர்புறம் உள்ள கால்வாயின் மேற்பரப்பில் சிமென்ட் மூலம் பயனிகள் இருக்கைகள் அமைத்து கொடுத்தால் பெரும்பாலான பயனிகள் அப்பகுதியில் அமர்ந்து கொள்ள ஏதுவாக அமையும்.  அதற்கான நடவடிக்கை எடுத்து தர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

4. மழைகாலங்களில் பயனிகள் பேருந்துகளில் ஏறும்போது நனைந்து கொண்டு இறங்கவும் ஏறிச்செல்லவும் வேண்டிய நிலை உள்ளது.   இதனால் பயனிகள் நலன்கருதி பேருந்து நிறுத்தும் பகுதியில் சீட்டுகள் கொண்டு மேற் கூரை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

5.  வணிக வளாகத்தில் உள்ள கடைகள் பயனிகள் நிற்கும் பகுதியில் திறந்து செயல்படவில்லை.  தற்போது உள்ள கடைகளை அரைபாகம் பயனிகள் நிற்கும் பக்கம் திறந்து செயல்படசெய்ய வேண்டும்.   கடை நடத்தும் நபர்களுக்கு அனுமதி அளித்தால் அவர்களே கூட அதனை செய்துகொள்வார்கள்.  பயனிகள் நிற்கும் பகுதியில் முழு அளவு திறந்து செயல்பட அனுமதித்தால் பயனிகளுக்கு இடையூறு ஏற்படும் நிலை உருவாகும் என்பதும் குறிப்பிடதக்கது.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம்


உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...