🌾 *உழவன் சந்தை* 🌾
________________________________
*கருப்பு கவுணி அரிசியின் வரலாறு :*
________________________________
உழவு பகிர்வு :
▪️ கருப்புகவுணி அரிசி பண்டைய சீனாவை பூர்விகமாக கொண்டது. பண்டைய சீன மன்னர்கள் மற்றும் அரச குடும்பத்தினர், மந்திரிகள், பெரு வியாபாரிகள் மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
▪️ *கருப்புகவுணி அரிசி நிறம்:*
கருப்பு கவுனி நிறம் கருப்பாக இருப்பதற்கு காரணம், இதில் உள்ள *அந்தோசினனின்* என்னும் மூல வேதிப்பொருள் தான்.
*ஊதா அரிசியா கருப்பு அரிசியா..?*
▪️ கருப்பு கவுணி அரிசி சமைத்த பின் ஊதா நிறத்தில் இருக்கும். கருப்பு கவுணி அரிசியின் கருப்பு நிறத்தின் காரணம் இதில் *அதிகப்பிடியான “Anthocyanins”* என்ற மூலக்கூறு தான்.
*கருப்புகவுணி தமிழகம் வந்த எப்படி:*
▪️ பண்டைய தமிழ் மன்னர்கள் – சீன மன்னர்கள் கிடையே இருந்த கப்பல் போக்குவரத்து மூலமாக நடைபெற்ற வியாபாரம் காரணமாக கருப்பு கவுனி தமிழகம் வந்தடைந்தது.
*கருப்புகவுணியும்-அரசரின் விருந்தும் :*
▪️ சீன அரசர்கள் தங்களின் நாட்டிற்கு வருகை புரியும் பிற நாட்டின் அரசர்கள் மற்றும் கப்பல் மூலமாக வரும் வியாபாரிகளுக்கு கருப்பு கவுனியில் செய்யப்பட்ட விருந்து அளிக்கப்பட்டது.
▪️ *தடை செய்யப்பட்ட அரிசி :*
▪️ பொது மக்கள் கருப்பு கவுணி பயன்படுத்த தடை செய்யப்பட்டது.. வரலாற்றில் கருப்பு கவுணி அரிசியை *“Forbidden Rice”* என்று அழைக்க காரணமாகும்..
▪️ சீனாவின் அரசர்கள், அரச குடும்பத்தார்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் தடைசெய்யப்பட்ட அரிசியாக “கருப்புகவுணி” கருதப்பட்டது. இதன் காரணம் *இதில் உள்ள ஊட்ட சத்துக்கள்*.. சீன அரசர்கள் இந்த வகை அரிசி கடவுள் தங்களுக்கு அளித்தாக கருதினார்கள். இதனால் பொது மக்கள் இவ்வகை அரிசியை பயன்படுத்த தடை செய்ய பட்டது.
*தண்டனைக்குரிய குற்றம் :*
▪️ அரசரின் கட்டளை மீறி, பொது மக்கள் யாரேனும் *“கருப்பு கவுணி”* அரிசியை பயன்படுத்தினால் தண்டனைக்கு உட்படுத்தபட்டனர்.
*Accupunture மருத்துவம்:*
▪️ தமிழகத்தின் தொடு வர்மம்க்கலை, சீனாவில் Accupunture என்று அறியப்படுகிறது. இவ்வகை மருத்துவர்கள் கருப்புகவுனியின் பயன்பாட்டினை நன்கு அறிந்திருந்தார்கள். இவர்களின், கூற்றுப்படி *பிரபஞ்ச சக்தியை* உள்ள வாங்கும் கிரஹித்து கொள்ளும் ஆற்றல் கருப்புகவுணி அரிசிக்கு உள்ளதாக நம்பப்படுகிறது..
**********************************
*1 .கருப்புகவுணி அரிசியின் Antioxidants பலன்கள் :*
▪️ கருப்புகவுணி அரிசியின் Anthocyanine. சக்திவாய்ந்த Antioxidants ஆக செயல்படுகின்றது. மேலும், *புற்றுநோயை* எதிர்த்துப் போராடுவதற்கும், *இருதய நோய்களைத் தடுப்பதற்கும், மூளை செயல்பட்டினை* மேம்பட உதவுகிறது.
▪️சிவப்பு அரிசி அல்லது Brown rice அல்லது மற்ற எந்த ஒரு அரிசியிலும் இல்லாத அளவு கருப்புகவுணி அரிசி அந்தோசினனின் *Antioxidants – Free Radical Damage* பாதிப்பினை தடுக்கிறது. மேலும், இதய பாதிப்பினை தடுக்கிறது.
*2. கருப்புகவுணி புற்று நோய்க்கு எதிரானது :*
▪️ கருப்புகவுணி அரிசி புற்று நோய்க்கு எதிரானது என்பதை Third Military University, என்ற சீனா உள்ள யூனிவர்சிட்டியில் எலிகள் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில் *கான்செர் செல்களை குறைத்தோடு மார்பக புற்று நோய்யும் குறைத்து..*
*3. நீர்கட்டிகள் மற்றும் Inflammation:*
▪️ கொரியாவின் Ajo University ஆராய்ச்சியாளர்கள் கருப்பு அரிசி வீக்கத்தைக் (inflammation) குறைக்கும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். கருப்பு அரிசியின் சாறு edema வைக்(நீர்கட்டிகளை) குறைக்க உதவியது மேலும், எலிகளின் தோலில் dermatitis ஒவ்வாமை தொடர்பு, தோல் அழற்சியை கணிசமாக குறைத்து என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
▪️ *நாள்பட்ட அழற்சியுடன்(chronic inflammatory diseases)* தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் கருப்பு அரிசியின் ஆற்றலுக்கான சிறந்த சிறந்ததாக உள்ளது.
*4. உடல்பருமன் அல்லது உடல் எடை குறைக்க :*
▪️ பிரவுன் அரிசி, கருப்பு கவுணி அரிசி நார்ச்சத்து மற்றும் *குறைந்த Carbohydrate* உள்ளதால். உடலின் தேவையற்ற கொழுப்புகளை குறைகிறது என்பதை Hanyang University, South Korea நாட்டில் நடைபெற்ற ஆய்வுவில், நாற்பது உடல் பருமன் குறைபாட்டால் பாதிப்பு அடைத்த பெண்களிடம் நடைபெற்ற ஆய்வில் ஆறு வாரங்கள் பின் கணிசமான அளவு உடல் எடை குறைத்து.
▪️ இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மை வெள்ளை அரிசிக்கு மாற்றாக கருப்புகவுணி மற்றும் *Unpolished brown ரைஸ்* பயன்படுத்த வேண்டும் என்பதே..
*5. கருப்பு கவுணி இதயத்தை பாதுகாக்கிறது :*
▪️ உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால். இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது..
*6. கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது :*
▪️ கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது
*கல்லீரல் கொழுப்பு நோய்(Fatty liver disease)*
▪️ என்பது வெளிப்படையாகவே, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உருவாகிறது. இந்நிலையில் எலிகள் மீது செய்யப்பட்ட சோதனையில் கருப்பு அரிசி செயல்பாடு கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதாகவும், *triglyceride மற்றும் total cholesterol* அளவைக் குறைத்து, இதனால் Fatty liver disease க்கான அபாயத்தைக் குறைப்பதாக முடிவுகளில் தெரிகிறது.
*7. மன -அழுத்தம் :*
▪️ மன - அழுத்தம் காரணமாக உடலிலும் மூளையும் பாதிப்பு அடைகிறது. கருப்பு கவுணி அரிசியில் உள்ள ஆன்தோசயனின் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் *மனஅழுத்தம்* மற்றும் *மூளையில் ஏற்படும் அழுத்தம்* குறைக்க உதவும்.
*8. இதயத்திற்கு நன்மை தரும் கருப்பு கவுணி :*
▪️ கருப்புகவுணி அரிசியில் உள்ள அந்தோசினனின் *ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்புகளை* கரைக்க உதவுகிறது.
▪️ கருப்பு கவுனி அரிசி அன்றாட பயன்படுத்த *இதயத்தில் உள்ள சிறு ரத்த குழாய்களில்* அடைபட்டு இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவும்.
*9. சர்க்கரை குறைபாடு :*
▪️ ரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்க *டயாபடீஸ்* என்னும் குறைபாடு வரக்காரணம். கருப்பு கவுனி அரிசியில் உள்ள *Antioxidants, நார்சத்து, அந்தோசினனின்* போன்றவை சர்க்கரை நோய்யை காட்டுக்குள்ள வைக்க உதவு கிறது.
*10. Gluten அரவே அற்ற கருப்பு கவுணி :*
▪️ கருப்பு கவுணி அரிசியில் இயற்கையாகவே Gluten எனப்படும் ஓட்டும் தன்மையுள்ள வேதி பொருள் கிடையாது. சிலருக்கு Gluten ஒவ்வாமை ஏற்படும்.
▪️ இதனால் கருப்பு கவுணி அரிசி தினசரி பயன்படுத்த *Gluten-அல்ர்ஜி* யிலிருந்து விடு பெறலாம்.
*11. ஆஸ்துமா:*
கொரியாவில் எலிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் அறியப்படுவது.. *மூச்சு குழாய்களில் உள்ள நீர்க்கோர்வை அல்லது சளியால்* ஏற்படும் பாதிப்புகள் குறைக்கிறது. இதனால் ஆஸ்துமா குறைக்கிறது.
*12.* Glycemic Index Value = 42.3
***********************************
*1.பேரீச்சை கவுனி அரிசி பாயசம்*
*தேவையானவை :*
கவுனி அரிசி – 4 மேசை கேரண்டி (Tablespoon)
பால் – 1000 மிலி.
பேரீச்சம்பழம் – 20 கொட்டையுடன்.
Condensed Milk – 4 மேசை கேரண்டி (Tablespoon)
துருவிய பாதாம் பருப்பு – 10
ரோஸ் வாட்டர் – 4 சொட்டுகள்
*செய்முறை :*
*1.* கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவிடவும்.
*2.* பேரீச்சம்பழத்தின் கொட்டையை நீக்கி, பின்னர் தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
*3.* ஊறவைத்த கவுனி அரிசியின் தண்ணீரை வடித்துவிட்டு உலர வைக்கவும். பிறகு, லேசான ஈரப்பதத்தோடு இருக்கும் அரிசியை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்துக்கு உடைத்துக்கொள்ளவும்.
*சமைக்கு முறை :*
▪️ குக்கரை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி, ஒரு கொதி வந்ததும், உடைத்த அரிசியைச் சேர்த்து மூடிபோட்டு 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
▪️ வெந்தவுடன் அதனுடன் அரைத்த பேரீச்சம்பழ விழுது, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கலக்கி கொதிக்கவிடவும். கலவை எல்லாம் நன்கு சேர்ந்து வந்ததும், துருவிய பாதாம், ரோஸ்வாட்டர் சேர்த்து பரிமாறலாம்.
*பரிமாறு முறை :*
வறுத்த முந்திரி மேலே வைத்து சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.
***********************************
*2.கருப்பு கவுனி - இடியாப்பம் :*
*தேவையானவை :*
கவுனி அரிசி மாவு – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – ஒரு டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – தேவையான அளவு
சர்க்கரை – தேவையான அளவு
*செய்முறை :*
*1.* கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்து.
*2.* பிறகு நீரை வடித்துவிட்டு நிழலில் உலர விடவும். உலர்ந்த அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும்.
*3.* இதை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால், புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை செய்ய உபயோகப்படுத்தலாம்.
*சமைக்கும் முறை :*
*1.* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி, சூடானதும் உப்பு, நெய் சேர்த்துக் கலக்கவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் கவுனி அரிசி மாவைக் கொட்டி, சுடவைத்த தண்ணீரை அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும்.
*2.* மாவு இடியாப்ப பதத்துக்கு வந்ததும் இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லித் தட்டில் பிழியவும். பிறகு, ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் இடியாப்பம் தயார்.
*பரிமாறு முறை :*
தேங்காய்த்துருவல், சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.
************************************
*3. கருப்பு கவுனி – இட்லி*
*தேவையானவை :*
கருப்பு கவுனி அரிசி – 2 கப்
இட்லி அரிசி – ஒரு கப்
கெட்டி அவல் – ஒரு கப்
உளுந்து – ஒரு கப்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
*செய்முறை :*
*1.* கருப்பு கவுனி அரிசி மற்றும் இட்லி அரிசி ஒன்றாகச் சேர்த்தும், அவலைத் தனியாகவும், உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சேர்த்தும் ஒட்டுமொத்தமாக 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, எல்லாவற்றையும் நன்கு கழுவி ஒன்றாக கிரைண்டரில் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும். புளித்த மாவை நன்கு கலக்கிவிடவும்..
*சமைக்கும் முறை :*
*2.* புளித்த மாவை நன்கு கலக்கி. இட்லித் தட்டில் துணி விரித்து மாவை ஊற்றி மூடி போட்டு ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் கருப்பு கவுனி அரிசி இட்லி தயார்.
*பரிமாறும் முறை :*
தேங்காய் சட்னி/கரசட்டினி/கடப்பா சாம்பாருடன் பரிமாறவும்.
**********************************
*4. செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி இனிப்பு*
*தேவையானவை :*
கவுனி அரிசி – ஒரு கப்
சர்க்கரை – முக்கால் கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – முக்கால் கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி, பாதாம் – சிறிதளவு
*செய்முறை :*
சுத்தம் செய்த கவுனி அரிசியை 4 கப் நீரில் 4 மணி நேரம் ஊற விடவும்.
*சமைக்கும் முறை :*
*1.* குக்கரை அடுப்பில் வைத்து ஊறிய அரிசியை தண்ணீருடன் சேர்த்து மூன்று விசில் வேகவிடவும்.
*2.* பிறகு, 15 நிமிடம் தீயை முற்றிலும் குறைத்து வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு மூடியைத் திறந்து வெந்த அரிசியோடு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய், முந்திரி, பாதாம் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கிப் பரிமாறவும்.
*பரிமாறும் முறை :*
சூடாக உண்ண/ஆறிய பின் உண்ண ஏற்றது.
**********************************
*1. உடலின் ஆரோக்கியத்திற்கு கருப்புகவுணி அரிசி ஏற்றதா..?*
▪️ ஆம், கருப்புகவுணி அரிசி உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. கருப்புகவுணி அரிசி உள்ள *Anthocyanine* அளவற்ற நன்மைகள் தரக்கூடியது.
*2. கருப்பு கவுனி அரிசி Glueten Free யா..?*
▪️ ஆம், கருப்பு கவுனி அரிசி Glueten Free தான்.
*3. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுதானா..?*
▪️ ஆம், கருப்பு கவுணி அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு தான். கருப்பு கவுணி அரிசி *ரத்தத்தில் உள்ள சர்க்கரை* அளவினை குறைக்க உதவும்.
*4. புற்று நோயாளிகளுக்கு கருப்பு கவுணி உணவினை உண்ணலாமா..?*
▪️ கருப்பு கவுணி அரிசியை ஆரம்ப நிலை புற்று நோய்யாளிகளுக்கு உட்கொள்ளலாம். மற்ற நிலை புற்று நோயாளிகளுக்கு மருத்துவரின்/சித்த மருத்துவரின் ஆலோசனை பெறவும்.
*5. அரிசியை பாதுகாப்பது எப்படி..?*
▪️ இயற்கை கருப்பு கவுணியை காற்று போகாத வகையில் பாதுகாக்க *லவங்கம், கிராம்பு அல்லது மிளகாய் வற்றல்* போட்டு வைக்கலாம். இதனால் பூச்சிகள் மற்றும் புழுக்கள் வராமல் தடுக்கலாம்.
*6. கருப்புகவுணி அரிசி சுவை எப்படி இருக்கும்..?*
▪️ மற்ற அரிசி வகை போல அல்லாமல் கருப்பு கவுணி அரிசி *Nutty Flavour* பருப்பு சுவை போல் இருக்கும்.
*7. கருப்பு அரிசியா அல்லது ஊதா அரிசியா..?*
▪️ கருப்பு அரிசி சமைத்த பின் பார்ப்பதற்கு ஊதா நிறத்தில் இருக்கும். இதனால் கருப்பு கவுணி அரிசிக்கு ஊதா அரிசி *“Purple Rice ”* என வேறு பெயர் உண்டு.
🌾 *கருப்புகவுணி* *NutrinationalFacts*
*நார்ச்சத்து:*
▪️கருப்புகவுணி அரிசி அதிக படியான நார்ச்சத்து உள்ளது.100 கிராம் அளவில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது.
🌾 *1 கப் அளவு சமைத்த கருப்புகவுணி அரிசியில் உள்ள சத்துக்கள்*
▪️ கலோரிஸ் =160 கிராம்
▪️ மொத்த கொழுப்பு = 2 கிராம்
▪️ சோடியம் = 4 மில்லி கி
▪️ பொட்டாசியம் = 268 கிராம்
▪️ மொத்த carbs = 34 கிராம்
▪️ புரதம் = 5 கிராம்
▪️ இரும்பு = 6%
▪️ நார்ச்சத்து = 3 கிராம்
_________________________