கலப்படங்களைக் கண்டறிய எளிய வழிகள்!

பால் முதல் தேன்வரை கலப்படங்களைக் கண்டறிய எளிய வழிகள்!

அ ஞ்சறைப் பெட்டி பொருள்கள் தொடங்கி இருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களிலுமே வியாப்பித்துவிட்டது கலப்படம். கலப்படத்தில் இரண்டு வகை உண்டு. 

பொருளாதார லாபத்துக்காகத் தெரிந்தே செய்வது... தற்செயலாக நடைபெறுவது. தற்செயலாக நடைபெறுவது பெரும்பாலும் வீட்டில் தான். 
அம்மாவோ, மனைவியோ அஞ்சறைப் பெட்டியில் வைத்திருக்கும் கடுகுடன், சீரகம் கலந்துவிடுவதைப் போன்று. அதில் ஆபத்து இல்லை. 

ஆனால் லாப நோக்குக்காக அத்தியாவசியப் பொருள்களிலும், அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களிலும் கலப்படம் செய்வதால் உடல்நலம் நிச்சயம் பாதிக்கப்படும்.


கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை சாப்பிடுவதால் உடலில் நச்சு சேர்கிறது.

நச்சின் அளவு அதிகரிக்கும்போது இதய செயலிழப்பு, கல்லீரல், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும். தரமான உணவைச் சாப்பிடும்போது கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துகள், கலப்படம் செய்யப்பட்ட உணவுப்பொருள்களைச் சாப்பிடுவதால் கிடைக்காமல் போய்விடும். 

இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். கலப்படமில்லாத தரமான உணவுப் பொருள்களை வாங்கிப் பயன்படுவதில் நுகர்வோரான நமக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.

பரபரப்பான வேலைச் சூழலில் எந்த ஆய்வகத்தைத் தேடிச் சென்று உணவுப் பொருளில் கலப்படம் இருப்பதைக் கண்டுபிடிக்கமுடியும்...? எளிய வழி இருந்தால் சொல்லுங்கள் என்கிறீர்களா?

வீட்டிலேயே கலப்படத்தைக கண்டறியும் வழிமுறைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது தில்லியைச் சேர்ந்த வாய்ஸ் என்ற அமைப்பு. 

நுகர்வோர் நலனுக்காக 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து உணவுப் பொருள்களில் உள்ள கலப்படத்தைக் கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

நம் அன்றாட பயன்பாட்டில் தவிர்க்க முடியாத உணவுப் பொருள்கள் சிலவற்றில் இருக்கும் கலப்படத்தை வீட்டிலேயே கண்டறியும் எளிய வழிமுறைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.


பொதுவாக, கனம் அதிகமுள்ள பொருள்கள் நீரில் மூழ்கும். இலகுவான பொருள்கள் நீரில் மிதக்கும். இயற்கை நிறம் கொண்ட உணவுப் பொருள்களைத் தண்ணீரில் போட்டால் நிறம் மாறாது. 

செயற்கை நிறமூட்டப்பட்டிருந்தால் அதன் சாயம் நீரில் இறங்கும். இந்த இரண்டு அடிப்படை அறிவியல் டெக்னிக்கையும் பயன்படுத்தி பெரும்பாலான கலப்படங்களைக் கண்டறியலாம்.

இனி கலப்படத்தைக் கண்டறியும் எளிய முறைகளைப் பார்ப்போம்.

பால்

* பாலில் தண்ணீர் கலப்பைக் கண்டறிய, ஒரு சொட்டுப் பாலை வழவழப்பான, சாய்வான தளத்தில் விட வேண்டும். கலப்படமில்லாத பால் என்றால் அது அப்படியே நிற்கும் அல்லது மெதுவாக வழியத் தொடங்கும். பால் வழிந்து வந்த பாதையில் வெள்ளை நிறத் தடம் இருக்கும். தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்றால் தளத்தில் விட்ட உடனேயே வழிந்து விடும். வந்த இடத்தில் தடம் எதுவும் இருக்காது.


* பாலில் டிடர்ஜென்ட் கலப்படத்தைக் கண்டறிய, 5 - 10 மி.லி. பாலுடன், அதே அதே அளவு தண்ணீர் சேர்த்து ஒரு டப்பாவில் ஊற்றி, டப்பாவை மூடி நன்றாகக் குலுக்க வேண்டும். டப்பாவைத் திறந்து பார்க்கும்போது அடர்த்தியான நுரை படர்ந்திருந்தால் அதில் டிடர்ஜென்ட் கலந்திருக்கிறது. மெல்லிய நுரை இருந்தால் கலப்படம் இல்லை.

* பால் பொருள்களான பன்னீர், கோவா போன்றவற்றில் ஸ்டார்ச் கலந்திருப்பதைக் கண்டறிய, அவற்றில் 3 மில்லி அளவுக்கு எடுத்து அதனுடன் 5 மில்லி தண்ணீர் சேர்த்து வேகவைக்கவேண்டும். வேக வைத்து ஆறிய பின் அதன் மேல் 2, 3 துளி டிஞ்சர் ஐயோடின் கரைசலைத் தெளித்தால் நீல நிறமாக மாறிவிடும். 

பாலிலும் ஸ்டார்ச் கலந்திருப்பதைக் கண்டறிய அதன்மீது நேரடியாக இதே கரைசலைச் சேர்க்கலாம். நீற நிறமாக மாறினால் கலப்படம் இருப்பது கன்ஃபார்ம். நிறம் மாறாவிட்டால் கலப்படம் இல்லை.

டீத்தூள்

* ஒரு கரண்டி டீத்தூளை கண்ணாடி டம்ளரில் போட்டு அதில் சூடான தண்ணீரை ஊற்றுங்கள். நல்ல டீத்தூள் என்றால் தண்ணீரின் நிறம் மாற 3 நிமிடங்கள் எடுக்கும். அதுவே கலப்பட டீத்தூள் என்றால் 30 விநாடியில் நிறம் மாறிவிடும்.

* டீத்தூளின் மணத்தை வைத்தே அதன் தன்மையைக் கண்டறிய முடியும். ஓர் ஏர் டைட் டப்பாவில் டீத்தூளைக் கொட்டி இறுக மூடி வையுங்கள்.

 24 மணி நேரம் கழித்து டப்பாவைத் திறக்கும்போது காற்றோற்றமில்லாத கெட்ட மணம் வீசினால் அது, கலப்படத்தூளேதான். டப்பாவைத் திறக்கும்போது டீத்தூளின் உண்மையான சுண்டி இழுக்கும் மணம் வந்தால், 'then its time for a cup of tea'.


தேங்காய் எண்ணெய்

* தேங்காய் எண்ணெய் உறையும் தன்மை உடையது. அதனுடன் பிற எண்ணெய் கலந்திருப்பதைக் கண்டுபிடிக்க ஒரு கண்ணாடி டம்ளரில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி ஃபிரிட்ஜில் சில மணி நேரம் வைத்து (ஃபிரிட்ஜில் உள்ள ஃபிரீஸரில் வைக்கக் கூடாது) எடுங்கள். 

கலப்படமில்லாத தேங்காய் எண்ணெய் உறைந்திருக்கும். கலப்படம் இருந்தால் அதில் இருக்கும் தேங்காய் எண்ணெய் உறைந்தும், கலக்கப்பட்ட வேறு எண்ணெய் உறையாலும் இருக்கும்.

தேன்

* சுத்தமான தேன் தண்ணீரில் கரையாது. தண்ணீருடன் கூடிய கண்ணாடி டம்ளரில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்குங்கள். கரையாமல் தேங்கினால் அது சுத்தமான தேன். நீரில் கரைந்தால் அதனுடன் சர்க்கரை கலந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.


* ஒரு குச்சியைத் தேனில் முக்கி அதை தீக்குச்சியால் பற்ற வையுங்கள். 'சுர்' என்ற சத்தத்துடன் தீப்பற்றி எரிந்தால் அது சுத்தமான தேன். சர்க்கரை கலந்திருந்தால் தீப்பிடிக்காது.

சர்க்கரை


* சர்க்கரையில் சாக்பீஸ் பவுடர் கலந்திருப்பதைக் கண்டறிய, ஒரு ஸ்பூன் சர்க்கரையை ஒரு டம்ளர் தண்ணீரில் போடுங்கள். சிறிது நேரத்தில் உண்மையான சர்க்கரை கரைந்துவிடும். சாக்பீஸ் பவுடர் டம்ளரின் அடியில் படியும்.

மஞ்சள்தூள்

* மஞ்சள்தூளைத் தண்ணீரில் போட்டால், இளம் மஞ்சள் நிறமாக மாறி, டம்ளரின் அடியில் படிய வேண்டும். அடர் மஞ்சள் நிறத்தில் மிதந்தால் அது கலப்படத்தூள்.

தானியங்கள்

* கேழ்வரகு, கோதுமை, சோளம் போன்ற தானியங்களைத் தண்ணீரில் போடும்போது அதில் செயற்கை நிறம் கலந்திருந்தால் தண்ணீரின் நிறம் மாறிவிடும்.

மிளகாய்த்தூள்

* மிளகாய்த்தூளை ஒரு டம்ளர் தண்ணீரில் போடுங்கள். சுத்தமான மிளகாய்த்தூள் நீரில் மிதக்கும்.

மிளகு

* மிளகுடன் பப்பாளி விதைகள் கலப்பதையும் கண்டறிய இதே தண்ணீர் டெக்னிக்தான். பப்பாளி விதையைக் காட்டிலும் எடை அதிகம் என்பதால் மிளகு, தண்ணீரின் அடியில் தங்கும். பப்பாளி விதை நீரின் மேல் மிதக்கும்.

புகார் அளியுங்கள்!

உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறியப்பட்டால், உடனே அதனை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் (FSSAI) புகார் தெரிவிக்கலாம். நுகர்வோரிடம் இருந்து அதிக புகார்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது ஆணையம். 

அதே போன்று நாம் வாங்கும் உணவுப்பொருளில் கலப்படம் இருப்பதை ஆய்வகத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தால், FSSAI-ன் ஆய்வகங்கள் இந்தியா முழுவதும் 72 இடங்களில் உள்ளன. 

தமிழகத்தில் சென்னையில் இரண்டு ஆய்வகம் உள்பட, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி என ஏழு இடங்களில் உள்ளன. 

ஒருவேளை நீங்கள் எடுத்துச் செல்லும் உணவுப்பொருளில் கலப்படம் இருப்பது ஆய்வக சோதனையில் உறுதி செய்யப்பட்டால், ஆய்வுக்காக நீங்கள் செலுத்திய கட்டணம் உங்களுக்கே திருப்பி அளிக்கப்படும்.


ரோட்டோர கடைகளில் காளான்

ரோட்டோர கடைகளில் காளான் சாப்பிடுபவர்கள் இதை படித்து விட்டு சாப்பிடுங்க...

நம்மில் பலரும் ரோட்டோர கடைகளில் பானிபூரி மசால் பூரி பேல் பூரி காளான் போன்ற பல உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை ருசித்து ருசித்து சாப்பிடிருப்போம்.

விலை குறைவு சுவை அதிகம் என்பதால் இது போன்ற கடைகளுக்கு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வரவேற்பு அதிகம் தான்.

இந்த உணவுகளின் சுவையை பார்க்கும் நாம் இவற்றை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீங்கை பற்றி கவலைப்படுவதில்லை.

பெரும்பாலான கடைகளில் காளான் என்ற பெயரில் விற்கப்படும் உணவில் இருப்பது காளான் இல்லை என்பதே நூறு சதவீதம் உண்மை.

காளான் இல்லை என்றால் வேறு என்ன?

முட்டைக்கோஸ் மைதா மாவுடன் உப்பை சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து எடுத்ததை தான் காளான் என்கிறார்கள்.

இதனுடன் சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபி பவுடர் காரத்துக்கு மிளகாய் தூளை தண்ணீரில் கரைத்து வானலியில் ஊற்றியை கலவையை வேகவைத்து வாடிக்கையாளருக்கு தட்டில் பரிமாறுகின்றனர்.

இவற்றில் காரமும் உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாக்கை சுண்டியிழுக்கிறது. இது தான் காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.

இந்த விஷயம் தெரியாத பலரும் காளான் சுவையை மனதில் நினைத்தபடி போலியான காளான் உணவுககளை விரும்பி சுவைக்கின்றனர்.

சுகாதாரத் துறையினர் இந்த வகையான காரம் ஜிலேபி பவுடர் அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ் மைதா மாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது உடலின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர்

மேலும் ஒருமுறை உணவை வேகவைக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுதன்மை கலந்து ஆரோக்கியத்து ஆபத்தை விளைவிக்கிறது.

இது போன்ற உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்பு சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

எனினும் வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடிப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் கூட விற்பனை சூடுபிடிக்கிறது.

Plastic ban: FSSAI

Plastic ban: FSSAI warns against flouting norms

by SENTHIL
 
VELLORE: While the entire state is gearing up for a complete plastic ban from Januray 2019, the Vellore district designated officer for Food Safety and Standards Authority of India (FSSAI) had warned the shop keepers as well as water plant owners of stringent action if they try to flout the norms.
Addressing the reporters, J Venkatesh, designated officer of Vellore FSSAI , said the tamil nadu government had ordered ban on manufacture, sale, storage and usage of disposable plastic items including plastic cups, water sachets, carry bags, plastic plates and other items excluding polythene sachets used for packing milk, curd and medical items from January 1 2019.
The ban which aims to protect the environment for future generations will also help put to rest the stagnated one –use plastic materials sans creating further pollution.
Among the other plastic waste generated in the district, the consumed water pouches plays a major role polluting the environment in the district . At least 1,000 water packets are thrown on the streets of vellore districts daily, he said.
“As an excellent start to the ban,we had instructed the drinking water plants in Vellore to stop manufacturing and distributing water packets to its retailers after October. By all means manufacturing and distributing of water pouches is banned from first week of November,” he said.
Venkatesh notified that out of 69 water plants in the vellore district about 60 per cent of them are involved in manufacturing of water packets and all of them are using plastic that is below 50 microns. It is also hard to vigil disposed pouches been used by spurious water manufacturing companies, he said.
Venaktesh warned to take appropriate action under food safety act 2006 on water plant owners and retail shop owners who try to flout the order .

காகித பொட்டலத்தில் உணவு :விழிப்புணர்வு இல்லாத அவலம்

பெரும்பாலான கடைகளில், செய்தித்தாள் காகிதங்களில், உணவு பதார்த்தங்களை பொட்ட லமிட்டு வழங்குவது, உடல் உபாதைக்கு வித்திடுகிறது.
எண்ணெயால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை பொட்டலம் செய்ய, பெரும்பாலான வியாபாரிகள், செய்தித்தாள் காகிதம் பயன்படுத்துகின்றனர். 
அதில் அச்சிடப்பட்டுள்ள மையில் கலந்துள்ள, காரீயம் போன்ற ரசாயனப் பொருட்கள், உணவு பதார்த்தங்களில் கலக்கிறது.
அவை, உணவோடு, உடலில் சேரும் போது, ரத்த சோகை, செரிமான குறைபாடு உட்பட பிரச்னைகள் ஏற்படுகின்றன. 
முதியவர்கள், சிறுவர்களுக்கு 'வைட்டல் ஆர்கன்' எனப்படும் நுரையீரல், கல்லீரல், இதயம் சார்ந்த பாதிப்பு ஏற்படுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம், உணவுப் பொருட்களை பொட்டலம் செய்ய, செய்தித்தாள் காகிதத்தை பயன்படுத்தக்கூடாது என, அறிவுறுத்தியுள்ளது.
 இருப்பினும், மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள பேக்கரி மற்றும் டீ கடைகளில் இச்செயல் தொடர்கிறது. 
எனவே, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், இவ்விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

programmes

































ஊட்டி நுகர்வோர் கோர்ட்

வங்கி சேவை குறைபாடு சார்பான எனது முந்தைய பதிவுகள்:

கடன் பெற்றவரிடம் ரூ.1 லட்சம் கூடுதல் வசூல்: திரும்ப வழங்க நிதி நிறுவனத்திற்கு உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1189823544494861
அடகு வைக்கப்பட்ட நகையை, முறைகேடாக பயன்படுத்திய வங்கி அதிகாரிக்கு, ஊட்டி நுகர்வோர் கோர்ட் அபராதம்:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1188511527959396
காசோலை திரும்பிய வழக்கு: வங்கி மேலாளருக்கு அபராதம்
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1187771638033385
திண்டுக்கல் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்:நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1187254288085120
கடன் பெறுவதற்காக வழங்கிய ஆவணத்தை தொலைத்த வங்கிக்கு ரூ.8 லட்சம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1184817681662114
கடனை செலுத்தியும் ஆவணம் தராத நிறுவனம் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1184811168329432
ஒரிஜினல் ஆவணங்களை திருப்பி வழங்காத எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ 8 ஆயிரம் அபராதம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் தீர்ப்பு.
https://www.facebook.com/groups/685954204947280/permalink/689545991254768/
வங்கியில் வழங்கப்படும் ரூ.50000 வரை யிலான விவசாய கடன்களுக்கு தவணையில்லா சான்றிதழ் (No Due Certificate) கட்டாயமில்லை - இந்திய ரிசர்வ் வங்கி
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1186834854793730
வங்கி லாக்கரில் வைக்கும் மதிப்பு மிக்கப் பொருட்கள் காணாமல் போனால் அதற்கு சம்மந்தப்பட்ட வங்கியிடம் இழப்பீடு பெற முடியும்
https://www.facebook.com/groups/685954204947280/permalink/692733894269311/
கடன் வசூலுக்கு குண்டர்களை ஏவிய ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.55 லட்சம் அபராதம்.
https://www.facebook.com/groups/685954204947280/permalink/688314954711205/
தொலைந்துபோன ஏடிஎம் அட்டையை உடனடியாக முடக்காத வங்கிக்கு ரூ.1 லட்சம் அபராதம்!
https://www.facebook.com/groups/685954204947280/permalink/688190528056981/
Consumer forum imposes Rs 1 lakh fine on SBI CreditCard
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1173404539470095
இந்திய ரிசர்வ் வங்கி வலைத்தளத்தில் வங்கி சேவை குறைபாடு சம்பந்தப்பட்ட நுகர்வோர் வழக்கு விவரங்கள்
https://www.facebook.com/groups/685954204947280/permalink/692365484306152
பொய்யான காசோலை மோசடி வழக்கு
https://www.facebook.com/groups/685954204947280/permalink/687143968161637

devala muchchu kunnu











வீடு வழங்க தாமதம் ரூ.75 ஆயிரம் இழப்பீடு

[பதிவு – 1,631]

வீடு வழங்க தாமதம் ரூ.75 ஆயிரம் இழப்பீடு

---------------------------------------------------

சென்னை:வீடு வழங்க தாமதம் செய்த கட்டுமான நிறுவனம், வாடிக்கையாளருக்கு இழப்பீட்டுடன், 75 ஆயிரம் ரூபாய் வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், நொளம்பூரைச் சேர்ந்த லீனா பிரசாத் என்பவர் தாக்கல் செய்த மனு:ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில், திருத்தணி மூவேந்தர் நகரில் புது வீடு வாங்க, 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தினேன். கட்டுமான பணிகள் தாமதம் மற்றும் மற்றொரு இடத்தில் வீடு கட்டப்பட உள்ளதாக தெரிவித்ததால், வாங்க விருப்பவில்லை. முன்பணத்தை திரும்ப கேட்டும் நிறுவனம் தரவில்லை. முன்பணத்துடன், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

விசாரணையில், கட்டுமான நிறுவனம் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.இந்த வழக்கில், நீதிபதி மோனி பிறப்பித்த உத்தரவு:கட்டுமான நிறுவனம், சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. மனுதாரர் செலுத்திய முன்பணம், 50 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்குவதுடன், 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, 5,000 ரூபாய் வழக்கு செலவும், கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

இருசக்கர வாகன காப்பீடு

இருசக்கர வாகன காப்பீடு பற்றி தெரிய வேண்டிய விஷயங்கள்!!
============================================================

இருசக்கர வாகன காப்பீடு
============================================================

இரு சக்கர வாகன காப்பீடு, வாகனத்தை இழத்தல் அல்லது பல்வேறு காரணங்களால் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்புறுதியை அளிக்கிறது.

இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் இரண்டு வகைகளின் கீழ் வருகின்றன,
============================================================

அதாவது, விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்புறுதி திட்டம் என்பனவாகும்.

விரிவான காப்பீட்டுத் திட்டம்
============================================================

ஒரு இரு சக்கர வாகன விரிவான காப்பீட்டுத் திட்டம் ஒருவேளை பின்வரும் எதிர்பாராத சம்பவங்கள் நேர்ந்தால் காப்பளிக்கிறது:

1. விபத்து அல்லது தீ விபத்து, மின்னல் வெட்டு, வெள்ளம் அல்லது நிலநடுக்கம் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் காப்பீடளிக்கிறது.

2. தீங்கிழைக்கும் நோக்கத்துடன் தீவைக்கப்படுதல் அல்லது அந்நியர்களால் வன்முறையில் அழிக்கப்படுதல் அல்லது திருட்டு அல்லது கொள்ளை ஆகிய காரணங்களால் வாகனத்தை இழத்தல் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் காப்பீடளிக்கிறது. விபத்து

3. விபத்துக் காரணமாக மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுதல் அல்லது மூன்றாம் தரப்பினரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடளிக்கிறது.

4. விபத்துக் காரணமாகக் காப்பீட்டுதாரரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடு அளிக்கிறது.

மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக் காப்புறுதித் திட்டம்.
============================================================

இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டம் மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக்களுக்கு மட்டும் காப்புறுதி அளித்தால், பின்பு காப்பீட்டு நிறுவனர், மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான செலவுகளுக்கு மட்டும் பணம் செலுத்தவும் அல்லது மூன்றாம் தரப்பினரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களில் ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பணம் செலுத்தவும் மட்டுமே பொறுப்புடையவராகிறார்.

உதிரிப் பாகங்கள் மேலும் சில இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்கள் உதிரிப் பாகங்கள் மற்றும் துணைக் கருவிகள் போன்றவற்றிற்கான காப்புறுதிகள், பின்னிருக்கையில் சவாரி செய்யும் பயணிகளுக்கான விபத்துக் காப்பீடுகள், இது போன்ற மற்றும் பலவற்றிற்கும் கூடுதல் கட்டணம் செலுத்தினால் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட காப்புறுதிகளையும் வழங்குகிறது.

கணக்கீடு காப்பீட்டுத் திட்டத்திற்கான முனைமத் தொகையானது, வாகன உரிமையாளரின் வயது, செய்யப்பட்ட காப்பீட்டின் அறிவிக்கப்பட்ட மதிப்பு, வாகனத்தின் கன திறன் மற்றும் வாகனம் பதிவு செய்யப்பட்ட மண்டலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

இணையச் சேவை இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்கள் சிக்கல்களில்லாதது மேலும் இப்போதெல்லாம் இந்தக் காப்பீட்டுத் திட்டங்களை இணையத்திலேயே வாங்கிக் கொள்ளவும் வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன






ஊட்டசத்து விழிப்புணர்வு மாதம்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் ஊட்டசத்து விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது,  இதனை முன்னிட்டு பந்தலூரில் நடைப்பெற்ற விழாவில் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் தேவகுமாரி, குழந்தைகள் நல அலவலர் பார்வதி, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் ஆகியோர் மாணவிகளுக்கு ஊட்டசத்து, சுய பாதுகாப்பு, இளவயது திருமணம், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர்,  ஊட்டசத்து உணவு குறித்து கண்காட்சியும் வைக்கப்பட்டது நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பலர்ர கலந்து கொண்டனர்,  அங்கன்வாடி பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்




உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...