உலக சுகாதார தினம்

உலக சுகாதார நிறுவனத்தினால் ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகின்றது.  மக்களிடம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், சுகாதரமின்றி வாழ்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கம் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கடைப் பிடிக்கப்படுகின்றது.
1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 7ம் நாள் உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத்  தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 1950-ம் ஆண்டு முதல் ஏப்ரல் 7 ம் தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது.  நமது உடலின் பெரிய உறுப்பான தோல் தான் பல்வேறு நுண் கிருமிகளின் வளர்ச்சிக்கும், நோய் தொற்றுக்கும் காரணமாகிறது.
நமது தோலில் ஒரு சதுர சென்டிமீட்டரில் இயற்கையாகவே 3200 நுண் கிருமிகள் வாழ்கின்றன. தோலில் அமிலத்தன்மை உள்ளதால் பாக்டீரியா, பூஞ்சை, ஈஸ்ட், வைரஸ் கிருமிகள் எளிதில் வளர்கின்றன. எனவே தினமும் குளிப்பதும், கை, கால்களை சோப்பு போட்டு சுத்தம் செய்வதும் அவசியம்.
சாதாரண நிலையிலேயே விரல் இடுக்குகளில் 14 வகையான பூஞ்சை கிருமிகள், தொப்புளில் வீரியமிக்க 4 வகை பாக்டீரியாக்கள், பல்துலக்கும் பிரஷில் 100க்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் உள்ளன. விரலில் உள்ள நுண்கிருமிகள் உணவு பரிமாறுதல் மற்றும் கைகுலுக்குவதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுகிறது.
கட்டுப்படுத்த முடியாத நிலையில் கிருமிகள்:
தற்போது கிருமிகள் வலுவாகி விட்டது போலும் நாம் எதை செய்தாலும் கிருமிகளை அழிக்க முடிவதில்லை, தலைசீவும் சீப்பில் 3500, கழிப்பறை தொட்டியில் 2800, சாப்பிட்டு கழுவாத தட்டில் 2200, பாத்திரம் கழுவும் தொட்டியில் 13ஆயிரம், காலணியின் வெளிப்புறம் 4 லட்சத்து 20 ஆயிரம், உட்புறம் 2500 கிருமிகள் உள்ளன. 'டச் ஸ்கிரீன்' மொபைல் போனில் கூட 100-க்கும் மேற்பட்ட பாக்டீரியா காலனிகள் காணப்படுகின்றன.
கம்ப்யூட்டர் கீபோர்டு, டாக்டர்களின் ஸ்டெதஸ்கோப்பில், மருந்துகளுக்கு கட்டுப்படாத சூப்பர் கிருமிகள் காணப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொருவரும் சராசரியாக ஒரு நாளைக்கு 600 முதல் 700 கிராம் திடக்குப்பை கழிவுகளை உண்டாக்குகிறோம்.
இதில் 300 கிராமிற்கு மேற்பட்ட கழிவுகள், எளிதில் அழுகக்கூடிய, நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடியன. அளவோடு சமைத்து அளவோடு சாப்பிட்டால் வீட்டு குப்பையை குறைக்கலாம். சுற்றுப்புறத்திலும் குப்பை பெருகுவதை தடுக்கலாம். உணவுக்கழிவுகள், காய்கறி, கிழங்கு, மாமிச கழிவுகள் ஒன்றாக குப்பைக்கு செல்லும் போது, தரையில் கொட்டிய ஐந்து நொடிகளில் நுண்கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
பாக்டீரியாக்களால் தாக்கப்பட்டு அமிலங்களாகவும், ஈஸ்ட்களால் தாக்கப்பட்டு ஆல்கஹாலாக மாற்றப்பட்டு மண்ணோடு மட்குகின்றன. இடைப்பட்ட காலத்தில் குப்பையில் உள்ள கிருமிகள் ஈ, நாய், பன்றி, பறவைகள் மூலம் பல இடங்களுக்கு பரவுகின்றன. குப்பைகளை கையாள்பவர்கள் மூலம் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களில் கிருமிகள் பரப்பப்படுகின்றன.
பாதிப்புகள்
இந்தியாவில் பெரிய நகரங்களில் வசிப்பவர்களில் குறைந்தது 7 சதவீதம் பேர் சுகாதாரமற்ற சாலையோர உணவுகளை சாப்பிடுவதால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
·        காய்கறி, உணவுக் கழிவுகளை 12 மணி நேரத்திற்கு மேல் வீட்டில் வைத்தால் அதிலிருந்து பாக்டீரியா பரவி, வயிறு சார்ந்த உபாதைகள் வரும்.
·        சமைத்த உணவுகளை இரண்டு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். அதற்கு மேல் எனில், பிரிட்ஜில் வைத்து பாதுகாக்கலாம். மீண்டும் வெளியில் எடுத்து அரை மணிநேரம் கழித்து முழுமையாக சூடுபடுத்தி சாப்பிட வேண்டும்.
·        கெட்டுப்போன உணவு, பழைய இறைச்சி மற்றும் அழுகிய பழங்களை பிரிட்ஜில் ஒன்றாக வைத்தால் நல்ல உணவுகளிலும் கிருமிகள் வளரும்.
·        மூடப்படாத தோசைமாவு, பால், மிச்சம் வைத்த உணவுகள் விரைவில் கெட்டுப்போய் பாதிப்பை ஏற்படுத்தும்.
·        கெட்டுப் போன உணவை சாப்பிட்ட ஒன்று முதல் ஆறு மணி நேரத்திற்குள் வயிற்றுவலி, வாந்தி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.
·        சில நேரங்களில் மூன்று நாட்கள் கழித்து கூட இப்பிரச்னை ஏற்படலாம்.
·        சுகாதாரமற்ற கைகளால் உணவு சமைத்து பரிமாறுவதால், சாப்பிடுபவர்களின் வயிற்றில் தட்டை மற்றும் உருண்டை புழுக்கள் உண்டாகின்றன.
·        தெருவோர திறந்தநிலையில் விற்கப்படும் உணவு பண்டங்களால் காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
·        கடையில் பார்சல் வாங்கும்போது பாலித்தீன் கவரை வாயால் ஊதியும், எச்சில் தொட்டும் சாம்பார், சட்னி ஊற்றப்படுவதால் காலரா, மஞ்சள்காமாலை, காசநோய், கக்குவான், டைபாய்டு, அமீபியாசிஸ் நம்மைத் தேடி வருகின்றன.
·        சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் தெற்கு மற்றும் கிழக்காசியாவில் ஏழு லட்சம் குழந்தைகள் இறந்து போவதாக உலக சுகாதார நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
·        நமது உடல், உண்ணும் உணவு மற்றும் சுற்றுப்புறம் சுத்தமாக இருந்தால் தான் நிலம், நீர், காற்று மாசடையாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறமுடியும்.
வீட்டிற்குள் வெளிச்சமின்றி அமைந்துள்ள கழிப்பறைகள், மலம் கழித்தபின் சோப்பு போட்டு கையை கழுவாத நிலையில் மலக்கழிவுகளின் மூலம் மஞ்சள் காமாலை மற்றும் புழுத்தொற்று ஏற்படுகின்றன.
நம் முன்னோர்கள் சுத்தம் சோறு போடும் இதைத் தான் கூறினார்கள். உண்ணும் உணவில் சுகாதாரத்தை பின்பற்றினால் ஆரோக்கியத்திற்கு நூறு மதிப்பெண் கிடைக்கும்.
இதுவரை உலக நலவாழ்வு நாளின் கருப்பொருட்கள்:
உலக சுகாதார நிறுவனம் 1950ல் இருந்து உலக சுகாதார தினம் கடைபிடித்த வந்தாலும்  1995 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்பொரு கரு பொருட்களை எடுத்து அதன்படி செயல்படுத்தி வருகின்றது.   கடந்த ஆண்டு சக்கரை நோயினை கட்டுபடுத்துவது வராமல் தடுப்பது குறித்த கருப்பொருளை கொண்டிருந்தது.
·        2016: Halt the rise : beat diabetes
·        2015: Food safety
·        2014: Vector-borne diseases: small bite, big threat
·        2013: Healthy heart beat, Healthy blood pressure
·        2012: Good health adds life to years
·        2011: Anti-microbial resistance: no action today, no cure tomorrow
·        2010: Urbanization and health: make cities healthier
·        2009: Save lives, Make hospitals safe in emergencies
·        2008: Protecting health from the adverse effects of climate change
·        2007- அனைத்துலக நலவாழ்வுப் பாதுகாப்பு.
·        2006- ஒன்றுபட்டு நலவாழ்விற்காக உழைப்போம்.
·        2005- ஒவ்வொரு தாயும் சேயும் தேவை என்பதை உணர்த்து
·        2004- சாலை வீதிப் பாதுகாப்பு
·        2003- குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க சுற்றுச் சூழ்லை நலம்பேணுவோம்.
·        2002- நலவாழ்வை நோக்கி நகர்வோம்.
·        2001- மனவளம்: விலக்கி வைப்பதை விலக்குவோம். அக்கறையுடன் கவனிப்போம்.
·        2000- பாதுகாப்பான குருதி என்னுடம் ஆரம்பிக்கட்டும்.
·        1999- சுறுசுறுப்பான முதுமை இயங்கல் வேறுபாடானதே.
·        1998- பாதுகாப்பான தாய்மை
·        1997- முகிழ்த்துவரும் தொற்றுநோய்கள் தவிர்ப்போம்
·        1996- தரமான வாழ்விற்கு நலமான நகரம்.
·        1995- இளம் பிள்ளை வாதத்தை உலகின்றே விரட்டுவோம்.



No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...