தனியார் வாகணங்களில் கட்டணம் அதிகம் வசூல் பொதுமக்கள் பாதிப்பு நடவடிக்கை

 பெறுனர்

            உயர்திரு, மாவட்ட ஆட்சியர் அவர்கள்

            மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

            உதகமண்டலம்

 

            பொருள் :      பந்தலூர் கூடலூர் தனியார் வாகணங்களில் கட்டணம் அதிகம் வசூல்

பொதுமக்கள் பாதிப்பு நடவடிக்கை   எடுக்க கேட்டல் சார்பாக.

 

அம்மையீர் அவர்களுக்கு வணக்கம்,

 

பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனியார் ஜீப் மற்றும் ஆட்டோக்கள் மக்களை ஏற்றி சென்று வருகின்றனர்.  பந்தலூர் உப்பட்டி, பந்தலூர் கொளப்பள்ளி, பந்தலூர் சேரம்பாடி பந்தலூர் தேவாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த வாகணங்கள் மூலம் பயணிகள் ஏற்றி செல்கின்றனர்.

 

கொரனா தொற்று ஏற்பட்டதற்கு முன்  பந்தலூர் உப்பட்டிக்கு ரூபாய் 10ம், பந்தலூர் கொளப்பள்ளிக்கு ரூ,15ம் பந்தலூர் சேரம்பாடிக்கு ரூபாய் 20 பந்தலூர் கூடலூர் ரூபாய் 25 என ஒரு நபருக்கு கட்டணம் வசூலித்து 12 பேர் வரை ஏற்றி சென்றனர்.

 

கொரணா தொற்று ஏற்பட்ட பின் ஆட்டோ தனியார் வாகணங்கள் இயக்க அனுமதித்த பின் சமூக இடைவெளியுடன் வாகணங்கள் இயக்க வேண்டும் என அறிவுறுத்தியதால் ஜீப்பில் 5 பேர் மட்டும்   ஏற்றி செல்ல வேண்டும் என அறிவுறுத்தபட்டதால் தனிநபருக்கான கட்டணம் இரு மடங்காக அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி பந்தலூர் உப்பட்டிக்கு ரூபாய் 20ம் பந்தலூர் சேரம்பாடிக்கு ரூபாய் 50ம் பந்தலூர் உப்பட்டிக்கு ரூபாய் 30ம் பந்தலூர் தேவாலா ரூபாய் 20 பந்தலூர் கூடலூர் ரூபாய் 50 என கட்டணம் உயர்த்தி வசூலித்து வருகின்றனர்.  இந்த நிலையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கெரனா தளர்வுகள் அறிவிக்க பட்டபின்  தற்போது தனியார் வாகணங்களில் அதிக பயனிகள் ஏற்றி செல்கின்றனர்.  ஆனால் கட்டணம் குறைக்கப்படவில்லை.

 

தற்போது 10 முதல் 12 பேர் வரை பயணிகள் ஏற்றி சென்றாலும் உயர்த்திய கட்டணம் குறைக்காமல் தொடர்ந்து அதிக கட்டணத்தையே வசூலித்து வருகின்றனர்.  இதனால்  இப்பகுதியை சார்ந்த ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

 

எனவே பந்தலூர் கூடலூர் பகுதிகளில் இயக்கப்படும் தனியார் வாகணங்களில்  கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் எனவும், பழைய கட்டண அடிப்படையில் வாகணங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொள்கின்றோம்.

 

 

உப்பட்டியில் கொரனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கபசுர குடிநீர் விநியோகம்

 பந்தலூர் அருகே  உப்பட்டியில் கொரனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கபசுர குடிநீர் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 பந்தலூர் அரசு மருத்துவமனை சித்தா மருத்துவ பிரிவு. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், உப்பட்டி எஸ் ஒய் எஸ் அமைப்பு ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் தலைமை தாங்கினார்.

உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அனுசுயா பேசும்போது 

கொரனா நோய் தொற்று பரவி வருவதை தடுக்க பொதுமக்கள் அடிக்கடி கைகள் கழுவுதல், சமூக இடைவெளி , முக கவசம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். காய்ச்சல் மற்றும் சளி பிடித்து இருந்தால் அரசு மருத்துவமனையில் ஆலோசனை சிகிச்சை பெற்று கொள்ளலாம். தேவைப்படுவோருக்கு மட்டும் கொரனா பரிசோதனை மேற்கொள்ள படும். என்றார்.

 சித்தா மருத்துவர் புவனேஸ்வரி பேசும்போது 

 கபசுர குடிநீர் நுரையீரல் மற்றும் சுவாச பாதை நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. கொரனா தாக்கம் இருக்காமல் இருக்க உதவும். 5 கிராம் கபசுர பொடியை 250 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து 50 மில்லி அளவுக்கு வற்ற வைத்து குடிக்கலாம். பெரியவர்கள் 30 மில்லி சிரியவர்கள் 10 மில்லி என வயதிற்கேற்ப குடிக்கலாம். நிலவேம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனையும் நன்றாக கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கலாம் என்றார்.

உப்பட்டி எஸ் ஒய் எஸ் மாவட்ட இணை செயலாளர் ஐமுட்டி, நுகர்வோர் மைய ஆலோசகர் சுந்தர்ராஜ், உப்பட்டி சமூக ஆர்வலர் ஆலி ஆகியோர் பேசினார்கள். 

நிகழ்ச்சியில் கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது.  அதுபோல் நிலவேம்பு கசாயம் பொடி பொட்டலம் 100க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

பொது மக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குழந்தை நேய பள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூசைராஜ் வரவேற்றார். 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலர் சிவசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

மின் இணைப்பு - விண்ணப்பிக்கும் போது - கட்டணம்

 பெறுனர்

 

          உயர்திரு.  தலைவர்  - ஆணையாளர்  அவர்கள்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

          சென்னை.

 

பொருள் : மின் இணைப்பு  - விண்ணப்பிக்கும் போது  - கட்டணம் செலுத்துதல் – நிராகரிக்கும்

       போது கட்டணம் திரும்ப தருவதில்லை.  கட்டணம் திரும்ப அளிக்க நடவடிக்கை

        எடுக்க வேண்டும் அல்லது   அங்கிகரித்தபின் கட்டணம் செலுத்த வாய்ப்பளிக்க

        வேண்டும் என கேட்டல் சார்பாக.

        --  --  -- --  -- 

மதிப்பிற்குரி அய்யா

         

          மின் இணைப்புகோரி மின் பகிர்மான கழகத்தில் தற்போது இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய நிலை.  விண்ணப்பிக்கும் போது மின்சார இணைப்புக்கான கட்டணம் முழுமையாக செலுத்த வேண்டும். 

 

மின்வாரியத்தினர் ஏதேனும் ஆவணம் சரியில்லை, அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்தினால் மின் இணைப்பு வழங்க மறுப்பு தெரிவித்து மின் விண்ணப்பத்தினை  நிராகரிக்கும் போது  விண்ணப்பித்த நுகர்வோருக்கு மின் கட்டணம் திருப்பி தருவதில்லை.

 

இதனால் பெறாத சேவைக்கு நுகர்வோர்  பணம் செலுத்தி ஏமாறும் நிலை உள்ளது.  இது நுகர்வோர் பாதிப்பை உருவாக்குகின்றது. 

 

எனவே மின் இணைப்புக்கான விண்ணப்பம் நிராகரிக்கும் போது விண்ணப்ப கட்டணத்தை மின் பகிர்மான கழகம்  திரும்பி வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அல்லது மின் இணைப்பு வழங்க உறுதி செய்த பின்னர் மின் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்த அனுமதி வழங்க வேண்டும்.

 

இதனால் நுகர்வோர் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

 

எனவே மேற்படி விண்ணப்பிக்கும் போது செலுத்தும் கட்டணம் திரும்ப செலுத்தவும், மின் இணைப்புக்கு உறுதி செய்தபின் மின் இணைப்புக்கான கட்டணம் செலுத்த வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...