பெறுனர்
உயர்திரு, மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
உதகமண்டலம்
பொருள் : பந்தலூர் கூடலூர் தனியார் வாகணங்களில் கட்டணம் அதிகம் வசூல்
பொதுமக்கள் பாதிப்பு நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக.
அம்மையீர் அவர்களுக்கு
வணக்கம்,
பந்தலூர் மற்றும் அதனை
சுற்றியுள்ள பகுதிகளில் தனியார் ஜீப் மற்றும் ஆட்டோக்கள் மக்களை ஏற்றி சென்று
வருகின்றனர். பந்தலூர் உப்பட்டி, பந்தலூர்
கொளப்பள்ளி, பந்தலூர் சேரம்பாடி பந்தலூர் தேவாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த
வாகணங்கள் மூலம் பயணிகள் ஏற்றி செல்கின்றனர்.
கொரனா தொற்று
ஏற்பட்டதற்கு முன் பந்தலூர் உப்பட்டிக்கு
ரூபாய் 10ம், பந்தலூர் கொளப்பள்ளிக்கு ரூ,15ம் பந்தலூர் சேரம்பாடிக்கு ரூபாய் 20 பந்தலூர்
கூடலூர் ரூபாய் 25 என ஒரு நபருக்கு கட்டணம் வசூலித்து 12 பேர் வரை ஏற்றி சென்றனர்.
கொரணா தொற்று ஏற்பட்ட
பின் ஆட்டோ தனியார் வாகணங்கள் இயக்க அனுமதித்த பின் சமூக இடைவெளியுடன் வாகணங்கள்
இயக்க வேண்டும் என அறிவுறுத்தியதால் ஜீப்பில் 5 பேர் மட்டும் ஏற்றி
செல்ல வேண்டும் என அறிவுறுத்தபட்டதால் தனிநபருக்கான கட்டணம் இரு மடங்காக
அறிவிக்கப்பட்டது.
அதன்படி பந்தலூர்
உப்பட்டிக்கு ரூபாய் 20ம் பந்தலூர் சேரம்பாடிக்கு ரூபாய் 50ம் பந்தலூர்
உப்பட்டிக்கு ரூபாய் 30ம் பந்தலூர் தேவாலா ரூபாய் 20 பந்தலூர் கூடலூர் ரூபாய் 50
என கட்டணம் உயர்த்தி வசூலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கெரனா தளர்வுகள்
அறிவிக்க பட்டபின் தற்போது தனியார்
வாகணங்களில் அதிக பயனிகள் ஏற்றி செல்கின்றனர்.
ஆனால் கட்டணம் குறைக்கப்படவில்லை.
தற்போது 10 முதல் 12
பேர் வரை பயணிகள் ஏற்றி சென்றாலும் உயர்த்திய கட்டணம் குறைக்காமல் தொடர்ந்து அதிக
கட்டணத்தையே வசூலித்து வருகின்றனர்.
இதனால் இப்பகுதியை சார்ந்த ஏழை
எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே பந்தலூர் கூடலூர்
பகுதிகளில் இயக்கப்படும் தனியார் வாகணங்களில்
கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் எனவும், பழைய கட்டண
அடிப்படையில் வாகணங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
கேட்டுகொள்கின்றோம்.