பாதுகாப்பு இல்லாமல் விற்கப்படும் மீன்களை கணிக்கணிக்க வேண்டும்

பெறுனர்

மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
நீலகிரி மாவட்டம்.

மாவட்ட உணவு பாதுகாப்பு தர நிர்ணய அலுவலர்,
உதகை மண்டலம்.




அய்யா அவர்களுக்கு வணக்கம்
நீலகிரி மாவட்டத்தில் சுகாதார   பாதுகாப்பு  இல்லாமல்  விற்கப்படும்  மீன்களை  கணிக்கணிக்க  சுகாதாரத்துறை  அதிகாரிகள்  நடவடிக்கை  எடுக்கவேண்டுமென  கேட்டுக்கொள்கின்றோம்.
       அதிக  சுவைக்காகவும், அதிக  லாபத்திற்காகவும்  உணவு  பொருட்களில்  கலப்படங்கள்  சேர்ப்பது  முழுமையாக  கட்டுபடுத்த  முடியாத  நிலையே மாவட்டத்தில்  காணப்படுகிறது. உணவு    பாதுகாப்பு  துறை  அதிகாரிகள்   நடத்தப்படும்  சோதனைகள்  மேற்கொள்ளும்  நடவடிக்கைகள்  குறிப்பிட்ட  அளவில் பலன்  தராத  நிலையே  காணப்படுகிறது.  
பாக்கெட்  பொருட்களில்  உற்பத்தி  நாட்கள்  பார்த்து  நடவடிக்கை  எடுக்கும்  அதிகாரிகள்  அனைத்து  உணவு  பொருட்களும்  பாதுகாப்பாக விற்கப்படுகிறதா  என்ற  முறையான  கண்காணிப்பு  தேவை.
இதுபோன்று   மாவட்டத்தில்   மீன்   விற்பனைக்கு  எந்தவித  கண்காணிப்பும்  அதிகாரிகள்  மேற்கொள்வதில்லை  என்ற  குற்றச்சாட்டு  பரவலாக  உள்ளது.
மாவட்ட    மக்கள்  விரும்பி சாப்பிடும்  உணவு  வகைகளில்  ஒன்றாக  மீன்  உள்ளது. சத்தான  மீன்  உணவு  கலப்படம்  சேர்க்கப்பட்டால்  உடம்பிற்கு  மிகுந்த  ஆபத்தையும்  உருவாக்கும். சாதாரணமாக  மாவட்டத்தில்  மீன்  வியாபாரத்தை  கூடுதலாக  அதிகாரிகள்  கண்காணிப்பதில்லை. இதனால்  மீன்  அதிக  நாட்கள்  கெட்டுப்போகாமல்  பாதுகாக்க  ரசாயன  பொருட்களை  கலக்கும்    அவலம்  அதிகரித்து  வருகிறது.
முன்  காலங்களில்   ஒருநாள்   விற்பனையில்  மீதிவரும்  விற்கப்படாத  மீன்களை  அழித்துவிடும்  பழக்கத்தை  மீன்  வியாபாரிகள்  கடைபிடித்து  வந்தனர்.  ஆனால்  தற்போது  மீதிவரும்  மீன்களை  அமோனியா  கலக்கப்பட்டு  பாதுகாத்து  பல  நாட்கள்  விற்கப்படுகிறது.
கேரளாவில் மீதமான மீன்கள் மாலை நேரங்களில் வாகணங்கள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கூறி கூவி கூவி விற்கின்றனர்.  பண்டிகை கலங்களில் விற்பனை  செய்ய  மொத்த  வியாபாரிகள்  முன்கூட்டியே  இம்முறையில்  மீன்கள்  அதிக  அளவில்  பாதுகாத்து  வைக்கின்றனர். சிலர்  அமோனியா  தூளும்,  மாற்றுச் சிலர்  அமோனியா  கலக்கப்பட்ட  தண்ணீரை  ஐஸ்  கட்டைகளாக  மாற்றப்பட்டு  மீன்களை  பாதுகாக்கின்றனர்.
நம்  அண்டை  மாநிலத்தில்  இடையிடையே  சோதனைகள்  நடத்தப்பட்டு  இதுபோன்ற  மீன்கள்  அழிக்கப்படுகின்றன. ஆனால்  நம்  மாவட்டத்தில்  உணவு  பாதுகாப்பு  அதிகாரிகளோ, சுகாதார  துறையினரே  அவலத்தை  கண்டு கொள்வதில்லை.
இதனால்  சுகாதாரமற்ற  மீன்களை  சாப்பிடும்  பொதுமக்களுக்கு  நோய்கள்  உருவாகிறது. மிகவும்  ஆபத்தான  நிலைக்கு  நிலைமை  மாறிவரும்  உண்மையை  உணர்ந்து  சம்பந்தப்பட்ட  அதிகாரிகள்  நடவடிக்கை  எடுக்கவேண்டும். 
மழைக்காலம்  தொடரும்  நிலையில்  உணவு  பொருட்களில்  கலப்படம்  கூடுதல்  பாதிப்புகளை  ஏற்படுத்தும்  ஆகவே  சம்பந்தப்பட்ட  அதிகாரிகள்  தகுந்த  நடவடிக்கை  எடுக்க  முன்வரவேண்டும்  என  பொதுமக்கள்  கோரிக்கை  வைக்கின்றனர்.
மாவட்ட  நிர்வாகம்  மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரும் உரிய ஆய்வுகள் மற்றும்  கண்காணிப்பிற்கும்  முன்வர வேண்டும்.  

S. Sivasubramaniam  President
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - (CCHEP_NLG)
PANDALUR, PANDALUR (Po & Tk)   THE NILGIRIS  643 233.
94 88 520 800 - 94 88 315 600  94 88 315 600   -  944 29 740 75  -
Facebook:   http://facebook.com/cchepnilgiris

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...