*மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய*மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லிங்க் https://ndl.iitkgp.ac.in. இதில் பதிவு செய்து ஆரம்ப பாடம் முதல் சட்டம், அறிவியல், இலக்கியம், பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன் பெறலாம். மேலும் இந்த நூலகத்தில் 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை சென்றடையும் வரை அதிகம் பகிரவும்.* அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லிங்க் https://ndl.iitkgp.ac.in. இதில் பதிவு செய்து ஆரம்ப பாடம் முதல் சட்டம், அறிவியல், இலக்கியம், பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன் பெறலாம். மேலும் இந்த நூலகத்தில் 4.60 கோடி புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை சென்றடையும் வரை அதிகம் பகிரவும்.*
*V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி
*V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..?*
_எத்தனை பேருக்கு தெரியும்..?_
1. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.
2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.
4. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.
5. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.
6. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.
7. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.
8. காலரா, டெங்கு, பிளேக் கொரோனா உள்ளிட்ட கொடிய நோய்களும் மற்றும் கால்நடை தொற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.
9. இருப்புப் பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.
10. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.
11. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
12. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுகாத்தல்.
13. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.
14. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.
15. பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.
16. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.
17. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.
18. உழவர்கள் நிலப் பட்டாக்காளை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்து கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.
19. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.
20. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.
21. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.
22. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.
23. அரசாங்கம் அவ்வப்பொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
24. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல்.
அக்மார்க் என்பது
அக்மார்க்
சான்றளிப்பு நிறுவனம் | சந்தைப்படுத்துதல் மற்றும் ஆய்வு இயக்ககம், இந்திய அரசு | |
---|---|---|
நிறுவப்பட்ட மண்டலம் | இந்தியா | |
நடைமுறைபடுத்தப்பட்ட வருடம் | 1986 | |
பொருட்கள் வகை | வேளாண் பொருட்கள் | |
சட்ட நிலை | ஆலோசனை | |
இணையதளம் | agmarknet.nic.in/agm_std1.htm | |
அக்மார்க் என்பது இந்திய அரசின் வேளாண் பொருட்களுக்கான சான்றளிப்பு குறியாகும். சந்தைப்படுத்துதல் மற்றும் ஆய்வு இயக்குநரகம் வேளாண் பொருட்களை ஆராய்ந்து தர நிலையை உறுதி செய்கிறது. இது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் முகமையாகும். வேளாண் பொருட்களுக்கு (தரம் மற்றும் குறியீடு) சட்டம் 1937 மற்றும் (திருத்தப்பட்ட சட்டம் 1986) மூலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்பொழுது அக்மார்க் தர நிலைகள் 205 பல்வேறு விளைப் பொருட்களுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றுள் தானியங்கள், பயறு வகைகள், அத்தியாவசிய எண்ணெய்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் சேமியா போன்ற அரை பதப்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கும்.
அக்மார்க் என்பது வேளாண்மை (Agriculture) மற்றும் குறியீடு (Mark) ஆகியவை சேர்ந்த சொல்லாகும். வேளாண் பொருட்கள் (தரம் மற்றும் குறியீடு) சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அக்மார்க் ஆய்வகங்கள்
அக்மார்க் சான்றளிப்பு நாடு முழுவதும் அமைந்துள்ள மாநில அரசுகளுக்கு சொந்தமான அக்மார்க் ஆய்வகங்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இவைகளுடன் மத்திய அக்மார்க் ஆய்வகம் (CAL) நாக்பூர், 11 ஒருங்கிணைந்த நகரங்களில் அக்மார்க் ஆய்வகங்கள் (மும்பை, புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, கான்பூர், கொச்சி, குண்டூர், அமிர்தசர், ஜெய்பூர், ராஜ்கோட், போபால்) உள்ளன. ஒவ்வொரு வட்டார ஆய்வகங்களும் அந்தந்த வட்டாரத்தில் சிறப்பு வாய்ந்த பொருட்களுக்காக சோதனை செய்ய அமைக்கப்பட்டுள்ளன.
பொருட்கள் மற்றும் சோதனைகள்
இந்த ஆய்வகங்களில் இரசாயன பகுப்பாய்வு, நுண்ணுயிரி வழிப் பகுப்பாய்வு, பூச்சிக்கொல்லி மீதம் மற்றும் கரும்பூசண நச்சு வகை பகுப்பாய்வு, வாசனை பொருட்கள், நெய், வெண்ணெய், தாவர எண்ணெய், கடுகு எண்ணெய், தேன், உணவு தானியங்கள் (கோதுமை), கோதுமை பொருட்கள் (ஆட்டா, சுஜா மற்றும் மைதா), பயறு மாவு, சோயா மொச்சை, கொண்டைக் கடலை, இஞ்சி, பிண்ணாக்கு, அத்தியாவசிய எண்ணெய், எண்ணெய் மற்றும் கொழுப்பு, விலங்கு பொதியுறை, இறைச்சி மற்றும் உணவுப் பொருட்களில் மேற்கொள்ளப்படுகிறது.
அக்மார்க் பதிவு பின்வரும் பொருட்களுக்கு கிடைக்கும்
விலங்கின் தோல், ஆட்டு முடி, முட்கள், கம்பளி, புலால் (குளிர்ந்த மற்றும் உறைந்த) கைளால் பொறுக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட வேர்கடலை, முந்திரி பருப்பு, அம்பாடி விதைகள், கடுகு விதைகள், நிலக்கடலை, அக்ரூட் பருப்பு, தாவர எண்ணெய் புண்ணாக்கு, நெய், வனஸ்பதி பாலாடைக்கட்டி வெண்ணெய், அத்தியாவசிய எண்ணெய், தாவர எண்ணெய், புகையிலை, கரும்பு, வெல்லம் (பனை வெல்லம்), பால், பாக்கு, நெல்லி, பீடி சுற்றும் இலைகள், சென்னா இலைகள் மற்றும் காய்கள், மரவள்ளி கிழங்கு பொருட்கள் (கால்நடை தீவணம்), முட்டை, தேன், விதையில்லா புளி, உலர்ந்த சாப்பிடக்கூடிய காளான், குங்குமப்பூ, சீகக்காய் தூள், காங்க்ரா தேயிலை, அகார் அகார், பப்பேயின், அரிசி, கோதுமை ஆட்டா, பயறு வகைகள், தானியங்கள், கடலை மாவு, பாசுமதி அரிசி (ஏற்றுமதி), சுஜி மற்றும் மைதா, திராட்சை, ஆப்பிள், அல்போன்சா மாம்பழம் – ஏற்றுமதி, தாவரங்கள், அல்போன்சா மாம்பழம் – வீட்டு உபயோகத்திற்கு, பெட்டியில் அடைக்கப்பட்ட, பாட்டிலில் அடைக்கப்பட்ட பழங்கள், பழ பொருட்கள் சிட்ரஸ், உருளைக்கிழங்கு (ஏற்றுமதி), நீர் கஷ்கொட்டை, வில்லியம் பேரிக்காய், மாம்பழம், விதை உருளைக்கிழங்கு, தேங்காய், குழம்பு பொடி, மிளகாய், ஏலக்காய், கொத்துமல்லி, பூண்டு, இஞ்சி, வெங்காயம், மிளகாய் தூள், பாப்பி விதைகள், மஞ்சள், பெருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் சீவரிக்கீரை விதைகள், சீரகம், மிளகு, சோம்பு, சணப்பை, பனை நார், பருத்தி, கற்றாழை இழை, சணல் மற்றும் இதர பொருட்கள்.
அக்மார்க் விண்ணப்பிக்க தேவையான நடவடிக்கைகள்
- அங்கீகரிக்கப்பட்ட அக்மார்க் ஆய்வகத்திலிருந்து முறையாக வாங்கிய சோதனை அறிக்கை
- நிறுவனத்தின் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் ஆவணம்
- விண்ணப்பதாரர் வரையறுக்கப்பட்ட நிறுமமாக இருந்தால் மாநில அதிகாரம் அல்லது குறிப்பாணை
- கூட்டாண்மையாக இருந்தால் கூட்டாண்மை ஒப்பந்தம்
- பொருட்களின் பெயர்
- விண்ணப்பதாரரின் பெயர்
- நிறுவனம்/ குழுமத்தின் பெயர்
- நிறுவனம்/ குழுமத்தின் முகவரி
- பொருளின் மாதிரி (500கிகி.1கிகி பை)
- தயாரிப்பு துவங்கியது (சரியான தேதி/மாதம்/வருடம்)
- மொத்த உற்பத்தி கிலோ கிராமில் (சென்ற வருடம்)
போக்ஸோ சட்டம் கூறுவது என்ன
போக்சோ சட்டம் என்றால் என்ன...?
போக்ஸோ சட்டம் கூறுவது என்ன...? புதிய மாற்றங்கள் என்ன...?
வயது வரம்பும் 18-ல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது.
இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், அதற்கான தண்டனைகளும் என்னவென்று பார்ப்போம்.
போஸ்கோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4-ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம்: இதற்கு குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டணையாகவும் உள்ளது கூடவே அபராதமும் விதிக்கப்படும்.
போஸ்கோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6-ன் படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.
போஸ்கோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8-ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்பைகளை தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம் அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது. குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.
போஸ்கோ சட்டம் பிரிவு 9 மற்றும் 10-ன் படி குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தவர்கள் குழந்தையின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிரை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.
போஸ்கோ சட்டம் பிரிவு 11 மற்றும் 12-ன் படி குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது குற்றம். குற்றவாளிக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
போஸ்கோ சட்டம் பிரிவு 13 மற்றும் 14-ன் படி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது, குற்றம்.
இது இணைய தளம், கணிணி என எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும்.
போஸ்கோ சட்டம் பிரிவு 18ன் படி குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே, குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே தண்டனை வழங்கப்படும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21 படி குற்றம் இதற்கு 6 மாத சிறை தண்டனை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.
இதில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை என்ற ஷரத்தில் மாற்றம் கொண்டு வந்து மரண தண்டனை என்ற சட்டத்திருந்ததை அவசரச்சட்டமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
வயது வரம்பும் 18 ல் இருந்து 16 மற்றும் 12 என வகைப்படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
வட்டாட்சியர் (தாசில்தார் ) செல் எண்கள்*
*💠மழையால்பாதிக்கப்பட்டால்*
*பொது மக்கள் தங்களது பிரச்சினைகளை கூற*
*உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) செல் எண்கள்*
1 Fort-Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakkam94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488
2 திருவள்ளூர் மாவட்டம்
6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
12 Uthukottai 94450 00495
13 Poonamallee 94450 00496
3 காஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram
14 Kancheepuram 94450 00497
15 Uthiramerur 94450 00498
16 Sriperumbudur 94450 00499
17 Chengalpattu 94450 00500
18 Thirkkalukunram 94450 00501
19 Tambaram 94450 00502
20 Madurantakam 94450 00503
21 Cheyyur 94450 00504
4 வேலூர் மாவட்டம் Vellore
22 Arcot 94450 00505
23 Valaja 94450 00506
24 Arakkonam 94450 00507
25 Vellore 94450 00508
26 Gudiyatham 94450 00509
27 Katpadi 94450 00510
28 Tirupathur 94450 00511
29 Vaniyampadi 94450 00512
5 திருவண்ணாமலை மாவட்டம்
Thiruvannamalai
30 Cheyyar 94450 00513
31 Vandavasi 94450 00514
32 Arni 94450 00515
33 Thiruvannamalai 94450 00516
34 Polur 94450 00517
35 Chengam 94450 00518
6 விழுப்புரம் மாவட்டம் Villupuram
36 Kallakurichi 94450 00519
37 Sankarapuram 94450 00520
38 Thirukkoilur 94450 00521
39 Ulundurpettai 94450 00522
40 Thindivanam 94450 00523
41 Chengee 94450 00524
42 Villupuram 94450 00525
43 Vanur 94450 00526
7 கடலூர் மாவட்டம் Cuddalore
44 Chidambaram 94450 00527
45 Kattumannarkoil 94450 00528
46 Cuddalore 94450 00529
47 Panruti 94450 00530
48 Virudhachalam 94450 00531
49 Tittakudi 94450 00532
8 தருமபுரி மாவட்டம் Dharmapuri
50 Dharmapuri 94450 00533
51 Harur 94450 00534
52 Pappireddipatti 94450 00535
53 Pennagaram 94450 00536
54 Palacode 94450 00537
9 கிருஷ்னகிரி மாவட்டம் Krishnagiri
202 Krishnagiri 94450 00538
203 Uthangarai 94450 00539
204 Pochampalli 94450 00540
205 Hosur 94450 00541
206 Denkanikottai 94450 00542
10 நாமக்கல் மாவட்டம் Namakkal
64 Namakkal 94450 00543
65 Rasipuram 94450 00544
66 Thiruchengode 94450 00545
67 Paramathi-Velur 94450 00546
11 சேலம் மாவட்டம் Salem
55 Salem 94450 00547
56 Yercaud 94450 00548
57 Valaappadi 94450 00549
58 Attur 94450 00550
59 Gangavalli 94450 00551
60 Mettur 94450 00552
61 Omalur 94450 00553
62 Sankari 94450 00554
63 Edappadi 94450 00556
12 நீலகிரி மாவட்டம் The Nilgiris
84 Gudalur 94450 00557
85 Pandalur 94450 00558
86 Uthagamandalam 94450 00559
87 Kuntha 94450 00560
88 Kothagiri 94450 00561
89 Coonoor 94450 00562
13 ஈரோடு மாவட்டம் Erode
77 Erode 94450 00563
78 Perundurai 94450 00564
79 Dharapuram 94450 00565
80 Kangeyam 94450 00566
81 Bhavani 94450 00567
82 Gobichettiapalayam 94450 00568
83 Sathyamangalam 94450 00569
14 கோவை மாவட்டம் Coimbatore
68 Coimbatore(South) 94450 00570
69 Coimbatore(North) 94450 00571
70 Mettupalayam 94450 00572
71 Palladam 94450 00573
72 Thirupur 94450 00574
73 Avinashi 94450 00575
74 Pollachi 94450 00576
75 Valparai 94450 00577
76 Udumalaipettai 94450 00578
15 திண்டுக்கல் மாவட்டம் Dindigul
90 Dindigul 94450 00579
91 Natham 94450 00580
92 Nilakottai 94450 00581
93 Palani 94450 00582
94 Oddanchatram 94450 00583
95 Vedasedur 94450 00584
96 Kodaikanal 94450 00585
16 Madurai
102 Madurai(North) 94450 00586
103 Madurai(South) 94450 00587
104 Melur 94450 00588
105 Vadipatti 94450 00589
106 Usilampatti 94450 00590
107 Thirumangalam 94450 00591
108 Peraiyur 94450 00592
17 *தேனி மாவட்டம்Theni*
97 Periakulam 94450 00593
98 Theni 94450 00594
99 Andipatti 94450 00595
100 Uthamapalayam 94450 00596
101 Bodinayakanur 94450 00597
18 Karur 109 Karur 94450 00598
110 Aravakurichi 94450 00599
111 Kulithalai 94450 00600
112 Krishnarayapuram 94450 00601
19 திருச்சி மாவட்டம் Tiruchirapalli
119 Tiruchirappalli 94450 00602
120 Srirangam 94450 00603
121 Manapparai 94450 00604
122 Lalgudi 94450 00605
123 Manachanallur 94450 00606
124 Musiri 94450 00607
125 Thottiam 94450 00608
126 Thuraiyur 94450 00609
20 பெரம்பலூர் மாவட்டம் Perambalur
113 Perambalur 94450 00610
114 Veppanthattai 94450 00611
115 Kunnam 94450 00612
116 Ariyalur 94450 00613
117 Udayarpalayam 94450 00614
118 Senthurai 94450 00615
21 நாகப்பட்டம் மாவட்டம் Nagapattinam
127 Nagapattinam 94450 00616
128 Vedaranyam 94450 00617
129 Keelvelur 94450 00618
130 Thirukkuvalai 94450 00619
131 Mayiladuthurai 94450 00620
132 Tharangampadi 94450 00621
133 Seerkazhi 94450 00622
22 திருவாரூர் மாவட்டம் Tiruvarur
134 Mannargudi 94450 00623
135 Needamangalam 94450 00624
136 Thiruthuraipoondi 94450 00625
137 Thiruvarur 94450 00626
138 Nannilam 94450 00627
139 Kodavasal 94450 00628
140 Valangaiman 94450 00629
23 தஞ்சை மாவட்டம் Thanjavur
141 Thanjavur 94450 00630
142 Thiruvaiyaru 94450 00631
143 Orathanadu 94450 00632
144 Kumbakonam 94450 00633
145 Thiruvidaimaruthur 94450 00634
146 Papanasam 94450 00635
147 Pattukottai 94450 00636
148 Peravoorni 94450 00637
24 புதுக்கோட்டை மாவட்டம்
Pudukkottai
149 Kolathur 94450 00638
150 Elluppur 94450 00639
151 Alangudi 94450 00640
152 Pudukkottai 94450 00641
153 Gandarvakottai 94450 00642
154 Thirumayam 94450 00643
155 Aranthangi 94450 00644
156 Avudaiyarkoil 94450 00645
157 Manamelkudi 94450 00646
25 சிவகங்கை மாவட்டம் Sivagangai
158 Thirupathur 94450 00647
159 Karaikudi 94450 00648
160 Devakottai 94450 00649
161 Sivagangai 94450 00650
162 Manamadurai 94450 00651
163 Ilayankudi 94450 00652
26 ராமநாதபுரன் மாவட்டம்
Ramanathapuram
164 Ramanathapuram 94450 00653
165 Rameswaram 94450 00654
166 Thiruvadanai 94450 00655
167 Madukalathur 94450 00656
168 Kamudhi 94450 00657
169 Paramakudi 94450 00658
170 Kadaladi 94450 00659
27 விருதுநகர் மாவட்டம் Virudhunagar
171 Srivilliputhur 94450 00660
172 Rajapalayam 94450 00661
173 Sathur 94450 00662
174 Sivakasi 94450 00663
175 Aruppukkottai 94450 00664
176 Kaariapatti 94450 00665
177 Virudhunagar 94450 00667
178 Thiruchuli 94450 00668
28 திருநெல்வேலி மாவட்டம் Tirunelveli
187 Palayamkottai 94450 00669
188 Sakarankoil 94450 00670
189 Tirunelveli 94450 00671
190 Ambasamudram 94450 00672
191 Nanguneri 94450 00673
192 Radhapuram 94450 00674
193 Thenkasi 94450 00675
194 Shenkottai 94450 00676
195 Veerakeralampudur 94450 00677
196 Aaangulam 94450 00678
197 Sivagiri 94450 00679
29 தூத்துக்குடி மாவட்டம் Thoothukudi
179 Thoothukudi 94450 00680
180 Srivaikuntam 94450 00681
181 Thiruchendue 94450 00682
182 Sathankulam 94450 00683
183 Koilpatti 94450 00684
184 Ottapidaram 94450 00685
185 Vilathikulam 94450 00686
186 Ettaiyapuram 94450 00687
30 கன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari
198 Thovalai 94450 00688
199 Agastheeswaram 94450 00689
200 Kalkulam 94450 00690
201 Vilavancode 94450 00691...
கூட்டுறவு சங்க தகவல் அறியும் உரிமை சட்டம்
வணக்கம் நண்பர்களே...!
கூட்டுறவு சங்கங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(h) -ன் வரம்பிற்குள் வரவே வராது என்று தமிழ் நாட்டில் பல கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மனுதாரர்களுக்கு தகவல்களை தராமல் அலைக்கழிப்பு செய்து வந்த நிலையில், வழக்கு எண் : SA 5467/A/2019, நாள் : 08 -10 -2021 -ல், கூட்டுறவு சங்கங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் வரும் என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்கள் மூலம் சென்னை மற்றும் அனைத்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை, பல நீதிமன்றங்களின் தீர்ப்புகள், மான்பமை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, பொதுத் தகவல் அலுவலர்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கின்ற வகையில் பதில் அளிப்பது ஏற்புடையதல்ல என்று தமிழ் நாடு தகவல் ஆணையம் வன்மையாக கண்டித்து இனிவரும் காலங்களில் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 2(h) -ன் படி பொது அதிகார அமைப்பாகும் என்றும் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு கள ஆய்வு செய்ய அனுமதி மற்றும் கோப்புகளை வழங்க ஒரு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் உத்தரவு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/13s0oRl1ZXFd7UkkOLfJLGk3qcTo07Kr2/view?usp=drivesdk
இனிவரும் காலங்களில் நண்பர்கள் அனைவரும் இந்த ஒரே ஒரு தீர்ப்பை மட்டும் பயன்படுத்தி தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) -ன் கீழ் மனு செய்யும் போதே இந்த ஆணையின் உத்தரவு நகலை இணைத்து மனு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி...!
நீரிழிவு நோய்….
*_உலக நீரிழிவு நோய் தினம்_*
மக்களிடையே அதிகம் பேசப்படும் ஒரு நோய், நீரிழிவு நோய்….
முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், இந்த சர்க்கரை வியாதியைக் கட்டுப்பாட்டில் சம்பந்தப்பட்டவர் வைத்திருக்கமுடியும்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நோய் அறியப் பட்டிருந்தாலும் இதற்கான உறுதியான சிகிச்சை முறை 20-ம் நூற்றாண்டில் தான் கண்டறியப்பட்டது.
அதுவரை இந்நோய் ஆபத்தான நோயாகவே கண்டறியப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் தான் இன்சுலின் கண்டறியப்பட்டது.
இன்சுலினை கண்டுபிடித்த ‘பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்’ என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி “உலக நீரிழிவு நோய்” தினமாக 1991-ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி, கொண்டாடி வருகிறது.
ஐ.நா. சபை, நீலநிறத்திலான வளையம் அடையாளச் சின்னமாக வெளியிட்டு இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
சர்வதேச ரீதியில் இந்த நீரிழிவு நோய் குறித்த பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.
வயது வித்தியாசம், இன பேதம் என தயவு தாட்சண்யம் பார்க்காமல் இன்றைய நாளில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு தருகின்றன.
வானொலி, தொலைக்காட்சி என தொடர்பு சாதனங்கள் இதற்கு ஒத்துழைப்பு தருகின்றன.
இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
உலக அளவில் இந்தியா தான் நீரிழிவு நோயில் முதல் இடத்தில் உள்ளது. பொதுவாக, நீரிழிவு நோய் என்பதை பற்றிய விளக்கங்களை நோயாளிகள் மட்டுமில்லாது அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பெற்றோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் 80% பிள்ளைகளுக்கும் இந்த நோய் வரும் என்பது ஆய்வு கருத்து.
மரபணு குறைபாடு, சுற்றுப்புறம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் நீரிழிவு நோய்க்கு எவ்வித தடுப்பும் உபயோகிக்கப்படாது.
மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும் மனிதனின் உடலை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குவது, நீரிழிவு நோய்தான்.
ஆராய்ச்சிகள் பல செய்யப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் புதுபுது தகவல்கள் கூறப்படுவதால், நாம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த என்னதான் வழிமுறைகளை எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
🌷🌷
போக்ஸ்சோ சட்டம்
18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? போக்ஸ்சோ சட்டம் சொல்வது என்ன?
போக்ஸ்சோ சட்டம்:
இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012(The protection of children from sexual offense(pocso) Act 2012).
இந்த சட்டம் சுருக்கமாக போக்ஸ்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10 தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14 தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
சட்டத்தின் பொது அம்சங்கள்:
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.
இச்சட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும்.
இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.
மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
குழந்தையின் நலனே பிரதானம்:
வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும்.
அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று இச்சட்டம் கூறுகிறது. உதாரணமாக, "பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும்.
அப்போது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது."இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்/உற்றோரின் முன்னிலையில் செய்யப் பட வேண்டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக் கூடாது.குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது.
இதுவரை போக்ஸ்சோ சட்டத்தில், குற்றவியல் ஆவணக் காப்பகத் துறையின் தகவலின்படி 2016 ஆம் ஆண்டு 1567 வழக்குகளும், 2015 ஆம் ஆண்டு 1544 வழக்குகளும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளன.
பிரிவு 1: எல்லை:
1. இச்சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012(The protection of children from sexual offense(posco) Act 2012) என்று அழைக்கப்படுகிறது.
2. இச்சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
பிரிவு 2:
சில பதங்களின் வரையறை:
ஊடுருவக்ககூடிய பாலியல் தாக்குதல்(pentrative sexual assult):
ஒரு குழந்தையின் பெண்ணுறுப்புகளை பலவந்தமாக புண்ணாக்குதல், காயப்படுத்துதல், புணர்தல், உடல் உறவு கொள்ளுதல், கூர்மையான பொருட்களை பிறப்பு உறுப்பில் சொருகுதல் இதில் அடங்கும்.
இந்த குற்றத்திற்கு ஏழு வருடம் சிறை தண்டனை, அபராதம் அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
மோசமாக ஊடுருவக்ககூடிய பாலியல் தாக்குதல்( aggravated pentrative sexual assult):
ஒரு காவல் துறை அதிகாரி, பொதுத்துறை ஊழியர், ஆயுதப்படை உறுப்பினர் ஆகியோர் குழந்தையின் மீது பாலியல் தாக்குதல் செய்தல் அல்லது குழந்தையின் நெருங்கிய உறவினர் பாலியல் தாக்குதல் செய்தல் முதலிய குற்றத்திற்கு பத்து வருட சிறை விதிக்கப்படும்.
அத்தகைய பாலியல் தாக்குதல் விளைவாக குழந்தை இறந்து விடும் பச்சத்தில் இருபது வருடங்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
மோசமாக பாலியல் தாக்குதல்(aggravated sexual assault) :
குழந்தைகளின் உடல் உறுப்புகளான மார்பு, ஆண்குறி, பிறப்பு உறுப்பு, பிற உறுப்புகளை ஆரம்ப கால பாலியல் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே தூண்டுதல், தீண்டுதல், காயம் விளைவித்தல் இதில் அடங்கும்.
குழந்தைகளை ஆபாச காட்சிகளுக்கு பயன்படுத்தல்(ponography purpose):
18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வலுக்கட்டாயமாக, குற்ற உணர்வு எதுவும் இன்றி எவர் ஒருவர், பிரித்தறிய முடியாத புகைப்படம், வீடியோ, டிஜிட்டல் அல்லது கணினி உருவாக்கிய படம் உள்ளிட்ட ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட பாலியல் வெளிப்படையான காட்சி சித்தரிப்புகளுக்கு பயன்படுத்துகிறாரோ அவர் இந்த சட்டத்தின் கீழ் தண்டனை பெறுவார்.
ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துதல்:
அதிகபட்சம்: 5 ஆண்டுகள்
குறைந்தபட்சம்: 5 ஆண்டுகள்
ஊடுருவக்கூடிய பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஆபாச நோக்கங்களுக்காக:
குழந்தையைப் பயன்படுத்துதல்
குறைந்தபட்சம்: 10 ஆண்டுகள்
அதிகபட்சம்: ஆயுள் தண்டனை
குறைந்தபட்சம்: 10 ஆண்டுகள் (16 வயதுக்குக் குறைவான குழந்தையின் விஷயத்தில்:
அதிகபட்சம்: ஆயுள் தண்டனை
மோசமான ஊடுருவக்கூடிய பாலியல் தாக்குதலின் விளைவாக குழந்தையை ஆபாச நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல்:
அதிக பட்சம்: ஆயுள் தண்டனை
குறைந்தபட்சம்: 20 ஆண்டுகள்
அதிகபட்சம்: ஆயுள் தண்டனை, அல்லது மரணம்.
பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துதல்:
குறைந்தபட்சம்: ஆறு ஆண்டுகள்
அதிகபட்சம்: எட்டு ஆண்டுகள்
குறைந்தபட்சம்: மூன்று ஆண்டுகள்
அதிகபட்சம்: ஐந்து ஆண்டுகள்
மோசமான பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துதல்:
குறைந்தபட்சம்: எட்டு ஆண்டுகள்
அதிகபட்சம்: 10 ஆண்டுகள்
குறைந்தபட்சம்: ஐந்து ஆண்டுகள்
அதிகபட்சம்: ஏழு ஆண்டுகள்
குறிப்பு: எந்தவொரு பாலியல் வன்கொடுமையும் விளைவிக்கும் ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துவதற்கான தண்டனை, குழந்தையை ஆபாச நோக்கங்களுக்காகப் பயன்படுத்த குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகும்.
Use of child for pornographic purposes
· Maximum: 5 years
· Minimum: 5 years
Use of child for pornographic purposes resulting in penetrative sexual assault
· Minimum: 10 years
· Maximum: life imprisonment
· Minimum: 10 years (in case of child below 16 years: 20 years)
· Maximum: life imprisonment
Use of child for pornographic purposes resulting in aggravated penetrative sexual assault
· Life imprisonment
· Minimum: 20 years
· Maximum: life imprisonment, or death.
Use of child for pornographic purposes resulting in sexual assault
· Minimum: Six years
· Maximum: Eight years
· Minimum: Three years
· Maximum: Five years
Use of child for pornographic purposes resulting in aggravated sexual assault
· Minimum: Eight years
· Maximum: 10 years
· Minimum: Five years
· Maximum: Seven years
Note: Punishment for using child for pornographic purposes resulting in any form of sexual assault is in addition to minimum five years for use of child for pornographic propose...
உயில் நடைமுறைகள்
*பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
-
*#பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013* *#பாலியல்_வன்முறை_தடுப்பு* இந்தியாவில் பணியிடத்தில் பாலியல...