*தினம் ஒரு சட்டம் கற்றுக் கொள்ளுங்கள் அது உங்களை தலை நிமிர்ந்து வாழ செய்யும்..*
*குற்றம் செய்யும் குழந்தைகளுக்கு* *தண்டனைகள் உண்டா*
ஒரு குற்றம் நடைபெற்று அந்த குற்றத்தின் விசாரணையில் ஒரு குழந்தை தான் அந்த குற்றச் செயலை செய்தது என்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி அந்த குழந்தைக்கு தண்டனை வழங்க முடியுமா அந்த குழந்தைக்கு தண்டனை உண்டா என்ற கேள்விக்கு இந்த கட்டுரையில் பதிலை தெரிந்து கொள்வோம்.
குழந்தைகள் செய்யும் குற்றம் குற்றமாக கருதப்படுமா?
குழந்தைகள் குற்றம் செய்தால் குற்றவாளியா?
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 82 & 83
குழந்தைகள் செய்யும் குற்றம் குற்றமாக கருதப்படுமா?
இந்திய தண்டனைச் சட்டத்தின் படி 7 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எவ்விதக் குற்றத்திற்கும் ஆளாவதில்லை. ஏனெனில் அவ்வயதுடைய குழந்தைகள் குற்றச் செயல் செய்ய இயலாத சூழலில் இருப்பதாக சட்டம் அனுமானிக்கிறது. அதாவது ஒரு குற்றம் செய்யப்பட்டது என்றால் அந்த குற்றத்திற்கு பின்னால் இருக்கும் நோக்கத்தை தான் குற்றமாக சட்டம் கூறுகிறது இதை குற்றச்செயல் நோக்கம் இயலாமை எனப்படுகிறது.
*குழந்தைகள் குற்றம் செய்தால்* *குற்றவாளியா*
7 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குற்றம் செய்வதை குற்றம் என்று கொள்ள முடியாது என்று இந்திய தண்டனை சட்டம் பிரிவு 82 மற்றும் 83 சட்டம் விளக்குகிறது. அதை தெளிவாக தெரிந்து கொள்வோம்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 82 மற்றும் பிரிவு 83 பற்றி விளக்கமாக தெரிந்து கொண்டால் தான் எந்த வயதுடைய குழந்தைகளுக்கு தண்டனை வழங்க முடியும் குழந்தைகள் செய்த குற்றத்திற்கு தண்டனை உண்டா என்பதை விரிவாக தெரிந்துகொள்ள முடியும்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 82.
7 வயதுக்குட்பட்ட குழந்தை எந்த காரியத்தை செய்தாலும் அது குற்றம் ஆகாது.
ஏழு வயதுக்குட்பட்ட குழந்தையின் செயல்.-ஏழு வயதுக்குட்பட்ட குழந்தையால் எதுவும் குற்றம் இல்லை.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 83.
ஏழு வயதுக்கு மேற்பட்ட மற்றும் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முதிர்ச்சியற்ற புரிதல். ஏழு வயதுக்கு மேற்பட்ட மற்றும் பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தையால், அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் நடத்தையின் தன்மை மற்றும் விளைவுகளைத் தீர்மானிக்க போதுமான புரிதல் முதிர்ச்சியை அடையாத குழந்தையால் எதுவும் குற்றமாகாது.
ஒரு செய்கையை செய்யும் பொழுது தனது நடத்தையின் தன்மையையும் அதன் விளைவுகளையும் ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கு போதுமான மனப்பக்குவம் அடைந்திராத 7 வயதிற்கு மேற்பட்ட ஆனால் 12 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தையின் செயல் எதுவும் ஒரு குற்றம் ஆகாது. இங்கு செயலின் தன்மை மற்றும் விளைவை அறிந்து கொள்ளும் பக்குவம் அடைந்திருப்பின் குற்றப் பொறுப்பு உண்டு.
12 வயதிற்கு மேல் குற்றப் பொறுப்பு உண்டு.
கூடலூர் நுகர்வோர் மனிதவள
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
No comments:
Post a Comment