குண்டு பல்பு பயன்படுத்துவதால்

மின் சிக்கன விழிப்புணர்வு முகாமில் தகவல்

கூடலூர்:"வீடுகளில் குண்டு பல்பு பயன்படுத்துவதால் உலக வெப்பமயமாதல் அதிகரிப்பும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும்,' என மின் சிக்கன விழிப்பணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,""தற்போது நிலவும் மின் பற்றாக்குறையால் மின் சேமிப்பு அவசியமாகும். மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய சோலார் மின்சாரத்தை பயன்படுத்தலாம்.மேலும், வீடுகளில் பயன்படுத்தும் மின்சார பொருட்கள் ஐ.எஸ்.ஐ., முத்திரையுடைய பொருட்களாக பயன்படுத்த வேண்டும். சி.எப்.எல்., விளக்குகள், மின் சிக்கன முத்திரை பதித்த பொருட்களை பயன்படுத்த வேண்டும்.


குண்டு பல்புகள் ஆயிரம் மணி நேரம் மட்டுமே வெளிச்சம் தரும். இவை பயன்பாட்டின்போது வெளிச்சம் மட்டுமின்றி அதிகம் வெப்பத்தை வெளியேற்றுகிறது. இதுவே உலக வெப்பமயமாதலுக்கு காரணமாவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. சி.எப்.எல்., பல்புகள் 6 ஆயிரம் மணி நேரம் வெளிச்சம் தருவதுடன், மின்சாரமும் சிக்கனப்படும்,'' என்றார். . தரமான மின்சார பொருட்கள் வாங்குவது குறித்தும்; மின்சாதன பொருட்கள் பராமரிப்பு மற்றும் மின் கசிவை தடுப்பது குறித்து வேலுப்பிள்ளை விளக்கினார். முகாமில், மைய முதல்வர் ஷாஜி தலைமை வகித்தார். புதிய தலைமுறை அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சொரூபானந்தன் முன்னிலை வகித்தார். பயிற்சி மைய மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...