12 ம் வகுப்பிற்கு பிறகு

*🔴🔴+2 விற்கு பிறகு குறைந்த செலவில் படிக்கும் சிறந்த படிப்புகள்*.....
*லட்ச கணக்கான ரூபாய்களை கல்வி கட்டணமாக செலுத்தி படித்தால் தான் சிறந்த கல்வி , உடனடி வேலை கிடைக்கும் என்ற மாயை தற்போது நிலவி வருகின்றது.
இது உண்மையில்லை, குறைந்த செலவில் படிக்கும் பல சிறந்த படிப்புகள் உள்ளன.
அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.*
*அறிவியல் படிப்புகள் :*
*B.Sc ( physics)  : இந்த படிப்பை அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும்.
வெறும் B.Sc ( physics) மட்டும் படிக்காமல்  M.Sc சேர்த்து படித்தால், இஸ்ரோ, DRDO போன்ற அரசு நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக பணியாற்றலாம். ஆராய்ச்சி துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.
M.Sc படிக்க கல்லூரிக்கு ஏற்றார்போல் வருடத்திற்க்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும்.*
*B.Sc ( Chemistry) : மருந்து மாத்திரைகள் தயாரிப்பு துறை, பிளாஸ்டிக் தயாரிப்பு துறை உட்பட பல துறைகளில் வேலை வாய்ப்புள்ள படிப்பு இது.
வெறும் B.Sc(Chemistry) மட்டும் படிக்காமல், M.Sc படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்.
CSIR தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஆராய்ச்சி துறையில் நல்ல ஊதியத்துடன் பணியாற்ற முடியும்.*
*B.Sc (Mathematics) : புள்ளியியல் துறை(Statistics), தகவல் பகுப்பாய்வு (Data analytics) , செயற்க்கை நுண்ணறிவு (Artificial Intelligence)  துறைகளில் சிறந்த வேலை வாய்புகள் உள்ளன.
வெறும் B.Sc மட்டும் படிக்காமல், M.Sc Mathematics, M.Sc Statistics படிப்புகள் படித்தால் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு உடனே கிடைக்கும்.*
*IIT-ல் M.Sc (physics, Chemistry, Mathematics)  படிப்பதற்கு  JAM என்ற தேர்வும், சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் M.Sc (physics, Chemistry, Mathematics)  படிக்க தனியாக நுழைவு தேர்வும் உள்ளது.
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று M.Sc படிப்பை  ஐஐடியிலோ அல்லது  அண்ணா பல்கலை கழகத்திலோ படிதால் உள்நாட்டில் பொறியாளருக்கு (Engineer) நிகரான வேலை கிடைக்கும்.
வெளிநாட்டில் மாத மாதம் ஊக்க தொகை வாங்கி கொண்டு P.hd படிக்கலாம்.
P.hd முடித்ததும் உள்நாடு/வெளிநாட்டிலோ பேராசிரியராக பணியாற்றலாம்.*
*M.Sc (physics, Chemistry, Mathematics)  முடித்தவர்கள் GATE மற்றும் TANCET தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று M.E/M.Tech படிக்கலாம்.
இதன் மூலம் தகவல் தொழில் நுட்ப துறை (IT) உட்பட  பெரும்பாலான துறையில் பணியாற்றலாம்.*
*வேலை வாய்ப்பை இலக்காக கொண்ட மாணவர்கள் B.Sc (chemistry, mathematics) படிக்கலாம்,
ஆராய்ச்சியை இலக்காக கொண்ட மாணவர்கள்
B.Sc (physics, chemistry) படிக்கலாம்,
கல்வி துறை (Teaching) ,
ஆராய்ச்சி துறை (Research) ,
தகவல் தொழில் நுட்பம் (IT) ,
உற்பத்தி துறை  (Manufacturing) என பெரும்பாலான துறைகளில் வேலை வாய்ப்புள்ள சிறந்த படிப்புகள் இவை.*
*கலை படிப்புகள்  :*
*B.A (Economics) : அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.4 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும்.
பொருளாதார துறையில் அதிக வேலைவாய்ப்புள்ள படிப்பு (வங்கி /வட்டி  துறையை தவிர்க்கவும்).
M.A (Economics) படிப்பதன் மூலம் விற்பனை துறை, பொருளாதார திட்டமிடல் துறை, வர்த்தக துறை போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்பை பெறலாம்.
M.A படிப்பதற்க்கு கல்லூரிக்கு ஏற்றார்போல் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும்.*
*B.A (English) : மொழிபெயற்பாளர் (Translator), கல்வி துறை (Teaching) போன்ற துறைகளில் அதிக வேலை வாய்புள்ள படிப்பு.*
*B.A (Journalism, Mass media) ஊடக துறைபடிப்புகள் :
குறைந்த செலவில் படிக்கும் சமூககதிற்க்கு பயனளிக்கும் சிறந்த படிப்புகள் ஊடக துறைபடிப்புகள்.
மேற்கொண்டு M.A படித்து ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டால் நல்ல ஊடகத்தில் சிறந்த வேலை எளிதில் கிடைக்கும்.*
*B.Com : பொறியாளர், மருத்துவருக்கு இணையான துறையாக பார்க்கப்படுவது கணக்காளர் (Accountant) துறை.
B.Com படித்து CA (charted  accountant) , CMA ( cost management accounting) , ICS போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறுவன் மூலம் மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்க முடியும்.
இப்படி பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டாலும் நல்ல சம்பளத்துடம் கூடிய அதிக வேலைவாய்ப்புகள் B.Com படிப்புகளுக்கு உள்ளன.*
*மேலாண்மை படிப்பு :*
*B.B.A : அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும்.
B.B.A படிப்போடு, ஜெர்மன், பிரன்சு, ஜாபனீஸ் மொழிகளில் ஏதேவது ஒன்று தெரிந்தால் விற்பனை துறையில் (sales, marketing) அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.
ஆங்கில மொழி திறனும், நல்ல தொடர்பு திறனும் (communication skill)  இருந்தால் பொறியாளருக்கு இணையான சம்பளத்துடன் அதிக வேலைவாய்ப்புகள் உள்ள படிப்பு இது.*
*தகவல் தொழில் நுட்ப துறை (IT) :*
*மாதம் லட்ச கணக்கில் சம்பளத்தை அள்ளி தரும் துறை IT filed என சொல்லப்படும் தகவல் தொழில் நுட்ப துறை.
B.C.A மற்றும் B.Sc (computer science) படித்து,  Python, R, Go போன்ற கணிணி மொழியில் (programing language) ஆழ்ந்த அறிவு இருந்தால் Automation துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.
அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.10 ஆயிரம் வரையிலும்,
தனியார் கல்லூரியில் வருடத்திற்க்கு ரூ.20 ஆயிரம் வரையிலும் செலவாகும்.
கூடுதலாக MCA அல்லது M.Sc (IT) படித்தால் பொறியாளருக்கும் இணையான ஊதியம் பெற முடியும்.
தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாய்ப்பை பெற மிக முக்கியமானது ஆங்கில பேச்சாற்றல், தொடர்பு திறன் மற்றும் ஏதாவது ஒரு கணிணி மொழியில் ஆழந்த அறிவு இருக்க வேண்டும்.
MCA, M.Sc (IT) படிக்க கல்லூரிக்க ஏற்றவாரு வருடத்திற்க்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும்.*
*குறைந்த செலவில் பொறியியல் (Engineering) , மருத்துவம் (MBBS) படிக்க :*
*தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் (B.E) படிக்க வருடத்திற்க்கு ஆகும் செலவு ரூ.20 ஆயிரம் தான்.
இதற்க்கு +2 ல் 195 -க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் எடுக்க வேண்டும்.
அரசு மருத்துவ கல்லூரியில் MBBS படிக்க வருடத்திற்க்கான கல்வி கட்டணம் ரூ.25 ஆயிரம் தான்.
இதற்க்கு  NEET தேர்வில் குறைந்தது 400 மார்க் எடுக்க வேண்டும்
(அதாவது மொத்தம் 720 மதிப்பெணிற்க்கு 400 மதிப்பெண் எடுக்க வேண்டும்).*
*படிப்பிற்க்கு மிக அதிக பணம் செலவாகும் என்பது நமது அறியாமைதான்,
நமது அறியாமையைதான் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி லட்ச கணக்கில் கல்வி கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றன.
மாணவர்களை நன்றாக படிக்க வைத்தால் எந்த படிப்பிற்க்கும் சில ஆயிரங்கள் தான் செலவாகும்.*
*எனவே பெற்றோர்களே! மாணவர்களே!,
கடன் வாங்கி, வட்டிக்கு வாங்கி, சொத்தை விற்று லட்ச கணக்கில் கல்வி கட்டணம் கட்டி படிப்பதை விட குடும்பத்தின் பொருளாதார சூழலுக்கு ஏற்றார்போல் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
இறைவன் நாடினால் நமது எதிர்காலம் சிறப்பாகவே அமையும்,
உங்கள் மீது நம்பிக்கை இழக்காதீர்கள்..*

பாரம்பரிய மரங்கள்

பாரம்பரிய மரங்களின் வகைகள்

அரசமரம்
ஆலமரம்
நாவல் மரம்

பலா மரம்
கோங்கு
செண்பகம்
விளாவாகை

நாகலிங்கம்
இயல் வாகை
எட்டிகருங்காலி
எருக்கு
சிறுநாகப்பூ

மூங்கில்
பதிமுகம்
அகில்

ஆமணக்கு
ஆணைப்பளி
பூவரசு
நொச்சி

தழுதாழை
வெள் வெல்
புன்னை
சப்போட்டா

தேத்தாங்கொட்டை
தோதகத்தி
மகாகொனி
கடம்பு

கருவேப்பிலை
தாழைமரம்
மருதாணி
நெட்டிலிங்கம்
மாதுளம்

கொடுக்காபுளி
வாழை
தான்றி மரம்

வன்னி
சந்தன
வேம்பு
அகத்தி
குமிழ் மரம்

சேராங்கொட்டை
பாரிஜாதம்
மகிழம்வாதா மரம்
மருதம்

கமலா
எலுமிச்சை
முருங்கை
கொய்யா

தென்னை
வாதநாராயணம்
வெப்பாலை

ருத்திராட்சம்
வேங்கை
ரப்பர்

பனைமரம்
பலாசுமரம்
செம்மந்தாரை

சரக்கொன்றை
புங்கன்
சந்தனமரம்

அசோகமரம்
கடுக்காய்
மா

செஞ்சந்தனம்
அலையாத்தி
தில்லை

மாவிலங்கம்
பேயத்தி
அத்தி
தேனத்தி

வேம்பு செல்லி
இலந்தை
வில்வம்
புளிய மரம்
இலுப்பை

பாரம்பரிய மரங்களின் வகைகள்

ஓட்டல்களில் பல மடங்கு கட்டண உயர்வு

நீலகிரி மாவட்ட செய்திகள்

ஓட்டல்களில் பல மடங்கு கட்டண உயர்வு

பதிவு செய்த நாள்: மே 19,2018 01:05

குன்னுார்:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் கட்டண உயர்வு அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் உணவை எடுத்து வந்து, ஆங்காங்கே அமர்ந்து உண்ணும் நிலை அதிகரித்து வருகிறது.

நீலகிரியில் கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் குன்னுார், கோத்தகிரி சாலைகள் வழியாகவும்;

கர்நாடகா, கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கூடலுார் வழியாகவும் வருகின்றன.

இந்நிலையில், பல இடங்களில் சாலையோரங்களில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி உணவு உட்கொண்டு வருகின்றனர்.

மேலும், கர்நாடகாவில் இருந்து வருபவர்கள், சிலிண்டர் காஸ் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து, ஆங்காங்கே நிறுத்தி சமையல் செய்து செய்கின்றனர்.

இதற்கு, ஊட்டி, குன்னுார் உட்பட சுற்றுலா மையங்களில், உணவின் கட்டணம் திடீரென உயர்தப்பட்டது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

 *சமூக ஆர்வலர் கூடலூர்   நுகர்வோர் சுற்றுச்சூழல்  பாதுகாப்பு மைய பொது செயலாளர், சிவசுப்ரமணியம்* கூறுகையில், ''

 நீலகிரியில் சீசனை தொடர்ந்து, மூன்று மடங்கு வரை உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளிடம் மதிய உணவுக்கு குறைந்த பட்சம், 120 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.

அதே உணவுக்கு, உள்ளூர் மக்கள் என்றால், 80 ரூபாய் மட்டுமே வசூலிக்கின்றனர்.

 பர்லியாரில் கழிப்பிடத்தின் அருகிலேயே அரசு போக்குவரத்து கழகத்தின் கேன்டீனில் துர்நாற்றத்துடன் உணவுகளை உட்கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.

சுற்றுலா பயணிகள் கூறுகையில்,

'இங்குள்ள பெரும்பாலான கடைகளில் உணவின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால்,வீடுகளில் இருந்தே உணவை எடுத்து வந்து, உட்கொள்கிறோம்,' என்றனர்

நன்றி தினமலர் குன்னூர்

காவல் நிலை ஆணைகள்

‬:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது?

-மூன்று தொகுதிகளாக.

2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைகள் உள்ளது?

-856 ஆணைகள்

3.ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காலை ஆஜர் பட்டியலின்போது வியாழக்கிழமைகளில் எந்தப் பணி ஆஜராகும் காவலர்களுக்குத் தரப்படும்?

-ஆயுதங்களை சுத்தம் செய்தல்.

4.காவல் நிலையங்களில் ரொக்கப் புத்தகம் பராமரிக்கவேண்டும் என்று கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?

- காவல் நிலை ஆணை எண்  262

5. காவல் ஆய்வாளர் பதவிக்குக் கீழ் உள்ள அலுவலர்களது பிழை செய்தவர் குறிப்புத்தாள் (defaulter sheets)யாருடைய பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்?

-காவல் நிலைய பொறுப்பு அதிகாரி

6. காவல் நிலை ஆணை எண் 295பிரகாரம் அனைத்துத் தலைமைக் காவலர்களுக்கும், படிவம் எண்  423யில் கீழ்க்கண்ட ஆவணம் வழங்கப்படுகிறது.

-மருத்துவ சரித்திர ஏடு.(medical history sheet)

7. காவல் நிலை ஆணை எண் 562-ன்படி ஒரு காவல் நிலைய பொறுப்பு அலுவலர் குற்றவிசாரணை முறை சட்டம் (சுருக்கமாக கு.வி.மு.ச.) 157(1)(ஆ)பிரிவின்படி கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் விசாரணையை மறுக்கும் விருப்புரிமை உள்ளது.

-பத்து ரூபாய்க்கு மேற்படாத திருட்டு வழக்கு சம்பந்தமாக.

8.எந்த காவல் நிலை ஆணை எண், ஒரு விசாரணை அதிகாரியின் விசாரணை நடுநிலையாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது?

- காவல் நிலை ஆணை எண் 566

9. வழக்கு நாட்குறிப்பு (case dairy)குறித்து கூறும் காவல் நிலை ஆணை எண் எது?

- காவல் நிலை ஆணை எண் 567

10.காவல் நிலையங்களில் இருந்து பெறப்படும் வழக்கு நாட்குறிப்புகளில் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு ஏதாவது குறிப்புரைகள் தர வேண்டும் என்றால் உட்கோட்ட அலுவலர் / உதவி ஆணையாளர் காவல் நிலை ஆணை எண் 570 ன்படி

-குற்றக் குறிப்புகள் மூலம் தெரிவிப்பார்.

11. காவல் நிலை ஆணை எண் 573-ன்படி சாட்சிகளின் பெயர்களும், முகவரிகளும் அடங்கிய குறிப்பை என்ன செய்ய முடியும்?

-நீதிமன்ற உபயோகத்துக்கு மட்டுமே தரவேண்டும்.

12.ஒரு இளம் குற்றவாளியை கைது செய்கையில் அல்லது வழக்குத் தொடர்கையில் அத்தகைய இளங் குற்றவாளியின் வயது பற்றிய செய்தியை நீதிமன்றத்திற்குத் தரவேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் எது?

- காவல் நிலை ஆணை எண் 574

13.ஒரு காவலர் பாதுகாவலில் நடக்கும் தற்கொலை குறித்து அறிக்கை உடனடியாக காவல்துறை இயக்குனருக்கு அனுப்பப் பட வேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?

- காவல் நிலை ஆணை எண் 576

14. ஒரு கள்ளப் பணத் தாள் குறித்து ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பொறுப்பு அதிகாரி ஒரு புகார் தரும் பட்சத்தில், காவல் நிலை ஆணை எண்578 பிரகாரம் ஒரு காவல் நிலைய பொறுப்பு அதிகாரி....

-நேரடியாக வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை செய்ய வேண்டும்.

15. ஒரு பிடியாணை வேண்டா வழக்கில் காவல் அலுவலர் ஒருவருக்கு தானாகவே ஒருவரைக் கைது செய்யவோ, செய்யாமலிருக்கவோ விருப்புரிமை எந்தக் காவல் நிலை ஆணையின்படி உண்டு?

- காவல் நிலை ஆணை எண் 622

16. காவல் நிலை ஆணை எண் 706எதைப்பற்றிக் கூறுகிறது?

-பொது நாட்குறிப்பு (general dairy)

17. P.S.O. 706-ன்படி எந்தவொரு சூழ்நிலையிலும் காவல் நிலைய பொது நாட் குறிப்பில்.....மணி நேரத்துக்கு மேல் பதிவு இடைவெளிகள் இருக்கக்கூடாது?

- இரண்டு மணி நேரத்திற்கு மேல்.

18.P.S.O. 710 – ன்படி எந்தத் தரத்திலுள்ள காவலர்கள் நோட்டுப் புத்தகம் பராமரிக்க வேண்டும்?

-காவல் ஆய்வாளர் தொடங்கி காவலர்கள் வரை.

19. P.S.O. 711 –ன்படி ஒரு காவலர் பணி மாறுதலில் செல்லும்போது அவரது நோட்டுப்புத்தகத்தினை என்ன செய்ய வேண்டும்?

-அவர் பணிபுரிந்த காவல் நிலையத்திலேயே ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும்.

20. P.S.O. 713 –ன்படி ஒரு சிறைக் கைதி காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டபின், சோதனைப் பதிவேட்டில் எந்தக் கட்டத்தில் அவனுடைய முழு விவரங்களை கவனத்தோடு பதிவு செய்ய வேண்டும்?

- மூன்றாவது கட்டத்தில்

21.P.S.O.715-ன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேடு கீழ்க்கண்ட படிவத்தில் பராமரிக்கப் படவேண்டும்.

-படிவம் எண் 103

22. P.S.O.715-ன்படி ஒவ்வொரு வட்ட ஆய்வாளரும் தனக்குக் கீழ் உள்ள காவல் நிலையங்களில் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேட்டை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றப்பதிவேட்டுடன் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பீடு செய்ய வேண்டும்?

-இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை.

23.தொல்லை வழக்குப் பதிவேடு பராமரித்தல் பற்றிக் கூறும் காவல் நிலை ஆணை எண்...

-716

24. P.S.O. 717 ல் பராமரிக்கக் கூறப்பட்டுள்ள ஆவணம் எது?

-அலுவல் பட்டியல் (Duty Roaster)

25.P.S.O. 726-ன்படி ஒரு காவலர் பிணி அறிக்கை செய்யும்போது அவரது பிணி அறிக்கை கடவுச் சீட்டுடன் எந்த ஆவணத்தினை தந்து அனுப்ப வேண்டும்?

26.மருத்துவ வரலாற்றுக் குறிப்புப் புத்தகத்தில் சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து குறிப்புப் பதிவு செய்ய வேண்டும்?

-இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை.

27. P.S.O. 708-ன்படி வட்ட ஆய்வாளர் நிலைய பொறுப்பு அதிகாரிகளிடமிருந்து மாத SHRகிடைக்கப்பெற்றவுடன் கீழ்க்கண்டவாறு செயற்பாடு திறன் மதிப்பிடுவார்....

-சராசரிக்கு மேல்

‘A’

சராசரி -‘B’ சராசரிக்குக் கீழ் - ‘C’

28. மருத்துவ வரலாற்றுக் குறிப்புகள் எந்தெந்தக் காவல் அதிகாரிகளுக்குப் பராமரிக்கப்பட வேண்டும்?

-தலைமைக் காவலர் முதல் இரண்டாம் நிலைக் காவலர் வரை

29.PSO 730-ன்படி காவல் நிலையத் தலைமை அலுவலர் தன் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்கு உடைச் செல்லு பட்டியலை (Acquittance Roll of clothing)எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை தயார் செய்து அனுப்பவேண்டும்?

-அரையாண்டிற்கு ஒருமுறை (ஜூன் மற்றும் டிசம்பர்)

30.PSO 731 –ன்படி ஒரு காவல் நிலையத்தில் எந்த அளவிலுள்ள அறிவிப்புப் பலகை வைத்திருக்கப்படவேண்டும்?

31.PSO 732-ன்படி ஒரு காவல் நிலையப் பெயர்ப்பலகை (Station Name Boards) எந்த மொழியில் எழுதி வைக்கப்படவேண்டும்?

-தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

32.எந்தக் காவல் நிலை ஆணை எண் படி அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளுக்கு (notified offenders) காவல் நிலையங்களில் பதிவேடுகள் வைத்து வரப்படவேண்டும்?

-PSO 735

33.சென்னை வழக்குக் குற்றவாளிகளின் கட்டுப்பாடு விதிகள் 1949-ன் 21-வது விதியின் கீழ் அறிக்கைகள் நீக்கப்பெற்ற அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை முடிவுகட்ட காவல் நிலையங்களில் எத்தனை ஆண்டுகள் வரை வைத்திருக்கவேண்டும்?

-பத்து ஆண்டுகள் வரை

34.PSO 735 –ன்படி இறந்துபோன அறிவிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை யார் ஆணையின்பேரில் அழிக்க வேண்டும்?

-உட்கோட்ட அலுவலரின் உத்தரவின் பேரில்.

35.குற்ற பதிவேடுகளில் பாகம் IV எதைப்பற்றிக் கூறுகிறது?

-கிராம சரித்திரப் பதிவேடுகள் பற்றி

36.கெட்ட நடத்தைக்காரர்களை கண்காணிக்க பராமரிக்கப்படும் சரித்திரப் பதிவேடுகள் பற்றி குற்ற ஆவணம் எந்த பாகம் விளக்குகிறது?

-பாகம் – V

37.தண்டனை பெற்றவர்களது வரலாற்றுக் குறிப்புகள் தானாகவே ஆரம்பித்தல் குறித்து கூறும்PSO எது?

-PSO 777

38.இந்திய ஆயுதச் சட்டம் & வெடி பொருட்கள் சட்டம் பிரிவு -  22-ன் கீழ் சோதனை நடத்த அதிகாரமுள்ள காவலர்கள்

-உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அலுவலர்கள்.

39. இந்திய ஆயுதச் சட்டம் 1959-ன்படி மாவட்டங்களில் உரிமம் வழங்கும் அதிகாரம் உள்ளவர்

-மாவட்ட ஆட்சியர்

40.PSO 321-ன்படி துப்பாக்கி உரிமங்களை ஒரு உதவி ஆய்வாளர் எவ்வெப்பொழுது தணிக்கை செய்ய வேண்டும்?

-அரையாண்டுக்கு ஒருமுறை

41.தமிழ் நாடு காவல் நிலை ஆணைகள் திருத்தி அமைத்து வெளியிடப்பட்ட ஆண்டு...

- 1999

42.காவல் நிலை ஆணைகளை இயற்ற காவல் துறை இயக்குனருக்கு அதிகாரமளிக்கும் சட்டப்பிரிவு

- பிரிவு 9 தமிழ்நாடு மாவட்டக் காவல் சட்டம் 1859

43.காவல் நிலை ஆணைகள் தொகுதி III-ல் அடங்கியுள்ள விபரங்கள்...

-படிவங்கள்

44.மாநில அளவிலான உயர் காவல் அலுவலர்களின் அமைப்பு பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை

- PSO 1

45.காவல் துறையினருக்கு அளிக்கப்படும் வெகுமதிகளுக்கான ஒப்பளிப்புத் தொகையினை விளக்கும் காவல் நிலை ஆணை

- PSO 46

46. ஒரு குழுவினருக்கு, ஒரு சந்தர்ப்பத்தில் காவல் துறைத் தலைவர் அளிக்கக் கூடிய பண வெகுமதிக்கான உச்ச வரம்பு

- ரூபாய் பத்தாயிரம்

47. காவல் நிலை ஆணை எண் 51  விளக்குவது

- முப்படையின் விட்டோடிகளைக் கைது செய்ததற்காக வெகுமதிகள்

48.மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அளிக்கப்படும் வெகுமதிகள் பற்றிய விபரங்களை வெளியீடு செய்வது

- வாராந்திர குற்ற மற்றும் சம்பவத் தாள்

49.தனி நபர்களுக்கு வெகுமதி அளிக்க வழி வகுக்கும் காவல் நிலை ஆணை எண்

-PSO 55

50.PSO 56 விளக்குவது

51. A என்பவரின் மரணம் நஞ்சினால் விளைவிக்கப் பட்டதா என்கிற கேள்வியில் அவர் இறந்திருப்பது எந்த நஞ்சினால் என்று யூகிக்கப்படுகிறதோ அந்த நஞ்சினால் உண்டாக்கப்படும் அறிகுறிகள் பற்றி வல்லுனர்கள் கூறும் கருத்துக்கள் இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவின்படி தொடர்புடையதாகிறது? (Expert’s Opinion)

- இ.சா.ச. பிரிவு 45

52. Dactylo graphy என்பது எதனைக் குறிக்கிறது?

-கைரேகை

53. மரபணு சோதனை எதற்கெல்லாம் பயன்படும்?

- தந்தை வழி மரபு கண்டறிய, மனிதனை இன்னாரென அடையாளம் காண்பிப்பதற்கு.

54. Digital Signature http://wordinfo.info/unit/3673/ip:1/il:D (இலக்க முறை குறியிட்டுக் கையெழுத்து) குறித்து கருத்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?

-பிரிவு 47 (A)

55. குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் தீய குணநலன்கள் வழக்கிற்கு தொடர்பற்றது என்று கூறும் பிரிவு யாது?

-பிரிவு 54

56.நீதிமன்றம் நீதி முறையில் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருண்மைகளின் பட்டியல், இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?

- பிரிவு 57

57. IEA (Indian evidence act) sec 60-ன் கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத சாட்சியம் யாது?

- செவிவழி சாட்சியம்

58. செவிவழி சாட்சியம் தொடர்பற்றது என்ற விதியின் விதிவிலக்கு எது?

-ஒன்றிய செயல் கோட்பாடு மற்றும் மரண வாக்குமூலம்.

59. ஒரு ஆவணத்தின் உள்ளடக்கங்களை தலை நிலை சாட்சியம் மூலமாகவோ அல்லது சார்நிலை சாட்சியம் மூலமாகவோ மெய்ப்பிக்கலாம் எனக் கூறுகின்ற பிரிவு யாது?

-பிரிவு 61

60. சார்நிலை சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலைகளை விளக்குகின்ற பிரிவு யாது?

-பிரிவு 65.

61. எது தனியார் ஆவணமாகும்?

-கிரைய ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், பாகப்பிரிவினை பத்திரம் ஆகியவை

62. எவை பொது ஆவணம்?

-சட்டமன்றத்துறை பதிவேடு, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்

63. ஒரு ஆவணத்தை தொல் ஆவணம் என்று சொல்ல வேண்டுமானால் எத்தனை ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்?

-முப்பது ஆண்டுகள்

64.ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்க்கவில்லை என்று வாதிட்டார். குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்த்ததாக வாதிட்டார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரைச் சேர்ந்தது?

-உரிமையாளர்.

65. B யின் மரண வாக்குமூலத்தை மெய்ப்பிக்க Aவிரும்புகிறார். இந்து அதற்குத் தொடர்புடைய பொருண்மையான B யின் மரணத்தை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு A யை சேர்ந்ததாகும் என்று சொல்லுகின்ற பிரிவு யாது?

-IEA sec 104

66.கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட Aஎன்பவர் அது ஒரு விபத்து என்று கூறி தண்டனையில் இருந்து விலக்குக் கேட்கிறார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரை சேர்ந்தது?

- குற்றம் சாட்டப்பட்டவர் A யை சார்ந்தது.

67.வரதட்சணை மரணம் தொடர்பான அனுமானம் குறித்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் கூறப்படுகிறது?

-பிரிவு 113 –B

68.இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 113-A இந்திய தண்டனை சட்டத்தின் எந்தப் பிரிவுடன் தொடர்புடையது?

-இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-A

69. வன்புணர்ச்சி குற்றம் குறித்து அனுமானம் பற்றி விளக்குகின்ற பிரிவு யாது?

-பிரிவு 114-A IEA

70.குழந்தை சாட்சியங்கள் குறித்து கூறுகின்ற பிரிவு யாது?

-பிரிவு 118 IEA

71.IEA sec 119 எதைப் பற்றி விளக்குகிறது?

_ ஊமை சாட்சியம்

72.ஒரு கணவன், தன் மனைவி மற்றும் உறவினர்கள் மூவர் முன்னிலையில் குற்ற ஏற்பினை அளித்தார். இதில் யார் யார் அதனை மெய்ப்பிக்கலாம்?

-உறவினர்கள் மட்டும்

73.A எனும் கட்சிக்காரர்  B எனும் தனது வழக்கறிஞரிடம் பொய் ஆவணம் ஒன்றைப் பயன்படுத்தி சொத்தின் அனுபவத்தைப் பெற விரும்புகிறேன். எனவே அந்த ஆவணத்தின் மீது வழக்கிட வேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இது இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவோடு சம்மந்தப்பட்டிருக்கிறது?

-பிரிவு 126 ன் கீழ் மெய்ப்பிக்கலாம்.

74. உடன் குற்றவாளியின் சாட்சியம் தகுதியான சாட்சியே எனக் கூறும் பிரிவு யாது?

_பிரிவு 133 IEA

75.ஒரு சாட்சி எதிர்த்தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணையாகும்?

_குறுக்கு விசாரணை

76.ஒரு சாட்சி குறுக்கு விசாரணைக்குப் பிறகு அவரை அழைத்த தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணை ஆகும்?

-மறு விசாரணை

77. விடையமை வினாக்கள் (leading questions) எந்த விசாரணையின்போது கேட்கக் கூடாது?

-முதல் விசாரணை

78. பிறழ் சாட்சி (hostile witness) பற்றி கூறுகின்ற பிரிவு யாது?

_ பிரிவு 154 IEA

79.சாட்சியின் நாணயத்தைத் தாக்குதல் என்பது எந்தப் பிரிவில் விளக்கப்படுகின்றது?

-பிரிவு 155 IEA

80.நினைவைப் புதுப்பித்தல் பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது?

- பிரிவு 159 IEA

‬: இந்திய தண்டனை சட்டம்

81.இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சட்டத்திற்கு முரணான வழியில் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தி ஒரு குற்றத்தை செய்தால் அது எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-பிரிவு 120 ஆ

82.நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்மந்தமான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?

-12 th chapter

83.பொதுமக்கள் ஒன்று கூடி குற்றம் செய்ய ஒருவன் உடந்தையாய் இருந்து அதனால் பத்து பேர்களுக்கு மேற்பட்டவர்களால் செய்யப்படும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பது பற்றி எந்த சட்டப்பிரிவில் விளக்கப்பட்டிருக்கிறது?

-பிரிவு 117 இதச

84. ஒரு சொத்தை பொறுத்த தற்காப்பு உரிமை, மரணத்ஹ்டை விளைவிக்கும் அளவிற்கு எப்பொழுது நீடிக்கும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 103

85.அரசிற்கு எதிரான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?

-அத்தியாயம் ஆறு

86.ஒருவர் இந்திய இராணுவ இரகசியங்களைக் கடத்திச் சென்று பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கிறார், அதை வைத்து பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுக்குமெனில் இந்த செய்கைக்கு மேற்படி நபருக்கு என்ன தண்டனை வழங்கலாம்?

-ஆயுள்தண்டனை மற்றும் அபராதம்

87.மகேஷ் என்பவர் ராம் குமாரை ஒரு வீட்டில் சென்று கொள்ளையடித்து விட்டு வர கையில் ஆயுதங்களுடன் அனுப்பி வைக்கிறார். ரமேஷ் அந்த வீட்டில் கொள்ளை அடிக்கும்போது அந்த வீட்டுக் காரரால் தடுக்கப்பட்டு ரமேஷைப் பிடிக்க முயலுகிறார். அப்போது வீட்டுக்காரரை ரமேஷ் கொலை செய்து விடுகிறார். அந்த கொலையின் காரணமாக மகேஷும் கொலைக் குற்றத்திற்கு வகை செய்யப்பட்ட தண்டனைக்கு ஆளாவார் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 111

88.ரமேஷ் என்ற காவல் ஆய்வாளரிடம் சீனிவாசன் என்பவர் தன்னை கோபால் அடித்து விட்டதாக ஒரு புகார் கொடுக்கிறார். அந்த புகாரைப் பெற்ற ரமேஷ் என்ற ஆய்வாளர் கோபால் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மேற்படி ரமேஷ் என்ற ஆய்வாளரின் செய்கை குற்றம் என்று எந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 119

89.மேட்டுச்சேரி என்ற கிராமத்தில் முஸ்லிம் மக்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஊர்வலம் நடத்துவதாக முடிவு செய்து அந்த ஊர்வலம் நடத்தும்போது அந்த ஊர்வலத்தைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற பிரிவை சேர்ந்தவர்களை ஓர் இடத்தில் கூட வேண்டும் என்று சுப்பிரமணியன் என்பவர் சுவரொட்டி ஓட்டுகிறார். இந்த செய்கைக்காக சுப்பிரமணியன் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 117

90.முகுந்தன் என்பவர் ஒரு கும்பலால் தாக்கப்படும்போது, அவர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கி சுடுகிறார். அதன் விளைவாக அந்தக் கும்பலில் ஒரு குழந்தை துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து விட்டது. முகுந்தன் புரிந்த குற்றம்...இதச பிரிவின் எந்தப் பிரிவின்படி குற்றமாகும்?

-பிரிவு 304 (A) IPC

91.ரமேஷ் என்பவரின் வீட்டில் மகேஷ் என்பவர் புகுந்து திருட முற்படுகிறார், அப்போது ரமேஷ் தனது வீட்டில் திருட முயன்ற மகேஷ் என்பவரை தடுக்கிறார், அப்போது ரமேஷ் என்பவருக்கு தற்காப்பு உரிமை எதுவரையில் நீடித்து இருக்கும்?

--மகேஷ் தப்பி வெளியே ஓடிய வரையில்

92.ஒரு திருவிழாவில் கூடிய ஒரு கூட்டமானது ஒரு வன்முறை செயலில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு அழிம்பு ஏற்படுத்தினால் அது சட்டவிரோதமான கூட்டம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-பிரிவு 141 IPC

93. ஒரு கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு பஸ் மறியலில் ஈடுபடப்போவதாக அந்த கிராமத்தினர் அறிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறு கூடுவது சட்டவிரோதமானது என்று காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டபோதும் பஸ் மறியலுக்கு கூடுவது தவறு என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-பிரிவு 145 IPC

94.சட்டவிரோதமான கும்பலை கலைந்து செல்ல உத்தரவிட்ட பின்பும் கலைந்து செல்லாமல் கூடியிருக்கும் கும்பலுக்கு என்ன தண்டனை அளிக்கலாம்?

-ஆறுமாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

95. லட்சுமி, அமிர்தம், பவானி, மோகனா ஆகிய நான்குபேரும் இரண்டு குரூப்பாகக் கூடி ஒருவரை ஒருவர் பொது இடத்தில் அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு ஒரு பொது அமைதியை குலைத்தால் அது கீழ்க்கண்ட பிரிவின்படி தண்டனைக்குரியது...

-பிரிவு 160 IPC

96. லலிதா என்ற பெண் தான் ஒரு மாவட்ட ஆட்சியர் என்று பொய்யாக கூறி சுப்பிரமணி என்ற அப்பாவியிடம் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பியூன் வேலை போட்டுத் தருவதாகக் கூறி சுப்பிரமணியிடம் பணம் வாங்கினால் குற்றம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?

-இதச பிரிவு 170

97.கந்தசாமி தான் ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் என்று கூறிக் கொண்டு உதவி ஆய்வாளருக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு ஒரு வாகன தணிக்கை செய்து அபராதம் வசூல் செய்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவர் ஆவார்?

-பிரிவு 170 & 171

98.ஏழு நபர்கள் சட்டவிரோதமான கும்பலாக சேர்ந்து தடிக் கம்புகளை கையில் வைத்துக் கொண்டு கலகம் விளைவித்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டனை கொடுக்கலாம்?

-பிரிவு 147 IPC

99.மரணம் அல்லது ஆயுள் சிறைவாசம் விதித்து தண்டிக்கப்படக் கூடிய குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு தண்டனை என்ன விதிக்கலாம்?

-ஏழு ஆண்டுகளுக்கு சிறை மற்றும் அபராதம்.

100. குற்றமுறு சதி குற்றத்துக்கு என்ன தண்டனை வழங்கலாம்?

-ஆறு மாத கால சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

: குற்ற விசாரணை முறை சட்டம்

101.ஆறு மாத காலம் என்ற சட்ட வரம்பு முறையில் உள்ள வரம்பு கீழ்க்கண்ட தண்டனை சம்மந்தப்பட்ட குற்றத்திற்குப் பொருந்தும்.

(அபராதம் விதிக்கக் கூடிய குற்றங்களுக்கு விசாரணைக்கு ஏற்பதற்குரிய காலவரம்பு குறித்தது_ஆறு மாதங்கள் வரை எந்த குற்றங்களுக்கான விசாரணைக்கு நீதி மன்றம் ஏற்கலாம்? என்கிற கேள்விக்கு இதனையே விடையாகத் தரலாம்? எப்படி இருப்பினும் ஆழ்ந்த படிப்பு மட்டுமே இறுதி வெற்றியை ஈட்ட உதவும் நண்பர்களே! முயன்று படித்தால் வெற்றி உங்களதே!)

-அபராதம் மட்டும்.

102.ஒரு குற்றம் ஒரு வருட காலத்துக்கு மேல் 3 வருட காலத்திற்கு மிகாமல் தண்டனைக்குரியது என்றால் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு

_மூன்று வருடம்

103. ஒரு மேற்சொன்ன காலவரம்பை கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயம் செய்யும் சட்டப்பிரிவு...

-468 CrPC

104.கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கால வரையறை சாதாரணமாக

-குற்றச் செயல் நடந்த நாளில் இருந்து கணக்கிடப்படும்.

105. மேற்கண்ட கணக்கீட்டினை குறிப்பிடும் பிரிவு?

-469 CrPC

106.ஒரு எதிரியின் மீது உள்ள வழக்கு காலவரம்பிற்கு உட்பட்டபோது அவர் அவ்வழக்கு தொடர்பாக ஏதாவது ஒரு மேல் முறையீடு செய்து அது முறையீட்டு மன்றத்தில் நிலுவையில் இருந்தால் காலவரம்பு முறையீட்டு மனு முடிவுக்கு வரும்வரை நீடிக்கும் என்பது எந்த சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?

-470 CrPC

107.மன்னித்து விடுதல் என்பதை கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயம் செய்யும் பிரிவு---

-360 CrPC

108.நீதித்துறை நடுவர் ஒரு வழக்கின் விசாரணையின்போது காவல் துறை அலுவலரின் கைது நடவடிக்கை அடிப்படை இல்லாதது என்று கருதினால் அவர் மீது ரூபாய் ஆயிரத்துக்கு மிகாமல் நஷ்ட ஈடு விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. சரியா?

-சரியானது.

109.ஒரு காவல் துறை அலுவலர் அடிப்படையில்லாமல் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டால் நீதித்துறை நடுவர் அவர்மீது நஷ்ட ஈடு விதிக்கலாம் என்பதைக் கூறும் சட்டப்பிரிவு எது?

-358 CrPC

110.சமாதானமாகப் போகக்கூடிய நடைமுறை விவரங்களை விளக்கக் கூடிய அட்டவனையை குறிப்பிடும் சட்டப்பிரிவு...

-320 CrPC

111.வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தின் எதிரி ஆஜராகவில்லை எனில் அதற்காக தாக்கல் செய்யப்படும் மன்னிப்பு மனு கீழ்க்கண்ட பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.

-317 CrPC

112.பொது இடைஞ்சல் நிகழ்வுகள் சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்

-மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து நிர்வாக நடுவருக்கும் உள்ளது.

113.நீர் மற்றும் நிலம் சம்மந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு அதன் விளைவாக அமைதிக்கு குந்தகம் நேரும் நிலை ஏற்பட்டால் இந்த விவரத்தை காவல் துறை அதிகாரி தனது அறிக்கையின் மூலம் கீழ்க்காணும் அலுவலருக்கு அனுப்பவேண்டும்...

-நிர்வாக நடுவர்

114.சட்டப்பிரிவு 145 ன் கீழ் ஒரு பிரச்சினையை நிர்வாக நடுவர் முடிவு செய்யும்போது அந்த தேதியில் அந்த இடம் யார் அனுபவத்தில் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என்பது...

-சரியானது

115.நிலம் மற்றும் நீர் சம்மந்தமாக உபயோக உரிமை குறித்து ஏற்படக் கூடிய பிரச்சினை மற்றும் அதன் விளைவாக உருவாகக்கூடிய அமைதிக்குப் பாதகமான சூழ்நிலையை தடுக்கும் நடவடிக்கையை எடுத்து உத்தரவு பிறப்பிக்கும் அலுவலர்

-நிர்வாக நடுவர்

116. 151 CrPC  கைது நடவடிக்கை என்பது

-ஒரு தடுப்பு நடவடிக்கை

117.நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றை CrPC 321ன்படி திரும்பப் பெறக்கூடிய மனுவைத் தாக்கல் செய்யக்கூடிய அதிகாரம்

-அரசு வழக்கறிஞருக்கு உண்டு.

118.மரண தண்டனையை உயர்நீதி மன்றம் உறுதிப்படுத்தாமல் செயல்படுத்தலாம் என்பது

-சரியானது

119.மரண தண்டனையில் சம்மந்தப்பட்ட எதிரி உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும்போது மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை உயர்நீதி மன்றம் அந்த மரண தண்டனை சம்மந்தமாக அங்கீகாரம் அளிக்க முடியாது என்பது

-சரியானது.

120.ரிவிஷன் என்ற பரிகாரத்தை உயர்நீதி மன்றத்திலும் அமர்வு நீதிமன்றத்திலும் ஒரே நேரத்தில் ஒருவர் பெறலாம் என்பது

காவல் நிலை ஆணைகள்

121. இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டம் இவைகளின் கீழ் காவல் துறையினரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை எண்  எந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?

-பதினெட்டாவது அத்தியாயம்

122. PSO 310 ல் வெடி கருவிகள் அதன் தொடர்புடைய படைக் கலன்கள் எடுத்துச் செல்பவரை கீழ்க் கண்ட காவல் அதிகாரிகளை இந்திய சட்டபிரிவு 22 ன் கீழ் சோதனை செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது?

-உதவி ஆய்வாளர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்

123.குற்றத்தை ஒத்துக்கொண்ட சாட்சியின் சிறைக்காப்பு பற்றி (custody of an approver)குறிப்பிடும் காவல் நிலை ஆணை?

-PSO 328

124.ஒரு பெண் கைதியை சாலை வழியாக நடத்தி வழிக்காவல் செய்யும்போது அவர்கள் எவ்வளவு மைல் தூரத்துக்கு மேல் நடத்திக்கொண்டு செல்லக் கூடாது?

-ஒரு மைல்

125.கைதிகளை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளனர்?

-இரண்டு வகைகளாக

126. CrPC 267 ல் நீதிமன்றங்களில் கைதிகளை ஆஜர்படுத்துவது குறித்து கூறப்பட்டுள்ளது போன்று எந்த காவல் நிலை ஆணையில் குறிப்பிடப் பட்டுள்ளது?

-PSO 350

127.ஆயுதம் தரித்து செல்லுதலை முறைப்படுத்தும்PSO?

-PSO 312.

128.PSO 319 ஆயுத சட்ட உரிமை பதிவேட்டை எவ்வளவு கால அளவுக்குள் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்?

-காலாண்டுக்கொருமுறை

129.PSO 322 ன்படி மாவட்ட காவல் அலுவலகக் கிடங்கில் உரிமம் ரத்து மற்றும் காலாவதியான ஆயுதங்களை எவ்வளவு கால அளவு வரை வைத்துக் கொள்ளலாம்?

-ஒரு வருடம் வரை

130.காப்புகளைப் பற்றிய பொதுக் கட்டளைகளைப் பற்றிக் கூறும் கா.நி.ஆணை?

-326

131.காப்புப் பணியின்போது காவல் முறை மாற்றும் புத்தகம் ஒன்றை கீழ்க்கண்ட எந்தப் படிவ எண்ணில் பதிவு செய்ய வேண்டும்?

-படிவ எண் 50

132.PSO 366 கூறுவது?

-முறை காவலர்களை அனுப்புவதற்கான நோக்கங்கள்

133. நோயுற்ற காவலர்களுக்கு மருத்துவம் செய்வது பற்றிய விதிகள் தமிழ்நாடு மருத்துவ விதி தொகுப்பு பத்தி 163 மற்றும் 317 கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்புள்ள காவல் நிலைய ஆணை எண்

-385

134.PSO 416 கூறுவது ...

-தடிப் பயிற்சியும், கலகக் கூட்ட நடவடிக்கைகள்

135.கா.நி.ஆணை 434 ரயில்வே காவல் மேடை பணியாளர்களின் வேலை முறைப் பட்டியல் எந்தப் படிவ எண்ணில் குறித்து வைக்க வேண்டும்?

- Form No.63

காவல் ஆணைகள் 3

51. A என்பவரின் மரணம் நஞ்சினால் விளைவிக்கப் பட்டதா என்கிற கேள்வியில் அவர் இறந்திருப்பது எந்த நஞ்சினால் என்று யூகிக்கப்படுகிறதோ அந்த நஞ்சினால் உண்டாக்கப்படும் அறிகுறிகள் பற்றி வல்லுனர்கள் கூறும் கருத்துக்கள் இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவின்படி தொடர்புடையதாகிறது? (Expert’s Opinion)

- இ.சா.ச. பிரிவு 45

52. Dactylo graphy என்பது எதனைக் குறிக்கிறது?

-கைரேகை

53. மரபணு சோதனை எதற்கெல்லாம் பயன்படும்?

- தந்தை வழி மரபு கண்டறிய, மனிதனை இன்னாரென அடையாளம் காண்பிப்பதற்கு.

54. Digital Signature http://wordinfo.info/unit/3673/ip:1/il:D (இலக்க முறை குறியிட்டுக் கையெழுத்து) குறித்து கருத்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?

-பிரிவு 47 (A)

55. குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் தீய குணநலன்கள் வழக்கிற்கு தொடர்பற்றது என்று கூறும் பிரிவு யாது?

-பிரிவு 54

56.நீதிமன்றம் நீதி முறையில் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருண்மைகளின் பட்டியல், இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?

- பிரிவு 57

57. IEA (Indian evidence act) sec 60-ன் கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத சாட்சியம் யாது?

- செவிவழி சாட்சியம்

58. செவிவழி சாட்சியம் தொடர்பற்றது என்ற விதியின் விதிவிலக்கு எது?

-ஒன்றிய செயல் கோட்பாடு மற்றும் மரண வாக்குமூலம்.

59. ஒரு ஆவணத்தின் உள்ளடக்கங்களை தலை நிலை சாட்சியம் மூலமாகவோ அல்லது சார்நிலை சாட்சியம் மூலமாகவோ மெய்ப்பிக்கலாம் எனக் கூறுகின்ற பிரிவு யாது?

-பிரிவு 61

60. சார்நிலை சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலைகளை விளக்குகின்ற பிரிவு யாது?

-பிரிவு 65.

61. எது தனியார் ஆவணமாகும்?

-கிரைய ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், பாகப்பிரிவினை பத்திரம் ஆகியவை

62. எவை பொது ஆவணம்?

-சட்டமன்றத்துறை பதிவேடு, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்

63. ஒரு ஆவணத்தை தொல் ஆவணம் என்று சொல்ல வேண்டுமானால் எத்தனை ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்?

-முப்பது ஆண்டுகள்

64.ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்க்கவில்லை என்று வாதிட்டார். குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்த்ததாக வாதிட்டார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரைச் சேர்ந்தது?

-உரிமையாளர்.

65. B யின் மரண வாக்குமூலத்தை மெய்ப்பிக்க Aவிரும்புகிறார். இந்து அதற்குத் தொடர்புடைய பொருண்மையான B யின் மரணத்தை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு A யை சேர்ந்ததாகும் என்று சொல்லுகின்ற பிரிவு யாது?

-IEA sec 104

66.கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட Aஎன்பவர் அது ஒரு விபத்து என்று கூறி தண்டனையில் இருந்து விலக்குக் கேட்கிறார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரை சேர்ந்தது?

- குற்றம் சாட்டப்பட்டவர் A யை சார்ந்தது.

67.வரதட்சணை மரணம் தொடர்பான அனுமானம் குறித்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் கூறப்படுகிறது?

-பிரிவு 113 –B

68.இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 113-A இந்திய தண்டனை சட்டத்தின் எந்தப் பிரிவுடன் தொடர்புடையது?

-இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-A

69. வன்புணர்ச்சி குற்றம் குறித்து அனுமானம் பற்றி விளக்குகின்ற பிரிவு யாது?

-பிரிவு 114-A IEA

70.குழந்தை சாட்சியங்கள் குறித்து கூறுகின்ற பிரிவு யாது?

-பிரிவு 118 IEA

71.IEA sec 119 எதைப் பற்றி விளக்குகிறது?

_ ஊமை சாட்சியம்

72.ஒரு கணவன், தன் மனைவி மற்றும் உறவினர்கள் மூவர் முன்னிலையில் குற்ற ஏற்பினை அளித்தார். இதில் யார் யார் அதனை மெய்ப்பிக்கலாம்?

-உறவினர்கள் மட்டும்

73.A எனும் கட்சிக்காரர்  B எனும் தனது வழக்கறிஞரிடம் பொய் ஆவணம் ஒன்றைப் பயன்படுத்தி சொத்தின் அனுபவத்தைப் பெற விரும்புகிறேன். எனவே அந்த ஆவணத்தின் மீது வழக்கிட வேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இது இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவோடு சம்மந்தப்பட்டிருக்கிறது?

-பிரிவு 126 ன் கீழ் மெய்ப்பிக்கலாம்.

74. உடன் குற்றவாளியின் சாட்சியம் தகுதியான சாட்சியே எனக் கூறும் பிரிவு யாது?

_பிரிவு 133 IEA

75.ஒரு சாட்சி எதிர்த்தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணையாகும்?

_குறுக்கு விசாரணை

76.ஒரு சாட்சி குறுக்கு விசாரணைக்குப் பிறகு அவரை அழைத்த தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணை ஆகும்?

-மறு விசாரணை

77. விடையமை வினாக்கள் (leading questions) எந்த விசாரணையின்போது கேட்கக் கூடாது?

-முதல் விசாரணை

78. பிறழ் சாட்சி (hostile witness) பற்றி கூறுகின்ற பிரிவு யாது?

_ பிரிவு 154 IEA

79.சாட்சியின் நாணயத்தைத் தாக்குதல் என்பது எந்தப் பிரிவில் விளக்கப்படுகின்றது?

-பிரிவு 155 IEA

80.நினைவைப் புதுப்பித்தல் பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது?

- பிரிவு 159 IEA

காவல் நிலை ஆணைகள் 2

1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது?

-மூன்று தொகுதிகளாக.

2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைகள் உள்ளது?

-856 ஆணைகள்

3.ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காலை ஆஜர் பட்டியலின்போது வியாழக்கிழமைகளில் எந்தப் பணி ஆஜராகும் காவலர்களுக்குத் தரப்படும்?

-ஆயுதங்களை சுத்தம் செய்தல்.

4.காவல் நிலையங்களில் ரொக்கப் புத்தகம் பராமரிக்கவேண்டும் என்று கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?

- காவல் நிலை ஆணை எண்  262

5. காவல் ஆய்வாளர் பதவிக்குக் கீழ் உள்ள அலுவலர்களது பிழை செய்தவர் குறிப்புத்தாள் (defaulter sheets)யாருடைய பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்?

-காவல் நிலைய பொறுப்பு அதிகாரி

6. காவல் நிலை ஆணை எண் 295பிரகாரம் அனைத்துத் தலைமைக் காவலர்களுக்கும், படிவம் எண்  423யில் கீழ்க்கண்ட ஆவணம் வழங்கப்படுகிறது.

-மருத்துவ சரித்திர ஏடு.(medical history sheet)

7. காவல் நிலை ஆணை எண் 562-ன்படி ஒரு காவல் நிலைய பொறுப்பு அலுவலர் குற்றவிசாரணை முறை சட்டம் (சுருக்கமாக கு.வி.மு.ச.) 157(1)(ஆ)பிரிவின்படி கீழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் விசாரணையை மறுக்கும் விருப்புரிமை உள்ளது.

-பத்து ரூபாய்க்கு மேற்படாத திருட்டு வழக்கு சம்பந்தமாக.

8.எந்த காவல் நிலை ஆணை எண், ஒரு விசாரணை அதிகாரியின் விசாரணை நடுநிலையாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது?

- காவல் நிலை ஆணை எண் 566

9. வழக்கு நாட்குறிப்பு (case dairy)குறித்து கூறும் காவல் நிலை ஆணை எண் எது?

- காவல் நிலை ஆணை எண் 567

10.காவல் நிலையங்களில் இருந்து பெறப்படும் வழக்கு நாட்குறிப்புகளில் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு ஏதாவது குறிப்புரைகள் தர வேண்டும் என்றால் உட்கோட்ட அலுவலர் / உதவி ஆணையாளர் காவல் நிலை ஆணை எண் 570 ன்படி

-குற்றக் குறிப்புகள் மூலம் தெரிவிப்பார்.

11. காவல் நிலை ஆணை எண் 573-ன்படி சாட்சிகளின் பெயர்களும், முகவரிகளும் அடங்கிய குறிப்பை என்ன செய்ய முடியும்?

-நீதிமன்ற உபயோகத்துக்கு மட்டுமே தரவேண்டும்.

12.ஒரு இளம் குற்றவாளியை கைது செய்கையில் அல்லது வழக்குத் தொடர்கையில் அத்தகைய இளங் குற்றவாளியின் வயது பற்றிய செய்தியை நீதிமன்றத்திற்குத் தரவேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் எது?

- காவல் நிலை ஆணை எண் 574

13.ஒரு காவலர் பாதுகாவலில் நடக்கும் தற்கொலை குறித்து அறிக்கை உடனடியாக காவல்துறை இயக்குனருக்கு அனுப்பப் பட வேண்டும் என்பதைக் கூறும் காவல் நிலை ஆணை எண் என்ன?

- காவல் நிலை ஆணை எண் 576

14. ஒரு கள்ளப் பணத் தாள் குறித்து ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பொறுப்பு அதிகாரி ஒரு புகார் தரும் பட்சத்தில், காவல் நிலை ஆணை எண்578 பிரகாரம் ஒரு காவல் நிலைய பொறுப்பு அதிகாரி....

-நேரடியாக வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை செய்ய வேண்டும்.

15. ஒரு பிடியாணை வேண்டா வழக்கில் காவல் அலுவலர் ஒருவருக்கு தானாகவே ஒருவரைக் கைது செய்யவோ, செய்யாமலிருக்கவோ விருப்புரிமை எந்தக் காவல் நிலை ஆணையின்படி உண்டு?

- காவல் நிலை ஆணை எண் 622

16. காவல் நிலை ஆணை எண் 706எதைப்பற்றிக் கூறுகிறது?

-பொது நாட்குறிப்பு (general dairy)

17. P.S.O. 706-ன்படி எந்தவொரு சூழ்நிலையிலும் காவல் நிலைய பொது நாட் குறிப்பில்.....மணி நேரத்துக்கு மேல் பதிவு இடைவெளிகள் இருக்கக்கூடாது?

- இரண்டு மணி நேரத்திற்கு மேல்.

18.P.S.O. 710 – ன்படி எந்தத் தரத்திலுள்ள காவலர்கள் நோட்டுப் புத்தகம் பராமரிக்க வேண்டும்?

-காவல் ஆய்வாளர் தொடங்கி காவலர்கள் வரை.

19. P.S.O. 711 –ன்படி ஒரு காவலர் பணி மாறுதலில் செல்லும்போது அவரது நோட்டுப்புத்தகத்தினை என்ன செய்ய வேண்டும்?

-அவர் பணிபுரிந்த காவல் நிலையத்திலேயே ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும்.

20. P.S.O. 713 –ன்படி ஒரு சிறைக் கைதி காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டபின், சோதனைப் பதிவேட்டில் எந்தக் கட்டத்தில் அவனுடைய முழு விவரங்களை கவனத்தோடு பதிவு செய்ய வேண்டும்?

- மூன்றாவது கட்டத்தில்

21.P.S.O.715-ன்படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேடு கீழ்க்கண்ட படிவத்தில் பராமரிக்கப் படவேண்டும்.

-படிவம் எண் 103

22. P.S.O.715-ன்படி ஒவ்வொரு வட்ட ஆய்வாளரும் தனக்குக் கீழ் உள்ள காவல் நிலையங்களில் நீதிமன்ற நிறைவேற்றுக் கட்டளைப் பதிவேட்டை சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றப்பதிவேட்டுடன் எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பீடு செய்ய வேண்டும்?

-இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை.

23.தொல்லை வழக்குப் பதிவேடு பராமரித்தல் பற்றிக் கூறும் காவல் நிலை ஆணை எண்...

-716

24. P.S.O. 717 ல் பராமரிக்கக் கூறப்பட்டுள்ள ஆவணம் எது?

-அலுவல் பட்டியல் (Duty Roaster)

25.P.S.O. 726-ன்படி ஒரு காவலர் பிணி அறிக்கை செய்யும்போது அவரது பிணி அறிக்கை கடவுச் சீட்டுடன் எந்த ஆவணத்தினை தந்து அனுப்ப வேண்டும்?

காவல் துறையின் ஆணைகள் 1

26.மருத்துவ வரலாற்றுக் குறிப்புப் புத்தகத்தில் சம்மந்தப்பட்ட காவலர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்து குறிப்புப் பதிவு செய்ய வேண்டும்?

-இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை.

27. P.S.O. 708-ன்படி வட்ட ஆய்வாளர் நிலைய பொறுப்பு அதிகாரிகளிடமிருந்து மாத SHRகிடைக்கப்பெற்றவுடன் கீழ்க்கண்டவாறு செயற்பாடு திறன் மதிப்பிடுவார்....

-சராசரிக்கு மேல்

‘A’

சராசரி -‘B’ சராசரிக்குக் கீழ் - ‘C’

28. மருத்துவ வரலாற்றுக் குறிப்புகள் எந்தெந்தக் காவல் அதிகாரிகளுக்குப் பராமரிக்கப்பட வேண்டும்?

-தலைமைக் காவலர் முதல் இரண்டாம் நிலைக் காவலர் வரை

29.PSO 730-ன்படி காவல் நிலையத் தலைமை அலுவலர் தன் கீழ்ப் பணிபுரியும் அலுவலர்களுக்கு உடைச் செல்லு பட்டியலை (Acquittance Roll of clothing)எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை தயார் செய்து அனுப்பவேண்டும்?

-அரையாண்டிற்கு ஒருமுறை (ஜூன் மற்றும் டிசம்பர்)

30.PSO 731 –ன்படி ஒரு காவல் நிலையத்தில் எந்த அளவிலுள்ள அறிவிப்புப் பலகை வைத்திருக்கப்படவேண்டும்?

31.PSO 732-ன்படி ஒரு காவல் நிலையப் பெயர்ப்பலகை (Station Name Boards) எந்த மொழியில் எழுதி வைக்கப்படவேண்டும்?

-தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

32.எந்தக் காவல் நிலை ஆணை எண் படி அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளுக்கு (notified offenders) காவல் நிலையங்களில் பதிவேடுகள் வைத்து வரப்படவேண்டும்?

-PSO 735

33.சென்னை வழக்குக் குற்றவாளிகளின் கட்டுப்பாடு விதிகள் 1949-ன் 21-வது விதியின் கீழ் அறிக்கைகள் நீக்கப்பெற்ற அறிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை முடிவுகட்ட காவல் நிலையங்களில் எத்தனை ஆண்டுகள் வரை வைத்திருக்கவேண்டும்?

-பத்து ஆண்டுகள் வரை

34.PSO 735 –ன்படி இறந்துபோன அறிவிக்கையிடப்பட்ட குற்றவாளிகளின் பதிவுகளை யார் ஆணையின்பேரில் அழிக்க வேண்டும்?

-உட்கோட்ட அலுவலரின் உத்தரவின் பேரில்.

35.குற்ற பதிவேடுகளில் பாகம் IV எதைப்பற்றிக் கூறுகிறது?

-கிராம சரித்திரப் பதிவேடுகள் பற்றி

36.கெட்ட நடத்தைக்காரர்களை கண்காணிக்க பராமரிக்கப்படும் சரித்திரப் பதிவேடுகள் பற்றி குற்ற ஆவணம் எந்த பாகம் விளக்குகிறது?

-பாகம் – V

37.தண்டனை பெற்றவர்களது வரலாற்றுக் குறிப்புகள் தானாகவே ஆரம்பித்தல் குறித்து கூறும்PSO எது?

-PSO 777

38.இந்திய ஆயுதச் சட்டம் & வெடி பொருட்கள் சட்டம் பிரிவு -  22-ன் கீழ் சோதனை நடத்த அதிகாரமுள்ள காவலர்கள்

-உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அலுவலர்கள்.

39. இந்திய ஆயுதச் சட்டம் 1959-ன்படி மாவட்டங்களில் உரிமம் வழங்கும் அதிகாரம் உள்ளவர்

-மாவட்ட ஆட்சியர்

40.PSO 321-ன்படி துப்பாக்கி உரிமங்களை ஒரு உதவி ஆய்வாளர் எவ்வெப்பொழுது தணிக்கை செய்ய வேண்டும்?

-அரையாண்டுக்கு ஒருமுறை

41.தமிழ் நாடு காவல் நிலை ஆணைகள் திருத்தி அமைத்து வெளியிடப்பட்ட ஆண்டு...

- 1999

42.காவல் நிலை ஆணைகளை இயற்ற காவல் துறை இயக்குனருக்கு அதிகாரமளிக்கும் சட்டப்பிரிவு

- பிரிவு 9 தமிழ்நாடு மாவட்டக் காவல் சட்டம் 1859

43.காவல் நிலை ஆணைகள் தொகுதி III-ல் அடங்கியுள்ள விபரங்கள்...

-படிவங்கள்

44.மாநில அளவிலான உயர் காவல் அலுவலர்களின் அமைப்பு பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை

- PSO 1

45.காவல் துறையினருக்கு அளிக்கப்படும் வெகுமதிகளுக்கான ஒப்பளிப்புத் தொகையினை விளக்கும் காவல் நிலை ஆணை

- PSO 46

46. ஒரு குழுவினருக்கு, ஒரு சந்தர்ப்பத்தில் காவல் துறைத் தலைவர் அளிக்கக் கூடிய பண வெகுமதிக்கான உச்ச வரம்பு

- ரூபாய் பத்தாயிரம்

47. காவல் நிலை ஆணை எண் 51  விளக்குவது

- முப்படையின் விட்டோடிகளைக் கைது செய்ததற்காக வெகுமதிகள்

48.மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அளிக்கப்படும் வெகுமதிகள் பற்றிய விபரங்களை வெளியீடு செய்வது

- வாராந்திர குற்ற மற்றும் சம்பவத் தாள்

49.தனி நபர்களுக்கு வெகுமதி அளிக்க வழி வகுக்கும் காவல் நிலை ஆணை எண்

-PSO 55

50.PSO 56 விளக்குவது

கல்வித்துறையில் நிர்வாக மாற்றம்-

*பள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளும் ஒன்றினைந்து அரசாணை 101 இன்று வெளியிடப்பட்டுள்ளது*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2018/05/101.html

*🌟கல்வித்துறையில் நிர்வாக மாற்றம்-புதிய அரசாணை🌟*.

*இனி...*

*⚡C. E. O.*

*⚡D. E. O.*

*⚡B. E. O.*

*⚡A. E. E.O.வுக்குப் பதில் இனி...*

*⚡B. E. O. Block Educational Officer*

🌟அனைத்து வகை பள்ளிகளையும் கண்காணிக்க பதவிகள் ஒருங்கிணைபட்டு சில மாறுதல்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..

🌟மாவட்ட அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது...

*பதவிகள்:*

⚡1.முதன்மை கல்வி அலுவலர் CEO

⚡2.மாவட்ட கல்வி அலுவலர் DEO

⚡3.வட்டார கல்வி அலுவலர் BEO

*1.முதன்மை கல்வி அலுவலர் பணிகள்:*

🌟அனைத்து வகை பள்ளிகளையும் (அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் , மெட்ரிக் பள்ளி,சுயநிதிப்பள்ளிகள்) கண்காணித்தல்..

🌟DEO BEO ஆகியோரை கண்காணித்தல்..

🌟அரசு மேல் நிலைப்பள்ளிகளில் ஆண்டாய்வு செய்தல்..

🌟பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் உத்தரவு வழங்குதல்..

🌟அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட அளவில் கிடைப்பதை உறுதி செய்தல்...

🌟தனியார் பள்ளிகள் அங்கீகார பணிகளை மேற்கொள்ளுதல்...

*2.மாவட்ட கல்வி அலுவலர் பணிகள்:*

🌟அனைத்து வகை பள்ளிகளையும்  மேற்பார்வை செய்தல்

🌟BEO அலுவலர்கள் பணிகளை மேற்பார்வையிடுதல்..

🌟அனைத்து வகை உயர்நிலைப்  பள்ளிகளை ஆண்டாய்வு செய்தல்...

🌟மாவட்ட அளவில் அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் சென்றடைவதை உறுதி செய்தல்...

🌟உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணிகளை கண்காணித்து அறிவுரைகளை வழங்குதல்...

*3.வட்டார கல்வி அலுவலர் பணிகள்:*

🌟உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடம் வட்டார கல்வி அலுவலர் பணியிடமாக மாற்றப்பட்டு உள்ளது..

🌟அனைத்து வகை தொடக்க நடுநிலை பள்ளிகளை கண்காணித்து ஆண்டாய்வு செய்தல்..

🌟தொடக்கநிலை நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிகளை கண்காணித்து அறிவுரைகளை வழங்குதல்..

🌟அரசு நலத்திட்ட உதவிகளை முறையாக கிடைப்பதை உறுதி செய்தல்..

*⚡அரசாணை pdf வடிவில்:*

https://drive.google.com/file/d/1-79dAtfqxox0YbvfbrVZwyMVL6TuMfpp/view?usp=drivesdk

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம்

சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம்

சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம் பிரிவு 21 ன்படி லோக் அதாலத்தில் வழங்கப்பட்ட சமரச தீர்ப்பின் மீது ஒரு உரிமையியல் நீதிமன்றத்தில் தான் அந்த தீர்ப்பினை நிறைவேற்றுவதற்கான மனுவை தாக்கல் செய்ய முடியும் என்று மேற்படி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம் (Legal Services Authorities Act) பிரிவு 21(1) ன்படி லோக் அதாலத்தால் வழங்கப்படும் ஒவ்வொரு தீர்ப்பும் உரிமையியல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பாணையாகவே கருதப்படும்.

அல்லது வழக்கின் தன்மைக்கு ஏற்ப எந்தவொரு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவாகவும் அது கருதப்படும்.

ஆகையால் லோக் அதாலத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்வளிப்பின் மீது நிறைவேற்றுதல் நடவடிக்கையை உரிமையியல் நீதிமன்றத்திலோ அல்லது குற்றவியல் நீதிமன்றத்திலோ எடுக்கலாம்.

உச்சநீதிமன்றம் " கோவிந்தன் குட்டி மேனன் Vs C. D. ஷாஜி (2012-2-SCC-51)" என்ற வழக்கில், சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டத்தின் படி, காசோலை மோசடி வழக்கு ஒன்று லோக் அதாலத்தில் சமரசமாக முடிக்கப்பட்டுத் தீர்வளிப்பு வழங்கப்பட்டது. அந்த சமரசத்தின் படி எதிரி நடந்து கொள்ளாததால் புகார்தாரர் எர்ணாகுளம் உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில் அந்த தீர்வளிப்பை நிறைவேற்றுவதற்காக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலிருந்து சமரசமாக முடிப்பதற்காக லோக் அதாலத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு வழக்கில், லோக் அதாலத்தால் வழங்கப்பட்ட சமரச தீர்வளிப்பினை ஒரு உரிமையியல் தீர்ப்பாணையாக கருத முடியாது. எனவே அந்த தீர்வளிப்பினை நிறைவேற்றுவதற்காக உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாது என்று குறிப்பிட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து புகார்தாரர் கேரளா உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிப்பேராணை மனுவை தாக்கல் செய்தார். அந்த ரிட் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன்பிறகு புகார்தாரர் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று ஒரு மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.

அந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம் பிரிவு 21 குறித்து பல்வேறு உயர்நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் ஆராய்ந்து கீழ்க்கண்டவாறு தீர்ப்பு கூறியது.

23.  அந்த சட்டம் உருவாக்கப்பட்டதின் காரணம், நோக்கங்களை பார்க்கும் பொழுது நீதிமன்றத்தின் வேலைப்பளுவை குறைப்பதோடு, தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதும், ஏழை மக்களுக்கு நீதியை அவர்களுடைய வீட்டு வாசலுக்கு கொண்டு செல்வதும், குறைந்த செலவில் விரைவாக நீதி வழங்குவதும் அச்சட்டத்தின் நோக்கமாகும்.

உரிமையியல் நீதிமன்றத்திலிருந்து லோக் அதாலத்திற்கு அனுப்பப்பட்ட வழக்கில் வழங்கப்படும் சமரச தீர்வை மட்டுமே தீர்ப்பாணையாக கருத முடியும் என்றும், ஒரு குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து லோக் அதாலத்திற்கு அனுப்பப்பட்ட வழக்கில் ஏற்பட்ட சமரச தீர்வினை ஒரு உத்தரவாகத்தான் கருத முடியும் என்கிற தவறான முடிவிற்கு கீழமை நீதிமன்றங்கள் வருகின்றன.

உரிமையியல் நீதிமன்றத்திலிருந்து ஒரு வழக்கு லோக் அதாலத்திற்கு அனுப்பப்படுவதற்கும், குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அனுப்பப்படுவதற்கும் இடையே வித்தியாசம் உள்ளது என சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டத்தில் கூறப்படவில்லை.

எனவே காசோலை மோசடி வழக்கை, குற்றவியல் நீதிமன்றம் லோக் அதாலத்திற்கு சமரசத்திற்காக அனுப்பப்பட்டு அங்கு ஒரு தீர்வளிப்பும் வழங்கப்பட்டு விட்டால் அதனை ஒரு தீர்ப்பாணையாகவே கருத வேண்டும். அந்த சமரச தீர்ப்பை நிறைவேற்ற உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய முடியும்.

அதேபோல் உச்சநீதிமன்றம் " பஞ்சாப் மாநில அரசு Vs ஜலூர் சிங் (2008-1-SCC-CRL-524)" என்ற வழக்கில், வழக்கு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமாக ஒரு உத்தரவாக அளிப்பது லோக் அதாலத்தின் நிர்வாக செயல்பாடுகளில் ஒன்றாகும்.

இருப்பினும் லோக் அதாலத்தின் கையொப்பம் மற்றும் முத்திரையுடன் வழங்கப்பட்ட அந்த உத்தரவு நிறைவேற்றப்படக்கூடிய ஒரு உத்தரவாகவே கருதப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம் பிரிவு 21 ன்படி ஒரு லோக் அதாலத்தின் மூலம் வழங்கப்பட்ட தீர்வளிப்பை உரிமையியல் நீதிமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எப்படி ஒருவருக்கு உரிமை உள்ளதோ

அதேபோல் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்வதற்கும் லோக் அதாலத்தில் தீர்வளிப்பை பெற்றவருக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. RC. NO - 509/2014, DT - 2.3.2015

Valli Vs Muniya Samy

2015-1-TLNJ-CRL-257

மாவட்ட ஆட்சியரகம்

மாவட்ட ஆட்சியரகம்

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம்,ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.
கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் துறை

யின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதிசெய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக இருக்கிறார்கள்.

இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் , மற்றும் துனை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர். பேருராட்சிகளின் உதவி இயக்குனர், நகராட்சி, மாநகரட்சிகளின் கமிஷனர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர்.

1. பிரிவு எ – பணியாளர் தொகுதி, அலுவலக நடைமுறைகள், பொதுத்தேர்தல் மற்றும் முக்கிய அதிகாரிகளின் தங்கல் மற்றும் பயண ஏற்பாடுகள்
2.பிரிவு பி – நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான வழக்குகள் கையாளுதல்
3. பிரிவு சி – சட்டம் ஒழுங்கு, நீதியியல் – வழக்குகள்
4. பிரிவு டி – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
5. பிரிவு ஈ – நிலம் – பட்டா மாறுதல் – அரசு தேர்வுகள்
6. பிரிவு ஜி – நில அலவை
7. பிரிவு எச் – பதிவறை பாதுகாப்பு, அரசு அழுவலக இருப்பிட வசதி, மாவட்ட அரசிதழ்
8. பிரிவு ஜே – குடிமை பொருட்கள் பொது வினியோகம்
9.பிரிவு கே – நிலம் – நில ஆக்கிரமிப்பு – நில விடுவிப்பு – இரயில்வே நிலங்கள்
10.பிரிவு எல் – சுத்த நகல், தபால், அனுப்புதல்
11. பிரிவு எம் – வரவு செலவு, தனிக்கை,சம்பளம்
12. பிரிவு பி – இயற்கை இடர்பாடுகள், மலை பகுதிகள்
13. பிரிவு ஆர் – மறுவாழ்வு, அகதிகள் நலம், இலங்கை தமிழர்கள் நலம்
14. பிரிவு ஜிசி – பொது மக்கள் குறைதீர் பிரவு
15. ஆயத்தீர்வை – மாநில ஆயத்தீர்வை – டாஸ்மாக் மேலாண்வை
16. பிரிவு – பிசி – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை,
17. AD(P) : கிராம பஞ்சாயத்துகள்
18. AD(audit) : தனிக்கை மற்றும் உயர்மட்ட குழு
19. PA(SS) : சிறு சேமிப்பு
20. PA(NM) : பள்ளி சத்துணவு திட்டம்
21. PO(DRDA) : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்
22. A.D(TP) : பேரூராட்சிகள் நிர்வாகம்

அங்கிகாரம் இல்லாத கல்வி

அங்கிகாரம் இல்லாத கல்வி நிலையங்கள் பொதுமக்கள் பணம் வீண்

அங்கிகாரம் இல்லாத கல்வி நிலையங்கள்
பொதுமக்கள் பணம் வீண்

மாணவர்கள் கல்வி பாதிப்பு

பல்வேறு பகுதிகளில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் மேற்கல்வி தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு கல்வி என கூறி ஏதேதோ பாட பிரிவுகளை நடத்துகின்றன.

இவை படித்தபின் வேலை வாய்ப்பை தருமா என்பது மிக பெரும் கேள்வி குறியே,

இந்த படிப்புகள் பின்னனி என்ன

அரசு அங்கிகாத்த தொழிற்படிப்புகள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களிலேயே நடத்தப்படுகின்றது.

அதற்கு பல்வேறு விதிமுறைகள், கட்டிட அமைப்பு முறைகள், வகுப்பறைகள்,  செயல்முறைக்கான பயிற்சி வசதிகள் (லேப்), கழிப்பிடம், தகுதியான ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் என பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் இவை புதுபிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உண்டு.

ஆனால் எந்தவித அரசு அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் அரசு அங்கிகரிக்காத பாட பிரிவுகளை உடனடி வேலை வாய்ப்பு தரும் கல்வி என கூறி பலரும் தனியாக கல்வி நிலையத்தை துவக்கி செயல்படுத்தி வருகின்றனர்.

இவற்றில் படித்தவர்கள் பலரும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் தங்களுக்கு கிடைக்கும் குறைந்த சம்பள வேலைக்கே சென்று வருகின்றனர்.

சில மாவட்டங்களில் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் மீது அரசு மாவட்ட நிர்வாகம், காவல்துறை, கல்வித்துறை, சுகாதார துறை உள்ளிட்ட துறையினர் இணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆனால் ஏமாற்றிய நிறுவனங்களில்
ஏமாந்த பலரும்
போன பணம் போகட்டும் என்று தனது நிலையை என்னி வருந்தி கொண்டு இருப்பது தான் மிச்சம்.

அங்கீகாரம் உள்ள படிப்புகள்  ஆசிரியர் படிப்பு

அரசு ஆசிரியர் பயிற்சி கல்வியியல் துறை சார்பில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் படிப்புகள்

இவை இரண்டாண்டு கல்வியியல் பட்டய படிப்பு D.Ted இவற்றை படித்தால் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம்

கல்வி தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி,

மற்றது

பி எட் எனப்படும் கல்வியியல் பட்ட படிப்பு இது கல்வியியல் கல்லூ ரிகளில் படிக்கலாம்.

இதற்கு கல்வி தகுதி இளங்கலை பட்ட படிப்பு

இவை தவிர பிற ஆசிரியர் பயிற்சிகள் அரசால் ஏற்றுக் கொள்வதில்லை என்பது குறிப்பிடதக்கது.

நர்சிங் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற நர்சிங் பயிற்சி மட்டுமே அரசு மருத்துவமனை மற்றும் இதர தனியார் மருத்துவமனையில் நர்சிங் பணிக்கு சேர்த்துக்கொள்ளப் படுகின்றது

நர்சிங் கவுன்சில் அனுமதி இல்லாத நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்களை ஏற்றக்கொள்ள முடியாது என சமிபத்தில் நடைப்பெற்ற வழக்கில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசு வேலை வாய்ப்பு மற்றும் முக்கிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பல்கலைகழகம் ஆகியன நேரடியாக வழங்கும் சான்றுகள் மட்டுமே செல்லுபடியாகும்.

இதர சான்றுகள் பயன்அளிக்காது என்பது குறிப்பிட தக்கது.

தீயணைப்பு மற்றும் இதர துறைகளின் படிப்புகளும் இதே நிலைதான்

 *கல்விக்கான செலவு மூலதனம்

அதை முறையாக செலவிடுவது
முக்கியம்*

எனவே அரசு வழங்கும் சன்றுகள் பெறும் படிப்புகளை தேர்வு செய்து படித்தால் அதற்கான செலவு செய்த பணம் பயணளிக்கும்.
இல்லையேல் வீனாகும்

எனவே அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் மற்றும்

பல்கலை கழகம் இணைப்பு பெற்ற கல்லூரிகளில்

பல்கலை கழகம் வழங்கும் சான்றிதல் கொண்ட படிப்பை தேர்வு செய்வது அவசியம் ஆகும்.

at May 16, 2015

CCHEP Nilgiris
http://cchepnlg.blogspot.in/?m=1

அயோடின் உப்பு விழிப்புணர்வு முகாம்

பந்தலூர்மே. 11:  

பந்தலூர் அருகே சேரம்பாடி மகளீர் தையல் பயிற்சி மையத்தில்   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியனசார்பில் அயோடின் உப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு ஷாலோம் டிரஸ்ட் செயலாளர் சுப்பிரமணி தலைமைதாங்கினார்.

கப்பாலா ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கணையேந்திரன் பேசும்போது

அயோடின் குறைபாட்டினால் குழந்தைகள் வளர்ச்சி குறைபாடுமுன் கழுத்து கழலைமூளைவளர்ச்சி  குறைபாடுமந்த தன்மைஊனமான குழந்தை பிறப்பு என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.  

இவற்றை தடுக்க தற்போது அயோடின் கலந்தஉப்பினை பயன்படுத்த வேண்டும்அயோடின் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக உப்பில் கலந்து தரப்படுகின்றது.

அயோடின் பற்றாக்குறை தடுப்பதில் மக்களும் பங்கேற்று தரமான உப்பினை வாங்கி,முறையான பராமரிப்போடுபயன்படுத்த வேண்டும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது அயோடின் ஒரு நுண்ணூட்டசத்தாகும்

 இது குறையும்போதுஉடல் வளர்ச்சி குறைபாடுகுழந்தைகளின் நினைவு திறன்குறைபாடு ஏற்படுகிறது

கடைகளில் வெளியேவைத்திருக்கும் உப்புகளில்அயோடின் சத்து குறைவாகஇருக்கும் அவற்றை தவிர்க்கவேண்டும்.  

வீடுகளில் அயோடின்பரிசோதணை மேற்க்கொள்ளஉருளைகிழங்கினை வெட்டி அதில்உப்பை வைத்து அதில் எலுமிச்சைசாற்றினை பிழிந்தால் உப்பின்நிறம் மாறும்  அதில் அயோடின்கலப்பு குறித்து அறியலாம் என்றார்.

அயோடின் உப்பு பரிசோதனைசெய்து விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மகளீர்கள் பலர்கலந்து கொண்டனர்.  முன்னதாகதையல் பயிற்சி மைய ஆசிரியர்மேரி வரவேற்றார்முடிவில்(பெட்காட்தமிழ்நாடு நுகர்வோர்அமைப்புகள் கூட்டமைப்புதாலுக்கா அமைப்பாளர்சத்தியசீலன் நன்றி கூறினார்.

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...