உள்ளாட்சி அமைப்புகள் துவங்கும் வளர்ச்சி பணிகள் குறித்து அறிவிப்பு பலகை

மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்,
உதகை.

செயற்பொறியாளர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதகை.

அய்யா / அம்மையீர் அவர்களுக்கு

வணக்கம்,  பல்வேறு அரசு உள்ளாட்சி அமைப்புகள் துவங்கும் வளர்ச்சி பணிகள் குறித்து அறிவிப்பு பலகை பணி  மேற்கொள்ளும் இடங்களில் வைக்க வேண்டும் எனவும்

வளர்ச்சி பணி  மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்த நபர் தவிர  இரண்டாம் நபர், மூன்றாம் நபர் ஒப்பந்த பணியை மேற்கொள்ள கூடாது எனவும் கடந்த நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தபட்டது.  

கூட்டத்தில் தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலரும் இரண்டாம் நபர்கள் பணிகள் மேற்கொள்ள் கூடாது எனவும் ஒப்பந்தம் எடுத்த நபர்தான் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் குந்தலாடி பகுதியில் தற்போது கூடலூர் ஊராட்சி மூலம், மேற்கொள்ளும் பணிகள் குறித்த அறிவிப்பு பலகை வைக்க படவில்லை,

மேலும் மூன்றாம் நபர் தான் இந்த பணியை செய்து வருகின்றார் எனவும் புகார் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

ஆதார் எண் இணைப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

பந்தலூரில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் மேற்க்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பந்தலூர் மகளீர் தையல் பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது, வாக்களர் பட்டியலில் அளிக்க வேண்டிய தகவல்கள் மற்றும் ஆதார் எண் இணைப்புக்கான வழிமுறைகள் குறித்து பேசினார்.  நிகழ்ச்சியல் பந்தலூர் மகளீர் தையல் பயிற்சி மைய மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. நிகழ்ச்சியில் ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகி ஜான்சி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் தணிஸ்லாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். (புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது 2 ஆதார் எண் வாக்காளர் பட்டியலில் இணைப்பது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு சிவசுப்பிரமணியம் பேசினார்)

குடிமக்கள் நுகர்வோர் மன்றம் குறித்து - பள்ளி கல்வி துறை கையேட்டில் - தகவல் இடம் பெறாமை.

பெறுனர்
உயர்திரு ஆணையர் அவர்கள்.
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை,
சென்னை.

பொருள்:     குடிமக்கள்  நுகர்வோர் மன்றம் குறித்து -  பள்ளி கல்வி துறை
கையேட்டில் - தகவல் இடம் பெறாமை.  இடம் பெற
செய்ய நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக.

அய்யா அவர்களுக்கு வணக்கம்,
  
உணவு பொருள் வழங்கல்  மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வழிகாட்டுதலோடு பல்வேறு பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் செயல்பட்டு வருகின்றது.  பள்ளிகளில் தேசிய பசுமை படை, நாட்டு நலப்பணி திட்டம், சாரனார் இயக்கம். இளம் செஞ்சிலுவை சங்கம் என்பன உள்ளிட்ட பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.  
  
இவை பற்றிய தகவல்கள்  பள்ளி கல்வி துறை சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்படும் செயல்பாட்டு  கையேட்டில் இடம் பெற்றுள்ளன. ஆனால் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் அதன் செயல்பாடுகள் குறித்து பள்ளிகளுக்கு வழங்கபட்டுள்ள கையேட்டில் இடம்பெற வில்லை.  இதனால் பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்திற்கான முன்னுரிமை அளிக்கபடுவதில்லை.
  
பல பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்க இதனை காரணம் காட்டி மறுப்பு தெரிவித்து வருகின்றன.  இதனால் பள்ளிகளில் நுகர்வோர் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த முடிவதில்லை.  
  
எனவே பள்ளி கல்வி துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும்  பள்ளி செயல்பாடுகள் குறித்த கையேட்டில் குடிமக்கள்  நுகர்வோர் மன்றம் செயல்பாடுகள் குறித்த தகவலும் இடம் பெற செய்ய வேண்டும் என கேட்டு கொள்கின்றோம்.
  
மேலும் இதுவரை நுகர்வோர் மன்றம் துவங்க படாத பள்ளிகளில் நுகர்வோர் மன்றம் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,ஏற்கனவே  துவங்கப்பட்ட நுகர்வோர் மன்றத்தின் செயல்பாடுகள் முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
  
இப்படிக்கு

அங்கிகாரம் இல்லாத கல்வி நிலையங்கள் பொதுமக்கள் பணம் வீண்

அங்கிகாரம் இல்லாத கல்வி நிலையங்கள்
பொதுமக்கள் பணம் வீண்
மாணவர்கள் கல்வி பாதிப்பு
பல்வேறு பகுதிகளில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் மேற்கல்வி தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு கல்வி என கூறி ஏதேதோ பாட பிநூந்வுகளை நடத்துகின்றன. இவை படித்தபின் வேலை வாய்ப்பை தருமா என்பது மிக பெரும் கேள்வி குறியே,  இந்த படிப்புகள் பின்னனி என்ன
அரசு அங்கிகாத்த தொழிற்படிப்புகள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களிலேயே நடத்தப்படுகின்றது.  அதற்கு பல்வேறு விதிமுறைகள், கட்டிட அமைப்பு முறைகள், வகுப்பறைகள்,  செயல்முறைக்கான பயிற்சி வசதிகள் (லேப்), கழிப்பிடம், தகுதியான ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் என பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.  ஆண்டுதோறும் இவை புதுபிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உண்டு.  ஆனால் எந்தவித அரசு அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் அரசு அங்கிகரிக்காத பாட பிரிவுகளை உடனடி வேலை வாய்ப்பு தரும் கல்வி என கூறி பலரும் தனியாக கல்வி நிலையத்தை துவக்கி செயல்படுத்தி வருகின்றனர்.  இவற்றில் படித்தவர்கள் பலரும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் தங்களுக்கு கிடைக்கும் குறைந்த சம்பள வேலைக்கே சென்று வருகின்றனர்.  போன பணம் போகட்டும் என்று தனது நிலையை என்னி வருந்தி கொண்டு இருப்பது தான் மிச்சம்.
அங்கீகாரம் உள்ள படிப்புகள்  ஆசிரியர் படிப்பு  அரசு ஆசிரியர்  பயிற்சி கல்வியியல் துறை சார்பில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் படிப்புகள் இவை இரண்டாண்டு கல்வியியல் பட்டய படிப்பு இவற்றை படித்தால் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் கல்வி தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி, மற்றது பி எட் எனப்படும் கல்வியியல் பட்ட படிப்பு இது கல்வியியல் கல்லூ ரிகளில் படிக்கலாம் இதற்கு கல்வி தகுதி இளங்கலை பட்ட படிப்பு இவை தவிர பிற ஆசிரியர் பயிற்சிகள் அரசால் ஏற்றுக்கொள்வதில்லை என்பது குறிப்பிட  தக்கது.  
நர்சிங் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற நர்சிங் பயிற்சி மட்டுமே அரசு மருத்துவமனை மற்றும் இதர தனியார் மருத்துவமனையில் நர்சிங் பணிக்கு சேர்த்துக்கொள்ளப் படுகின்றது நர்சிங் கவுன்சில் அனுமதி இல்லாத நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்களை ஏற்றக்கொள்ள முடியாது என சமிபத்தில் நடைப்பெற்ற வழக்கில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
அரசு வேலை வாய்ப்பு மற்றும் முக்கிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பல்கலைகழகம் ஆகியன நேரடியாக வழங்கும் சான்றுகள் மட்டுமே செல்லுபடியாகும்.  இதர சான்றுகள் பயன்அளிக்காது என்பது குறிப்பிட தக்கது.  எனவே அரசு வழங்கும் சன்றுகள் பெறும் படிப்புகளை தேர்வு செய்து படித்தால் அதற்கான செலவு செய்த பணம் பயணளிக்கும்.  இல்லையேல் வீனாகும் எனவே அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலை கழகம் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் படிப்பை தேர்வு செய்வது அவசியம் ஆகும்.

போக்குவரத்து கழகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்

போக்குவரத்து கழகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் நடைப்பெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உதகை மண்டல அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் நடைப்பெற்றது.  கூட்டத்திற்கு உதகை மண்டல பொது மேலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அரசால் அங்கிகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகளான கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு. சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன், புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ராஜன் ஆகியோர் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர்.  

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்வைத்த கோரிக்கைகளும் பொது மேலாளர் நடராஜன் அளித்த பதில்களும்

கேள்வி: அரசு போருந்துகளில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தவற்றை உடனடியாக மாற்ற  வேண்டும்.  பல கண்ணாடிகளில் கிளிப்புகள் உடைந்துள்ளது அதனால் கண்ணாடி  மேலே நிற்பதில்லை. 

பதில் : தற்போது கூடுதல் கண்ணாடிகள் கோவையிலிருந்து பெற்று பேருந்துகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது.  கூடுதல் கண்ணாடிகளும் வழங்கப்பட்டுள்ளது கண்ணாடிகள் உடைந்திருப்பின் அதனை குறிப்பிட்டு செல்லும் பட்சத்தில் உடனடியாக கண்ணாடிகள் பொருத்தி தரப்படும்.

கேள்வி : மழைகாலம் ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது.  தற்போது பெய்யும் மழைக்கே பல பேருந்துகள் ஒழுகுகின்றன.  விரைவில் தார்சீட்டுகள் ஒட்டவேண்டும். பக்கவாட்டில் ஒழுகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதில் : தற்போது தார்சீட்டுகள் ஒட்டும் பணி நடைபெறுகின்றது.  பதிவு புதுபிக்க வரும் போருந்துகள் தார்சீட்டு ஒட்டியே அனுப்பபடுகின்றது. 

கேள்வி : தொடர்ந்து ஓய்வின்றி ஒருசில ஓட்டுனர்கள் பேருந்தினை இயக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஓய்வின்றி ஒட்டுனர்கள் பேருந்துகளை இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது,  எனவே தொடர்ந்து ஓய்வின்றி ஓட்டுனர்கள் பேருந்தினை இயக்குவதை தடுக்க வேண்டும்.

பதில் : தற்போது ஓட்டுனர் பணியிடம் பெரும்பாலும் நிரப்பபட்டுவிட்டது.  ஒரே நாளில் பலர் விடுப்பு எடுப்பதால் ஓட்டுனர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. எனினும் பயணிகள் பாதுகாப்பு கருதி ஓய்வின்றி ஓட்டுனர் இயக்குவது தவிர்க்கப்பட்டுள்ளது.

கேள்வி : இயக்கப்படும் பல பேருந்துகள் மிகவும் பழையனவாக உள்ளதால் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றது.  இதனால் உரிய நேரத்தில் பேருந்து இயக்கப்படாமல் பொதுமக்கள் பாதிக்கின்றனர்.  பழைய பேருந்துகளை மாற்ற வேண்டும் விரைவில் பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நேரத்தில் பேருந்து இயக்குவதை உறுதிபடுத்த வேண்டும்.

பதில் :  பழைய பேருந்துகள் படிப்படியாக மாற்றப்படும்.  புதிய பேருந்துகள் பெறபட்டவுடன் அரசின் ஒப்புதல் கிடைத்தபின் அனைத்து கிளைகளுக்கும் தலா 15 பேருந்துகள் வரை புதிய பேருந்துகள் வரை வழங்கப்பட உள்ளது.  இதனால் பழைய பேருந்துகள் அனைத்தும் மாற்றி புதிய பேருந்துகள் இயக்கப்படும்.  பழுது ஏற்படும் பேருந்துகளை விரைவில் சா¢செய்து தர வசதியாக கூடலூர் கிளைக்கு புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பேருந்துகள் இயக்கம் குறித்து அவ்வப்போது போன்மூலம் தகவல் பெற்று கண்காணிக்கப்படுகின்றது.

கேள்வி : அடிக்கடி டிக்கெட் கொடுக்கும் இயந்திரம் பழுதடைந்து விடுவதால் டிக்கெட் கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றது.  இதனால் சில நேரங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல இயலாத நிலையும் ஏற்படுகின்றது.  பழைய டிக்கெட் இயந்திரங்களை மாற்ற வேண்டும்.

பதில் : படிப்படியாக புதிய டிக்கெட் இயந்திரம் வழங்கும் பணி நடைப்பெற்று வருகின்றது.  உதகை கிளைகளில் புதிய டிக்கெட் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.  தற்போது மேட்டுப்பாளையம் கிளையில் பழைய டிக்கெட் இயந்திரங்கள் மாற்றும் பணி நடைபெறுகின்றது.  அடுத்தகட்டமாக கூடலூர் கிளையில் டிக்கெட் இயந்திரங்கள் மாற்றப்படும். தொடர்ந்து அனைத்து கிளைகளிலும் டிக்கெட் இயந்திரங்கள் மாற்றபடும்.

கேள்வி : பந்தலூர் கூடலுர் வழித்தடத்திலும்,  கூடலூர் தேவர்சோலை பாட்டவயல் குந்தலாடி உப்பட்டி கூடலூர் வழித்தடத்திலும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்.
பதில் : தற்போது புதிய வழித்தடம் பேருந்து இயக்க இயலா.  அரசின் சார்பில் கூடுதல் வழித்தடத்தில் இயக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் கூடுதல்பேருந்துகள் இயக்கப்படும்

புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ராஜன் முன்வைத்த கோரிக்கைகள் அதற்கான பதில்கள் விவரம்

கேள்வி : மேட்டுப்பாளையம் கோத்தகிரி இடையே இரண்டு மணி நேரத்திற்கு மேல் பேருந்தினை இயக்கியதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.  இது குறித்து ஆய்வு செய்து ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பதில் : சம்பந்தபட்ட ஓட்டுனர் தற்போது தான் கோத்தகின்¢ கிளைக்கு மாற்றலாகி வந்துள்ளார்.  இவர் மலைப்பகுதி பேருந்து இயக்கிய அனுபவம் இல்லாததினால் மெதுவாக பேருந்தினை இயக்கியுள்ளார்.  அவர் தற்போது பயிற்சிக்கு அனுப்பபட்டுள்ளார்.

கேள்வி : பேருந்து நிறுத்தத்தில் கைகாட்டியும் பேருந்தினை நிறுத்தாமல் போவதால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பும் பயணிகள் பாதிப்பும் ஏற்படுகின்றது.  இதுபோன்று செயல்படும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதில் : பேருந்தினை கைகாட்டியும் நிறுத்தாமல் இயக்ககூடாது என பலமுறை ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  சம்பந்தபட்ட ஓட்டுனருக்கு விளக்கம் கேட்டு நோட்டிசு அனுப்பபடும் தொடர்ந்து இதுபோன்ற இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி : பேருந்துகளில் பக்கவாட்டில் உள்ள வழித்தட பெயர்களும் இயங்கும் வழித்தடமும் மாறி உள்ளதால் பயணிகள் குழப்பம் அடைவதோடு பயணிகள் நடத்தனர்களுக்கிடையே மோதல் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. எனவே பேருந்துகளில் பக்கவாட்டு வழித்தட பெயர்களை அழித்துவிட வேண்டும்.

பதில் : படிப்படியாக பேருந்துகளில் பக்கவாட்டு பெயர்களை அழிக்கப்பட்டு வருகின்றது.  பேருந்து பதிவு புதுபிக்கும் போது வழித்தட பெயர்கள் அழிக்கப்படுகின்றது.

கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் முன் வைத்த கோரிக்கைகள்

கேள்வி : அரசு போருந்துகள் டிப்போவில் இருந்து வெளியில் வரும்போது சுத்தப்படுத்தி இயக்க வேண்டும்.

பதில் : நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.  எனினும் கண்காணிக்கப்படும்.

கேள்வி : கோத்தகிரி -- குன்னூர் வழித்தடத்தில்  இயக்கப்படும் பேருந்துகள் கட்டபெட்டு பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தும் வகையில் இரவு நடையை தாமதமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

பதில் : ஓட்டுனர் நடத்துனர்களுக்கு ஓய்வு அளிக்கும் நிலையை கருத்தில் கொண்டும், பயணிகள் நலனை கருத்தில் கொண்டும் சோதனை அடிப்படையில் இயக்கப்படும் யாருக்கும் பாதிப்பு இல்லாத பட்சத்தில் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கேள்வி : ஓட்டுனர்களுக்கும் நடத்துனர்களுக்கும்  கவுன்சிலிங் வழங்கப்படுவதாக அறிந்தோம் சிலர் இன்னும் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பதில் : அனைத்து ஓட்டுனர் நடத்துனர்களுக்கும் பயணிகளிடம் கணிவாக நடந்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  சிலர் இன்னும் மாறமல் இருக்கின்றனர்.  அவர்கள் மீது அவ்வப்போது புகார் பெறப்படும்போது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.  எழுத்துமூல புகார் இருந்தால் மட்டுமே தக்க நடவடிக்கை எடுக்க முடியும் பலரும் எழுத்துமூல புகார் அளிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிட தக்கது.

கூட்டத்தில் துணை மேலாளர் கனேசன், உதகை கிளை மேலாளர் பீமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பந்தலூரிலேயே இலவச மிக்சி கிரைண்டர் சரிசெய்யும் சேவை மையத்தினை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெறுனர்

மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
உதகை

பொருள் : பந்தலூரிலேயே இலவச மிக்சி கிரைண்டர் சரிசெய்யும் சேவை
மையத்தினை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

அய்யா அவர்களுக்கு வணக்கம்

பந்தலூர் பகுதியில் செயல்பட்டு வந்த இலவச மிக்சி கிரைண்டர் பழுது நீக்கும் சேவை மையத்தினைகூடலூருக்கு மாற்றபப்பட உள்ளதாக அறிகின்றோம்.

இதனால் பந்தலூர் வட்டத்திற்குட்பட்ட சேரம்பாடி, உப்பட்டி, எருமாடு, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி,பாட்டவயல், குந்தலாடி, உப்பட்டி, பொன்னானி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் சிறிய பழுதுஏற்பட்டாலும் சுமார் 30 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் உள்ள கூடலூர் சென்று பழுது நீக்க வேண்டியநிலை ஏற்படுகின்றது.  இதனால் ஏழை எளிய மக்கள் இரண்டு மூன்று நாட்கள் வேலை இழந்து இலவச மிக்சிகிரைண்டர்களின் பழுது சரிசெய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே மாற்று ஏற்பாடுகள் செய்து பந்தலூரிலேயே இலவச மிக்சி கிரைண்டர் சரிசெய்யும் மையத்தினைதொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு

கோதுமை அதிகமாக வழங்க கேட்டல் சார்பாக.

பெறுனர்

மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
உதகை

மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்கள்
உதகை.

பொருள் : கோதுமை அதிகமாக வழங்க கேட்டல் சார்பாக.

அய்யா அவர்களுக்கு வணக்கம்

அனைத்து நியாய விலை கடைகளிலும் தற்போது கோதுமை கார்டு ஒன்றிற்கு 2 கிலோ வீதம் வழங்கப்படுகின்றதுஇதுவும்பலருக்கு கிடைப்பதில்லைஆனால் பொதுமக்கள் அதிகம் கோதுமை கேட்கின்றனர்பலர் கோதுமை கேட்டு கிடைக்காமல்செல்கின்றனர்அவர்களுக்கு கோதுமை கிடைப்பதில்லை.  கூடுதல் கோதுமை கேட்டாலும் ஒதுக்கீடு இல்லாததினால் அதிகஅளவு கோதுமை மக்களுக்கு கிடைப்பதில்லை

ஆனால் நுகர்பொருள் வானிப கழக குடோன்களில் கோதுமை இருப்பு வைக்கபப்ட்டுள்ளதாக அறிகின்றோம்.  அவைபாதுகாக்க ஒவ்வொரு முறையும் மருந்து தெளிக்கப்படுகின்றது.  எனினும் வண்டு உள்ளிட்டவை அவற்றை தின்றுசேதப்படுத்துகின்றது

இந்த கோதுமையை மக்களுக்கு வினியோகிக்கும் போது அவை பல பூச்சிகள் தின்ற கோதுமையாகவும்,  பூச்சிகளிடம் இருந்துகாக்க பயன்படுத்தபட்ட மருந்தினால்  விசத் தன்மை யோடான கோதுமையாகவும் மக்களுக்கு வினியோகிக்கப்படுகின்றதுஎனவே தரமற்ற கோதுமையை மக்களுக்கு வினியோகிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

ரேசன் கார்டுகளுக்கு ஒதுக்கீடு 5 கிலோ என்ற முழு அளவை தற்போது வழங்கினால் மக்களுக்கு அதிக அளவு கோதுமைகிடைக்கும் அதோடு குடோன்களில் கோதுமையை பாதுகாக்கும் பணியும் குறையும் நல்ல கோதுமையை மக்களுக்குவினியோகிக்கவும் முடியும்.

எனவே அய்யா அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து கார்டுதாரர்களுக்கு முழு ஒதுக்கீடான 5 கிலோ கோதுமைவழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

                                                                                                                                                                                             இப்படிக்கு

பந்தலூரில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது.




பந்தலூரில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது.


பந்தலூரில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் மேற்க்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பந்தலூர் மகளீர் தையல் பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பது, வாக்களர் பட்டியலில் அளிக்க வேண்டிய தகவல்கள் மற்றும் ஆதார் எண் இணைப்புக்கான வழிமுறைகள் குறித்து பேசினார்.  நிகழ்ச்சியல் பந்தலூர் மகளீர் தையல் பயிற்சி மைய மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. நிகழ்ச்சியில் ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகி ஜான்சி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் தணிஸ்லாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். (புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது 2 ஆதார் எண் வாக்காளர் பட்டியலில் இணைப்பது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு சிவசுப்பிரமணியம் பேசினார்)

முதன்மை கல்வி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் 3/2015



முதன்மை கல்வி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி தலைமை வகித்தார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது பல தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது நுழைவு தேர்வு எழுதவேண்டும் என கட்டாய படுத்த படுகிறது.  இவற்றை தடுக்க வேண்டும்.  அனுமதி அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்  பட்டியல்  செய்தி தாள்களில் வெளியிட வேண்டும்.  கல்வி கட்டணம் மக்கள் எளிதில் தெரிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்கள் உரிய பராமரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அனைத்து பள்ளிகளிலும் புரொஜெக்டர் சரிசெய்து தர வேண்டும் என்றார்.  
மேலும் புளுமௌண்டன் நுகர்வோர் சங்க தலைவர் ராஜன், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன் குன்னூர் நுகர்வோர் சங்க தலைவர் மனோகரன் ஆகியோர் பேசும்போது பள்ளிகளில் நுகர்வோர் மன்றம் அமைக்க வேண்டும்.  மாணவர் சேர்க்கை பல தனியார் பள்ளிகளில் தற்போது தொடங்கிவிட்டனர்  தடை செய்ய வேண்டும்,   மாணவர் சேர்க்கை கல்வி உரிமை சட்ட விதிப்படி உச்ச பட்சம் நிர்ணயம் செய்ய வேண்டும்.   என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தனர்.
முதன்மை கல்வி அலுவலர் கணேஷ மூர்த்தி பேசும்போது  அரசு பள்ளிகளில் மாணவர்கள் வாசிப்பு திறன் குறைந்த மாணவர்கள் திறன்மேம்பட  புதிய முறையில் வாசிப்பு அட்டைகள் மூலம் சிறப்பு பயிற்சி  32 நாட்கள் அளிக்கபடுகிறது.  கூடலூர் பகுதியில் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மொழிக்கும் இந்த அட்டை பயிற்சி அளிக்கபடவுள்ளது. இது அரசு பள்ளிகளில் மட்டும் மேற்கொள்ளபடுகிறது.  தினசரி செய்தி தாள்கள் வாசிப்பு பழக்கம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.  அரசு பள்ளிகளில் வரும் கல்வி  ஆண்டு முதல் 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் கணினி பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.  மாணவர் சேர்க்கைக்கு  கட்டிடதகுதி சம்பந்தபட்ட வட்டாட்சியர் மூலம் பெற்று அதன் அடிப்படையில் ஆங்கில வழி கல்விக்கு ஒரு பிரிவும், தமிழ் வழி  கல்விக்கு மூன்று பிரிவுகளும் அனுமதி வழங்க படுகிறது.  கல்வி உரிமை சட்டப்படி 30 முதல் 40 மாணவர்கள் வரை சேர்க்கைக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.  ஒரே வகுப்பறையில் அதிக மாணவர்கள்  வைத்தால் அப்பள்ளி மிது நடவடிக்கை எடுக்கப்படும்.  மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தகூடாது. புகார் பெறபட்டால் அப்பள்ளிகள் மிது கடும் நடவடிக்கை எடுக்கப் படும். அனைத்து பள்ளிகளிலும் தமிழ்  கட்டாயம் படிக்க வேண்டும் என அரசு ஆணையிட்டு உள்ளது.  நீலகிரியில் 71  பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ளது.   தற்போது CBSC  ICSC பள்ளிகளும் பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.   அவற்றின் அங்கீகாரம் படிவங்கள் இயக்குனருக்கு அனுப்பட்டுள்ளது.  நுகர்வோர் மன்றம் அமைக்க பட்ட பள்ளிகளில் தொடர்ந்து கூட்டம் நடத்த அறிவுரைகள் வழங்கபடும்.   ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் மூலம் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது அது முழுமையாக மாணவர்களிடையே சென்று சேரும்.  அரசு சார்பில் கல்வி மேம்பாட்டிற்கு  பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.   இவை மக்கள் பயன் படுத்தி மாணவர்களை அரசு பள்ளிகளில்  சேர்க்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் முதன்மை கலவி அலுவரரின் நேர்முக உதவியாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பந்தலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் 31.01.2015


பந்தலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பந்தலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை  தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மைய  செயலாளர் பொன் கணேசன்,  ஷாலோம் சேரிட்டபிள் டிரஸ்ட் செயலர் சுப்பிரமணி, மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், சமுக ஆர்வலர்கள் காளிமுத்து செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பந்தலூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் கணேஷன் முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் அமராவதி ராஜன்   உதகை அரசு மருத்துவமனை கண் மருத்துவ குழுவினர் கண் நோயினால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 150.கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  இதில் 20 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் முகாமில் சேவை புரிந்தனர்.
முகாமில் கண் தொழில் நுட்புனர் கலாவதி ஸ்ரீதர், கூடலூர்  நுகர்வோர் மைய துணை தலைவர் செல்வராஜ், மைய ஒருங்கிணைப்பாளர் தனிஸ்லாஸ், மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகி  சந்திரன்,  மருத்துவமனை உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


















கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

















pls visit our webs http://cchepnlg.blogspot.in http://cchepeye.blogspot.in http://consumernlg.blogspot.in

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...