கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்று சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையத்தின் ஆலோசனைக்கூட்டம் பந்தலூரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
பொது செயலாளர் பொன் கணேசன், இணைச்செயலாளர்கள் செல்வராஜ், ஜெயசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பந்தலூர் வட்டார பொறுப்பாளர் தனிஸ்லாஸ் வரவேற்றார்.
இதில், நியாய விலைக்கடையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மண்ணெண்ணெய் அளவு குறைவாக உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். கூடுதலாக மண்ணெண்ணை ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்திலுள்ள ஓட்டல்களில் விலையுயர்ந்து வருவதால் மக்கள் பெரும் இக்கட்டான சூழல்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதையும் மாவட்ட விலை கண்காணிப்பு குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் தனியார் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் அரசு விதித்த கட்டணங்களை பின்பற்றாமல் தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயித்து வசூலித்து வருவதால் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பந்தலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இருந்தும் போதிய மருத்துவ உதவியாளர்கள் இல்லாததால் உள் நோய்யாளிகளை அதிக அளவில் அனுமதிப்பது இல்லை. உடனே கூடுதல் உதவியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் பிணவறை திறக்கப்படாமல் உள்ளது திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல மருந்தங்களில் காலவாதியான, தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் அனைத்து கடைகளிலும் உரிய ஆய்வு மேற்கொள் வேண்டும்.
அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்வி குறியாகி உள்ளது. கூடலூர் கல்வி மாவட்டத்திற்கு கூடுதல் கல்வி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் கனகலிங்கம் இந்திராணி தேவதாசு, கதிரேசன் ,சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் நவ்சாத் நன்றி கூறினார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
No comments:
Post a Comment