பெறுனர்
பொது மேலாளர் அவர்கள்,
த.ந.அ.போ.கழகம்,
உதகை மண்டலம்.
பொருள்: உதகை மண்டலம் போக்குவரத்து கழக குறைபாடுகள்
கோரிக்கைகள் / நிறைவு செய்ய கேட்டல் சார்பாக.
அய்யா அவர்களுக்கு வணக்கம்
நமது போக்குவரத்து கழக
குறைபாடுகளை குறித்து அளிக்கும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து தந்து உதவியமைக்கு
நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சில கோரிக்கைகள் இதன்மூலம்
சமர்பிக்கின்றோம் அவற்றுக்கும் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றி தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
1.
கூடலூர்
கிளை
கழகத்தில் இயக்கப்படும் பல பேருந்துகள் ஒழுகுகின்றன. இதனால் பயனிகள்
மிகவும் சிரம்மப்படும் நிலை ஏற்படுகின்றது. ஓட்டுனர் நடத்துனர்கள் ஏற்கனவே
புகார் பதிவு செய்து
கிளை கழகம் மூலம் மேற்படி நடவடிக்கை எடுக்க வில்லை என்ற புகாரும் உள்ளது.
பயனிகள் நலன் கருதி அனைத்து பேருந்துகளும் ஒழுகுதல்
குறித்து ஆய்வு செய்து ஒழுகும் பேருந்துகளை மேற்கூரை ஒட்டி தந்து உதவுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
2.
சில
பேருந்துகள் பக்கவாட்டு கண்ணாடிகளில் ஒழுகுகின்றன. இவற்றுக்கு மேற்பகுதி கண்ணாடியில் உள்ள வயர் சேதமடைந்து
உள்ளது ஒரு காரணமாகும். இதற்கு புட்டி எனப்படும்
பசையினை ஒட்டினால் ஒழுகுவது குறைக்க்ப்படும் என கருதுகின்றோம் தக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
கூடலூர்
போக்குவரத்து கழிப்பிடம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது என்பது வேதனை அளிக்க கூடியதாக
உள்ளது. உள்ளே வெளிச்சம் இல்லை. உடைந்த நிலையில்
உள்ளது. துர்நாற்றம் வீசுகின்றது. உள்ளே செல்பவர்களுக்கு நோய்கள் இலவசம் என்ற நிலை
உள்ளது. ஆனால் கட்டணம் ரூ,5 கட்டாயம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இவற்றை
சரிசெய்ய வேண்டும்.
3.
இதே
நிலை உதகை போக்குவரத்து கழக கழிப்பிடமும் இதே நிலை உள்ளது. கதவுகள் இல்லை. பெண்கள் பகுதி மிகவும் துர்நாற்றம்
வீசுவதாகவும் பெண்கள் தரப்பில் புகார் கூறுகின்றனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.
சில
ஓட்டுனர் நடத்துனர்கள் மாணவ மாணவிகளிடம் தரக்குறைவாக பேசுவதாக தொடர்ந்து புகார்கள்
வருகின்றன. எங்களிடம் புகார் தெரிவிப்பவர்கள்
மீது சம்பந்தபட்ட கிளை கழகத்தில் புகார் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்நிலை வெவ்வேறு பகுதிகளிலும் தொடர்வதால்
இதுகுறித்து ஓட்டுனர் நடத்துனர்கள் கலந்தாய்வு கூட்டங்களில் ஆலோசனை வழங்க கேட்டுக்கொள்கின்றோம்.
இந்நிலை
தொடரும் பட்சத்தில் சம்பந்தபட்ட ஓட்டுனர் நடத்துனர் குறித்து புகார்கள் தர தயாராக உள்ளோம்
என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கினறோம்.
5.
பந்தலூர்
பகுதியில்
கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து
செல்கின்றன. ஆனால் 5 நிமிடங்களாவது நின்று செல்ல நடவடிக்கை எடுக்க
வேண்டும். இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருப்போருக்கு
பயன் அளிக்கும். பேருந்து நிலையத்தில் நேரக்காப்பாளர்
வெளிபக்கம் இருப்பதால் பேருந்துகள் வயிற்பகுதியிலோயே நிறுத்தி கையெழுத்து
போட்டுவிட்டு
வருகின்றனர் இதனால் பேருந்து உள்பகுதியில் நிற்பதில்லை என்ற குற்றச்சாட்டு
எழுகின்றது. எனவே, நேரக்காப்பாளர் உள் பகுதியில் அமர ஏதுவாக
இடம் அமைத்து தர நெல்லியாளம் நகராட்சிக்கு தங்கள் துறை சார்பான கடிதம்
மூலம் கோரிக்கை
வைத்து நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக அமையும்.
6.
பந்தலூர்
பேருந்து நிலையத்தில் இருந்து இரவு தங்கி காலையில் கோவை அல்லது திருப்பூர் உதகை பகுதிக்கு
பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7.
பந்தலூர்
வழியாக
பாட்டவயல் அய்யன்கொல்லி வழித்தடத்தில் காலை 6.15 மணிக்கு கூடலூரில்
இருந்து
பாட்டவயலுக்கு சென்றால் இதே வழித்தடத்தில் அடுத்தாக 9.30 மணிக்கு தான்
அடுத்த நடை இயக்கப்படுகின்றது. பந்தலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில்
உள்ள கூலி
வேலை மற்றும் பல்வேறு தேவைகளுக்கு பாட்டவயல் மற்றும் கேரளா மாநிலத்திற்கு
செல்லக்கூடியவர்கள்
இந்த பேருந்தையே அதிகம் நம்பி உள்ளனர். இதனால்
இந்த பேருந்தில் அதிக கூட்டம் ஏறி செல்கின்றது.
பலரை ஏற்றி செல்ல இயலாத நிலையும் உள்ளது.
பலரும் தனியார் வாகணங்களிலேயே செல்லும் நிலை உள்ளது.
அதுபோல
பாட்டவயல் பகுதியில் இருந்து பொன்னானி பந்தலூர் வழியாக கூடலூருக்கு காலை 7 மணிக்கு
பின் 9 மணிக்கே பேருந்து உள்ளது. இதனால் இரு
பேருந்துகளிலும் பலர் ஏறிச்செல்கின்றனர். இதிலும்
பல நேரங்களில் பொன்னானி , நெல்லியாளம், உப்பட்டி உள்ளிட்ட சில நிறுத்தங்களில் பயனிகளை
ஏற்றமுடியாமல் செல்லும் நிலையே உள்ளது.
எனவே
இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்து ஒன்றினை காலை 6.45 மணியளவில் கூடலூரில் இருந்து
பந்தலூர் வழியாக பாட்டவயல் வரை இயக்கி மீண்டும் இப்பேருந்து பந்தலூர் வழியாக இயக்கினால்
பலர் பயன்பெறுவார்கள் இதற்கான நடவடிக்கை எடுக்க
வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
8.
வழித்தடத்திற்கு
ஒதுக்கிய
பல பேருந்துகள் உரிய வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் வேறு
பேருந்துக்காக காத்திருந்து பல நேரங்களில்
பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படாமல் பயணிகள் பெரிதும் பாதிக்கும்
நிலை உள்ளது. எனவே வழித்தடத்திற்கு ஒதுக்கிய பேருந்துகளை இயக்க
வேண்டும் எனவும்
9.
பேருந்துகள்
பழுது என நிறுத்தும் பேருந்துகள் பல வேறு வழித்தடத்திற்கு மாற்றி இயக்கப்படுகின்றதே
தவிர பழுது முறையாக சரிசெய்ய படுவதில்லை. இதனால்
பேருந்துகள் விரைவில் அதிகமாக பழுதடையும் நிலையே உருவாகி வருகின்றது. எனவே குறிப்பிட்ட பழுதுகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
10.
மாற்றுப்பேருந்துகள்
கூடலூர் கிளைகழகத்தில் உள்ளதா--? இருப்பின் பல நேரங்களில் பேருந்து இல்லாமல் வழித்தட
பேருந்து இயக்கப்படாமல் உள்ளது குறிப்பிடதக்கது.
மாற்றுப்பேருந்துகள் உரிய பராமரிப்பு செய்து வழித்தட பேருந்து பழுதடையும் போது
மாற்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11.
பேருந்துகள்
உள்பகுதியில் சேரும் குப்பைகள் அடிக்கடி கூட்டி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12.
சமீபத்தில்
பேருந்து
படிக்கட்டு உடைந்து அதிர்ஷ்டவசமாக பயனிகள் பாதிப்பின்றி தப்பித்தனர்.
எனவே பேருந்துகளில் உள்ள படிக்கட்டுகள், உள்பகுதியில்
உள்ள பலகைகள் தரத்தினை அவ்வப்போது பரிசோதிப்பதன் மூலம் பெரும் வகையிலான
விபத்து தடுக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13.
முதலுதவி
பெட்டிகளில் மருந்துகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
14.
அவசர
கால
வழி சில பேருந்துகளில் திறக்க இயலாமல் உள்ளது. சில பேருந்துகளில் கயிறு
கட்டப்பட்டுள்ளது. இரு நிலைகளையும் மாற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில்
அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
15.
உதகை
மத்திய பேருந்து நிலையத்தில் முன்பகுதியில் உள்ள குழிகளை அகற்றி புதுப்பித்திட நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம்
தலைவர்,
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
மின்
நுகர்வோர் குறை தீர் மன்ற உறுப்பினர், நீலகிரி மின் பகிர்மான வட்டம்
No comments:
Post a Comment