பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளி வளாக சாலை மற்றும் வளாக பகுதி ஏற்கனவே தார் மூலமும் சிமெண்ட் மூலமும் அமைக்க பட்டு இருந்தது.
பெறுனர்
உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நீலகிரி மாவட்டம்.
பொருள் : பந்தலூர் பொன்னானி ஆறு தடுப்ப அமைக்க வேண்டும்
நீர் வீனாவை தடுக்க கேட்டல் சார்பாக..
அம்மையீர் வணக்கம்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் கூவமூலா பகுதியில் உற்பத்தியாகி அத்திக்குன்னா வாளவயல், பொன்னானி பாலவயல், வழியாக கேரளா எல்லையில் நுழைந்து மீண்டும் கர்நாடாகா மாநிலம் காவிரி ஆற்றில் கலக்கும்பொன்னானி ஆறு சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் தமிழ்நாட்டிற்குள் ஓடுகின்றது.
எப்போதும் வற்றாத நீர் வரத்து உடைய இந்த ஆற்றில் கடந்த 2014,ல் பொன்னானி ஆற்றின் குறுக்கே பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கும், நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்கும் விதமாகவும், கேரளாவிற்கு செல்லும் நீரை சேமிக்கும் விதமாகவும் ஆற்றின் குறுக்கே 2 அடி உயரத்திற்கு மட்டும் தடுப்பனை கட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம்,
அதன் அடிப்படையில் 17 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ஆற்றில் மக்கள் பயன்பெறும் வகையில் 500 மீட்டருக்கு ஒரு தடுப்பனை அதாவது ஒரு கிலோ மீட்டார் தூரத்திற்கு 2 தடுப்பனைகள் வீதம் 34 தடுப்பனைகள் கட்ட நடவடிக்கை எடுப்படும் என்று பொதுபணி துறை மூலம் உறுதியளிக்கப்பட்டது.
கடந்த 2018 ம் ஆண்டு பந்தலூர் அருகே கூவமூலா மற்றும் அத்திக்குன்னா பகுதிகளில் சில தடுப்பணைகள் மட்டும் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் தங்களின் தண்ணீர் தேவைக்கு பயணடைந்து வருகின்றனர். மற்ற பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்படவில்லை.
இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் சிரம்மப்படுகின்றனர். ஆறு தூர் வாரப்பட்டு அகலப்படுத்தபட்ட மழைகாலங்களில் வெள்ள பாதிப்பு குறைந்தது. தற்போது சில இடங்களில் மண் சரிந்து மீண்டும் ஆறு குறுகலாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது வெயில் காலம் ஆனதால் பந்தலூர் உப்பட்டி நெல்லியாளம், பொன்னானி, பாலவயல் மற்றும் இந்த ஆறு செல்லும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
துணிகள் துவைக்கவும், குளிக்கவும், கால்நடைகள் பராமரிக்கவும் தண்ணீர் தேவைக்கு தற்போது இந்த ஆற்றையே நம்பியுள்ளனர் .
அதனால் இந்த ஆற்றினை மீதமுள்ள பகுதிகளில் விரைவில் தடுப்பனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம்
பெறுனர்
உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நீலகிரி மாவட்டம்.
பொருள் : நாடுகானி பகுதியில் தடுப்பனை உடைந்து சேதமானது
நீர் வீனாவை தடுக்க கேட்டல் சார்பாக.
அம்மையீர், வணக்கம்,
கூடலூர் அருகே நாடுகானி பகுதியில் இருந்து கூடலூர் வரும் வழியில் வனப்பகுதியை ஒட்டி சாலையோரத்தில் நீரை சேமிக்கும் விதமாக தடுப்பனை கட்டப்பட்டது. இந்த தடுப்பனையில் தேங்கும் நீரினை வன உயிரிணங்கள் பயன்படுத்தி வந்தன. மக்களும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்த தடுப்பனையில் தேங்கும் நீரின் காட்டுயானைகள் பருகுவதால் சாலையை தாண்டி யானைகள் வர வேண்டிய நிலை தடுக்கப்பட்டது.. மேலும் வன உயிரனங்களும் சாலையை கடக்க வேண்டிய நிலை தடுக்கப்பட்டது.
தற்போது இந்த தடுப்பனை மண் நிறைந்து காணப்படுகின்றது. தடுப்பனையில் அடிப்பகுதியில் அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தேங்காமல் வடிந்து விடுகின்றது. இதனால் வன விலங்குகள் பெரும்பாலும் தண்ணீர் தேவைக்கு சாலையை கடந்த அருகில் ஓடும் ஓடையை நோக்கி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காட்டு யானைகளும் சாலையை கடந்தே தண்ணீர் தேவைக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் சாலையில் செல்லும் வாகணங்களை காட்டுயானைகள் துரத்தும் அபாயம் உள்ளது. மேலும் சாலைக்கு அடுத்தபகுதியில் டேன்டீ குடியிருப்புகளும் உள்ளது.
யானைகள் சாலையை கடந்த குடியிருப்பை நோக்கி செல்லும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் மனித விலங்கு மோதல்களும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோல் அருகில் உள்ள வனப்பகுதிக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த தடுப்பணையை தூர் வாரி. மீண்டும் தடுப்பனையை தண்ணீர் வடியாமல் இருக்கும் வைகயில் தடுப்பனையின் உட்பகுதியில் கூடுதல் வார்ப்பு மூலம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
சு. சிவசுப்பிரமணியம்
அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்*
அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்* இந்திய அரசியல் சாசனம் இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் முதல் தகவல் அறிக்கை (F.I.R.)...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
-
*#பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013* *#பாலியல்_வன்முறை_தடுப்பு* இந்தியாவில் பணியிடத்தில் பாலியல...