புகார் மனு தயாரிப்பது எப்படி

Consumer Court case apply

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு புகார் மனு தயாரிப்பது   எப்படி !
*****************************

முதலில் யார் மீது வழக்கு தொடரப்போகிறீர்களோ அவருக்கு ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பவேண்டும். (இது பற்றி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்). நோட்டீஸை பதிவுத்தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம். அதன் பின் அவர் எவ்வித பதிலும் தராவிட்டால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் முறைப்படி புகார் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இனி புகார் மனுவை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். கீழே மாதிரி கொடுக்கப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
சென்னை வடக்கு
( உங்கள் பகுதி மாவட்ட மன்றத்தின் ஊரை குறிப்பிட வேண்டும்)

Complaint No..............of 2015

உங்கள் பெயர்
-----------------------------------
---------------------------
( முழுமையான முகவரி)                                                     மனுதாரர்
                                                                   Vs.

( 1 ). பெயர்,
        -----------------------------------
       -------------------------------
    ( முழுமையான முகவரி)
(2). பெயர்.
      -----------------------------------------
      ----------------------------------                                   எதிர் மனுதாரர்
      ( முழுமையான முகவரி)

(ஏதிர் மனுதார்கள் அனைவரையும் 1,2 என வரிசை கிரமத்தில் குறிப்பிடவேண்டும்)

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 12-ன் கீழ் சமர்ப்பிக்கப்படும் மனு                           

1. அறிமுகம். (Introduction)   உங்களை பற்றியும், எதிர்மனுதாரர்/மனுதாரர்களை பற்றி குறிப்பிடவேண்டும்,
   
  2. பரிவர்த்தனை(Transaction)   உங்களுக்கும் எதிர் மனுதாரருக்கும் இடையே நடைபெற்ற சேவை அல்லது விற்பனை சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையை குறிப்பிட வேண்டும்.

  3. குறைபாடு (Deficiency)    விற்பனை அல்லது சேவையில் இருந்த குறைபாடுகளை தெளிவாக விளக்க வேண்டும்,

  4.  சரி செய்ய மேற்கொண்ட முயற்சிகள்(Rectification)   உங்கள் புகார் தொடர்பாக எதிர்மனுதாரரை நேரடியாக தொடர்பு கொண்டது, கடிதம் அனுப்பியது , லீகல் நோட்டீஸ் அனுப்பிய விபரங்களை குறிப்பிட வேண்டும்.

5.  இதர சட்ட பிரிவுகள் (Other provisions)    உங்களது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டு. வேறு சட்டங்களின் படி குற்றமாக இருக்குமானால் அது பற்றிய விபரம்.

6.  ஆதாரங்கள்(Evidence)  உங்கள் குற்றச்சாட்டை நிருபிக்க கூடிய ஆதாரங்களாகிய பில்,ரசீது, வாரண்டி, கேரண்டி கார்டு, கடிதம் போன்ற ரிக்கார்டுகள் மற்றும் சாட்சிகள் விபரம் இவற்றைகுறிப்பிடவேண்டும் . அவற்றின் நகல்களில் / உண்மை நகல் / என நீங்கள் ஒவ்வொன்றிலும் கையொப்பமிட்டு இணைப்பு ஆவணமாக சேர்க்க வேண்டும்.

7.   அதிகார எல்லை (Jurisdiction)   நீங்கள் வசிக்கும் பகுதி வழக்கு தொடரப்போகும் நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் எல்லைக்குள் இருக்க வேண்டும். அதைப்போல நீங்கள் கேட்கும் நஷ்ட ஈடு ரூபாய் 20 லட்சத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும். இதை இப்பகுதியில் குறிப்பிட வேண்டும்.

8.    காலக்கெடு ( Limitation)    உங்கள் புகார் சம்பந்தமான பரிவர்த்தனை நடந்து இரண்டு ஆண்டு காலக்கெடுவிற்குள் உங்கள் மனு தாக்கல் செய்யப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும்.

9.  கேட்கப்படும் நிவாரணம் (Relief claimed)    இப்பகுதியில் குறைபாடான சேவையை சரி செய்தல், குறைபாடு உள்ள பொருளை மாற்றி கொடுத்தல், அதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கான நஷ்ட ஈடு, அதை கணக்கிட்ட முறை, போன்ற தாங்கள் விரும்பும் நிவாரணத்தை குறிப்பிட வேண்டும்.

10.  வேண்டுதல் (Prayer)   ” மதிப்பிற்குறிய இந்த நுகர்வோர் குறைதீர் மன்றம் கீழ்கண்ட நான் கோரும் நிவாரணங்களை வழங்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்” என உங்கள் வேண்டுதல்களை தெளிவாக எழுத வேண்டும்.

இடம்;                                                                                                   -----------------------
நாள்:                                                                                                        ( கையொப்பம்)
                                                                                                                      மனுதாரர்
                                                                                                                 (Party in Person)

Verification

(உங்கள் பெயர்) என்ற மனுதாரராகிய நான், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எனது புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவைகள் அனைத்தும் உண்மையானது என்றும், எந்த ஒரு உண்மையும் மறைக்கப்படவில்லை என உறுதியளிக்கிறேன்.
இடம்                                                                                                            -----------------------
நாள்:                                                                                                                     மனுதாரர்
-------------------------------------
=======
நுகர்வோர் நீதிமன்றங்கள் கீழ்கண்ட நிவாரணங்களை வழங்கி உத்தரவிடலாம்.

(1) விற்கப்பட்ட பொருளில் உள்ள குறைகளை அகற்றுதல்

(2) மாற்றுப் பொருள் தருதல்

(3) பொருளின் விலையை வட்டியுடன் திருப்பித் தருதல்

(4) ஏற்பட்ட கஷ்டத்துக்கும் நஷ்ட்டத்துக்கும் ஈடு செய்தல்

(5) சேவையில் காணப்பட்ட குறைபாடுகளை அகற்றுதல்

(6) முறைகெட்ட/தடை செய்யும் வர்த்தக செயல்களைத் தடுத்தல் மற்றும் மேலும் தொடராதிருக்க உத்தரவிட

(7) ஆபத்தான பொருட்களின் விற்பனையை நிறுத்துதல்

(8) போதுமான செலவுத் தொகை வழங்கி உத்தரவிடல்.

மேல் முறையீடு செய்வதற்கான கால வரையறைகள்

(1) மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தீர்ப்பை பெற்றதிலிருந்து 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

(2) மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராக தீர்ப்பை பெற்ற 30 நாட்களுக்குள் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும்.

(3) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பை பெற்ற 30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

புகாரை பதிவு செய்யும் முறை

முதல் கட்டம்:- எதிர் தரப்புக்கு நோட்டிஸ் அனுப்பவேண்டும்.

2ஆம் கட்டம்:- புகாரை அதற்குண்டான படிவத்தின் படி தயார் செய்து நுகர்வோர் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும்.

3-ஆம் கட்டம்:- பிரமாண வாக்கு மூலம் அதற்குண்டான படிவத்தின் படி தயார் செய்து அனுப்பிய நோட்டிஸ், பில், ரசீது நகல்களோடு நுகர்வோர் நீதிமன்றத்துக்கு சமர்பிக்க வேண்டும்.

4-ஆம் கட்டம்:- தீர்ப்பு வழங்கப்பட்ட பின் எதிர்தரப்பு தீர்ப்பை நடைமுறைப்படுத்த தவறினால், அதற்குண்டான விண்ணப்பத்தை தயார் செய்து நுகர்வோர் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.

5-ஆம் கட்டம்:- தீர்ப்பு உங்களுக்கு நிறைவளிக்காவிட்டால், நியாயம் மறுக்கப்பட்டதென்று கருதினால் அதற்குண்டான படிவத்தின்படி மேல்முறையீடு செய்யலாம்.

புகாரில் கொடுக்கப்பட வேண்டிய விவரங்கள்

(1) புகார் செய்பவரின் பெயரும், முழுவிலாசமும்,

(2) எதிர் தரப்பினர் பெயரும், முழு விலாசமும்,

(3) பொருளை வாங்கிய அல்லது சேவையைப் பெற்ற தேதி, அதற்காக கொடுக்கப்பட்ட தொகை/விலை,

(4) வாங்கிய பொருளின் பெயர், செயல் அல்லது பயன், அளவு போன்ற விவரங்கள்,

(5) முறையில்லா வர்த்தகர் செயலைப் பற்றியோ, குறையுள்ள பொருளைப் பற்றியோ, சேவையில் குறைபாடு பற்றியோ அல்லது அதிக விலை வசூலிக்கப்பட்டது குறித்தோ அல்லது வேறு எதற்காக என்ற விவரம்,

(6) பில்கள், ரசீதுகள், வவுச்சர்கள், கடிதங்கள் போன்றவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டுளளதா என்ற விவரம்,

(7) செயல்படுத்தும் விண்ணப்பங்களில் (Executive Petition Documents) எதிர் தரப்பின் பெயர்கள் கொடுக்கப்படவேண்டும்.

எதிர்த்தரப்புக்கு அனுப்பப்பட வேண்டிய நோட்டிஸின் மாதிரி படிவம்:-

(இது நுகர்வோர் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான முதல் செயலாகும். இந்த நோட்டிஸ் எதிர்தரப்புக்கு உங்களால் பதிவுத் தபாலில் அனுப்பப்படவேண்டும்)

அனுப்புனர்:- உங்கள் பெயரும், முகவரியும் தேதி……..

பெறுனர்:- எதிர்தரப்பினரின் பெயரும் முகவரியும்.

ஐயா,

பார்வை:……………… பெற்றதற்கு உங்கள்……………….. தேதியிட்ட பில் எண்………………

(1) எனக்கு ……………..பொருள்/சேவை அளித்தீர்கள், அதில் உள்ள குறைபாடுகளை இதன் கீழ் கொடுக்கிறேன் (விவரமாக எழுதவும்)

(2) ஏற்கனவே நீங்கள் ஏதேனும் அவருக்கு கடிதம் எழுதியிருந்தால் அதை நினைவுப்படுத்தவும்.

(3) (அவர்கள் 15 நாட்களுக்குள்) குறையைச் சரிசெய்ய வேண்டும் அல்லது புதிய பொருள் கொடுக்கவேண்டும், அல்லது அதன் விலையைத் திருப்பித் தரவேண்டும் என்றும் அப்படி அவர்கள் செய்யத் தவறினால் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்ய உள்ளேன் என்பதையும் தெரிவிக்கவும்.

இப்படிக்கு

உங்கள் கையொப்பம்


போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி


கூடலூர் பாரதியார் பல்கலை கழக கலை அறிவியல் கல்லூரியில், மத்திய மாநில அரசு பணிகளுக்கு நடத்தும் 
போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

பாரதியார் பல்கலை கழக கலை அறிவியல் கல்லூரி, 
கூடலூர் காசிகா IAS அகாடமி, 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் 
ஆகியன சார்பில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில்

கல்லூரி ஆங்கில துறை தலைவர் பெற்கோ வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் பழனிசாமி தலைமை தாங்கினார். 

 கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் முருகையன், வட்டாட்சியர் ரவி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவா்கள் போட்டி தேர்விற்கான கையேடுகளை வெளியிட்டு பேசும்போது

கல்லூரி பருவம் இலக்கை நோக்கி பயணிக்கும் பருவம், இலக்கு சரியான வழிகாட்டலுடன், சரியான திசையை நோக்கி இருக்க வேண்டும்,  

எல்லாரும் போகும் பாதையில் செல்வதால் நமது இலக்கை அடைய முடியாது,  இலக்கை அடைய சிரம்மங்களையும், கஷ்டங்களையும் தாண்டிதான் ஆகவேண்டும். 

 சரியான நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இலக்கை தேர்வு செய்து அதனை அடைய நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். 

இளைஞர்கள் நல்ல வேலை, நல்ல வருமாணம் நல்ல வாழ்க்கை என்றும் பெண்கள் நல்ல கணவன், நல்ல குடும்பம் என்றும் நம்மை பற்றி சிந்திக்கின்றோம்.    சமூக மேம்பாட்டை பற்றியும் சிந்திக்க வேண்டும்.

வாழ்க்கையில் சாதிப்பது முக்கியம்,  சந்தோசமாக இருப்பதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அடுத்தவருக்கு உதவுவதில், அடுத்தவர்களை மகிழ்விப்பதில் தான் மனது நிறைவடையும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சிதான் உண்மையானது.

நேர்மையாக பணியாற்றுவது மிகவும் சவாலானது,  இதனால் பல்வேறு சிரமங்கள் இருக்கும், அதையும் தாண்டி நேர்மையாக இருப்பது தான் நேர்மைக்கு கிடைக்கும் பரிசு, 

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற கடுமையான முயற்சி, பயிற்சி தேவை, மேலும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து படித்தால் எளிதில் வெற்றியை அடைய முடியும். 

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற மத்திய அரசு போட்டி தேர்வுகள் மற்றும் குருப் 1 உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் தோல்வி ஏற்பட்டாலும் துவண்டு விடாமல் மீண்டும் முயற்சித்தால் வெற்றி பெறலாம்,

பெரும்பாலும் போட்டி தேர்வுகள் அனைத்திற்கும் ஓரே மாதிரியாகவே உள்ளது.  

இதனால் அனைத்து வகையான போட்டி தேர்வுகளையும் எழுத வேண்டும். 

அதனால் பல்வேறு அனுபவங்கள் கிடைக்கும்.  அதன் மூலம் வெற்றி பெற முடியும்.

நானும் குரூப் 1 தேர்வு பெற்று துணை ஆட்சியராக பணியில் சேர்ந்து 7 ஆண்டுகளில் ஐஏஎஸ் தகுதி பெற்றேன். தோல்விகளை கண்டு பயப்படவில்லை.

திடமான நம்பிக்கை, தீக்கமான முடிவு எடுத்துக்கொண்டால் இலக்கை எளிதில் அடையலாம்,  போட்டி தேர்வுகளுக்கு தயாராக இதர வாய்ப்புகளை விடுவதில் தவறில்லை.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டே போட்டி தேர்வுகளை எழுதுவது மிகவும் சிரமம், பலரும் இதுபோன்று முயற்சித்து தோற்று போகின்றனர்.  இதற்காக பயிற்சி பெறுவதும், முயற்சி செய்வதும் வெற்றியை தரும்.

ஐஏஎஸ் பதவி என்பது அதிகாரம் நிறைந்த, கௌரவம், செல்வாக்கு, பணம் போன்றவை இருக்கும் என்பதை தவிர்த்து  மத்திய மாநில அரசு பணிகளை சம்பளத்திற்கான வேலையாக பார்க்காமல் சேவை செய்யும் வாய்ப்பாக பார்க்க வேண்டும்.  

இந்த மணபாண்மை இருந்தால் தான் அரசு பணி சிறப்பான பணியாக அமையும்.

ஐஏஎஸ் தகுதி முடிவெடுக்கும் வாய்ப்பு அதிகம், சிறந்த முடிவுகள் மக்களுக்கு நலன் பயக்கும் முடிவாக எடுக்க வேண்டும்.  

தினசரி குறைந்தது 12 மணி நேரம்  படிப்பதால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறலாம்,  அதுபோல் மாநில அரசு தேர்வுகளும் குறைந்தபட்சம் ஓராண்டுகள் முயற்சி செய்து படித்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலானோர் அரசு பணிக்கு வருவதற்கு தயாராவதில்லை. 

இந்நிலை மாற வேண்டும், இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எதிர்கலத்தில் அரசு பணிக்கு வரவேண்டும் அதற்கான முயற்சியில் மாணவர்கள்  பங்கேற்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தேவாலா காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், காசிகா ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சுரேஸ்குமார் ஆகியோர் போட்டி தேர்வுகள் குறித்து விளக்கமளித்தனர்.

தொடர்ந்து மாணவர்களுக்கு போட்டி தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  
   
நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.   
   
முடிவில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் நன்றி கூறினார்.                                                                                  


உலக மகளீர் தினம்



உலக மகளீர் தினம் பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.   கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி மகளீர் பொது சேவை மையம் ஆகியன சார்பாக நடத்தப்பட்ட இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரி செலின் தலைமை தாங்கினார்


மகாத்மா காந்திபொது சேவை மைய தலைவர் நவுசாத்,ஆலோசகர் காளிமுத்து, செந்தாமரை மகளீர் பொது சேவை மைய செயலாளர் தீபா,  ஆகியோர்மு ன்னிலை வகித்தனர்.


சிறப்பு அழைபாளராக கலந்து கொண்ட வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது  பெண்கள் படிப்பை நேசித்து படிக்க வேண்டும்,  இன்று முதல் பெண் மருத்துவராக  சாதித்த முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் பெண்களின் மருத்துவதுறையின் நுழைவுக்கு ஆரம்பமாக உள்ளார்,  பெண்கள் படிப்பு மற்றும் ஊட்டசத்துக்களில் கவணம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.   பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது.  தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதால் எதிர்காலத்தில் பெண்கள் மேலும் வளர்ச்சி பெற முடியும் என்றார்.


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது இன்று அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.  பெண்கள் அன்பு பண்லுத்துவது முதல் எதிர்த்து போராடும் வல்லமை வரை பல பெண்கள் முன்மாதிரியாக சுட்டிகாட்டப்படுகின்றனர்  இவர்களை போல் உருவாக வேண்டியது அவசியம்.  இன்று பல்வேறு இடங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வேலை கொடுக்க குறைந்த சம்பளம், எதிர்த்து கேட்கும் திறன் இன்மை, என கருதுகின்றனர்.  பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றது.  இதனை எதிர்கொள்ள தங்களின் திறமைகளை மேம்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

மகளீரின் உரிமைகள் குறித்து மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுபோட்டியில்  வெற்றி பெற்றவர்கள் பேசினார்கள்.


பேச்சு போட்டியில் 6,7,8ம் வகுப்பு பிரிவில்  முதலிடத்தை மெர்னிதாசன், இரண்டாமிடத்தை விஸ்வசஞ்சனா. மூன்றாமிடத்தை தர்சினி, ஜூலியா  ஜாக்லின்,   9, 10 வகுப்பு பிரிவில்  முதலிடத்தை சாய்ஸ்ரீ, இரண்டாம் சாகிலா தெஸ்னி, முன்றாம் இடத்தை சுஸ்மிதா ஆகியோர் பெற்றனர் வெற்றி  பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் காந்தி சேவை மைய நிர்வாகிகள் அபுதாகீர், மற்றும்மாணவிகள் ஆசிரியர்கள்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

http://cchepnlg.blogspot.in/?m=1

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி


கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் நடைப்பெற்றது

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகப்பு மையம், நீலகிரி மாவட்ட காவல்துறை கூடலூர்,  போக்குவரத்து துறை, பயிற்சி மைய குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு மற்றும் முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு பயிற்சி மைய முதல்வர் தலைமை தாங்கினார்.

மைய ஆசிரியர் செல்வகுமார் வரவேற்றார்

நுகர்வோர் மைய தலைவர் சி காளிமுத்து முன்னிலை வகித்தார்

கூடலூர் மோட்டார் வாகண ஆய்வாளர் காசிவிஸ்வநாத் பேசும்போது
கடந்த 15 ஆண்டுகளாக சாலைவிபத்துகளில் முதலிடத்தில் இருந்துவந்த தமிழகம் கடந்தாண்டு 2017ல் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது 2016 யை விட 2017 6.2% விபத்துகள் குறைவாகியுள்ளது. வகணங்களில் வேகமாக ஓட்டுவது தவிர்க்கபட வேண்டும், வாகனம் இன்சூரன்ஸ், லைசென்ஸ், மற்றமு இதர ஆவணங்கள் இல்லாமல் வாகணங்கள் இயக்குவது குற்றம்.  இதற்கு குறைபாட்டினை பொறுத்து அபாராதம் விதிக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் துடிப்பதை பார்த்தால்  விபத்து குறித்த பயம் ஏற்படும், ஹெல்மெட் காவல்துறை யினரை பார்த்தவுடன் தலையில் மாட்டுவதைவிட வாகணத்தை எடுக்கும்போதே  ஹெல்மட்   அனிந்துகொள்வதே உயிருக்கு பாதுகாப்பு என்றார்.

காவல்துறை ஆய்வாளர் வெங்கடாசலம் பேசும்போது

சாலைவிதிகள் மக்களின் நலன்கருதி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போன் உபயோகம் அதிக விபத்துக்குள்ளாக்குறிது. அதிக வேகத்துடன் இயக்கும் வாகணங்களை பெற்றோர் இளையோர்களுக்கு வாங்கி தருவதை தவிர்க்கவேண்டும். வாகண பெருக்கத்தால் போக்குவரத்து சிரமங்கள் அதிகரித்து வருகின்றது.  இளையோர்களிடம் ஹன்ஸ், போதை பவுடர்கள், குடிபழக்கம் போன்று பெருகி வரும் போதைபழக்கம் அதிகரித்து வருகின்றது.  
இதனால் மூளை முதல் இதர உறுப்புகள் பாதிக்கப்பட்டு வருகின்றது. போதைபொருட்கள் விற்பதும், போதையுடன் வாகணங்கள் இயக்குவதும் குற்றம் ஆகும்.

போக்குவரத்து காவல் ஆய்வளர்  சத்தியன் பேசும்போது  நகர பகுதிகளில் 20 கிமீ வேகமும் வளைவு பகுதிகளில் 15 கிமீ வேகத்திலும், மற்ற இடங்களில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் இயக்கலாம்.  அதிவேகம் விபத்தினை ஏற்படுத்திடுவதால் வேகத்தை தடுக்க ஆங்காங்கே ஆய்வுகள் மேற்க்கொள்ளபடுகின்றது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது சாலை விபத்துகள் தவிர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.  சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் சாலைவித்துகளால் 10முதல் 12 இலட்சம் பேர் வரை பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர், இவற்றை தவிர்க்க வேண்டுமெனவே தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தபடுகின்றது என்றார்

நிகழ்ச்சியில் பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
முடிவில் ஆசிரியர் பெஞ்சமின் நன்றி கூறினார். 

இரத்த வகை பரிசோதனை முகாம்

கரியசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இரத்தவகை பரிசோதனை முகாம் நடைப்பெற்றது

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் பள்ளியின் இளம் செஞ்சிலுவை சங்கம் ஆகியன சார்பில் நடத்தப்பட்ட இரத்தவகை பரிசோதனை முகாமிற்கு 
பள்ளி தலைமை ஆசிரியர் செ ரமேஷ் தலைமை தாங்கினார்.

பள்ளி பட்டதாரி ஆசிரியர் மணிவாசகம் வரவேற்றார்

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து முகாமினை துவக்கி வைத்தார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம்,  பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தனர்.

இரத்த பரிசோதகர் யோகராஜ் மாணவர்கள ளுக்கு இரத்தவகை பரிசோதனை மேற்கொண்டார்.

முகாமில் 110 மாணவர்களுக்கு இரத்த வகை பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து சுகாதாரம் குறித்தும் ஊட்டசத்து உணவுக்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மார்கிரேட் மேரி, செல்வநாயகம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

முடிவில் பள்ளி ஆசிரியை ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

இந்தியா சிங்கப்பூர் போல மாற

சிறிது நாட்களாக சிங்கப்பூர் அரசாங்கம் தன் லாபத்தில் தன் குடிமக்கள் எல்லோருக்கும் பங்கு தருகிறது.

சிங்கப்பூரைப் போல இந்தியாவும் இருக்க வேண்டும் என்று மீம்ஸ்களாக சுற்றுகிறது.

ஆனால்..

இந்தியா சிங்கப்பூர் போல மாற வேண்டும் என்று நினைக்கும் எவனும் தாங்கள் சிங்கப்பூர் குடிமகன் போல் மாற வேண்டும் என்று விரும்புவதில்லை.

சிங்கப்பூரில் எதுவும் இலவசமில்லை. எவனும் எவரையும் ஏமாற்றியோ, லஞ்சம் ஊழல் செய்தோ வாழ முடியாது.

ஓட்டுப் போட இலவச பிச்சை கிடையாது.

விவசாயத்துக்கு மானியம், வேலை நிறுத்தம், வருடா வருடம் கட்டாய சம்பள உயர்வு, போனஸ் எதுவும் கிடையாது.

அரசாங்க வேலையில் தான் குறைந்த சம்பளம். அந்த வேலையும் நிரந்தரம் கிடையாது. அரசு வேலையில் இருப்பவன் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

சட்டத்தை மதிக்காதவன் இங்கே வாழ முடியாது. லஞ்சம் கொடுத்து எந்த அரசு காரியத்தையும் சாதித்துக் கொள்ளவும் முடியாது.

ஒரு ஓட்டுநர் உரிமம் வாங்க ஒருவனுக்கு ஒரு வருடம் ஆகும். அதற்கான அத்தனை பயிற்சிகளையும் ஒழுங்காக முடித்து தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.

சிலருக்கு இரண்டு மூன்று வருடங்கள் கூட ஆகும் ஓட்டுநர் உரிமம் பெற.

சாலைகளில் விதிமுறைகளை மீறினால் வீட்டிற்கு நோட்டீஸ் வரும். எந்த டிராஃபிக் போலீசும் இருக்க மாட்டார்கள் லஞ்சம் கொடுத்து தப்பிக்க.

இருந்தாலும் காசு வாங்க மாட்டார்கள். மீறி கொடுக்க நினைத்தால் லஞ்சம் கொடுக்க முயற்சித்ததற்காக சிறை தண்டனை கிடைக்கும்.

தேசத்தின் பிரதமரை மீம்ஸ் போட்டு கேலி செய்வதோ, தேசியக் கொடியை கேவலப்படுத்துவதோ,

தேசியகீதத்தை அவமானப்படுத்துவதோ செய்தால் நிச்சயம் சிறை தண்டனை தான். ஜாமீன் கூட கிடைக்காது.

திறமையின் அடிப்படையிலேயே எல்லாம் கிடைக்கும். சாதிப் பெயரில் எந்த சலுகையும் எவனுக்கும் கிடைக்காது.

பிறந்தது முதல் எல்லோருக்கும் ஒரே ஒரு அடையாள எண் தான். அதை வைத்து உங்கள் முழு ஜாதகத்தையே சொல்லிவிடுவார்கள்.

இதையெல்லாம் இந்தியர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியும் என்றால்..

இந்தியாவும் தன் லாபத்தில் ஒரு பகுதியை நிச்சயம் தன் மக்களுக்கு கொடுக்கும்.

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...