வணக்கம் நண்பர்களே...!
கூட்டுறவு சங்கங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(h) -ன் வரம்பிற்குள் வரவே வராது என்று தமிழ் நாட்டில் பல கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மனுதாரர்களுக்கு தகவல்களை தராமல் அலைக்கழிப்பு செய்து வந்த நிலையில், வழக்கு எண் : SA 5467/A/2019, நாள் : 08 -10 -2021 -ல், கூட்டுறவு சங்கங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் வரும் என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்கள் மூலம் சென்னை மற்றும் அனைத்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை, பல நீதிமன்றங்களின் தீர்ப்புகள், மான்பமை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, பொதுத் தகவல் அலுவலர்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கின்ற வகையில் பதில் அளிப்பது ஏற்புடையதல்ல என்று தமிழ் நாடு தகவல் ஆணையம் வன்மையாக கண்டித்து இனிவரும் காலங்களில் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 2(h) -ன் படி பொது அதிகார அமைப்பாகும் என்றும் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு கள ஆய்வு செய்ய அனுமதி மற்றும் கோப்புகளை வழங்க ஒரு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் உத்தரவு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/13s0oRl1ZXFd7UkkOLfJLGk3qcTo07Kr2/view?usp=drivesdk
இனிவரும் காலங்களில் நண்பர்கள் அனைவரும் இந்த ஒரே ஒரு தீர்ப்பை மட்டும் பயன்படுத்தி தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) -ன் கீழ் மனு செய்யும் போதே இந்த ஆணையின் உத்தரவு நகலை இணைத்து மனு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி...!
No comments:
Post a Comment