பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தை

பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு
திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் நடைப்பெற்ற திசைகாட்டி நிகழ்ச்சிக்கு  பள்ளி தலைமை ஆசிரியர் அர்ஜூணன் தலைமை தாங்கினார்.

மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத் முன்னிலை வகித்தார்

பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவி சிந்துலேகா வரவேற்றார்

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மகாத்மா காந்தி பொது சேவை மைய ஆலோசகர் காளிமுத்து நூலக உறுப்பினர் கார்டுகளை மாணவர்களுக்கு வழங்கி போசும்போது  கல்வியால் நாம் முன்னேற முடிகின்றது.  கற்பதோடு பணம் தடையாக இருக்கும் ஏழைகளையும், வாய்ப்பு கிடைக்காதவர்களையும் கற்க உதவவேண்டும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம்,  பந்தலூர் கிளை நூலகர் அறிவழகன், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி, ஆசிரியர் சித்தானந்த் ஆகியோர் கல்வியின் முக்கியத்துவம், மற்றும் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் கல்வி குறித்து விளக்கம் அளித்தனர்.

நிகழ்சியில் 50 மாணவர்களுக்கு நூலக உறுப்பினர்களுக்கான அட்டை நுகர்வோர் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில் வழங்கப்பட்டது.  மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தி பொது அறிவை வளர்த்துக்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சயில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

முடிவில் மாணவி மலர்விழி நன்றி கூறினார்



No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...