18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? போக்ஸ்சோ சட்டம் சொல்வது என்ன?
போக்ஸ்சோ சட்டம்:
இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012(The protection of children from sexual offense(pocso) Act 2012).
இந்த சட்டம் சுருக்கமாக போக்ஸ்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10 தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14 தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
சட்டத்தின் பொது அம்சங்கள்:
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.
இச்சட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும்.
இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.
மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
குழந்தையின் நலனே பிரதானம்:
வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும்.
அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று இச்சட்டம் கூறுகிறது. உதாரணமாக, "பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும்.
அப்போது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது."இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்/உற்றோரின் முன்னிலையில் செய்யப் பட வேண்டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக் கூடாது.குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது.
இதுவரை போக்ஸ்சோ சட்டத்தில், குற்றவியல் ஆவணக் காப்பகத் துறையின் தகவலின்படி 2016 ஆம் ஆண்டு 1567 வழக்குகளும், 2015 ஆம் ஆண்டு 1544 வழக்குகளும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளன.
பிரிவு 1: எல்லை:
1. இச்சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012(The protection of children from sexual offense(posco) Act 2012) என்று அழைக்கப்படுகிறது.
2. இச்சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
பிரிவு 2:
சில பதங்களின் வரையறை:
ஊடுருவக்ககூடிய பாலியல் தாக்குதல்(pentrative sexual assult):
ஒரு குழந்தையின் பெண்ணுறுப்புகளை பலவந்தமாக புண்ணாக்குதல், காயப்படுத்துதல், புணர்தல், உடல் உறவு கொள்ளுதல், கூர்மையான பொருட்களை பிறப்பு உறுப்பில் சொருகுதல் இதில் அடங்கும்.
இந்த குற்றத்திற்கு ஏழு வருடம் சிறை தண்டனை, அபராதம் அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
மோசமாக ஊடுருவக்ககூடிய பாலியல் தாக்குதல்( aggravated pentrative sexual assult):
ஒரு காவல் துறை அதிகாரி, பொதுத்துறை ஊழியர், ஆயுதப்படை உறுப்பினர் ஆகியோர் குழந்தையின் மீது பாலியல் தாக்குதல் செய்தல் அல்லது குழந்தையின் நெருங்கிய உறவினர் பாலியல் தாக்குதல் செய்தல் முதலிய குற்றத்திற்கு பத்து வருட சிறை விதிக்கப்படும்.
அத்தகைய பாலியல் தாக்குதல் விளைவாக குழந்தை இறந்து விடும் பச்சத்தில் இருபது வருடங்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
மோசமாக பாலியல் தாக்குதல்(aggravated sexual assault) :
குழந்தைகளின் உடல் உறுப்புகளான மார்பு, ஆண்குறி, பிறப்பு உறுப்பு, பிற உறுப்புகளை ஆரம்ப கால பாலியல் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே தூண்டுதல், தீண்டுதல், காயம் விளைவித்தல் இதில் அடங்கும்.
குழந்தைகளை ஆபாச காட்சிகளுக்கு பயன்படுத்தல்(ponography purpose):
18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வலுக்கட்டாயமாக, குற்ற உணர்வு எதுவும் இன்றி எவர் ஒருவர், பிரித்தறிய முடியாத புகைப்படம், வீடியோ, டிஜிட்டல் அல்லது கணினி உருவாக்கிய படம் உள்ளிட்ட ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட பாலியல் வெளிப்படையான காட்சி சித்தரிப்புகளுக்கு பயன்படுத்துகிறாரோ அவர் இந்த சட்டத்தின் கீழ் தண்டனை பெறுவார்.
ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துதல்:
அதிகபட்சம்: 5 ஆண்டுகள்
குறைந்தபட்சம்: 5 ஆண்டுகள்
ஊடுருவக்கூடிய பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஆபாச நோக்கங்களுக்காக:
குழந்தையைப் பயன்படுத்துதல்
குறைந்தபட்சம்: 10 ஆண்டுகள்
அதிகபட்சம்: ஆயுள் தண்டனை
குறைந்தபட்சம்: 10 ஆண்டுகள் (16 வயதுக்குக் குறைவான குழந்தையின் விஷயத்தில்:
அதிகபட்சம்: ஆயுள் தண்டனை
மோசமான ஊடுருவக்கூடிய பாலியல் தாக்குதலின் விளைவாக குழந்தையை ஆபாச நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல்:
அதிக பட்சம்: ஆயுள் தண்டனை
குறைந்தபட்சம்: 20 ஆண்டுகள்
அதிகபட்சம்: ஆயுள் தண்டனை, அல்லது மரணம்.
பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துதல்:
குறைந்தபட்சம்: ஆறு ஆண்டுகள்
அதிகபட்சம்: எட்டு ஆண்டுகள்
குறைந்தபட்சம்: மூன்று ஆண்டுகள்
அதிகபட்சம்: ஐந்து ஆண்டுகள்
மோசமான பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துதல்:
குறைந்தபட்சம்: எட்டு ஆண்டுகள்
அதிகபட்சம்: 10 ஆண்டுகள்
குறைந்தபட்சம்: ஐந்து ஆண்டுகள்
அதிகபட்சம்: ஏழு ஆண்டுகள்
குறிப்பு: எந்தவொரு பாலியல் வன்கொடுமையும் விளைவிக்கும் ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துவதற்கான தண்டனை, குழந்தையை ஆபாச நோக்கங்களுக்காகப் பயன்படுத்த குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகும்.
Use of child for pornographic purposes
· Maximum: 5 years
· Minimum: 5 years
Use of child for pornographic purposes resulting in penetrative sexual assault
· Minimum: 10 years
· Maximum: life imprisonment
· Minimum: 10 years (in case of child below 16 years: 20 years)
· Maximum: life imprisonment
Use of child for pornographic purposes resulting in aggravated penetrative sexual assault
· Life imprisonment
· Minimum: 20 years
· Maximum: life imprisonment, or death.
Use of child for pornographic purposes resulting in sexual assault
· Minimum: Six years
· Maximum: Eight years
· Minimum: Three years
· Maximum: Five years
Use of child for pornographic purposes resulting in aggravated sexual assault
· Minimum: Eight years
· Maximum: 10 years
· Minimum: Five years
· Maximum: Seven years
Note: Punishment for using child for pornographic purposes resulting in any form of sexual assault is in addition to minimum five years for use of child for pornographic propose...
No comments:
Post a Comment