நீதிமன்ற உத்தரவு

 .              நீதிமன்ற உத்தரவு.

சிவில் வழக்கில் போலீஸ் விசாரணை என்ற பெயரில் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை காவல் நிலையம் வரவழைத்து வழக்கு சம்பந்தமாக தலையிடவோ, தொந்தரவோ, அல்லது விசாரிக்கவோ கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, 

குறிப்பாக சொத்து யாருக்கு உரிமையானது என்பதை  நீதிமன்றங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். போலிசார் கட்டப்பஞ்சாயத்து செய்ய உரிமை இல்லை. 

ஆனால் மேலும் சில காவல் நிலையங்களில்  பல நேரத்தில் கட்டபஞ்சாயத்து செய்து மிரட்டி, FIR போட்டு ரிமாண்ட் செய்திடுவேன் என்று மிரட்டி, எதிர் தரப்பினருக்கு சாதகமாக இடப் பிரச்சனையில்,  இவர்களே கூடவே இருந்து நியாயமற்ற முறையில் நடந்துகொள்கின்றனர் என்ற வாதத்தை ஏற்று இந்த தீர்ப்பை அளித்துள்ளனர்.

 மேலும் சொத்து யாருக்கு சொந்தம் என்பதை இவர்களே சம்பந்தப்பட்ட நபரை மிரட்டி எழுதி வாங்கி மிரட்டுவதும் சில இடங்களில் நடப்பதால் இதற்கு ஒரு தீர்வாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்*

 அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்* இந்திய அரசியல் சாசனம் இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் முதல் தகவல் அறிக்கை (F.I.R.)...