நிலஅளவை மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகள் மற்றும் கால அளவுகள்

 நிலஅளவை மேற்கொள்ளப்பட வேண்டிய கடமைகள் மற்றும் கால அளவுகள் | Procedure for Survey of the Land with Timeline


மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கு எண்.W.P.(MD)No.13465/2020 மற்றும் W.M.P.(MD)No. 11228/2020-ல் நீதிமன்றம் நில அளவைத் துறை சம்மந்நமாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நகல்.


https://drive.google.com/file/d/1vJNZ2Iz4f1RqGqZcEAJKdcHITJipeHua/view?usp=share_link


மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் ஆணைப்படி, சென்னை-5, நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரால் ந.க.எண். 5/20403/2020 (நி.அ) நாள்: 15.03.2021-ன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து நிலஅளவை பதிவேடுகள் துறை, மண்டல துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை மற்றும் நிலஅளவை செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய கடைமைகள். 


1. கட்டணம் செலுத்தி 30 நாட்களுக்குள் நில அளவை/ மறுநில அளவை செய்ய வேண்டுமென்றும்,


2. தவறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டணத்தை திரும்பி வழங்க வேண்டுமென்றும்,


3. தாமதத்துக்குக் காரணமான அதிகாரிகளின் சம்பளத்தில் ரூ.2,500 பிடித்தம் செய்ய வேண்டுமென்றும்,


4. மேலும், ஒழுங்கு நடவடிக்கை, பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்று,


5. நில அளவீட்டுக்காக ட்ரோன் (Drone Camera) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். நில அளவீடு அல்லது மறு அளவீடு பணியை முழுமையாக புகைப்படம், வீடியோ பதிவு செய்ய வேண்டும். இதை சம்பந்தப்பட்டவர்கள் கட்டணம் செலுத்திக் கேட்டால் வழங்கலாம் என்றும்,


6. புல எல்லை மனுக்கள் தொடர்பான பதிவேட்டை பராமரித்து, மேல்நிலை அலுவலர்கள் (வட்டத்துணை ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர்) குறிப்பிட்ட காலங்களில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை தினமும் சரிபார்த்திட வேண்டும். இந்த பதிவேட்டின் முழு தகவல்களையும் மனுதாரரோ/ சம்மந்தப்பட்டவர்களோ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரும் பட்சத்தில் மறுக்காமல் வழங்கப்பட வேண்டும்.


 நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரின் சுற்றறிக்கை நகல்: -

Commissionerate of Survey and Settlement Circular copy:- 


https://drive.google.com/file/d/1TdmNIcS7qC3eyyKgP0p2hEAVTMD0CHbr/view?usp=share_link


அதை தொடர்ந்து நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரால் ந.க.எண். 5/20403/2020 (நி.அ) நாள்: 15.03.2021-ன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து நிலஅளவை பதிவேடுகள் துறை, மண்டல துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை என்னவென்றால்,


1. கட்டணம் செலுத்தி இயன்றவரை 30லிருந்து 90 நாட்களுக்குள் நில அளவை/ மறுநில அளவை செய்ய வேண்டுமென்றும்,


2. நிலஅளவை/ மறுநில அளவை பணிகளை மேற்கொள்வதை புகைப்படம்/ காணொளி (Video) எடுத்துக் கொள்வதற்கான செலவினை தொடர்புடைய மனுதாரர் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், புகைப்படம் அல்லது காணொளி தொடர்பான பதிவுகளை உரிய கட்டணத்தினை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு வழங்க வேண்டும்.


3. வருவாய் துறை தொடர்பான பணிகளை ஒழுங்குபடுத்த வருவாய்த்துறையின் ஒவ்வொரு அலுவலர் மீதும் தொடர் கண்காணிப்பு செலுத்தப்பட வேண்டும். அவர்களும் குறிப்பாக நிலஅளவர்களும் கையூட்டு கோருவதை தடுப்பதற்காக இலஞ்ச ஒழிப்பு துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.


4. நிலஅளவை பணி முடிவுற்று, பட்டா வழங்கக் கோரும் நிகழ்வுகளில் மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை மட்டுமின்றி, இந்நீதிமன்றம் வழக்கு எண் W.P.MD.No.7746/2020ல் வழங்கிய ஆணைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.


Inspector of Surveyor - நில அளவை ஆய்வாளர்

Deputy Inspector of Surveyor – துணை நில அளவை ஆய்வாளர்

Head Surveyor – வட்டத் துணை ஆய்வாளர்

Deputy Surveyor/ Sub-Inspector Surveyor – சார் ஆய்வாளர் / வட்ட சார் ஆய்வாளர்

Firka Surveyor - குறுவட்ட நிலஅளவர்/ உள்வட்ட நிலஅளவர்

Senior Draftsman – முதுநிலை வரைவாளர்

Land Record Draftsman – நில ஆவண வரைவாளர்

Town Sub-Inspector - நகர் சார் ஆய்வாளர்


#patta #petition #fmb #fieldmeasurementbook #tamilnadu #survivor #survey #resurvey #land #aregister #தமிழ்நாடு

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...