உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908 (25)

 உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908 இன் 25 மற்றும் அதன் உட்பிரிவுகள் குறித்து சட்டம் தெளிவோம் 


IPC 25. (1) ஒரு தரப்பினரால் செய்யப்படும் மனுவின் பேரில் அது பற்றிய அறிவிப்பைத் தரப்பினர்களுக்கு அளித்த பிறகு மற்றும் அப்படி விரும்புவோரை அதுபற்றிக் கேட்டறிந்த பின்னர், நீதியை நிலைநாட்டுவதற்கு இப்பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிப்பது அவசியம் என்று தெளிவு பெற்றால், எந்தக் கட்டத்திலும் உச்ச நீதிமன்றம், ஒரு மாநிலத்திலுள்ள உயர் நீதிமன்றம் அல்லது வேறு உரிமை இயல் நீதிமன்றத் தில் உள்ள வழக்கு, மேல்முறையீடு அல்லது வேறு நடவடிக்கை ஆகியவற்றை மற்றொரு மாநிலத்திலுள்ள உயர் நீதிமன்றத்திற்கு அல்லது வேறு உரிமையியல் நீதிமன்றத் திற்கு மாற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடலாம்.


(2) இப்பிரிவின்கீழ் செய்யப்படும் மனு ஒவ்வொன்றும் உறுதிமொழிப் பத்திரம் இணைக்கப்பட்டு அவசரப் பட்டியலில் இடம் பெறத்தக்கதாக இருக்க வேண்டும்.


(3) அத்தகைய வழக்கு, மேல்முறையீடு அல்லது வேறு நடவடிக்கை மாற்றி அளிக்கப் பெற்றுள்ள நீதிமன்றம், அத்தகைய மாற்றத்திற்கான உத்தரவில் சிறப்பாக நெறிப் படுத்தப்பட்டவற்றிற்கு ஆட்பட்டு, அதனை மறுவிசாரணை செய்யலாம் அல்லது அது மாற்றப்பட்ட நிலையில் இருந்த கட்டத்திலிருந்து அதனைத் தொடர்ந்து நடத்தலாம்.


(4) இப்பிரிவின் கீழ் செய்யப்பட்டுள்ள மனுவை, உச்சநீதி மன்றம் நிராகரிக்கும்போது, அந்த மனு அற்பமானது அல்லது வீண்தொல்லை தரக்கூடியது என்று கருதினால், அந்த மனுதாரர், எதிர்த்தரப்பினருக்கு இழப்பீடு தரவேண்டும். 


அதனை வழக்கின் தன்மைக்கு ஏற்பவும் தாம் தக்கதெனக் கருதுவதும் இரண்டாயிரம் ரூபாய்களுக்கு அதிகப்படாததுமாகிய ஒரு தொகையை இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிடலாம்.


(5) இப்பிரிவின்கீழ், மாற்றப்பட்ட முறையீடு, அல்லது வேறு நடவடிக்கை ஆகியவற்றில் அத்தகைய வழக்கு மேல் மேல்முறையீடு அல்லது வேறு நடவடிக்கை ஆகியவற்றுக்கு முதலேற்பு நிலையில் அனுசரிக்கப்பட்ட சட்டத்தையே தொடர்ந்து அனுசரிக்கப்பட வேண்டும்.


 Cpc கட்டளை 25. விதி (1) நிறைவேற்றுகைக்காக அந்தத் தாக்கீது ஒப்படைக்கப்பட்ட நபர், அது எப்பொழுது எவ்வாறு நிறை வேற்றுகை செய்யப்பட்டது என்பதற்கான மேற்குறிப்புச் செய்யவேண்டும். 


அதனைத் திருப்பித்தர வேண்டிய கெடு தாண்டியிருந்தால், காலதாமதத்துக்குரிய காரணத்தையும் அல்லது நிறைவேற்றுகை செய்யப்படாதிருப்பின் அதற்குரிய காரணத்தையும் அதில் மேற்குறிப்புச் செய்து, நீதிமன்றத் திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.


(2) அத்தகைய அலுவலரால் நிறைவேற்றுகை செய்யஇயலவில்லை என்று மேற்குறிப்புச் செய்யப்பட்டிரும் தால், அவருடைய இயலாமைபற்றி நீதிமன்றம்அவரை நேரில் விசாரிக்க விசாரணை செய்ய வேண்டும். அதன் முடிவைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


என்றென்றும் மக்கள் பணியில்

இரா. கணேசன்

அருப்புக்கோட்டை


💐💐💐💐💐💐💐

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 

நீலகிரி மாவட்டம்

💐💐💐💐💐💐💐


No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...