நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், அரசு மருத்துவமனை அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டல் சார்பாக.


பெறுனர்
உயர்திரு, இணை இயக்குனர் அவர்கள்                  உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்
சுகாதார பணிகள், நீலகிரி                                                             மாவட்ட ஆட்சியரகம் உதகை.

பொருள் :      நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், அரசு மருத்துவமனை
அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டல் சார்பாக.

மதிப்பிற்குரிய அம்மையீர்  அவர்களுக்கு வணக்கம், 
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் பந்தலூர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது.  இந்த மருத்துவமனையில் தினசரி 300 முதல் 400 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த மருத்துவமனையில் பல நல்ல பயன்கள் கிடைத்தாலும் இன்னும் சில சேவைகள் இருந்தால் மக்கள் இன்னும் சிறப்புடன் பயனடைவார்கள் என்ற நோக்கில் கீழ்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கின்றோம்.

மருந்து பயன்பாடு குறித்த சீட்டு

தற்போது நோயாளிகள் சிகிச்சைக்கு பின் மருந்து மாத்திரைகள் வெறும் கைகளில் பெற்று செல்கின்றனர்.  இதனால் எந்த மருத்து எப்போது சாப்பிட வேண்டும் என்ற தகவல் தெரிவதில்லை,  இதனால் மாத்திரைகளை தவறாக சாப்பிடும் நிலை ஏற்படுகின்றது.  எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மருந்துகள் எப்போது சாப்பிடுதல் என்பன குறித்து சீட்டும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

டிஜிட்டல் எக்ஸ்ரே

பந்தலூர் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே எக்ஸ்ரே இயந்திரம் இருந்து பழுதாகிபோனது.  இதனால் அடிப்பட்டவர்கள் விபத்தில் சிக்கியவர்கள் எக்ஸ்ரே எடுக்க இயலாமல் அவதிப்படும் நிலை எற்பட்டுள்ளது.  தற்போது நவீன முறையிலான டிஜிட்டல் எக்ஸ்ரே வழக்கத்திற்கு வந்துள்ளது.  அதனால் பந்தலூர் அரசு மருத்துவமனைக்கும் புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் வழங்கி உதவுமாறும்,  அதை கையாளும் தொழில்நுட்புனரும் பணியில் அமர்த்தவும் கேட்டுக்கொள்கின்றோம்.

உள் நோயாளிகளுக்கு உணவு
           
பந்தலூர் அரசு மருத்துவ மனையில் உள்நோயாளிகள் தற்போது சராசரியாக 20 முதல் 30 நோயாளிகள் வரையில் அனுமதிக்கப்படுகின்றனர்.  சில அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் உள்நோயாளிகள் அளவு குறையலாம்.  இவர்கள் இங்கு தங்கி சிகிச்சை பெறும்போது அவர்களுக்கான உணவுக்கு அவதிப்படும் நிலை உள்ளது. 

தற்போது பழம் பால் போன்றவை வழங்கினாலும் நோயாளிகளுக்கு அவை போதுமானதாக இல்லை.   இதற்கு ஆகும் செலவில்  நிர்ணயிக்கப்பட்ட உணவை வழங்க இயலும் எனவே மேற்படி உள்நோயாளிகளுக்கு உணவு வழங்க சமையல் கூடம், சமையல் காரர்கள் நியமித்து தினசரி உணவு வழங்க தக்க நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


மருத்துவமனை  நோயாளிகள் மற்றும் பணியாளாகள்களுக்கு குடிநீர் வசதி.
           
அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் தடையின்றி பயன்படுத்தும் வகையில் குடிநீர் தற்போது இருந்தாலும் சில நேரங்களில் பற்றாக்குறை ஏற்படுகின்றது.  எனவே அரசு மருத்துவமனையில் தண்ணீா் பற்றாக்குறை நீக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்

இரத்த பரிசோதகா் நியமிக்க வேண்டும்.

பந்தலுர் அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதகா் பணியிடம் காலியாகவே உள்ளது.  இதனால் ICTC மற்றும் காசநோய்  பிரிவு பரிசோதகர்கள் மூலம் இரத்த பரிசோதனை மேற்கொண்டு வந்தாலும் சரியான  நேரத்தில் பரிசோதனை அறிக்கை பெற இயலாத நிலையும் தகுந்த சிகிச்சை  கிடைக்க இயலாத நிலையும் ஏற்படுகின்றது.  
இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.  எனவே அரசு மருத்துவ மனைக்கு தனியாக இரத்த பரிசோதகா் நியமிக்க வேண்டும் எனவும் அனைத்து பிரிவு இரத்த பரிசோதணைகள் மேற்க்கொள்ளவும். நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கின்றோம்.

அடுக்குமாடி குடியிருப்பு

மருத்துவமனை வளாகத்தை அடுத்து அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் சில பழுதடைந்து முட்புதர்கள் சூழ்ந்து உள்ளது.  அவ்றறை சீரமைத்து தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  இதில் புதிதாக அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டி தந்தால் மருத்துவமனை பணியாளர்கள் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளிக்க ஏதுவாக அமையும்.
பழயை மருத்துவமனை கட்டிடத்தை உடைத்து புதிய இருமாடி கட்டிடங்கள் கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.  
பினவறை தடுப்பு சுவர் அமைக்க

மருத்துவமனை  பினவறை வங்கியின் ஓரத்தில் உள்ளது.  வங்கி மழைகாலத்தில் உடைந்து விழும் நிலையில் உள்ளது.  இதனால் பினவறை பாதிக்கும் அபாயம் உள்ளதால் அதையொட்டி தடுப்பு சுவர் கட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்     
நோயாளிகள் நல சங்கத்திற்கு நிதி
மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் நலசங்கத்திற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நிதி வழங்கவில்லை என் கூறப்படுகின்றது.  அதனால் மருத்துவமனையில் உள்ள சில குறைபாடுகளை சரிசெய்து கொள்ள அவதிப்படும் நிலை உள்ளது.  எனவே மேற்படி மருத்துவமனை நோயாளிகள் நல சங்கத்திற்கு ஆண்டுதோறும் நிதி வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
                                                                                                                   இப்படிக்கு
                                                                                               

சு. சிவசுப்பிரமணியம்

                                                                                                பொது செயலாளர்.  CCHEP. Nilgiris/

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...