பந்தலூரில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது.




பந்தலூரில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது.


பந்தலூரில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் மேற்க்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பந்தலூர் மகளீர் தையல் பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது, வாக்களர் பட்டியலில் அளிக்க வேண்டிய தகவல்கள் மற்றும் ஆதார் எண் இணைப்புக்கான வழிமுறைகள் குறித்து பேசினார்.  நிகழ்ச்சியல் பந்தலூர் மகளீர் தையல் பயிற்சி மைய மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. நிகழ்ச்சியில் ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகி ஜான்சி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் தணிஸ்லாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். (புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது 2 ஆதார் எண் வாக்காளர் பட்டியலில் இணைப்பது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு சிவசுப்பிரமணியம் பேசினார்)

முதன்மை கல்வி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் 3/2015



முதன்மை கல்வி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி தலைமை வகித்தார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது பல தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது நுழைவு தேர்வு எழுதவேண்டும் என கட்டாய படுத்த படுகிறது.  இவற்றை தடுக்க வேண்டும்.  அனுமதி அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்  பட்டியல்  செய்தி தாள்களில் வெளியிட வேண்டும்.  கல்வி கட்டணம் மக்கள் எளிதில் தெரிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்கள் உரிய பராமரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அனைத்து பள்ளிகளிலும் புரொஜெக்டர் சரிசெய்து தர வேண்டும் என்றார்.  
மேலும் புளுமௌண்டன் நுகர்வோர் சங்க தலைவர் ராஜன், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் குன்னூர் நுகர்வோர் சங்க தலைவர் மனோகரன் ஆகியோர் பேசும்போது பள்ளிகளில் நுகர்வோர் மன்றம் அமைக்க வேண்டும்.  மாணவர் சேர்க்கை பல தனியார் பள்ளிகளில் தற்போது தொடங்கிவிட்டனர்  தடை செய்ய வேண்டும்,   மாணவர் சேர்க்கை கல்வி உரிமை சட்ட விதிப்படி உச்ச பட்சம் நிர்ணயம் செய்ய வேண்டும்.   என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி பேசும்போது  அரசு பள்ளிகளில் மாணவர்கள் வாசிப்பு திறன் குறைந்த மாணவர்கள் திறன்மேம்பட  புதிய முறையில் வாசிப்பு அட்டைகள் மூலம் சிறப்பு பயிற்சி  32 நாட்கள் அளிக்கபடுகிறது.  கூடலூர் பகுதியில் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மொழிக்கும் இந்த அட்டை பயிற்சி அளிக்கபடவுள்ளது. இது அரசு பள்ளிகளில் மட்டும் மேற்கொள்ளபடுகிறது.  தினசரி செய்தி தாள்கள் வாசிப்பு பழக்கம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.  அரசு பள்ளிகளில் வரும் கல்வி  ஆண்டு முதல் 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் கணினி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.  மாணவர் சேர்க்கைக்கு  கட்டிடதகுதி சம்பந்தபட்ட வட்டாட்சியர் மூலம் பெற்று அதன் அடிப்படையில் ஆங்கில வழி கல்விக்கு ஒரு பிரிவும், தமிழ் வழி  கல்விக்கு மூன்று பிரிவுகளும் அனுமதி வழங்க படுகிறது.  கல்வி உரிமை சட்டப்படி 30 முதல் 40 மாணவர்கள் வரை சேர்க்கைக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.  ஒரே வகுப்பறையில் அதிக மாணவர்கள்  வைத்தால் அப்பள்ளி மிது நடவடிக்கை எடுக்கப்படும்.  மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தகூடாது. புகார் பெறபட்டால் அப்பள்ளிகள் மிது கடும் நடவடிக்கை எடுக்கப் படும். அனைத்து பள்ளிகளிலும் தமிழ்  கட்டாயம் படிக்க வேண்டும் என அரசு ஆணையிட்டு உள்ளது.  நீலகிரியில் 71  பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ளது.   தற்போது CBSC  ICSC பள்ளிகளும் பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.   அவற்றின் அங்கீகாரம் படிவங்கள் இயக்குனருக்கு அனுப்பட்டுள்ளது.  நுகர்வோர் மன்றம் அமைக்க பட்ட பள்ளிகளில் தொடர்ந்து கூட்டம் நடத்த அறிவுரைகள் வழங்கபடும்.   ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் மூலம் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது அது முழுமையாக மாணவர்களிடையே சென்று சேரும்.  அரசு சார்பில் கல்வி மேம்பாட்டிற்கு  பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.   இவை மக்கள் பயன் படுத்தி மாணவர்களை அரசு பள்ளிகளில்  சேர்க்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் முதன்மை கலவி அலுவரரின் நேர்முக உதவியாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பந்தலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் 31.01.2015


பந்தலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பந்தலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை  தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மைய  செயலாளர் பொன் கணேசன்,  ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் செயலர் சுப்பிரமணி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், சமுக ஆர்வலர்கள் காளிமுத்து செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பந்தலூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் கணேஷன் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் அமராவதி ராஜன்   உதகை அரசு மருத்துவமனை கண் மருத்துவ குழுவினர் கண் நோயினால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 150.கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  இதில் 20 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் முகாமில் சேவை புரிந்தனர்.
முகாமில் கண் தொழில் நுட்புனர் கலாவதி ஸ்ரீதர், கூடலூர்  நுகர்வோர் மைய துணை தலைவர் செல்வராஜ், மைய ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகி  சந்திரன்,  மருத்துவமனை உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


















கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

















pls visit our webs http://cchepnlg.blogspot.in http://cchepeye.blogspot.in http://consumernlg.blogspot.in

மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினத்தினை முன்னிட்டு

பந்தலூர் பஜாரில் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  மகாத்மா காந்தி கடந்த 1948ம் ஆண்டு சுட்டு கொல்லப்பட்டதன் 67வது நினைவு தினத்தினை முன்னிட்டு பந்தலூரில் நடைபெற்ற நினைவு தினத்திற்கு மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் தலைவர் நவுசாத் தலைமை தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், ஓய்வு பெற்ற மருந்தாளுனர் ஆண்டனி,  மகாத்மா காந்தி பொது சேவை மைய துணை தலைவர் அகமது கபீர்  முன்னிலை வகித்தார்.  மைய நிர்வாகிகள் சலீம், ராஜாராம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் உருவபடத்திற்கு மலர் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மது இல்லா தமிழகத்தினை உருவாக்க தமிழக அரசினை வலியுறுத்துவது, மதுவின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, போதையின் பிடியில் சிக்கியவர்களை உரிய சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்க மாவட்டந்தோறும் மறுவாழ்வு மையங்களை அமைக்க அரசை வலியுறுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.  









http://cchepnlg.blogspot.in/







http://cchepnlg.blogspot.in/
http://cchepnlg.blogspot.in/http://cchepnlg.blogspot.in/

POLIYO feb 23


இலவச கண் சிகிச்சை முகாம் - பந்தலூர் 31.01.2015

இலவச கண் சிகிச்சை முகாம்

பந்தலூர் அரசு மருத்துவ மனையில் 31.01.2015  சனிக்கிழமை அன்று  காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.  கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சரிட்டபிள்  ட்ரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்தும் இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் உதகை அரசு மருத்துவ மனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு அனைத்து விதமான கண் நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளிப்பதோடு கண் புரை நோயினால் பாதிக்கபட்டவர்களுக்கு  உதகை அரசு மருத்துவ மனையில்  முறையான லேசர் முறையில் இலவச கண் புரை அறுவை சிகிச்சை செய்து தரப்படும். கண் புரை அறுவை சிகிச்சை தேவை உள்ளவர்கள் குடும்ப அட்டை நகல் எடுத்து வரவும்.  உதவிக்கு ஆள் தேவை படின் உடன் ஒருவரை அழைத்து வரவும்.  கண் புரை அறுவை சிகிச்சை, மருந்துகள், கருப்பு கண்ணாடி, உணவு ஆகியன இலவசமாக வழங்கப்படும்.



சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தின்

இப்போது நீங்கள் ?

இதற்கு முந்தைய பதிவில், சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் நகலை கொடுத்திருந்தேன். அதற்கு காரணம், நீதிமன்றம் எப்படி வழக்கை பரிசீலிக்கிற்து என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. இப்பொழுது தீர்ப்பின் அடிப்படையில் உங்களுக்கு விளக்கம் தருகிறேன்.

A. சென்னை, வேளச்சேரியை சார்ந்த K.S. Sriram என்பவர், சென்னை அடையாரி லிருக்கும் விவேக் அன்கோ -வில் ஒரு கெல்வினேட்டர் ரெப்பிரிஜியேட்டர் ஒன்றை வாங்கினார். ஆனால் அது ஆரம்பம் முதலேயே சரியாக வேலை செய்ய வில்லை. எனவே அவர் உடனடியாக் விவேக் அன்கோவின் சர்வீஸ் செண்டருக்கு புகார் செய்தார். அவர்கள் மேற்படி பழுதை சரி செய்ய முடியாது என கூறி விட்டனர். எனவே அவர் சர்வீஸ் செண்டருக்கு ஈ- மெயில் மூலம் புகார் செய்துவிட்டார். ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பினார். பதில் எதுவும் கொடுக்காததால், அவர் கீழ் கண்ட கோரிக்கைக்காக நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

1. இந்த ரெப்பிரிஜியேட்டருக்கு பதில் புதிய ஒன்று மாற்றி தரவேண்டும்.
2. மன உளைச்சல் போன்றவைகளுக்காக Rs. 15,000 / - நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.
3. வழ்க்கு தொடர ஆகும் செலவுக்கு வழக்கு தொகையாக Rs. 1,000 /-வழங்கவேண்டும்.
மேற்படி மனு ( Complaint ) அதற்கு ஆதாரங்களையும் ( Proof Affidavits ) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆதாரங்கள் தீர்ப்பின் நகலில் Complainant Doccuments என குறிப்பிடப்பட்டுள்ள ( EX. A1 to EX. A6) ஆவணங்களின் நகல்களாகும்.

மேற்படி மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, எதிர் மனுதாரர்களுக்கு (OppositeParty) நீதி மன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

B. எதிர் தரப்பினர் அதாவது விவேக் அன் கோ, மேற்படி குற்றச்சாட்டைமறுத்து பதில் மனு ( Version ) தாக்கல் செய்தனர். அதில், மனுதாரருக்கு ரெப்பிரிஜி யேட்டர் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். தாங்கள் விற்பனையாளர் என்றும், உற்பத்தியாளரையும் எதிர்மனுதாரராக சேர்க்கப்படவில்லை. எனவே இந்த குறைபாட்டிற்கு தாங்கள் பொறுப்பு அல்ல என கூறப்பட்டது. ஆனால் அவர்கள் தரப்புக்கு ஆதாரமாக் எவ்வித ஆவணங்களும் ( Proof affidavit - Opposite Party Doccuments ) கொடுக்கப்படவில்லை.

C. வழக்கை விசாரித்த நீதிமன்றம், எதிர் மனுதாரின் ஆட்சேபணையை, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவை மேற் கோள் காட்டி நிராகரித் தது.

1. மனுதாரருக்கு, எதிர் மனுதாரர் பழைய ரெப்பிரிஜியேட்டருக்கு பதில் புதிய ஒன்றை மாற்றி கொடுக்க வேண்டும்.
2. நஷ்ட ஈடாக மனுதாரருக்கு Rs. 5,000 /- வழங்கவேண்டும்.
3. நீதிமன்ற செலவாக Rs.1000 /- வழங்கவேண்டும்.

இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இப் பதிவின் மூலம் தாங்கள் வழக்குக்கு தேவையாக எந்தெந்த ஆவணங்களை ஆதாரமாக நீதிமன்றத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதையும், வழக்கை நீதிமன்றம் எவ்விதம் பரிசீலிக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு இருப்பீர்கள். அதோடு சில நீதிமன்ற சொற்களையும் தெரிந்து கொண்டு இருப்பீர்கள்.

நுகர்வோர் வழக்கு எண்:------------------ C C No.
மனுதாரர் ----------------------------------- Compainant.
எதிர் மனுதாரர்------- -----------------------Opposite Party.
மனு ------------------------------------------ Petition.
எதிர் மனு------------------------------------- Version.
ஆதார ஆவண பிரமாண வாக்குமூலம் -- Proof Affidavit.
ஆதார ஆவணங்கள்------------------------- EX ( Exhibit ).

இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தாரளமாக் கேளுங்கள்.

இப்பொழுது நீங்கள் நுகர்வோர் வழக்கு தொடரும் அளவிற்கு விஷயங்களை அறிந்து விட்டீர்கள் !. இப்பொது நீங்கள் பாதி வழக்கறிஞர் தான்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019

**நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 (Consumer Protection Act, 2019 – Act No. 35 of 2019)**   இந்தச் சட்டம் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்க...