பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டு உள்ளது

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை  உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டு உள்ளது (G.O Ms.No 360, Health and Family Welfare Department,  Dt: 12.10.2017). 

பிறப்பு அல்லது இறப்பு நடந்த 21 நாட்களுக்குள் இலவசமாக பதிவு செய்ய வேண்டும். 

1, பிறப்பு அல்லது இறப்பு நடந்த 21 நாட்களுக்கு மேல் 30 நாட்களுக்குள் பதிவு செய்தால் ரூ.2 தாமதக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்தக் கட்டணம் ரூ.100 ஆக  மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

2, அதேபோல 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் பதிவு செய்ய வசூலிக்கப்பட்டு வந்த தாமதக்கட்டணம் ரூ.5,  தற்போது ரூ.200 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  

3, ஓராண்டுக்கு மேல் ஆகும் தாமத பதிவுகளுக்கு  ரூ.10 வசூலிக்கப்பட்டது. அந்தக் கட்டணம் ரூ.500 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

4, பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் சேர்க்க ஓராண்டுக்கு மேல் விண்ணப்பித்தால் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அந்தக் கட்டணம் தற்போது ரூ.200 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

5, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழின் நகல் கேட்டு விண்ணப்பித்தால்,  ஒவ்வொரு நகலுக்கும் தேடுதல் கட்டணமாக முதல் ஆண்டுக்கு ரூ.2 வசூலிக்கப்பட்டது. அது தற்போது ரூ.100 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

6, ஒவ்வொரு கூடுதல் ஆண்டுக்கும் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ.2 என்பது ரூ.100 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

7, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்  வழங்க, கட்டணம் ரூ.5 என்பது ரூ.200 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

8, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களின் கூடுதல் நகல் பெற  கட்டணம் ரூ.200 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

9, பிறப்பு மற்றும் இறப்பு பதியப்படவில்லை (Form 10 - NAC) என்ற சான்றிதழ் பெற இதுவரை ரூ.2 வசூலிக்கப்பட்டு வந்தது. அந்தக் கட்டணம் ரூ.100 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...