நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில்
சுமார் 7 லட்சத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தின் மிக சிறப்பு என்பது உலக அளவில்
பேசப்படும் சுற்றுலாத்தலங்கள் தான். உதகை மிக முக்கிய இடத்தை பிடிக்கிறது, அதுபோல குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளிலும்
பல்வேறு இடங்கள் சுற்றுலா பயனிகளை கவரும் வகையில் உள்ளது. கோடை காலங்கள் மற்றுமின்றி பல்வேறு காலங்களிலும்
சுற்றுலா பயனிகள் வந்து செல்கின்றனர்.
உலகளவில் பல்வேறு நாடுகளில் உள்ள சுற்றுலா
பயணிகள் வந்து செல்லும் முக்கிய நகரங்களில் தூய்மை என்பது மிகப்பெரிய கேள்வி குறியாகி
உள்ளது.
உலக சுகாதார தினம் ஏப்ரல் 7ம் தேதி உள்ளாட்சிகள்
மூலம் கடைப்பிடிக்கப்பட்டு மக்கள் மத்தியில் சுகாதாரத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன. அதுபோலா தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதாரத்தை
குறித்தும், தனிநபர் கழிப்பிடம் அமைப்பது குறித்தும் உள்ளாட்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.
மக்களை சுகாதாரமாக இருக்க விழிப்புணர்வு
ஏற்படுத்தம் உள்ளாட்சிகள் நகரங்களை சுகாதாரமாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்து இருக்கின்றதா
என்றால் மிகப்பெரிய கேள்விகுறியாகி உள்ளது.
கழிப்பிடம்,
சாதாரணமாக மனிதர்களுக்கு சுமார் 3 முதல்
4 மணிநேரத்திற்கு ஒரு முறையேனும் சிறுநீர் கழிக்க வேண்டும். அதில் ஊட்டி போன்ற குளிர் பிரதேசத்தில் 2 மணி நேரத்திற்குள்
கூட ஒரு முறை சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உள்ளது. உதகை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, பந்தலூர்,
குந்தா உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நகரங்களில்
மக்கள் சிறுநீர் கழிக்க உரிய வசதி செய்து தரப்படவில்லை. கட்டிய கழிப்பிடங்களில் தனியார்களுக்கு ஒப்பந்தம்
வழங்கி அவர்கள் மூலம் பராமரிக்கின்றோம் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
திரையரங்கு, பள்ளிகள், திருமண மண்டபங்கள்
போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுமார் 50 நபருக்கு ஒரு சிறுநீர் கழிக்கும் இட
வசதி 100 நபர்களுக்கு ஒரு மலம் கழிக்கும் இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சுகாதாரத்தை
வலியுறுத்தும் சட்டங்கள் சொல்கின்றன. அவற்றின்
அடிப்படையிலேயே அவற்றிற்கான உரிமங்கள் வழங்கப்படுகின்றது.
ஆனால் பல ஆயிரம் பேர் போக்குவரத்து மற்றும்
பொருட்கள் வாங்கி செல்ல, மருத்துவம் பெற என பல்வேறு தேவைகளுக்காக நகரப்பகுதிக்கு வந்து
செல்கின்றனர். இவர்கள் சிறுநீர், மலம் கழிக்க
உரிய ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை.
அமைத்துள்ள சிறிய அளவிலான கழிப்பிடங்களில்
சிறுநீர் கழிக்க 5 ரூபாயும், மலம் கழிக்க 10 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றது. இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் எந்தவித நடவடிக்கையும்
இல்லை. டென்டர் எடுத்தவர்கள் தரகுறைவாக திட்டுகின்றனர். இதனால் ஆண்கள் மறைவான இடங்களை சிறுநீர் கழிப்பிடங்களாக
மாற்றி விடுகின்றனா்.
ஆனால் பெண்கள் அதற்கு வழியில்லாமல் அதிக
கட்டணம் குடுத்து பயன்படுத்தும் நிலையும் சிறுநீரை அடக்குவதால் பல்வேறு நோய்களுக்கு
ஆளாகும் நிலையும் ஏற்படுகின்றது.
திறந்தவெளி கழிப்பிடம் இருக்க கூடாது என்பதற்காக
மத்திய அரசு கோடிக்கணக்கான நிதியுதவி அளித்து நகராட்சிகளில் ''நம்ம டாய்லெட்"
புதியதாக கட்டப்பட்டது. நவீன வசதிகளுடன், தண்ணீர் டேங்க் பொருத்தப்பட்ட கழிப்பிடம்,
ஒன்றுக்கு ரூ.10 லட்சம் செலவில், நம்ம டாய்லட் அமைத்து அதனை நகராடசியே பராமரிக்க வேண்டும்
என கூறியது. ஆனால் உதகையில் கட்டிய அனைத்த
நம்ம டாய்லட்களையும் தனியாருக்கு டென்டர் விட்ட கமிசன் பார்த்து விட்டனர். டென்டர்
விட்டு சில மாதங்களே ஆகியுள்ளது. ஆனால்
கட்டண கொள்ளை ஆரம்பித்து விட்டது.
நம்ம டாய்லெட்டுகளில் இப்போதே கட்டணம்
3 ரூபாய் என எழுதியிருந்தாலும் 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. நம்ம டாய்லட்களுக்கு தனாக தண்ணீர் சென்று சுத்தம்
செய்யும் வகையில் தண்ணீர் வசதி அமைக்கப்பட்டிருக்கும். உள்ளே தனி குழாய் மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்தி
தரப்படும். ஆனால் தற்போது நம்ம டாய்லெட்டுக்கு வெளியே பைலர்கள் மூலம் தண்ணீர் வைத்திருக்கின்றனர். மிட்டாய் ஜாடிகளில் தண்ணீரை எடுத்துக்கொண்டு மலம்
கழிக்க செல்லவேண்டும். தண்ணீர் இல்லாமலும்,
முறையான பராமரிப்பு இல்லாமலும் கழிப்பிடங்கள் தற்போது மக்கள் பயன்படுத்த இயலாத நிலை
ஏற்பட்டுள்ளது. அதுவும் சிறுநீர் கழிக்க சென்றால் கட்டணம் வசூலித்து விட்டு நம்ம டாய்லெட் பின்புறம்
திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க சொல்கின்றனர்.
இதுகுறித்து ஏற்கனவே நம்ம டாய்லெட்டுகள்
டென்டர் விடகூடாது என எதிர்ப்பு தெரிவித்தபோது
நகராட்சியால் பராமரிக்க இயலாது, உதகை நகராட்சியில் 11 கழிப்பறைகளையும் ஒரே கான்ட்ராக்டர்
டெண்டர் எடுத்துள்ளதால், பராமரிப்பில் தொய்வு இருக்காது; உரிய முறைப்படி பராமரிக்க
சுத்தமாக வைக்க டென்டர் எடுத்தவர்களை அறிவுறுத்தியுள்ளதாக என அப்போதைய நகராடசி ஆணையாளர்
(பொ) பிரபாகரன் தெரிவித்தார். ஆனால் நகராட்சி
ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் யாரும் ஆய்வு செய்வதில்லை. இதனால் டென்டர் எடுத்தவர்கள் லாப நோக்கத்தில் முறையாக
செயல்படுத்தபடாமல் தற்போது சுகாதார கேட்டினை உருவாக்கி வருகின்றனர்.
அதுபோல நகர பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை
அகற்றுவது முதல் கழிவு நீர் கால்வாய்கள் பராமரிப்பது போன்ற பணிகளும் மிக மெத்தனமாக
மேற்க்கொள்ளப்படுவதால் உதகை குன்னூர் பேருந்து நிலையங்கள் மற்றும் சந்தைபகுதிகளில்
துர்நாற்றம் வீசுகின்றன. மக்கள் பெருமளவு நோய்களோடு
திரும்ப செல்லும் நிலை உள்ளது.
ஒரு துளி மலத்தில் ஒரு கோடி வைரஸ்கள், நோய்
பரப்பும் 10 லட்சம் பாக்டிரியாக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. அதுபோல திறந்த வெளியில் மலம் கழிப்பதால் மலேரியா,
குடல்புழு, வயிற்றுப்போக்கு, வாந்திபேதி, காலரா போன்ற பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.
ஈக்கள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி அவற்றின் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்படுவதற்கு
திறந்தவெளி கழிப்பிடம், முறையாக கழிப்பிடம்
செல்லாதே காரணம் என பல்வேறு ஆய்வுகள் மூலம் உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளது.
திறந்தவெளிக் கழிப்பிடங்கள் (தடுப்பு) சட்டம்
1993—ல் இந்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. 2002-இல் 16 மாநிலங்கள் இதை ஏற்றுக்கொண்டன.
ஆனாலும், இன்னும் திறந்தவெளிக் கழிப்பு முறையும், மனிதக் கழிவை மனிதர் அள்ளும் அவல
நிலையும் தொடர்கிறது.
திறந்தவெளியில் மலம் கழிக்கும் முறையை வரும்
2019-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில், "தூய்மை இந்தியா' திட்டத்தை
பிரதமர் மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி தொடக்கி வைத்தார். இதுவரை மொத்தம் 3,48,79,320 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன
அதாவது 3 மாநிலங்களில் உள்ள 101 மாவட்டங்களைச் சேர்ந்த 1,67,226 கிராமங்களில் தற்போது
திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லை. என்பது குறிப்பிடதக்கது.
திறந்தவெளி
கழிப்பிடத்தால்
Ø ஒவ்வொரு தினமும் 1000 குழந்தைகள் சுகாதார
குறைப்பாட்டால் உலகம் முழுக்க இறக்கிறார்கள்.
Ø சுத்தமான மற்றும் பாதுகாப்பான கழிவறைகள்
இல்லாததால், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்,
பாடசாலைகளுக்கு பெண் குழந்தைகளின் வருகை தொடர்ந்து குறைகிறது.
Ø நிர்ணயிக்கப்பட்ட "புத்தாயிரம் ஆண்டு
வளர்ச்சி இலக்குகளில்" சுகாதாரத் துறையில் நாம் இதுவரை அறவே முன்னேற்றம் காணாமல்
இருக்கிறோம். உலகத்தில் 15% மக்கள் இன்னும் திறந்தவெளியில்தான் கழிக்கிறார்கள்.
Ø சுகாதாரத்திற்கு நாம் செலவு செய்யும் 1
ரூபாய்க்கு 8 ரூபாய்க்கான நன்மைகளை பயக்கிறது என்பதை புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.
No comments:
Post a Comment