பட்டா,அடங்கல்,சிட்டா

பட்டா,அடங்கல்,சிட்டா மற்றும் நிலம் சம்மந்தப்பட்ட அனைத்திற்கும் புரியும் படியான விளக்கம் அளித்துள்ளேன். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்! 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடையகட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்

வில்லங்க சான்று: ஒரு நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுத்திகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனை. ( forwarded by :- M.Muthusamy, Advocate- South Indian consumer protection association ( Regd1998), WORIYUR TRICHY-620003). Thanks to Advocate Mr Pandian.
17/12/17, 17:58 - ‪+91 96264 49591‬: சில முக்கிய தீர்ப்புகள்
1. அடையாள அணிவகுப்பு காலதாமதமாக நடத்தப்பட்டால் அது செல்லாது (அரிநாத் எதிர் உ.பி. அரசு AIR 1988 SC 345)
2. காவல் நிலையத்தில் எதிரியை சாட்சியிடம் அடையாளம் காட்டினால் செல்லாது (அகமது பின் சலீம் எதிர் ஆந்திர அரசு AIR 1999 SC 1617)
3. புகைப்படம் நாளிதழ்களில் வெளியான பின் நடைபெறும் அடையாள அணிவகுப்பு செல்லாது. (ரவிந்திரா எதிர் மகராஸ்ட்ரா அரசு AIR 1998 SC 3031)
4. எல்லா வழக்குகளிலும் எதிரிகள் கைது செய்ய வேண்டியது இல்லை. (ஜோகீந்தர்குமார் எதிர் உ.பி. அரசு 1994 Crl LJ 1981)
5. கைது செய்யப்பட்டவருக்கு நடுவர் உத்தரவு இல்லாமல் கைவிலங்கிடக் கூடாது (ஜனநாயகத்திற்கான குடிமக்கள் அமைப்பு எதிர் அசாம் அரசு 1995 (3) SCC 743)
6. பிணையில் வந்தவரின் பிடி ஆணை திரும்பப்பெற அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தேவையில்லை. (வலியுலார் செனிட் எதிர் நல்லூர் சா.நி. 2000(3) MWN Cr 28)
7. பிணையில் வந்தவர் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டால் முதல் வழக்கில் தொடர்ந்து சிறையில் வைக்கக்கூடாது (அப்பு (எ) சாந்தகுமார் எதிர் தமிழக அரசு [2004 (1) TNLR 599 (Mad)]
8. குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால் 60 நாள் அல்லது 90 நாள் முடிந்தவுடன் பிணை வழங்க வேண்டும். (முகமது காமில் எதிர் ஆய்வாளர் சிறப்புப் புலனாய்வு (2000 (1) MWN Cr 70)
9. இலவச சட்ட உதவி பெறுவது அவரின் அடிப்படை உரிமை. (காட்ரி எதிர் பிகார் அரசு AIR 1981 Sc 928)
10. சிறைக் கைதிகளுக்கு அடிப்படை உரிமைகளை அனுபவிக்க உரிமை உண்டு. சுனில்பட்ரா எதிர் டெல்லி (AIR 1980 Sc 1579), (ராமமூர்த்தி எதிர் கர்நாடகா அரசு AIR 1997 Sc 1739), (அரசு எதிர் சாருலா சோகி AIR 1999 SC 1379)
11. கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிருத்தப்படாவிட்டால் அது சட்டவிரோதம். (பிரவீன்குமார் சந்திரகாந்த் எதிர் குஜராத் அரசு 2002 (1) Crime 277)
12. கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களுக்குள் மட்டுமே காவல்துறை காவலில் விசாரிக்க முடியும். (சி.பி.ஐ. எதிர் அனுபம் குல்கர்னி AIR 1992 SC 1768)
13. பிணை பெற்றவர் பிணையதாரரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தும் போது அதனை ஏற்கும் நீதிமன்றம் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். பிணையதாரர் பற்றி விசாரிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நபரை தொடர்ந்து சிறையில் வைக்கக் கூடாது. (ராஜஸ்தான் அரசு எதிர் லால்சிங் 1987 Crl. LJ 269)
14. சிறைக் கைதியை அவரின் உறவினரோ, நண்பரோ பார்க்க அனுமதி மறுக்கக் கூடாது. (நெடுமாறன் எதிர் தமிழ்நாடு அரசு 2001 (2) LW Crl 805)

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...