கேபிள் இணைப்பு கட்டணத்துக்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்க வேண்டும்,

கூடலூர் :"நுகர்வோர்களிடம் வசூல் செய்யும் கேபிள் இணைப்பு கட்டணத்துக்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் மாவட்ட கலெக்டருக்கு  அனுப்பியுள்ள மனு:

கடந்த 2011 ஆண்டு முதல் மாநில அரசு,கேபிள் கார்ப்பரேஷன் துவங்கி குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவை வழங்கி வருகிறது. "கேபிள் இணைப்புக்கு மாத கட்டணம் 70 ரூபாய் வசூல் செய்து, அதில் 20 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும்; முதலில் 90 சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும்,' என தெரிவிக்கப் பட்டது. தற்போது 120 சேனல்கள் வரை  வழங்க அரசு வலியுறுத்தி வருகிறது.  
ஆனால், பல பகுதிகளில் குறைந்த சேனல்கள் வழங்குவதுடன், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு பதில் மாதம் 100 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பல பகுதியில் இதே நிலை தொடர்கிறது. இவ்வாறு வசூல் செய்யப்படும் கட்டணத்துக்கு ரசீது வழங்க வேண்டும் என தமிழ்நாடு கேபிள் டிவி கழகம் அறிவுறுத்தி அதன் மாதிரியும் அனைத்து ரேசன் கடைகளிலும் ஒட்டி வைக்க பட்டுள்ளது ஆனால் இதுவரை யாரும்  ரசீது  வழங்குவதில்லை.  பல செய்தி சேனல்கள் மற்றும் விளையாட்டு சேனல்கள் இருட்டிப்பு செய்யப்பட்டு ஒளிபரப்ப படுகிறது.  உள்ளூர் சேனல்கள் அதிக அளவில் ஒளிபரப்பபடுகிறது. 
எனவே, நீலகிரியில் செயல்படும் அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்து, அதற்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்கவும்; அனைத்து சேனல்களையும் முறையாக ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதே செயல்கள் தொடரும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப்படும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.



கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...