தமிழ் சிறப்புகள்

 *மனிதர்களை போன்று இனமும் நட்பும் கொண்டது - எழுத்துக்கள்.*


- ங் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து க. எ.கா: சிங்கம், தங்கை.


- ஞ் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து ச. எ.கா: மஞ்சள், அஞ்சாதே


- ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் எழுத்துகள் பெரும்பாலும் சேர்ந்தே வரும். எசகா: பண்டம், பந்தல், கம்பன், தென்றல்.


- நட்பு எழுத்துக்களை இன எழுத்துகள் என இலக்கணம் கூறுகிறது.


- க், ச்,த், ப் ஆகிய மெய்யெழுத்துக்கள் தன் எழுத்துகளுடன் மட்டும் சேரும். எ.கா: பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.


- தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துகளுடன் சேரும் மெய்யெழுத்து - ர், ழ். எ.கா: சார்பு, வாழ்க்கை.


*தமிழ்த்தாத்தா உ.வே.சா.*


* உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் - ஈரோடு மாவட்டம் கொடுமுடி.


* ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்


* இயற்பெயர் - வேங்கடரத்தினம்


* ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.


* அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்


* உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா


* இவரின் தந்தை - வேங்கடசுப்பையா


* காலம் - 19.02.1855 முதல் 28.04.1942


* 1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.


* உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.


* உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.


* இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.


* பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.


* ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.


* ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.


* குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.


* தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.


* ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா


* உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.


* உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்


* ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு விடியற்காலையில் ஆற்றில் விட்டனர்.


* குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று ஒன்பது


* எண்பத்தேழு வயதுவரை உ.வே.சா. தமிழுக்காக உழைத்தார். முயற்சிக்கு வயது வரம்பு கிடையாது.


* உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:


- எட்டுத்தொகை - 8


- பத்துப்பாட்டு - 10


- சீவகசிந்தாமணி - 1


- சிலப்பதிகாரம் - 1


- மணிமேகலை - 1


- புராணங்கள் - 12


- உலா - 9


- கோவை - 6


- தூது - 6


- வெண்பா நூல்கள் - 13


- அந்தாதி - 3


- பரணி - 2


- மும்மணிக்கோவை - 2


- இரட்டைமணிமாலை - 2


- பிற பிரபந்தங்கள் - 4


*கடைசிவரை நம்பிக்கை*


* கடைசிவரை நம்பிக்கை இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய டென் லிட்டில் பிங்கர்ஸ் என்ற தொகுப்பில் உள்ளது.


* சடகோ சகாகி, 11 வயது ஜப்பான் நாட்டுச் சிறுமி.


* ஜப்பானில் ஹிரோமிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.


* அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீசின் காரணமாக சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு * ஏற்பட்டது.


* சடகோவின் தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள். இது நம் நாட்டு நம்பிக்கை என்று கூறினாள்.


* ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.


* காகிதத்தால் உருவங்கள் செய்யும் ஜப்பானியர் ஒரிகாமி என்று கூறுவர்.


* 1955 அக்டோபர் 25-இல் நல்ல சடகோ இறந்தாள்.


* மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.


* சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள் செய்து எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினர். சடகோவின் விருப்பத்தை நிறைவு செய்தனர்.


* சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள் சடகோவிற்கு சிலை எழுப்பினர்.


* அதன் பெயர் குழந்தைகள் அமைதி நினைவாலயம்.


* நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம் - உலகத்தில் அமைதி வேண்டும்! இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்!


*வாழ்த்து - திருவருட்பா*


கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்


எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில்


கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்


கலந்தான் கருணை கலந்து


* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்


* சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்


* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.


* பெற்றோர் - இராமையா - சின்னமையார்


* வாழ்ந்த காலம்: 05.10.1823 - 30.01.1874


* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.


* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை


* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை


* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.


* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.


* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்


* வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.


* கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.


* நூல்கள்: ஜீவகாரூன்ய ஓழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.


* வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.


* சிறப்பு: சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.


* மத நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும், உணவளிக்க அறச்சாலை, அறவுநெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.


* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.


* கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில், பாட்டில், பாட்டின் இசையில், என் உயிரில் கலந்து இருக்கிறான்.


அறிவுரைப் பகுதி: திருக்குறள் - அன்புடைமை


சொற்பொருள்:


ஆர்வலர் - அன்புடையவர்


புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்


என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.


வழக்கு - வாழ்க்கை நெறி


நண்பு - நட்பு


மறம் - வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே


அன்புதான் அடிப்படை என்பது பொருள்)


அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்


என்பிலது - எலும்பில்லாதது(புழு)


பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்


ஆருயிர் - அருமையான உயிர்


ஈனும் - தரும்


ஆர்வம் - விருப்பம் (வெறுப்பை நீக்கி விருப்பத்தை


உண்டாக்கும் என்று பொருள்)


வையகம் - உலகம்


என்ப - என்பார்கள்


புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்


எவன் செய்யும் - என்ன பயன்?


அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு


பிரித்து எழுதுக:


அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா -


அன்பு உள்ளத்தில் இல்லாத


வன்பாற்கண் = வன்பால் + கண் - பாலை நிலத்தில்


தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல


வற்றல்மரம் - வாடிய மரம்


- இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவர்.


- இதனை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கண்க்கிடப்படுகிறது.


- சிறப்பு பெயர்: தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்


- இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.


- அதிகாரங்கள்: 133


- அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.


- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.


- திருக்குறளின் வேறு பெயர்கள்: உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை. உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.


- திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.


எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044. கி.பி.2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.


ஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து


* பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்.


சொற்பொருள்:


* பண் - இசை


* வண்மை - கொடைத்தன்மை


* போற்றி - வாழத்துகிறேன்


* இருக்கை - ஆசனம்


* திரு.வி.க என்பதன் விரிவாக்கம்


- திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.


* திரு.வி.க வின் பெற்றோர்


- விருத்தாசலனார் - சின்னம்மையார்


* திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர்


- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.


* துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?


- தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது)


திரு.வி.க வின் சிறப்பு:


* இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் "தமிழ்த் தென்றல்" என சிறப்பிக்கப்படுகிறார்.


* திரு.வி.கலியாணசுந்தரனார் படைப்புகள் யாவை?


- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்


- பெண்ணின் பெருமை


- தமிழ்த்தென்றல்


- உரிமை வேட்கை,


- முருகன் அல்லது அழகு முதலியன.


* திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் என்ன?


- 26.08.1883 - 17.09.1953


* திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது?


- பொதுமை வேட்டல்


* பொதுமை வேட்டல் என்னும் நூல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?


- போற்றி


* பொதுமை வேட்டல் எதனைக் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகிறது?


- நாடு, மதம், இனம், மொழி, நிறம்


* தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக எத்தனை தலைப்புகளில் உள்ளது?


- நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.


நூல் பயன்:


- இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும், உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.


* பொதுமை வேட்டல் எத்தனை பாக்களால் ஆனது?


- நானூற்று முப்பது


* சென்னையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராக திரு.வி.க அவர்கள் பணியாற்றினார்?


- இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி


* இறைவன் உயிரில் வைத்தது எதனை?


- இறைவன் கொடைத்தன்மையை உயிரில் வைத்தார்.


* இறைவனின் இருக்கை யாது?


- இறைவனின் இருக்கை உண்மை.


திருக்குறள்


சொற்பொருள்:


* புரை - குற்றம்


* பயக்கும் - தரும்


* சுடும் - வருத்தும்


* அன்ன - அவை போல்வன


* எய்யாமை - வருந்தாமல்


* அகம் - உள்ளம்


* அமையும் - உண்டாகும்.


ஆசிரியர் குறிப்பு:


* திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.


சிறப்பு பெயர்கள்:


- நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்


நூல் குறிப்பு:


- மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.


- இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.


- ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.


- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.


- இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


- திருவள்ளுவரின் பெற்றோர் யார்?


- தாயின் பெயர் - ஆதி


- தந்தையின் பெயர் - பகவன்


* திருவள்ளுவர் எந்த ஊரில் பிறந்தார்?


- மயிலாப்பூர் (மதுரை என்றும் கூறுவர்)


* திருவள்ளுவர் யாரால் வளர்க்கப்பட்டார்?


- வள்ளுவன் ஒருவனால் வளர்க்கப்பட்டார்.


* வள்ளுவன் என்றால் பொருள் யாது?


- அரசருக்கு அந்தரங்க ஆலோசனை கூறும் ஓர் உயர்ந்த அலுவலர்


* திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?


- வாசுகி


* வாசுகி யாருடைய மகள்?


- மார்க்கசகாயர் என்னும் வேளாளரின் மகள்


* திருவள்ளுவர் செய்த தொழில் என்ன?


- நெசவுத் தொழில்


* திருவள்ளுவரின் வேறு பெயர்கள் என்ன?


- நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகன், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் என்பன.


* திருவள்ளுவர் காலம் எது?


- கி.மு. 31


- திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப் பெறுகிறது.


* திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? அவை யாவை?


- மூன்று பிரிவுகளைக் கொண்டது.


1. அறத்துப்பால்


2. பொருட்பால்


3. இன்பத்துப்பால்


* இந்நூல் திருக்குறள் என்று எதனால் பெயர் பெற்றது?


- திரு+குறள். மேன்மையான குறள் வெண்பாக்களால் இயற்றப்பட்டதால் இப்பெயர் பெற்றது.


* திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது.


* திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை பாடல்களை கொண்டது?


- பத்து


* திருக்குறள் நூலின் பயன் யாது?


- திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும். பண்புகள் வளரும், உலகெல்லாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும், மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும், எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.


* உடலை நீர் தூய்மை செய்யும்: வாய்மை உள்ளத் தூய்மையை வெளிப்படுத்தும்.


* வாய்மை என்றால் என்ன?


- மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.


* திருக்குறள் எத்தனை குறட்பாக்களால் ஆனது?


- ஆயிரத்து முந்நூற்று முப்பது


* திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என்று வழங்கப் பெறுகிறது?


- உலகம் ஏற்கும் கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இவ்வாறு வழங்கப் பெறுகிறது.


பிரித்து எழுதுக:


* யாதெனின் - யாது + எனின்


* பொய்யாதொழுகின் - பொய்யாது + ஒழுகின்


* சொற்றொடரில் சொற்களை அமைத்தல்:


* இயற்கை - குற்றாலத்தில் உள்ள இயற்கைக் காட்சிகள் உள்ளத்தைக் கவர்கின்றன.


* பெண்மை - பாரதியார் பெண்மையைப் போற்றிப் பாடியுள்ளார்.


* வாய்மை - வாய்மையே வெல்லும் என்ற தொடர் தமிழக அரசின் சின்னத்தில் உள்ளது.


* உள்ளம் - குழந்தையின் உள்ளண் கள்ளம் புகா இடமாகும்.

அரசின் உரிமைகள் என்னென்ன?

 கிராம நத்தம் நிலமானது அரசுக்கு சொந்தமானதா? பட்டா வாங்கலாமா? அரசின் உரிமைகள் என்னென்ன?

2004 (2) MLJ 708 & 2012 (2) CTC315


பட்டா அல்லது பத்திரம் எது சொத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணம்?

WP.எண்.16294/2012

SA.No.1715/1989 SA.No.2060/2001 SA.No.314/2008


பவர் ஏஜென்ட் இல்லாமல் பவர் பத்திரத்தை (Power of Attorney) ரத்து செய்ய சார் பதிவாளர் மறுக்க முடியுமா?

2016 2 CTC 438


அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் குடியிருந்து வருபவர்களுக்கு மின்சார இணைப்பை மறுக்க முடியுமா?

2014 (1) MLJ 261


சொத்தானது கிராம நத்தமாக மாற்றப்பட்டு விட்டால் அது அரசாங்கத்திற்கு சொந்தம் ஆகிவிடுமா...?

தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புகள் சட்டம், 1905-பிரிவு 6

ஆக்கிரமிப்பாளர்கள்-கேள்விக்குரிய நிலம் கிராமநாதன் என வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அரசிடம் ஒப்படைக்க முடியாது- தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் விதிகள், வழக்குச் சொத்துக்கள் தொடர்பாக எதிர்மனுதாரர்களின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது.

2007 (2) MLJ 1113


பயணிகளுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பஸ் டிக்கெட்-ஐ கேன்சல் செய்தால்...?

NATIONAL CONSUMER

DISPUTES REDRESSAL

COMMISSION, NEW DELHI

REVISION PETITION NO, 1092 OF 2020


கூடலூர் நுகர்வோர் மனிதவள 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

{மாநில அரசு அங்கீகாரம் பெற்றது}

நீலகிரி மாவட்டம் 

வாக்கு பதிவு முக்கிய அறிவிப்பு

 *பொது  மக்கள்  நலன்  கருதி  ஒரு  முக்கிய  அறிவிப்பு !*

நீங்கள் வாக்குச்சாவடி சென்று , அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்தால், உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றை காட்டி, 

வாக்குரிமைச் சட்டம் பிரிவு 49A ன் கீழ் *"சேலஞ்ச் ஓட்டு"* கேட்டு வாக்கினை பதிவு செய்யுங்கள்.                      உங்கள் வாக்கினை உங்களுக்கு முன்னதாக வேறொருவர் பதிவு செய்திருந்தால், 

*"டெண்டர் ஓட்டு"* கேட்டு உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள். ஒரு வாக்குச் சாவடியில் *14%* க்கு மேல் டெண்டர் ஓட்டு பதிவாகி இருந்தால்,

அங்கு மறு வாக்குப் பதிவு நடத்தப்படும்.  

 வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற்றிட இத்தகவலை அதிகபட்ச வாட்ஸ் அப் குழுக்களுக்கும் , நண்பர்களுக்கும் சமுதாய  நலன் கருதி இத்தகவலை மறவாமல் பகிர்ந்திடுங்கள்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்

643233.

RTI Act, 2005 அரசாணைகள்

 தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (RTI Act, 2005)

இணையதளத்தில் அரசாணைகள்

2 : டபிள்யூ.பி. (MD) 2016/7.4.2016 இன் எண். 4324

* House Feed நிறுவனமும் ஒரு பொது அதிகார அமைப்பாகும். அதனால் இந்த உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் தமது நிறுவனத்தில் ஒரு பொதுத் தகவல் அதிகாரியையும் முதல் மேல் முறையீட்டு அதிகாரியையும் . STATE INFORMATION COMMISSION, PUNJAB Date of decision: 20.05.2015

* கூட்டுறவுச் சங்கங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் தகவல் அளிப்பதற்குக் கடமைப்பட்டதாகும். Punjab-Haryana High Court Civil Writ Petition No.19224

* கூட்டுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள் தகவல் அளிக்கக் கடமைப்பட்டவர்கள் அல்லவென்று பதிலளித்ததையடுத்து எழுந்த வழக்கில் கூட்டுறவுத் துறையைச் சேர்ந்தவர்கள் மத்திய தகவல் ஆணையத்தில் தோன்றாததால் அவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு நடவடிக்கையை ஏன் எடுக்கக்கூடாது என்பதற்கு விளக்கங் கேட்டு பிறப்பித்த உத்தரவு. File No. CIC/SH/C/2014/000550

ஐம்புலம் சூரணம் செய்முறை விளக்கம்

 🪷 *புகை பிடிப்பவர்கள் மற்றும் அடிக்கடி சளி பிடிக்கும் பாதிப்பு உள்ளவர்கள் நுரையிரல் சுத்தம் செய்யும் ஐம்புலம் சூரணம் செய்முறை விளக்கம்*🪷

⚜️ *தேவையான மூலப்பொருட்கள்*⚜️

1. சித்தரத்தை - 50g

2. தாளிசபத்திரி - 50g

3. அதிமதுரம் - 25g

4. சுக்கு - 50g

5. சாதிக்கோஷ்டம் - 25g

6. ஆடாதோடை - 10g

⚜️ *செய்முறை விளக்கம்*⚜️

✍🏿 மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்

✍🏿 தனி தனியாக நன்கு வருத்து கொள்ளுங்கள்

✍🏿 தயார் செய்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்

✍🏿 அரைத்த மூலபொருட்கள் அனைத்தையும் சலித்து தயார் செய்து காற்று படாமல் வைத்து கொள்ளுங்கள்

⚜️ *சாப்பிடும் முறை*⚜️

🔅 200மி தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 1 ஸ்பூன் அளவு தயார் செய்த பொடியை கலந்து நன்கு கொதிக்க வைத்து 2 நிமிடத்தில் அனைத்து விடவும்

🔅 சூடான நிலையில் டீ போல குடிக்க வேண்டும் சுவைக்கு தேன் கலந்து கொள்ளலாம்

🔅 இத்தனை தினமும் காலை மற்றும் இரவு என இரு வேலை எடுக்கலாம் 

🔅 இதை உணவுக்கு பின் அல்லது உணவுக்கு முன் என எப்படி வேண்டும் என்றாலும் எடுக்கலாம் அது உங்கள் உடல் நிலை சர்க்கரை

👉 *இதனால் என்ன மருத்துவ நன்மை கிடைக்கும்???*

இந்த சூரணம் முழுக்க முழுக்க நுரையிரல் சுத்தம் செய்யும் ஒரு சக்தி வாய்ந்த மூலிகை

இதனால் சளி, ஆஸ்துமா, இருமல், மூக்கடைப்பு, நுரையிரல் அலர்ஜி, சுவாச குறைபாடு, மூச்சு வாங்குதல், சுவாச முறைபாடு என அனைத்துக்கும் ஒரு வர பிரசாதம்

இதனை தேவை படும் நாள் வரை எடுத்தால் போதும்

புகை பிடுப்பவர்கள் வாரம் 2 முறை இதை எடுத்து கொண்டால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்

🔅🔅🙏🏼🙏🏼

கூடலூர் நுகர்வோர் மனிதவள  சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் நீலகிரி மாவட்டம். 

India's major research institutions: -

 List of names and places of India's major research institutions: - 


 ◆ Indian Agricultural Research Institute - New Delhi 

 ◆ Central Sugarcane Research Institute - Coimbatore 

 ◆ Central Tobacco Research Institute - Rajamundri 

 ◆ Indian Sugar Technology Institute - Kanpur 

 ◆ National Milk Research Institute - Colonel 

 ◆ Central Skin Research Institute - Chennai 

 ◆ Central Drug Research Institute - Lucknow 

 ◆ Indian Meteorological Institute - New Delhi 

 ◆ Raman Research Institute - Bangalore 

 ◆ National Metallurology Laboratory - Jamshedpur 


 ◆ Textile Industry Research Institute - Ahmedabad 

 ◆ National Institute of Immunology - New Delhi 

 ◆ Baba Nuclear Research Center - Trambe 

 ◆ Indian Petroleum Company - Dehradun 

 ◆ All India Medical Sciences Institute - New Delhi 

 ◆ Tata Institute of Fundmental Research - Mumbai 

 ◆ Indian Security Press - Nashik Road, Pune 

 ◆ Central Food Technology Research Institute - Mysore 

 ◆ Central Building Research Institute - Roori 

 ◆ Central Glass and Ceramic Research Institute - Kolkata 


 ◆ Central Electricity Research Institute - Karaikudi 

 ◆ Central Mechanical Engineering Research Institute - Durgapur 

 ◆ Central Salt and Marine Chemical Research Institute - Bhavnagar 


 Indian National Highway Authority - New Delhi 

 ◆ National Earth Physics Research Institute - Hyderabad 

 ◆ Central Coconut Research Institute - Kasargode 

 ◆ Central Potato Research Institute - Shimla 

 ◆ National Institute of Vision Disability - Dehradun 

 ◆ Central Forest Research Institute - Dehradun 

 ◆ Indian Democratic Research Institute - Ranchi 


 ◆ Central Fuel Research Institute - Jalgoda 

 ◆ Central Mining Research Center - Dhanbad 

 ◆ Survey of India - Dehradun 

 ◆ Indian Meteorological Department - Pune 

 ◆ Institute of Bacterial Technology - Chandigarh 

 ◆ Plasma Research Institute - Gandhinagar 

 ◆ Indian Earth Magnetic Institute - Mumbai 

 ◆ Indian astronomy company - Bangalore 

 ◆ National Maritime Company - Panaji 

 ◆ Diesel Locomotive Works - Varanasi 

 ◆ Central Road Research Institute - New Delhi 


 ◆ Central Tractor Company - New Delhi 

 ◆ Central Botanical Research Institute - Lucknow 

 ◆ Indian Chemical Biology Institute - Kolkata 

 ◆ High latitude Research Laboratory - Gulmark 

 ◆ Central Environmental Engineering Research Institute - Nagpur 

 ◆ Industrial Toxic Research - Lucknow 

 ◆ Cellular and Molecular Biology Center - Hyderabad 

 ◆ Indian Archeology Department - Kolkata 

 ◆ Central Suite Technology Research Institute - Kolkata 


 ◆ DNA Center Fingerprint and Diagnosis - Hyderabad 

 ◆ National Brain Research Center - Gurgaon 

 ◆ Bharat Electronic Limited - Jalahali 

 ◆ Central Paddy Research Institute - Cuttack 

 ◆ Indian Legal Research Institute - Kanpur

வேட்புமனு தாக்கல் செய்ய

 *வேட்புமனு தாக்கல் செய்யக்கூடிய தொகுதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை தொடர்பான விதிகள்* 


ஆகஸ்ட், 1996க்கு முன்பு, ஒரு வேட்பாளருக்கு அவர் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்தத் தடையும் இல்லை. ஆகஸ்ட், 1996 இல், 1951-சட்டத்தின் 33-வது பிரிவில் உட்பிரிவு (7) சேர்க்கப்பட்டது மற்றும் இந்த திருத்தப்பட்ட சட்டத்தின் மூலம், கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பொதுத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டாலும், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்தும் ஒரு வேட்பாளரை இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மேல் பரிந்துரைக்க முடியாது. அதேபோல், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு மேல் அவரை நியமிக்க முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 33(7) வழங்குகிறது:


ஒரு நபர் தேர்தலுக்கு வேட்பாளராக நியமிக்கப்படக்கூடாது,-


(a) ​​மக்கள் சபைக்கு (அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்தும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும்) பொதுத் தேர்தலின் போது, ​​இரண்டுக்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து;


(b) ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவைக்கு (அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும்) பொதுத் தேர்தல் நடந்தால், அந்த மாநிலத்தில் உள்ள இரண்டுக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து;


(c) மாநிலத்தின் இரண்டுக்கும் மேற்பட்ட கவுன்சில் தொகுதிகளில் இருந்து, அத்தகைய கவுன்சிலைக் கொண்ட ஒரு மாநிலத்தின் சட்டமன்றக் கவுன்சிலுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும் பட்சத்தில்;


(d) ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக, மாநில கவுன்சிலுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல்களில், அத்தகைய இரண்டு இடங்களுக்கு மேல் நிரப்புவதற்கு;


(e) ஒரே நேரத்தில் நடத்தப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து, இதுபோன்ற இரண்டுக்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து, மக்கள் சபைக்கு இடைத்தேர்தல்கள் நடந்தால்;


(f) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தல்கள் நடந்தால், அதுபோன்ற இரண்டுக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் நடைபெறும்;


(g) ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக மாநிலங்களவைக்கு நடத்தப்படும் இடைத்தேர்தல்களில், அத்தகைய இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கு ஒரே நேரத்தில் நடத்தப்படும்;


(h) ஒரே நேரத்தில் நடைபெறும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கவுன்சில் தொகுதிகளில் இருந்து, அத்தகைய கவுன்சில் கொண்ட மாநிலத்தின் சட்ட மேலவைக்கு இடைத்தேர்தல்கள் நடந்தால், அத்தகைய இரண்டுக்கும் மேற்பட்ட கவுன்சில் தொகுதிகளில் இருந்து.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி


 *சிவில் வழக்கில் வழக்கு தரப்பினருக்காக முகவராக ஆஜராகி வழக்கு விஜயாஜியங்களை கவனித்துக் கொள்வதற்கும், மனு செய்வதற்கும், மனுவை திரும்ப பெறுவதற்கும், சாட்சியங்களை விசாரணைக் உட்படுத்துவதற்கும், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்வதற்கும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை பெறுவதற்கும், நீதிமன்றத்தில் உள்ள வழக்கு கோப்புகளை பார்வையிடுவதற்கும் முகவராக நியமிப்பதற்கான மனு மாடல் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்*

 *கனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்*

பழனி

முதலேற்பு வழக்கு எண் .316/2006

நிறைவேற்றுகை மனு எண்.30/2019


டி.எம்.எஸ். நீலாவதி

மனுதார் / வாதி/தீர்ப்பாணை பெற்றவர்


           / எதிர் /

1.திரு.சுப்பைய்யா,

2. திரு.சொக்கைய்யா பிள்ளை,

3. திரு.பழனிச்சாமி,

எதிர்மனுதார்கள்/எதிர்வாதிகள்/தீர்ப்புக் கடனாளிகள்


உரிமையியல் விசாரணை முறைச் சட்டம் - கட்டளை 3 விதி - 2 இன் படி Power Agent நியமனம் செய்து அனுமதி வழங்கக் கோரும் மனு


1 . மனுதாராகிய நான் இந் நிர் வழக்கில் மனுதாரரும் / வாதியும் / தீர்ப்பாணை பெற்றவரும் / ஒரு முக்கிய சாட்சியும் ஆவேன். 


2. மனுதாராகிய எனக்கு வயது .......... ஆன மூத்த குடிமக்களில் ஒருவர் ஆவேன். எனது வயதான உடல் தளர்ச்சி சூழ்நிலை காரணமாக என்னால் இவ்வழக்கில் மாண்பமை நீதி மன்றத்திற்கு வருகை தர இயலாமலும், வழக்கு விஜயாஜ்ஜியங்களை கவனிக்க முடியாமலும் இருந்து வருகிறேன். மேலும் எனது வழக்கறிஞர் திரு. புலமை வேங்கடாசலம், எம்.பி.எல்., அவர்களுக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருதாலும் இந்நிர் வழக்கினை தொடர்ந்து வழிநடத்த இயலாமல் இருந்து வருகிறேன். இந்த தெய்வாதீனமான சூழ்நிலைகளால் மனுதாராகிய எனது தரப்பு கருத்துக்களை மாண்பமை நீதிமன்றத்தில் பதிவிட இயலாமல் இருந்து வருகிறேன். 


3. மேலும் இது போன்ற சூழ்நிலைகளில் வழக்கு விஜயாஜ்ஜியங்களை மேற்கொள்ளPower Agent ஆக அக்கறையுள்ள ஒருவரை நியமனம் செய்து கொள்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் .CR.P.(PD) No.490/2018 And C.M.P.No.2558/2018 – தீர்ப்புரை நாள் : 18.09.2020 என்ற வழக்கில் தீர்ப்புரைத்துள்ளது. இத்தீர்ப்புரையானது அரசியல் அமைப்புச் சட்டம் - 1950 இன் 14வது பிரிவு படி எனது இந் நிர் வழக்கிற்கும் பொருந்தும் என மனுதாராகிய என்னால் கருதப்படுகிறது.


4.. ஆதலால் இந் நிர் வழக்கில் வழக்கு விஜயாஜ்ஜியங்களை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு உதவியாக எனது மகன் பழனிவேல், த/பெ... ................. வயது .......... என்பவரை power Agent ஆக நியமித்து உத்தரவிட வேணுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கிறேன்.

                  மனுதார்


தேதி :

இடம்: பழனி


இம்மனு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் - 1872 இன் 70வது பிரிவு படி இதையே பிரமாணமாக இதில் .............. தேதியன்று என்னால் எனது இல்லத்தில் வைத்து கையொப்பம் செய்யப்படுகிறது.


                      Party In Persion


💐💐💐💐💐💐

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

💐💐💐💐💐💐

உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908 (25)

 உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908 இன் 25 மற்றும் அதன் உட்பிரிவுகள் குறித்து சட்டம் தெளிவோம் 


IPC 25. (1) ஒரு தரப்பினரால் செய்யப்படும் மனுவின் பேரில் அது பற்றிய அறிவிப்பைத் தரப்பினர்களுக்கு அளித்த பிறகு மற்றும் அப்படி விரும்புவோரை அதுபற்றிக் கேட்டறிந்த பின்னர், நீதியை நிலைநாட்டுவதற்கு இப்பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிப்பது அவசியம் என்று தெளிவு பெற்றால், எந்தக் கட்டத்திலும் உச்ச நீதிமன்றம், ஒரு மாநிலத்திலுள்ள உயர் நீதிமன்றம் அல்லது வேறு உரிமை இயல் நீதிமன்றத் தில் உள்ள வழக்கு, மேல்முறையீடு அல்லது வேறு நடவடிக்கை ஆகியவற்றை மற்றொரு மாநிலத்திலுள்ள உயர் நீதிமன்றத்திற்கு அல்லது வேறு உரிமையியல் நீதிமன்றத் திற்கு மாற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடலாம்.


(2) இப்பிரிவின்கீழ் செய்யப்படும் மனு ஒவ்வொன்றும் உறுதிமொழிப் பத்திரம் இணைக்கப்பட்டு அவசரப் பட்டியலில் இடம் பெறத்தக்கதாக இருக்க வேண்டும்.


(3) அத்தகைய வழக்கு, மேல்முறையீடு அல்லது வேறு நடவடிக்கை மாற்றி அளிக்கப் பெற்றுள்ள நீதிமன்றம், அத்தகைய மாற்றத்திற்கான உத்தரவில் சிறப்பாக நெறிப் படுத்தப்பட்டவற்றிற்கு ஆட்பட்டு, அதனை மறுவிசாரணை செய்யலாம் அல்லது அது மாற்றப்பட்ட நிலையில் இருந்த கட்டத்திலிருந்து அதனைத் தொடர்ந்து நடத்தலாம்.


(4) இப்பிரிவின் கீழ் செய்யப்பட்டுள்ள மனுவை, உச்சநீதி மன்றம் நிராகரிக்கும்போது, அந்த மனு அற்பமானது அல்லது வீண்தொல்லை தரக்கூடியது என்று கருதினால், அந்த மனுதாரர், எதிர்த்தரப்பினருக்கு இழப்பீடு தரவேண்டும். 


அதனை வழக்கின் தன்மைக்கு ஏற்பவும் தாம் தக்கதெனக் கருதுவதும் இரண்டாயிரம் ரூபாய்களுக்கு அதிகப்படாததுமாகிய ஒரு தொகையை இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிடலாம்.


(5) இப்பிரிவின்கீழ், மாற்றப்பட்ட முறையீடு, அல்லது வேறு நடவடிக்கை ஆகியவற்றில் அத்தகைய வழக்கு மேல் மேல்முறையீடு அல்லது வேறு நடவடிக்கை ஆகியவற்றுக்கு முதலேற்பு நிலையில் அனுசரிக்கப்பட்ட சட்டத்தையே தொடர்ந்து அனுசரிக்கப்பட வேண்டும்.


 Cpc கட்டளை 25. விதி (1) நிறைவேற்றுகைக்காக அந்தத் தாக்கீது ஒப்படைக்கப்பட்ட நபர், அது எப்பொழுது எவ்வாறு நிறை வேற்றுகை செய்யப்பட்டது என்பதற்கான மேற்குறிப்புச் செய்யவேண்டும். 


அதனைத் திருப்பித்தர வேண்டிய கெடு தாண்டியிருந்தால், காலதாமதத்துக்குரிய காரணத்தையும் அல்லது நிறைவேற்றுகை செய்யப்படாதிருப்பின் அதற்குரிய காரணத்தையும் அதில் மேற்குறிப்புச் செய்து, நீதிமன்றத் திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.


(2) அத்தகைய அலுவலரால் நிறைவேற்றுகை செய்யஇயலவில்லை என்று மேற்குறிப்புச் செய்யப்பட்டிரும் தால், அவருடைய இயலாமைபற்றி நீதிமன்றம்அவரை நேரில் விசாரிக்க விசாரணை செய்ய வேண்டும். அதன் முடிவைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


என்றென்றும் மக்கள் பணியில்

இரா. கணேசன்

அருப்புக்கோட்டை


💐💐💐💐💐💐💐

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 

நீலகிரி மாவட்டம்

💐💐💐💐💐💐💐


உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...