தேயிலை தேநீர் தரம் மற்றும் மருத்துவ பயன்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு

தேயிலை தேநீர் தரம் மற்றும் மருத்துவ பயன்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு  

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/





















கூடலூர் பாத்திமா  பெண்கள்  மேல்   நிலை பள்ளியில் தேயிலை தேநீர் தரம் மற்றும் மருத்துவ பயன்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு  நடைபெற்றது தென்னிந்திய தேயிலை வாரியம் குன்னூர், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில்   நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் உதவி மண் வள பாதுகாப்பு அலுவலருமான  சுந்தர லிங்கம் தலைமை தாங்கினார்.  நிகழ்ச்சியை கூடலூர் குடிமை பொருள் தனி வட்டாச்சியர் முத்து  துவக்கி வைத்தார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்து பேசும்போது இந்தியாவில் 83 சதவீத மக்கள் தேநீரை குடிக்கின்றனர்.  இதில் நல்ல சுவை மிகுந்தது நீலகிரி தேயிலை.  இந்த பெயரை தக்க வைத்து கொள்ள கலப்பட தேயிலையை கண்டறிந்து களைவது  அவசியமாகிறது.  கலப்பட தேயிலை கண்டறிந்தால் மாணவர்கள் புகார்  தெரிவிக்க வேண்டும் என்றார்.

தேயிலை வாரிய உதவி இயக்குனர்  C .K  ரமேஷ் பேசும்போது   தேயிலை தற்போது வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற வகையான தேயிலைகள் தயாரிக்க படுகின்றன.  தேநீர் அருந்துவதால்  உற்சாகம் கிடைகிறது, நரம்பு மண்டலம் சீரிய முறையில் செயல்படுகிறது, இதயத்தினை பலபடுத்துகிறது,  மாணவர்கள் அதிகம் தேநீர் அருத்துவதால் படிப்பில்  கவனம் செலுத்துவதோடு நினைவாற்றலும் பெருகும், எலும்புகளை ஊக்க படுத்துகிறது இதுபோன்று  பல்வேறு பயன்கள் நமக்கு கிடைக்கிறது.  அனைத்து வகையான தேநீரும் ஒரே மாதிரியான பயன்களை தருகிறது.  அனைவரும் தேநீரை அருந்தலாம் என்றார்.

தேயிலை வாரிய தொழிற்சாலை அலுவலர் சுனில்குமார் பேசும்போது இந்தியா, சீனா, இலங்கை, Uk, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தேயிலையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.  தேயிலை சட்டத்தில்  தேயிலை துளில் கலப்படம் செய்வது தண்டனைக்குரியது என குறிப்பிடபட்டுள்ளது .  தேயிலையில் கலப்படம் இருப்பின் பச்சை தண்ணீரில் சாயம் வருவதன் மூலமும்,  வெள்ளை பேப்பரில் சாயம் படிவத்தை வைத்தும் கண்டறியலாம்.  மேலும் உள்ளங்கையில் தேயிலை துளை வைத்து கசக்கி பின்னர் முகரும் போது தேயிலையின் வாசனை வரும் இதனை வைத்தும் தரமான தேயிலையை அறியலாம்.  என்றார்.

உதவி மின் செயற் பொறியாளர் முரளிதரன் பேசும்போது  இன்றைய மாணவர்கள் ஐஸ் கிரிம், மற்றும் குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர்.   இவற்றில் சேர்க்கப்படும் சேர்மங்கள் உடலுக்கு தீமை விளைவிக்க கூடியது.  எனவே இவற்றை தவிர்த்து தரமான தேயிலையை பயன்படுத்த வேண்டும் என்றார்.

கூடலூர் மருத்துவ அலுவலர் விவேக் பேசும்போது தேயிலையினை நன்கு கொதித்த நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து குடிக்கலாம்.  தேநீரை பால் சேர்க்காமல் குடிப்பதும்,  சர்க்கரைக்கு பதில்  தேன் அல்லது வெல்லம் கலந்து அருந்துவது அதிக பலனை தரும்.  தொடர்ந்து தேநீர் அருந்துவதால்  எடைகுறையும். கொழுப்பு சத்து குறையும் என்றார்.

நிகழ்ச்சியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்த பட்டது.  கூடலூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராபெர்ட், பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி மேரி, பள்ளி தாளாளர் எலிசபெத், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுவீட்டி, கவிஞர் கந்தசாமி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயலாளர் மாணவி சங்கீதா வரவேற்றார்.  முடிவில் கூடலூர் நுகர்வோர் மைய செயலாளர் பொன் கணேஷன் நன்றி கூறினார்.






No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...