பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013

 *#பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013*

*#பாலியல்_வன்முறை_தடுப்பு*

இந்தியாவில் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013 நிறைவேற்றப்பட்டது.

*#பின்னணி*

1997-ம் ஆண்டில் விசாகா வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றமானது பணியிடத்தில் பாலியல் வன்முறை என்பது மனித உரிமைமீறல் நடவடிக்கையாகும் என்பதனை முதல் முறையாக ஏற்றுக் கொண்டது. 

இவ்வழக்கில் தனது தீர்ப்பினை அளிக்கும்போது பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் அளித்தது.

இதுதொடர்பான சட்டம் இயற்றப்படும் வரை இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் இந்தவழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப் படுவதனைக் கட்டாயம் ஆக்கியது. இதனடிப்படையில்தான் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சூழல் எழுந்தது.

*#சட்டத்தின்_அம்சங்கள்*

விசாகா வழக்கில் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலானது, நிறுவனம் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்துவதாக இருந்தது. ஆனால், பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டமானது , அலுவலகங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளர்கள், தற்காலிக அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலி அல்லது பயிற்சி அல்லது அப்ரெண்டிஸ் அடிப்படையில் வேலை செய்பவர்கள், ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ பணிபுரிபவர், தன்னார்வ அடிப்படையில் பணிபுரிபவர் என அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் பணியிடத்தில் பாதுகாப்பு அளிப்பதாக உள்ளது.

இச்சட்டத்தின்படி, 10 பேருக்கு மேல் பெண்களை பணியிலமர்த்தி உள்ள எந்தவொரு நிறுவனமும் அலுவலக அளவிலான புகார் குழு ஒன்றை அமைத்திட வேண்டும். இக்குழுவின் தலைவராக அந்நிறுவனத்தில் உயர்நிலை பொறுப்பில் பணிபுரியும் பெண் ஒருவர் இருக்க வேண்டும். 

பெண்களின் நலனில் அக்கறையோடு அல்லது சமூக செயல்பாட்டில் அக்கறையோடு அல்லது சட்ட அறிவு கொண்ட சக பெண் ஊழியர் இருவர் உறுப்பினராக இருப்பதுடன், பெண்களின் மேம்பாட்டில் ஈடுபடும் அல்லது பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்குகளில் தலையீடு செய்யும் அனுபவம் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவரும் இக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். 

பணியிடத்தில் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த புகாரினை நிறுவன அளவிலான அல்லது இட அளவிலான புகார் குழுவிடம் அளித்திடலாம். 

பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்து 3 மாதங்களில் எழுத்துப்பூர்வமான புகாரினை அளித்திட வேண்டும். 

உடல் அல்லது உளரீதியான பாதிப்பின் காரணமாக இறப்பு அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணால் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க இயலவில்லை எனில் அவளது சட்டப்பூர்வமான வாக்ச்சுதாரரோ அல்லது வேறு எவரேனுமோ புகாரினை பதிவு செய்திடலாம். 

பாதிப்பிற்காளான பெண் விரும்பினால் புகார் குழுவானது விசாரணை மேற்கொள்வதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சியினை மேற்கொள்ளலாம். பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட தீர்வு அமலாகாதபோது புகார் குழு தனது விசாரணையைத் துவக்கிடலாம். 

புகாரினை விசாரித்திடும் இக்குழுவானது, குற்றம் உண்மையெனில் ஊழியரின் தவறுக்கேற்ப எச்சரிப்பது அல்லது அலுவலகம் சார்ந்த நடவடிக்கை மேற்கொள்வது அல்லது காவல்துறையிடம் வழக்கை ஒப்படைப்பது என்ற நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். 

விசாரணை நடைபெறும் காலத்தில் பாதிக்கப்பட்ட பெண் எழுத்துமூலம் கோரினால் அப்பெண்ணையோ அல்லது குற்றம்சாட்டப்பட்டவரையோ இடமாற்றம் செய்திடலாம். 

ஏற்கனவே உள்ள விடுப்புடன் 3 மாத காலம் வரையிலான சிறப்பு விடுப்பு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அளித்திடலாம். பொதுவாக விசாரணை என்பது 90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். 

விசாரணை நடத்தப்பட்டு முடிந்தவுடன் 10 நாட்களுக்குள் புகார் குழுவானது தனது அறிக்கையை அளித்திட வேண்டும். 

இந்த அறிக்கையின் அடிப்படையில் 60 நாட்களுக்குள் முதலாளி அல்லது நிறுவனர் அல்லது மாவட்ட அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து புகார் குழுவிற்கும் தெரிவிக்க வேண்டும்.

*#எவை_பாலியல்_வன்முறை*

விசாகா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலில் பாலியல் வன்முறை என்பது வரையறை செய்யப்பட்டிருந்தது. இதனை ஒட்டியே, இச் சட்டத்திலும் பாலியல் வன்முறை என்பது வரையறை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, 

பாலியல் துன்புறுத்தல் என்பதில் தொடுதல் அல்லது தொட முயற்சித்தல், பாலியல் ரீதியான விஷயங்களைக் கோருதல் அல்லது வலியுறுத்தல், பாலியல் தொனியில் பேசுதல், ஆபாச படங்களைக் காட்டுதல், இதர விரும்பத்தகாத பாலியல் தன்மையுடன் கூடிய உடல் ரீதியான அல்லது வார்த்தைகள், சைகைகள் கொண்ட நடத்தை போன்றவை அடங்கும்.

*#முதலாளி_அல்லது_நிர்வாகத்தின்_கடமைகள்*

பெண்கள் வேலை செய்யும் இடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்வதுடன் வேலையிடத்திற்கு வரும் நபர்களிடமிருந்தும் பாதுகாப்பளிப்பது முதலாளி அல்லது நிர்வாகத்தின் கடமையாகும். 

மேலும், அந்நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள புகார் குழு மற்றும் தண்டனை குறித்த விவரங்களை அனைவரின் பார்வைக்கும் உரிய இடத்தில் காட்சிப் படுத்திட வேண்டும். இது மட்டுமின்றி, இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கூட்டங்களை நடத்திட வேண்டும். புகார்க் குழுவின் செயல்பாட்டிற்கு உகந்த சூழலை உருவாக்கிட வேண்டும்

*#அபராதம்*

இச்சட்டம் கறாராக அமலாக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதால்தான் புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ அல்லது சட்டத்தின் விதிமுறைகளை மீறினாலோ ரூ.50000 வரை அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழி வகை செய்துள்ளது.

தகவல்

#வழக்கறிஞர்_D_தங்கத்துரை@#ஹரி**


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்நீலகிரி மாவட்டம்

குற்றம் செய்யும் குழந்தைகளுக்கு* *தண்டனைகள் உண்டா

*தினம் ஒரு சட்டம் கற்றுக் கொள்ளுங்கள் அது உங்களை தலை நிமிர்ந்து வாழ செய்யும்..*

*குற்றம் செய்யும் குழந்தைகளுக்கு* *தண்டனைகள் உண்டா*

ஒரு குற்றம் நடைபெற்று அந்த குற்றத்தின் விசாரணையில்  ஒரு குழந்தை தான் அந்த குற்றச் செயலை செய்தது என்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி அந்த குழந்தைக்கு தண்டனை வழங்க முடியுமா அந்த குழந்தைக்கு தண்டனை உண்டா என்ற கேள்விக்கு இந்த கட்டுரையில் பதிலை தெரிந்து கொள்வோம்.

குழந்தைகள் செய்யும் குற்றம் குற்றமாக கருதப்படுமா?

குழந்தைகள் குற்றம் செய்தால் குற்றவாளியா?

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 82 & 83

குழந்தைகள் செய்யும் குற்றம் குற்றமாக கருதப்படுமா?

இந்திய தண்டனைச் சட்டத்தின் படி 7 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எவ்விதக் குற்றத்திற்கும் ஆளாவதில்லை. ஏனெனில் அவ்வயதுடைய குழந்தைகள் குற்றச் செயல் செய்ய இயலாத சூழலில் இருப்பதாக சட்டம் அனுமானிக்கிறது. அதாவது ஒரு குற்றம் செய்யப்பட்டது என்றால் அந்த குற்றத்திற்கு பின்னால் இருக்கும் நோக்கத்தை தான் குற்றமாக சட்டம் கூறுகிறது இதை குற்றச்செயல் நோக்கம் இயலாமை எனப்படுகிறது.

*குழந்தைகள் குற்றம் செய்தால்* *குற்றவாளியா*

 7 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குற்றம் செய்வதை குற்றம் என்று கொள்ள முடியாது என்று இந்திய தண்டனை சட்டம் பிரிவு 82 மற்றும் 83 சட்டம் விளக்குகிறது. அதை தெளிவாக தெரிந்து கொள்வோம்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 82 மற்றும் பிரிவு 83 பற்றி விளக்கமாக தெரிந்து கொண்டால் தான் எந்த வயதுடைய குழந்தைகளுக்கு தண்டனை வழங்க முடியும் குழந்தைகள் செய்த குற்றத்திற்கு தண்டனை உண்டா என்பதை விரிவாக தெரிந்துகொள்ள முடியும்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 82.

7 வயதுக்குட்பட்ட குழந்தை எந்த காரியத்தை செய்தாலும் அது குற்றம் ஆகாது.

 ஏழு வயதுக்குட்பட்ட குழந்தையின் செயல்.-ஏழு வயதுக்குட்பட்ட குழந்தையால் எதுவும் குற்றம் இல்லை.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 83.

ஏழு வயதுக்கு மேற்பட்ட மற்றும் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முதிர்ச்சியற்ற புரிதல். ஏழு வயதுக்கு மேற்பட்ட மற்றும் பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தையால், அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் நடத்தையின் தன்மை மற்றும் விளைவுகளைத் தீர்மானிக்க போதுமான புரிதல் முதிர்ச்சியை அடையாத குழந்தையால் எதுவும் குற்றமாகாது.

ஒரு செய்கையை செய்யும் பொழுது தனது நடத்தையின் தன்மையையும் அதன் விளைவுகளையும் ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கு போதுமான மனப்பக்குவம் அடைந்திராத 7 வயதிற்கு மேற்பட்ட ஆனால் 12 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தையின் செயல் எதுவும் ஒரு குற்றம் ஆகாது. இங்கு செயலின் தன்மை மற்றும் விளைவை அறிந்து கொள்ளும் பக்குவம் அடைந்திருப்பின் குற்றப் பொறுப்பு உண்டு.

12 வயதிற்கு மேல் குற்றப் பொறுப்பு உண்டு.


கூடலூர் நுகர்வோர் மனிதவள

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

*பாகப்பிரிவினை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியனவ*

 *பாகப்பிரிவினை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியனவ*

*தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை*.

அதாவது, குடும்பச் சொத்து உடன்படிக்கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதமாகப் பிரித்துக் கொள்ள முடியும்.

பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப்படாதபட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப்பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.

ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப்பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், 

அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம். பாக பிரிவினை பதிந்திருந்தால் பின்னால் பிரச்சினை ஏற்படாது.

தான பத்திரம்..!

சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்துகொள்ளும்போது இந்த முறையைக் கையாளலாம்.

ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூலம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது.

அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் முத்திரைத்தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம்.

ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும். தானம் கொடுப்பதை, தானம் வாங்குபவர் ஏற்று கொண்டு, அந்த இடத்தின் சுவாதீனத்தை, உடனடியாக அடைய வேண்டும்.

அந்த இடத்தின் மீதான வருவாய் ஆவணங்கள், பிற ஆவணங்களை உடனடியாக தானம் வாங்குபவர் தனது பெயருக்கு மாற்ற வேண்டும். தானம் ரத்து செய்ய இயலாத ஒன்று.

உயில்..!

இது விருப்ப ஆவணம்; சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரும் முறைதான் உயில் எனப்படும். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்குப் பிறகு, 

தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல்லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக தனது சுயநினைவோடு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.

தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாய மில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியும். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து சேர்ந்துவிடும்.

மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படுமாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

வாரிசுச் சான்றிதழ்..!

வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். 

ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்திலோ வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம்.

ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஒருவர் இரு திருமணம் செய்திருந்தால், அவரது இரு மனைவி குழந்தைகள், முதல் மனைவி ஆகியோர் வாரிசுகள் ஆவர்.

பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது. 

நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரியவரும்போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்”

பொதுவாக, சொத்து பாகப்பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்ளலாம்

*தனியொருவரே ஒரு சொத்தை வைத்திருந்தாலோ, வாங்கியிருந்தாலோ அந்த சொத்துக்கு பாகப்பிரிவினை என்னும் பிரச்சனை இல்லை. 

கூட்டாக வாங்கியிருந்தால் (இரண்டுபேருக்கு மேல் சேர்ந்து வாங்கினால்) அதை ஒரு காலக்கட்டத்தில் பாகப் பிரிவினை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படும். அல்லது நமது பெற்றோர்கள், முன்னோர்கள் வாங்கிய சொத்தாக இருந்தால் அவர்களின் காலத்துக்குப்பின் அவரின் வாரிசுகள் அந்த சொத்தை பங்கு பிரித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்*.

சொத்தில் பங்கு இருப்பவர்கள், அந்த சொத்தில் எவ்வளவு பங்கு ஒவ்வொருவருக்கும் சேர வேண்டும் என கணக்கிட்டு, சுமூகமாக அவர்களாகவே பாகப்பிரிவினையை செய்து, அதை ஒரு பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாய நிலங்களை பாகம் செய்து கொள்ளும்போது, வாய்மொழியாகவே பேசி அவரவர் பங்கு நிலத்தை பாகமாகப் பிரித்துக் கொள்ளலாம். 

நம் குடும்ப பெரியவர்கள் முன்னிலையிலும் பேசிக் கொள்ளலாம். அதை பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு பங்குபிரித்தபடியே பட்டாவை மாற்றிக் கொண்டால் போதுமானது. 

பாகப்பிரிவினை என்பது “சொத்து மாறுதல்” என்ற கணக்கில் வராது. எனவே இந்திய பதிவுச் சட்டப்படி அதை பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இந்திய சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது. 

இருந்தபோதிலும், நாம் அவரவர் ஞாபகத்துக்காக அதை ஒரு சீட்டில் (பேப்பரில் எழுதி) அதில் சம்மந்தப்பட்டவர்கள் கையெழுத்தையும் பெற்று ஒவ்வொருவரும் ஒரு காப்பியை வைத்துக் கொள்ளலாம். 

இதையே “வாய்மொழி பாகப் பிரிவினை” என்றும் “கூர்சீட்டு” (அதாவது கூர் போட்டுக் கொண்ட கணக்குச் சீட்டு) என்றும் சொல்கிறோம். அதை பத்திரப் பதிவு அலுலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால், அந்த கூர்சீட்டில் இன்றைய தேதியில் சொத்துக்களை பிரித்துக் கொண்டதாக எழுதிக் கொள்ளமாட்டோம். 

அதற்குப்பதிலாக, பங்குதாரர்கள் ஏற்கனவே வாய்மொழியாக சொத்தை முன்னரே பிரித்துக் கொண்டதாகவும், அதை இன்று ஒரு ஞாபகச் சீட்டாக எழுதிக் கொண்டோம் என்று தான் அதில் எழுதி இருக்க வேண்டும். 

ஆனால், இன்றே சொத்துக்களை பாகமாகப் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளோம் என்று எழுதி இருந்தால், அது சொத்தை மீது பரிமாற்றம் நடைபெற்றதாகக் கருதி, அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயாமும் ஏற்பட்டுவிடும்.

மிக அதிகமானவர்கள் இந்த தவறை செய்திருக்கிறார்கள். பத்திரம் எழுதும் அனுபவம் இல்லாதவர்கள், எதையோ எழுதி வைத்து விடுகிறார்கள். பிரச்சனை என்று கோர்ட்டுக்குப் போகும்போது இத்தகைய பத்திரம் சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்ற சட்டப் பிரச்சனையே வந்துவிடுகிறது. எனவே சட்டம் தெரிந்தவர், அல்லது வக்கீல் மூலமாக இதை எழுதிக் கொள்வது நல்லது.

ஆனாலும், நகரங்களில் உள்ள சொத்துக்களை பிரித்துக் கொள்ளும்போது, பாகப் பத்திரம் எழுதி கண்டிப்பாக பதிவு செய்வதே சாலச்சிறந்தது. இங்கு பட்டா மாற்றிக் கொள்ள ஒரு பத்திரம் தேவைப்படும். மேலும், சொத்து பாகம் ஆகிவிட்டது என்பதற்கான சாட்சியம் (ஆதாரம்) இந்தப் பதிவான பாகப் பிரிவினைப் பத்திரம் தான். இல்லையென்றால், சொத்து இன்னும் பாகம் ஆகவில்லை என்றே கருத வேண்டியிருக்கும்


கூடலூர் நுகர்வோர் மனிதவள

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 

நீலகிரி மாவட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை கட்டமைப்பு (அமைப்பு)*..... *(TN GOVT REVENUE DEPARTMENT)* .....

 *தமிழ்நாடு வருவாய்த்துறை கட்டமைப்பு (அமைப்பு)*..... *(TN GOVT  REVENUE DEPARTMENT)* .....


தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த்துறையின் கீழான ஆட்சி அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அவருடைய வழிகாட்டுதலின் கீழ் இயங்குகின்றன. 


இந்த மாவட்ட வருவாய்த்துறை அமைப்பில் வருவாய் கிராமம், உள்வட்டம், வருவாய் வட்டம் மற்றும் மாவட்டம் வரை கீழ்கண்ட வருவாய்த் துறை அலுவலர்கள் நிர்வகிக்கின்றனர்.


இந்த வருவாய்த்துறையின் அலுவலர்களின்   வழியாகத்தான் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கிராம நிர்வாக அலுவலர்,


 வருவாய் ஆய்வாளர்,


வட்டாட்சியர்,


 மண்டல துணை வட்டாட்சியர்,


வருவாய்க் கோட்ட அதிகாரி,


மாவட்ட வருவாய் அலுவலர்,


 மாவட்ட ஆட்சித் தலைவர்.


கிராம நிர்வாக அலுவலா் அலுவலகம்... (VILLAGE ADMINISTRATIVE OFFICE)


தமிழ்நாட்டிலிருக்கும் மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேருராட்சிகள், ஊராட்சிகள் என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் வருவாய்த்துறையால் குறிப்பிட்டமக்கள் தொகைக்கு ஏற்ப வருவாய்க் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.


மாநகராட்சிகள், மக்கள்தொகை அதிகமுடைய நகராட்சிகள் போன்றவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.


 இதுபோல் மக்கள்தொகை குறைவான சில ஊராட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டும் வருவாய்க் கிராமம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 16,564 வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் என்பவர் இருக்கிறார். இவருக்குக் கீழாக கிராம உதவியாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.


கிராம நிர்வாக அலுவலகத்தின் பணிகள்....


கிராமக் கணக்குகளைப் பராமரித்தல்,

வருவாய்க் கிராம அளவிலான பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்யப்படுகிறது. பின்பு இதற்கான சான்றிதழ்களைச் சம்பந்தப்பட்டவர்கள் கோரும் போது அதற்கான சான்றிதழ்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்படுகின்றன.


வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற தேவைகளுக்கான சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்றவைகளைக் கோரி விண்ணப்பிக்கும் போது அதற்கான சான்றிதழ்களை வட்டாட்சியர் வழங்குவதற்காக விண்ணப்பதாரரிடம் விசாரணை மேற்கொண்டு பரிந்துரை செய்யப்படுகின்றன.


வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் நிலங்களுக்கு வரி வசூலித்தல் அவற்றிற்கான நில உடமைச்சான்று, நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர் குறித்த விபரங்களுடைய பட்டா மற்றும் அடங்கல் சான்றுகள் வழங்க வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யும் பணிகள் செய்யப்படுகின்றன.


வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற முதியோர் , விதவைகள் போன்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்க விசாரணை மேற்கொண்டு வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றன.


வருவாய்க் கிராம அளவிலான அனைத்து வருவாய்த்துறைப் பணிகளையும் செய்து வருகின்றனர். கிராமத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை அரசுக்கு தொிவித்தல் இவா் மூலமே நடைபெறுகிறது.நில வாி , கடன்கள் , அபிவிருத்தி வாி மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.


பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவுகள் சங்கங்களிலிருந்து கடன்கள் பெற சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்கள் வழங்குதல். தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின்போது உடனுக்குடன் மேல் அலுவலா்களுக்கு அறிக்கை அனுப்புதல் மற்றும் இயற்கை இன்னல்களால் ஏற்பட்ட சேதத்தை வருவாய் ஆய்வாளர் மதிப்பீடு செய்யும் போது உடனிருத்தல்.


கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல் மற்றும் விசாரணைக்கு உதவிபுாிதல்.காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள் போன்ற தொற்று நோய்கள் பற்றி அறிக்கை அனுப்புதல்.


இருப்புப்பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமாித்தல்.கட்டிடங்கள், மரங்கள், மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.புதையல்கள் பற்றி மேல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தல்.


முதியோர் ஓய்வுதியம் வழங்குவது குறித்தான பனிகளைச் செய்தல்.பொதுச் சொத்துக்கள் பற்றி பதிவேட்டைப் பராமரித்தல்.முதியோர் ஓய்வுதியப் பதிவேட்டை பராமரித்தல்.வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைத்தல்.கிராமப் பணியாளர்களின் பணியை கண்காணித்தல்.


நில ஆக்கிரமிப்புகளை தடுப்பது மற்றும் மேல் அலுவலர்களுக்கு தொவித்து உடனடி நடவடிக்கை எடுப்பது.சர்வே கற்களைப் பராமரிப்பது.கிராமத்தில் நிகழும் சமூக விரோத செயல்கள் குறித்தான அறிக்கை அனுப்புதல்.


குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் சந்தேகத்திற்கிடமான அந்நியர்கள் வருகையைத் தெரிவிப்பது.வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தல்.கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்


கிராம நி்ர்வாக அலுவலரால் கீழ்கண்ட கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கிராம கணக்கு எண். 


1. கிராமத்தில் செய்யப்படும் பயிர் வாரியான சாகுபடியின் தாெகுப்பு ஆகும் கிராம கணக்கு எண். 


1.ஏ: கிராமத்தில் செய்யப்படும் பயிர் வாரியான சாகுபடியின் உள்ளடக்கம் ஆகும் இது கிராமத்தில் உள்ள புல எண்களை காெண்டுள்ள நிலையான பதிவேடு ஆகும். இது 12 கலங்களைக் காெண்டது ஆகும்.


கிராம கணக்கு எண்: 2: கிராமத்தில் செய்யப்படும் பயிர் வாரியான சாகுபடி கணக்குகளைக் காட்டும் பதிவேடு.)


 ***வருவாய் ஆய்வாளர் அலுவலகம்* ...

(REVENUE INSPECTOR)* .

சில வருவாய்க் கிராமங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை பிர்க்கா என்றும் அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 1127 வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


 இந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் வருவாய் ஆய்வாளர் எனும் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு உதவியாக அலுவலக உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.


 *வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் பணிகள்....* 


கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கும் அனைத்து வகையான சான்றிதழ்களுக்கான பரிந்துரைகள் குறித்து மேல் விசாரணை செய்து வட்டாட்சியருக்குக் கூடுதல் பரிந்துரை செய்கிறார். வருவாய் அலுவலர் மட்டுமே உள் வட்ட அளவிலான விசாரணை அலுவலர் ஆவார்.


 *வருவாய் ஆய்வாளரின் பணிகள்:* 


1) உள் வட்ட அளவில் நடைபெறும் அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு இவரே உள்வட்ட அளவிலான நிர்வாக நீதிபதியாவார். 


2) கிராம நிர்வாக அலுவலர்களின் பணியினைக் கவனிப்பது, கிராம நிர்வாகத்தையும் வட்டாட்சியர் அலுவலகத்தையும் இணைக்கும் இணைப்புப் பாலமாக செயல்படுகிறார். 


3) அனைத்து சான்றிதழ் தொடர்பான விசாரணை அலுவலராவார்.


சாதிச் சான்றிதழ்


வருமானச் சான்றிதழ்


வசிப்பிடச் சான்றிதழ்


இருப்பிடச் சான்றிதழ்


இருவரும் ஒருவரே சான்றிதழ்


ஒருங்கிணைந்தசான்றிதழ்


சொத்து மதிப்புச்சான்றிதழ்


வாரிசுச் சான்றிதழ்


மற்றும் 


வட்டாட்சியர் அலுவலகத்தால் வழங்கப்படும் பொது மக்கள் கோரும் அனைத்து சான்றிதழ்களுக்கும், இவரே விசாரணை அலுவலர் ஆவார். இவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வட்டாட்சியர் சான்றிதழ்கள் வழங்கு நடவடிக்கை மேற்கொள்வார்.


 *வட்டாட்சியர் அலுவலகம்....* 


மாவட்டத்தின் வருவாய் வட்டங்களின் நிர்வாகத்தை வட்டாட்சியர் நிர்வாகம் செய்வார். தமிழ்நாட்டில் மொத்தம் 220 (தற்ப்போது புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது) வருவாய் வட்டங்கள் உள்ளது. இதைத்தாலுகா என்று வேறு பெயராலும் குறிப்பிடுகின்றனர். இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. 


இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில துணை வட்டாட்சியர்களும், எழுத்தர்களும், அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் என்கின்றனர்.


 *வட்டாட்சியர் அலுவலகத்தின் பணிகள்..... (TAHSILDAR)* 


மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசுப் பணிகளும் வட்டாட்சியர் அலுவலகத்தின் வழியாக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.


கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்று பல சான்றிதழ்கள் வ்ட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.


வட்டாட்சி அமைப்புக்குள் மக்களிடையே பிரச்சனைகள் ஏதும் வந்து சட்டம் , ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே செயல்படுவதற்கு வாய்ப்பாக இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.


வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதான புகார்களை விசாரித்து இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் அதிகாரங்களைக் கொண்டு கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார். மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்ட வளர்ச்சி அதிகாரி ஆகியோர் போன்றவர்களுக்கு வருவாய்த்துறைப் பணிகளில் உதவுகிறார்.


வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்....


 *வருவாய் நிர்வாகப் பணிகள்* ....


வட்ட அளவில் பணியாற்றும் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் இ கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் இதர வருவாய் பணியாளர்களின் பணிகளைக் கண்காணித்தல் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்களின் நாட்குறிப்புகளை ஆய்வு செய்தல்.பயிர் மேலாய்வு செய்தல் நில அளவைப் பணிகளை ஆய்வு செய்தல்.


நில அடமான இனங்களில் நில மதிப்பு ரூ.2000ஃ-க்கும் மிகைப்படாத இனங்களின் மூன்று ஏக்கர் புஞ்சை அல்லது 1½ஏக்கர் நஞ்சை பரப்பளவிற்கு மேற்படாத இனங்களின் ஆணை பிறப்பித்தல். விலை மதிப்பு அற்ற நிலங்களில் வீட்டு மனை கோரிவரும் மனுக்கள் மீது ஆணை வழங்குதல்.


இயற்கை இடர்பாடுகள்தீவிபத்து, வெள்ளம்;புயல் ஏற்படும் காலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிவாரணம் வழங்க தக்க நடவடிக்கை எடுத்தல்.


நில ஆக்ரமணச்சட்டம் 1905ன் படி அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரணமங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல். பி.மெ.மோ இனங்களில் தீர்வை மற்றும் அபராதம் விதித்து ஆணையிடுதல்.கிராமச் சாவடி கால்நடைப்படி கல் இருப்பு 2 சி மரங்கள்,  நிலபராதீனம் இனங்கள், நில ஒப்படை இனங்கள், குத்தகை தண்ணீர் தீர்வை இனங்கள், ஆக்ரமணம் அரசு புறம்போக்கு நிலங்கள், தீர்வை விதிக்கப்பட்ட மற்றும் தீர்வை விதிக்கப்படாத நிலங்கள், இவைகளைத் கள ஆய்வு செய்தல்.முதியோர் உதவித்தொகை மற்றும் இதர நலத் திட்ட உதவி வழங்குதல்.


நில உரிமை மாற்ற இனங்களில் ஆணை பிறப்பித்தல்.நிலம் கையகப்படுத்தும் இனங்களில் நில மதிப்பு ரூ25000 க்கும் மிகைபடாத இனங்களில் தீர்ப்பு வழங்குதல்.நில ஒப்படை பராதீன இனங்களில் வதிமுறை மீறப்பட்ட இனங்களில் உரிய நடவடிக்கை எடுத்தல்.பாசன ஆதாரங்கள் மற்றும் மழை மானிகளை ஆய்வு செய்தல் பாசனம் குறித்து தகராறு இனங்களைத் தீர்த்து வைத்தல்.


வருவாய் நிலை ஆணை பத்தி 11சி-ன் கீழ் பாசன ஆதாரங்களீல் இருந்து விவசாயம் மற்றும் தொழிற்சாலை உபயோகத்திற்கு தண்ணீர் எடுத்தலை முறைபடுத்தல் தொடர்பான பணிகள்.


பல்வேறு பாசனச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை செயல்படுத்தல்.அரசுக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் சேர வேண்டிய தொகைகளை வருவாய் வசூல் சட்டப்படி வசூலித்தல்.


நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி நிலவரி கடன் ஊராட்சி வரி, சர்வே கட்டணம், வேளாண்மை வருமான வரி, நகர்புற நிலவரி, நீதி மன்றக் கட்டணம், வேளாண்மை வருமானவரி, நகர்புரநிலவரி, நீதி மன்றக் கட்டணம், முத்திரை கட்டணம், வறியவர் வழக்குக் கட்டணம், மற்றும் பல்வேறு துறைகளிடம் இருந்து வரப் பெற வேண்டிய நிலுவைத் தொகைகள் வசூலைத் துரிதப்படுத்துதல்.


கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும் வரி வசூல் கணக்கு மற்றும் இதர கணக்குகளை ஆய்வு செய்தல்.ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்குகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.வேளாண்மை நிலங்களுக்கு நியாயமான குத்தகை வாரம் நிர்ணயத்தல்.


நத்தம் மனை வரி நிர்ணயத்தல்.அரசு புறம்போக்கு நிலங்கள் வழியாக நீர் கொண்டு செல்ல பாதைக் கட்டணம் நிர்ணயத்தல்.தண்ணீர் தீர்வை இனங்களின் ஆணை பிறப்பித்தல்.


குத்தகை உரிமைப் பதிவு ஆணை பிறப்பித்தல்.கிராம உதவியாளர் பணி நியமணம் செய்தல்.கிராம நிர்வாக அலுவலர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இனங்களில் தண்டனை அளித்தல்.


கிராம நிர்வாக பணியமைப்பு தொடர்பான பணிகள்.கிராம உதவியாளர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இனங்களில் ஆணை பிறப்பித்தல். .கிராம நிர்வாக அலுவலர்களின் விடுப்பு மனுக்களின் மீது ஆணை பிறப்பித்தல். 2சி மனைப்பட்டா மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல்.


புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை தல ஆய்வு செய்து சட்டரோதமாக மரம் வெட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்தல். ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்குகளில் சட்ட விரோதமாக கல் மற்றும் மணல் தோண்டி எடுக்கபடுவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.


வருவாய் நிலை ஆணைகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயல்படுத்துதல், ஆதின ஒழிப்பு இனாம் ஒழிப்புச் சட்ட காலங்களுக்கு அப்பார்பட்ட இனங்கள் மீதான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தல்.


உப்பளம் அமைக்க நிலங்களை குத்தகைக்கு விடுதல் மற்றும் குத்தகை வசூலித்தல். .

வட்டக் கணக்கு நடைமுறை நுல்படி பதிவேடுகள் மற்றும்;  கணுக்குகள் பராமரித்தல். ரயத்துவாரி நிலங்களில் உட்பிரிவு செய்து ஆணையிடுதல். அரசால் வாங்கப்பட்ட நிலங்களை விதிப்படி தீர்வு செய்தல்.


 **குற்றவியல் நிர்வாக பணிகள்* ....

வட்ட குற்றவியல் நடுவராக பணியாற்றுதல்.வட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல்.அவசர காலத்தில் இருப்புப் பாதையை கண்காணிக்க தக்க நடவடிக்கை எடுத்தல்.குற்றவியல் நடைமுறை பிரிவு விதி 144ன் கீழ் ஆணை பிறப்பித்தல்.கொத்தடிமைத் தொழிலாளர் சட்டத்தினை செயல்படுத்துதல்.


காவல் துரையினரால் ஒப்படைக்கப்பட்ட உரிமை கோரப்படாத பொருட்கள் மீது நடவடிக்கை எடுத்தல். காவல் துறை அலுவலர்களின் கோரிக்கையின் பேரில் புதைக்கப்பட்ட பிணங்களை மீண்டும் தோண்டி எடுத்து மருத்துவ ஆய்வு செய்தல்.


 *பொதுவான பணிகள்...* 


மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடத்துதல்.


பொதுத் தேர்தல் காலத்தில் சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் அலுவலராகப் பணியாற்றுதல். 


சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் நடந்த அனைத்து ஏற்பாடுகளும் செய்தல்.


பொது சுகாதாரம் கால்நடை தொத்து வியாதி மற்றும் காலரா முதலிய இதர தொத்து வியாதிகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தல்..


 பிறப்பு இறப்பு பதிவு செய்யும் பணியைக் கண்காணித்தல்.


வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம்.....(REVENUE DIVISIONAL OFFICE)


மாவட்டங்களில் வருவாய்த்துறையில், சில வட்டாட்சியா் அலுவலகங்களை உள்ளடக்கி வருவாய்க் கோட்ட அதிகாரி தலைமையில் வருவாய் கோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 76 வருவாய்க் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளில் துணை ஆட்சியர் அல்லது வருவாய்க் கோட்ட அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.


 இப்பணியிடங்களில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் துணை ஆட்சியர் என்றும் மற்றவர்கள் நியமிக்கப்பட்டால் வருவாய்க் கோட்ட அலுவலர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவா் உட்கோட்ட நிா்வாக நீதிபதி என அழைக்கப்படுகிறாா்.


 *வருவாய்க் கோட்ட அலுவலகத்தின் பணிகள்....* 


வருவாய்க் கோட்ட அலுவலகங்களில் வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற வேண்டிய சில சான்றிதழ்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரைகளின்படி கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர் நிலையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.


மாவட்டத்தில் வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்க கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர்கள் தான் நியமிக்கப்படுகிறார்கள்.மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இந்த அலுவலகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள வருவாய்த்துறை அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.


 *மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்....* 


தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்ட ஆட்சி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தின் ஆட்சி அமைப்புகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவரின் மேற்பார்வையில் இயங்குகிறது.


 மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பாக மாநில அரசின் வருவாய்த்துறையின் மாவட்டத் தலைமை அதிகாரியாக இருக்கிறார். இருப்பினும் மாவட்டத்திலிருக்கும் அனைத்துத்துறை அலுவல்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் இருக்கிறார்.மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பிற்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.


 இவரின் கீழ் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் மாவட்ட அளவிலான பல துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் கீழான துணை அலுவலகங்கள் இருக்கின்றன. இந்த அலுவலகங்களை உள்ளடக்கி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் இயங்குகிறது.


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பணிகள்.....


மாவட்டத்திற்குத் தேவையான அனைத்துத் துறைப் பணிகளும் இந்த அலுவலகத்தின் கீழ் இயங்கும் துறை அலுவலர்களால் செயல்படுத்தப்படுகிறது.


நன்றி....

வருவாய் கோட்டாட்சியர்களின் கடமைகளும் பொறுப்புகளும் என்ன தெரிந்து கொள்வோம்.!

 வருவாய் கோட்டாட்சியர்களின் கடமைகளும் பொறுப்புகளும் என்ன தெரிந்து கொள்வோம்.!

1. வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்ட அலுவலகப் பணியாளர்கள் & சிறப்புத் திட்ட பணியாளர்கள் ஆகியோரது பல்வேறு பணிகளை மேற்பார்வை செய்தல்.

2. வட்ட அலுவலகங்களை தணிக்கை செய்தல்.

3. கோட்டத்திலுள்ள களப்பணியாளர்களது நாட்குறிப்புகளை ஆய்வு செய்தல்.

4. வட்ட அலுவலகங்களில் கடன் பிரிவுகளை அரையாண்டுக்கு ஒருமுறை தணிக்கையிடல்.

5. முதல் வகுப்பு நிருவாக நீதிபதியாக செயல்பட்டு கோட்டத்தில் சட்டம் ஒழுங்கினை நிருவகித்தல்.

6. குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 107 முதல் 110 வரையுள்ள பிரிவுகளின்படி விசாரணை நடத்தி ஆணை பிறப்பித்தல்.

7. காவல் நிலை ஆணை எண் பிரிவு 145-ன்படி விசாரணை செய்தல்.

8. குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 142 & 145-ன்படி விசாரணை செய்து ஆணைகள் பிறப்பித்தல்.

9. கிராம நிருவாக அலுவலர்களுக்கு நியமனம் மாறுதல் மற்றும் தண்டனை வழங்குதல்.

கிராம உதவியாளர்கள் நியமனம் & தண்டனை தொடர்பான வட்டாட்சியரின் ஆணையின் மீதான மேல் முறையீட்டு மனுக்களில் விசாரணை செய்தல்.

10. நுலகவரி, அரசுக் கடன்கள், நில அளவைக் கட்டணங்கள், பிற அரசு துறைகளுக்கு சேரவேண்டிய பாக்கிகள், வேளாண் வருமான வரி, நகர்ப்புற நிலவரி, நீதிமன்ற வழக்குக் கட்டணம், வறியவர் வழக்கு கட்டணம் உள்ளிட்ட அரசுக்குச் சேரவேண்டிய பாக்கிகளை வசூலித்திட வசூல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வசூல் பணியைதுரிதப்படுத்துதல், வருவாய் வசூல் சட்டத்தின் மூலம் அரசுக்கு சேர வேண்டிய பாக்கியை வசூலித்தல்.

11. நில ஒப்படை &பராதீனம் ஆகிய இனங்களைத் தணிக்கை செய்தல்.

12. ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மேல்முறையீடுகள் ஆகியவைகளில் நடவடிக்கை மேற்கொண்டு பொது இடங்களை ஆக்கிரமிப்பு தாரர்களிடமிருந்து மீட்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.

13. நிலமாற்ற முன்மொழிவுகளின் மீது தணிக்கை செய்தல்.

14. ஆதீன ஒழிப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட இனங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தல்.

15. 1960-ம் ஆண்டு நிலப்பயன்பாட்டு ஆணையினை செயல்படுத்துதல்.

16. நிலச் சீர்திருத்த சட்டங்கள்  குத்தகைச் சட்டங்கள் ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்துதல்.

17. மேம்பாட்டு வரி விதிப்பின் மீது வரும் மேல்முறையீடுகளை முடிவு செய்தல்.

18. சிறப்பு சிறுபாசனத் திட்ட பணிகளை பார்வையிடுவதுடன் தண்ணீர் தீர்வை எவ்வளவு விதிக்க வேண்டும் என்பதை நிர்ணயித்திடுதல்.

19. ரூ.25000-க்கும் அதிகமாக இழப்பீடு தர வேண்டிய நில எடுப்பு அலுவலராக பணியாற்றல்.

20. வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது நிலவரி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று வட்டாட்சியரால் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் தொடர்புடைய இடங்களை பார்வையிட்டு நிலவரி தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுத்தல்.

21. இந்திய முத்திரை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயல்படுத்துதல்.

22. கிராம கணக்குகளைத் தணிக்கை செய்தல்& பயிர் மேலாய்வு செய்தல்.

23. தமிழ்நாடு இனம் நியாயவாரம் சட்டம் 1963 மேல் முறையீடுகளை விசாரித்தல்.

24. குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல்.

25. முழைமானிகள், சர்வே கற்கள், கல் டெப்போக்கள் தணிக்கை செய்தல்.

26. கிராமக் கணக்குகளின் ஆண்டு தணிக்கை வருவாய்த் தீர்வாயம் முடித்து சரியான கேட்பினை முடிவு செய்தல்.

27. தமிழ்நாடு விவசாயகுத்தகை சட்டம் 1969-ன்படி மேல் முறையீடுகளை விசாரித்தல்.

28. மரப்பட்டா வழங்குதல் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரித்தல்.

29. அரசு நிலங்கள் குத்தகை இனங்களைப் பார்வையிடுதல்.

30. முறையான தண்ணீர் தீர்வை நிர்ணயம் குறித்து ஆய்வு செய்தல்.

 31. முதியோர் உதவித் தொகை இதர உதவித் தொகை வழங்கும் பணியை கண்காணித்தல், வட்டஅலுவலக முதியோர் உதவித் தொகை பிரிவினை காலாண்டு தோறும் தணிக்கை செய்தல்.

32. பர்மா & சிலோன் அகதிகள் நல் வாழ்வு திட்டங்களை செயல்படுத்துதல்.

33. வெள்ளம், தீ விபத்து, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது காப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடல்.

34. ஆதிதிராவிடர் குடியிருப்புகளைப் பார்வையிடுதல் & ஆதிதிராவிடர் நலத்திட்டங்களை செயல்படுத்துதல்.

35. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துதல்.

36. விபத்து&சாலை விபத்து நிவாரண நிதி வழங்குதல்.

37. காப்புறுதித் திட்டங்களை ஆய்வு செய்தல்.

38. மனுநீதி திட்ட முகாம்மக்கள் குறை தீர்க்கும் நாள் நடத்திடல்.

39. நியாயவிலைக் கடைகள் அரிசி ஆலைகள் தணிக்கை &குடிமை பொருள் வழங்கல் தொடர்பாக ஆய்வு செய்தல்.

40. கொள்முதல் மையங்கள் மற்றும் கிடங்குகள் தணிக்கை அரசு உணவு தானியக் கிடங்குகள் ஆய்வு மற்றும் இருப்புகள் தணிக்கை.

41. சில பகுதிகளில் குடியிருப்பு கட்டுப்பாடு அலுவலராக செயல்படுதல்.

42. 1960ம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடங்கள் குத்தகை மற்றும் வாடகை ஒழுங்கு சட்டத்தினை செயல்படுத்தல்.

43. நிரந்தர மற்றும் தற்காலிக திரை அரங்குகளைத் தணிக்கை செய்தல்.

44. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவு பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.

45. வெடி மருந்துச் சட்டம், படைக்கல சட்டம், பெட்ரோலியம் சட்டம் ஆகியவை தொடர்பான பணிகளை செய்தல்.

46. அரசு அலுவலர்கள் பிறப்பு தேதி குறித்து விசாரணை செய்தல்.

 47. எரிசாராயம் மற்றும் கரும்புப்பாகு மொலாசஸ் உரிய கணக்குகள் தணிக்கையிடல்.

48. அடகுக் கடைகள் தணிக்கை மற்றும் அடகு கடைக்காரா சட்டம் அமுல் செய்தல்.

49. முக்கியப் பிரமுகர்கள் வருகையை கவனித்தல்.

50. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல்  தேர்தல் தொடர்பான பணிகளைச் செய்தல்.

51. ஆறிவொளி இயக்கம் முதலிய அரசுத்திட்டங்களைச் செயல்படுத்த ஒத்துழைப்பு நல்குதல்.

52 கிராமச் சாவடிகள் மற்றும் கால்நடைப்பட்டிகளைத் தணிக்கை செய்தல்.

53. வருவாய் நிலையாணைகளில் கூறப்பட்டுள்ள பிற பணிகளைச் செய்தல்.

நன்றி தகவல் 

P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,

மத்திய அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம். 2010/14

விழி கண் மற்றும் கண்காணிப்பு குழு வழக்கறிஞர் தமிழக அரசு.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

பந்தலூர் நீலகிரி மாவட்டம் 

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...